BREAKING NEWS
Search

கருணாநிதிக்கு அடுத்த பாராட்டு விழா… ரெடியாகும் சினிமாக்காரர்கள்!

கருணாநிதிக்கு அடுத்த பாராட்டு விழா… ரெடியாகும் சினிமாக்காரர்கள்!

டுத்த பாராட்டு விழாவுக்கு தயாராகிறார் முதல்வர் கருணாநிதி. அவருக்கு விழா எடுக்க சளைக்காமல் தயாராகிறது திரைப்படத் துறையும்.

இந்த முறை எந்த சாதனைக்காக விழா என்கிறீர்களா?

75 ஆண்டுகளுக்கும் மேல் ஓயாமல் எழுதி வரும் கருணாநிதியை கவுரவிக்கும் பொருட்டு அண்ணா விருது வழங்குகிறார்களாம்.

அகில இந்திய திரைப்பட சம்மேளனம் சார்பில் அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15-ம் தேதி சென்னையில் நடக்கும் எழுத்தாளர்கள் மாநாட்டில் இந்த விருது வழங்கப்படும் என்றார் ‘ஃபெப்ஸி’ தலைவர் வி.சி.குகநாதன்.

இலங்கை போகும் அசின்!

லங்கையில் எந்தப் படப்பிடிப்பும் நடத்தக்கூடாது என்று தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திப் பட ஷூட்டிங்குக்காக இலங்கையின் ‘புதிய டார்லிங்’ சல்மான்கான் அழைப்பின்பேரில் கொழும்பு செல்கிறார் அசின்!

அப்படின்னா தடை?

‘அதுபற்றி காவல்காரன் ஹீரோ விஜய்தானே கவலைப்படணும், நமக்கென்ன?’ என்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது அம்மணி. விஷயம் அறிந்ததும் துடித்துப் போன ஹீரோ, நிலைமையின் தீவிரத்தை விளக்கியுள்ளார்.

ஆனால் அம்மணிக்கு, சல்மான்கானை விட மனசில்லை. இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லையாம்.

தொழில் அதிபர்களை விட்டுடறாங்க.. சினிமாக்காரங்களைப் பிடிச்சிக்கிறாங்க!

டைசியில் பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது… ஆம், ஐஃபா விழாவுக்குப் போகக் கூடாது என்றெல்லாம் அறிக்கைவிட்ட சரத்குமாரின் உண்மையான மனநிலை பளிச்சென்று வெளியில் வந்துள்ளது.

‘ஆ ஊன்னா… இலங்கைக்குப் போகாதீங்க.. போனா தடைன்னு சொல்றாங்க. ஆனா தொழிலதிபர்கள் பிஸினஸ் பண்ணிக்கிட்டுதானே இருக்காங்க. இதில் நடிகர் நடிகைகளை மட்டும் டார்கெட் பண்ணா எப்படி? அவங்களும் தொழில்முறை கலைஞர்கள்தானே?’ என்று ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பியுள்ளார் சரத்குமார்… அதாவது தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர்.

இந்தி நடிகர்கள் யாரும் இலங்கை பட விழாவுக்குப் போகக் கூடாது என்று அறிக்கை விட்டவர் இவர்தான். இதே அறிக்கையை ஆங்கிலத்தில் கடிதமாக்கி அதில் கையெழுத்துப் போட்டு அனுப்பியவரும் இவரேதான்.

நல்ல ஒற்றுமை…. தமிழனை அசைச்சிக்க முடியாது!

-என்வழி
7 thoughts on “கருணாநிதிக்கு அடுத்த பாராட்டு விழா… ரெடியாகும் சினிமாக்காரர்கள்!

 1. mukesh

  ஐஃபா விழாவுக்கு போகாமல் தடுப்பத்தின் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்ப்பு காண்பிப்பது நியாயம்.

  ஆனால் இலங்கையில் எந்தப் படப்பிடிப்பும் நடத்தக்கூடாது என்பது நியாயமா? அங்கு நம் தமிழர்கள் இன்னமும் இருக்கிறார்கள் என்பதும் அவர்களோடு உறவு நீடிக்க இந்த மாதிரியான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது புத்திசாலிதனமாக இருக்கும் என்பது என் கருத்து.

  புத்திசாலிதனமாக இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நம் தமிழர்களோடு நெருங்கிப் பழகுவதற்கு இதை விட நல்ல வாய்ப்புக் கிடைக்காது.

 2. Manoharan

  சரத்குமார் ஒரு சினிமா சுப்பிரமணியசாமி ஆகி வருகிறார். இவர் படங்கள் ஓடவில்லை என்றதும் இனிமேல் மல்டி ஹீரோக்கள் நடித்தால்தான் ஓடும் என்றார் . சிங்கம் வந்து மூக்கை அறுத்துவிட்டது.

  அதேபோல் இலங்கையில் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்பதும் சரி. போர் குற்றங்களை மறைக்க இலங்கை சுற்றுலாத்துறையை வளர்க்க பார்க்கிறது . அதற்க்கு இங்குள்ளவர்கள் ஏன் துணை போகவேண்டும் ? போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கும் இடத்தை நெருங்கக் கூட முடியாது. கொழும்பில் இருக்கும் தமிழ் மக்கள் வாழ்க்கை வேறு . அசின் இவர்களுடன் போய் பேசப் போகிறாரா..? என்ன கொடுமை சார் இது ?

 3. Chozhan

  மனோகரன் சார் சொல்வது சரி. பல லட்சம் மக்கள் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் படம் எடுத்தால் படுகொலை மறக்கப்பட்டு மறைக்கப்பட்டு போய்விடும். பல லட்சம் மக்கள் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் படம் மட்டும் அல்ல . இந்தியாவில் இருந்து எந்த தொழில் அதிபர்களும் தொழில் தொடங்க கூடாது.அப்படி செய்யதால் தான் பல லட்சம் மக்களின் ஆன்மா அமைதி பெரும்.

 4. Siva

  கருணாநிதி போல ஒரு பச்ச பொறுக்கிய பாக்கமுடியாது

 5. குமரன்

  சிலைஞ்சரைப் பொறுத்த மட்டில், அவர் கலந்து கொள்ளும் எல்லா விழாவுமே அவருக்கான பாராட்டு விழாதான். எப்படியும் அவரை அழைத்தால் அன்பழகன், வைரமுத்து, ஜகத் ரட்சகன், ஏதாவது ஒரு அமைச்சர் ஜால்ரா, வாலி இப்படி ஒருவரை அழைத்தே ஆகவேண்டும். அவரே இவர்களில் ஒருவரை பேச அழைக்கும்படி சொல்லி விடுவார். பிறகு என்ன, மேடையில் சிலைன்ஜர் துதிதான். விழாவில் யார் பாராட்டப் படுவதற்காக ஏற்பாடு செய்தார்களோ அந்த விழா நாயகனும் பாராட்ட வேண்டும். இதுதான் மரபாகிவிட்டது.

  அண்மையில் நடந்த எஸ்.வி.சேகருக்கான பாராட்டு விழாவிலும்,ஓய.ஜி.மகேந்திரனுக்கான பாராட்டு விழாவிலும் இப்படித்தான் வந்த வைரமுத்து முதலியோர் பாராட்டினார்கள்.

  கின்னசில் இடம் பெரும் வகையில் இவருக்க்ப் பாராட்டு விழா நடக்கிறது. இனி வரும் விழாவில் குஷ்பு பாராட்டுவார்.

 6. Juu

  சிவா உங்களை வன்மையாக கண்டிக்கிறேன்,
  பச்சை நிறத்தை இச்சை படுத்தியதற்காக!!!

  பச்சை என்றால் பசுமை
  பச்சை என்றால் இயற்கை
  பச்சை என்றால் பச்சபாம்பு
  பச்சை என்றால் முருங்கைக்காய்
  பச்சை என்றால் தயார்
  பச்சை என்றால் பல்லவன் பஸ்
  பச்சை என்றால் குழந்தை(பச்ச புள்ள)
  பச்சை என்றால் Sprite Bottle

  எல்லாத்துக்கும் மேலா!!
  நமீதா நடிச்ச “பச்ச குதிர” படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *