BREAKING NEWS
Search

கருணாநிதியைத் ‘தோற்கடிக்கும்’ முயற்சியில் சரத்குமார்!

கருணாநிதியைத் தோற்கடிக்கும் முயற்சியில் சரத்!

chicken_popcorn_ztfதோ வில்லங்கமா இருக்குமோன்னு நினைச்சு படிக்காதீங்க… இது காமெடி பீஸ்தான்.

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் நியாயத்தை நிலைநாட்ட நடைபயணம் போகிறாராம் சரத்குமார்… ஹாங்… அசமக தலைவருங்க. பதவியை சொல்லாம விட்டுட்டா கோவிச்சிக்கிறாராம்!

த்தனை நாள் பயணம்? ஒரு நாள் மட்டும்… அதாவது ஷூட்டிங்கின் ஒருநாள் கால்ஷீட்டுக்கான கால அளவுக்குள் இந்த நடைபயணம் முடிந்துவிடுமாம் (அது போதாதா…முல்லைப் பெரியாறு பிரச்சினை தீர்ந்திடுமே!)

உலகிலேயே 6 மணிநேரம் உண்ணாவிரதமிருந்து, ‘மழைவிட்டும் தூவானம் விடாத’ அளவுக்கு ஈழப்போரை முடித்து வைத்த பெருமைக்குரிய கருணாநிதியின் சிஷ்யரல்லவா!

பாண்டிக்கு கல்யாணம்!

chicken_popcorn_ztfடுத்தடுத்து மகிழ்ச்சியாண தருணங்கள் பசங்க இயக்குநர் பாண்டிராஜுக்கு. பசங்க படத்தின் டீஸன்டான வெற்றி, அந்தப் படத்துக்காக சிறந்த இயக்குநர் விருது… இப்போது கல்யாணம். மனிதரின் சந்தோஷத்துக்குக் கேட்கவா வேண்டும்!

மிக எளிமையாக தனது அக்கா மகள் வசந்தியைக் கரம் பிடிக்கிறாராம் பாண்டிராஜ்!

யோகியின் யோகம்!

chicken_popcorn_ztfரிலீசாகும் முன்பே பாராட்டுக்கள் குவிகிறது அமீருக்கும் அவர் முதல் முதலாக கதாநாயகனாகத் தோன்றும் யோகிக்கும்.

துபாயில் நடக்கும் மிகப்பெரிய சர்வதேச திரைப்பட விழாவில், ஆஃப்ரோ பிரிவில் பரிசுக்காக போட்டியிடும் 25 சிறந்த படங்களில் ஒன்றாக இந்தப் படத்தைத் தேர்வு செய்துள்ளனர்.

நேர்மையான மனிதர்கள் அதிகாரத்துக்கு வருவதேயில்லை!

chicken_popcorn_ztfமுன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜெ அப்துல்கலாம் ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார். ஆனால் ஏதோ பொழுதுபோக்கிற்காகவும், பப்ளிசிட்டிக்காகவும் இதை அவர் செய்யவில்லை.

இளைஞர்களின் கனவு மேம்படவும், அந்தக் கனவு செயல் வடிவம் பெற என்ன செய்ய வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தவும் இந்தப் படத்தில் நடிக்கிறார் கலாம்.

‘இளஞர்களே கனவு காணுங்கள்’ என்று அடிக்கடி கூறும் கலாமின் பேச்சை ஒரு நிகழ்ச்சியில் கேட்கும் இளம் சிறுவன் ஒருவன், அவனது கனவை விவரிக்கும் சினிமாவாக இது தயாராகிறது.

கதையைக் கேட்டதும், மன நிறைவுடன் நடிக்க சம்மதித்துள்ளார் கலாம், ஒரு நிபந்தனையுடன்.  அது – ‘பணம் வேண்டாம்!’

என்ன செய்வது.. நல்ல தலைவர்கள், நேர்மையாளர்கள் அதிகாரத்தைச் செயல்படுத்தும் பதவிகளுக்கு வருவதே இல்லை!




3 thoughts on “கருணாநிதியைத் ‘தோற்கடிக்கும்’ முயற்சியில் சரத்குமார்!

  1. கிரி

    //நல்ல தலைவர்கள், நேர்மையாளர்கள் அதிகாரத்தைச் செயல்படுத்தும் பதவிகளுக்கு வருவதே இல்லை!//

    வந்தாலும் நம்மவர்கள் இருக்க விடுவதில்லை

  2. r.v.saravanan

    One Response to “கருணாநிதியைத் ‘தோற்கடிக்கும்’ முயற்சியில் சரத்குமார்!”
    கிரி says:

    //நல்ல தலைவர்கள், நேர்மையாளர்கள் அதிகாரத்தைச் செயல்படுத்தும் பதவிகளுக்கு வருவதே இல்லை!//

    வந்தாலும் நம்மவர்கள் இருக்க விடுவதில்லை

    repeat………

  3. Manoharan

    ///என்ன செய்வது.. நல்ல தலைவர்கள், நேர்மையாளர்கள் அதிகாரத்தைச் செயல்படுத்தும் பதவிகளுக்கு வருவதே இல்லை///

    நம் தலைவர் மாதிரிதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *