BREAKING NEWS
Search

கருணாநிதிக்கு சோப்புப் போடுகிறேனா? – கமல்ஹாஸன்

தமிழால் எங்களைக் குளிப்பாட்டுகிறார் கருணாநிதி! – கமல்ஹாஸன்

சென்னை: கருணாநிதியை நான் புகழ்ந்து பேசுவதைப் பார்த்து, நான் அவருக்கு சோப்புப் போடுவதாக சிலர் கூறுகிறார்கள். கருணாநிதியைப் பாராட்டுவதை நான் பெருமைாயாக கருதுகிறேன், தயவு செய்து இதை அரசியல் ஆக்க வேண்டாம் என்றார் கமல்ஹாஸன்.

பெண்சிங்கம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற கமல்ஹாஸன் பேசியதாவது:

கலைஞரின் விழாக்களில் நான் கலந்துகொண்டு அவரை பாராட்டி பேசுவதை பற்றி, அவருக்கு பிடித்தவர்கள், ‘எப்படி அவரிடம் கற்றுக்கொண்டீர்கள்?’ என்று கேட்கிறார்கள். பிடிக்காதவர்கள், ‘அவருக்கு எதற்கு சோப்பு போடுகிறீர்கள்?’ என்று கேட்கிறார்கள்.

அவரை பற்றி பேசுவதை நான் பெருமையாக கருதுகிறேன். அதை, அரசியல் ஆக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அவரை, ஆசான் என சொல்வதை சோப்பு போடுவதாக நினைக்கக்கூடாது. அவர் தமிழால் எங்களை குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறார். நாங்கள், அவருக்கு சோப்பு போட வேண்டியதில்லை.

99 வது படம் எனக்கு!

கலைஞரின் 100-வது படத்தை இயக்கும் பொறுப்பு வேண்டும் என்று இப்போதே கர்சீப் போட்டுவிட்டார், ராம.நாராயணன்.

99-வது படத்தையாவது எனக்குக் கொடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். 101-வது படத்துக்கு, இன்னொருவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். எங்கள் ஆசை, அவருக்கு ஆயுள் கூடிக்கொண்டே இருக்க வேண்டும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. கலைஞர் சீராக தன்னையும், நாட்டையும் கவனித்துக்கொள்கிறார்….” என்றார் கமல்.




7 thoughts on “கருணாநிதிக்கு சோப்புப் போடுகிறேனா? – கமல்ஹாஸன்

  1. டாக்டர் கோவிந்த்

    நீங்க சோப்பு போடறீங்கன்னு சொல்லவில்லை, சோப்பு போடாம இருந்தா நல்ல இருக்கும்னு சொல்றோம்

  2. kumar

    99-வது படத்தையாவது எனக்குக் கொடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். 101-வது படத்துக்கு, இன்னொருவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். எங்கள் ஆசை, அவருக்கு ஆயுள் கூடிக்கொண்டே இருக்க வேண்டும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. கலைஞர் சீராக தன்னையும், நாட்டையும் கவனித்துக்கொள்கிறார்…

    //ஏற்கனவே தசாவதாரம் பார்த்து மண்டை கஞ்சவன் ஊர்ல நீரைய பேர் இருக்கான்,இதுல இவங்க இருந்து பெரும் சேர்ந்தத் நெனைக்கவே பயமா இருக்கு.

    நீங்க சோப்பு போடறீங்கன்னு சொல்லவில்லை, சோப்பு போடாம இருந்தா நல்ல இருக்கும்னு சொல்றோம்

  3. palPalani

    நீங்க சோப்பு போட்டதெல்லாம் அந்த காலம்… இப்பெல்லாம் செம்படிக்கிறீங்க!

  4. sakthivel

    மனிதனாக வாழ்ந்த கமலை தேடுகிறேன்…

  5. SELVA PUDUPALLI

    ‘காய்த்தமரம்(கமல்) கல்லடி படத்தான் செய்யும்’. இதையெல்லாம் கண்டு கவலைப்படுபவர் அல்ல கமல். இவராக வலிய எந்த நிகழ்ச்சிக்கும் செல்ல எந்த அவசியமும் இல்லை என்பதை யோசிக்கத்தெரிந்தவர்கள் நன்கு அறிவார்கள்.கமல் வந்தால்தான் தங்கள் திரைப்படத்திற்கு உண்மையான மரியாதை கிடைக்கும் என நினைக்கிறவர்கள் கமலையும் அழைக்கிறார்கள் அவரும் வந்து வாழ்த்துகிறார் அவ்வளவுதான்.அப்படி கலந்துகொள்ளும் போது முதல்வர் கருணாநிதியும் வந்திருந்தால் அவரையும்(ஒருவரையொருவர்) பாராட்டுவது என்பதுதான் சபை நாகரிகம்.இதற்காக இவர் சோப்பு போடுகிறார் அவர் இவருக்கு காப்பு போடுகிறார் என்பதெல்லாம் இவர்களைப்பிடிக்காதவர்களின் பேச்சாகத்தான் இருக்கும்.எனக்கும் கருணாநிதியை அவரது கட்சியை அறவே பிடிக்காதுதான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *