BREAKING NEWS
Search

கமல் பதில் வருத்தமளிக்கிறது! – மே 17 இயக்கம்

கமல் பதில் வருத்தமளிக்கிறது! – மே 17 இயக்கம்

சென்னை: மிழின படுகொலையை தடுத்து நிறுத்தத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து, பிக்கியில் வகிக்கும் பதவியை துறந்து நேர்மையாக நிமிர்ந்து நில்லுங்கள் என்றுதான் நாங்கள் வேண்டுகோள் விடுத்தோமே தவிர, பத்மஸ்ரீ பட்டத்தை திருப்பி அனுப்புமாறு கூறவில்லை என்று கமல் ஹாஸனுக்கு ‘மே 17 இயக்கம்’ பதில் தந்துள்ளது.

இதுகுறித்து மே 17 இயக்கத்தின் ஒதுங்கிணைப்பாளர் திருமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஈழத் தமிழர்கள் ஒன்றரை லட்சம் பேரை இனப் படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொள்ளும் இந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா வரும் ஜூன் மாதம் 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற உள்ளது.

இந்தத் திரைப்பட விழாவை இந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கு குழுவுடன் இணைந்து இந்திய தொழில் வர்த்தக அமைப்புகளின் கூட்டமைப்பான ஃபிக்கி ஏற்பாடு செய்து நடத்துகிறது. இந்த விழாவை கொழும்புவில் நடத்துவதற்கு தமிழின அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த விழாவை கொழும்புவில் நடத்தாமல் வேறு எந்த நாட்டில் நடத்தினாலும் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்பதை தமிழின அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஃபிக்கியை வலியுறுத்தின.

இக்கருத்தை வலியுறுத்தி சென்னையில் உள்ள ஃபிக்கி அலுவலகத்திற்கே சென்று மே 17 இயக்கத்தின் சார்பாக கடிதம் வழங்கப்பட்டது. அதன் பிறகு உலகின் பல்வேறு இடங்களில் இயங்கி வரும் ஃபிக்கி அமைப்பின் பொறுப்பாளர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் ஐஃபா விழா கொழும்பில் நடத்துவற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் எங்களின் கடிதங்களுக்கு எந்தப் பதிலும் வரவில்லை.

இதற்குப் பிறகுதான் தமிழ்த் திரைப்பட நடிகர் கமல்ஹாசனை இந்திய தொழில் வர்த்தக அமைப்புகளின் கூட்டமைப்பான ஃபிக்கியின் ஊடக பொழுதுபோக்கு வணிக அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு கோரி மே 17 இயக்கம் வேண்டுகோள் விடுக்கும் மனு ஒன்றை கடந்த ஞாயிற்றுக்கிழமை அவருடைய இல்லத்தின் முன் திரண்டு அவருடைய அலுவலக செயலரிடம் அளித்தது.

எங்களுடைய இயக்கத்தின் மனுவிற்கு பதிலளித்து கமல் விடுத்துள்ள அறிக்கை எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், ஃபிக்கியின் ஊடக பொழுதுபோக்கு வணிக அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து விலகுவது தொடர்பாக அவர் பதில் அளிக்காதது வருத்தத்தையே அளிக்கிறது.

கமல் தனது அறிக்கையில் கூறியிருப்பது போன்று ஃபிக்கி என்பது ஒரு சாதாரண வணிக அமைப்பு அல்ல. இந்தியாவின் முன்னணி தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகள் உறுப்பினர்களாக உள்ள பலம் வாய்ந்த வாணிப அமைப்பாகும். அந்த அமைப்புதான் கொழும்புவில் நடைபெறவுள்ள திரைப்பட விருது வழங்கு விழாவின் பலமான பின்னணியாக செயல்பட்டு வருகிறது. அதனால்தான் மே 17 இயக்கம் ஃபிக்கி அமைப்பை எதிர்த்து இந்த இயக்கத்தை நடத்த வேண்டிய அவசியத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

கொழும்புவில் நடைபெறும் விழாவின் ஏற்பாடு அமைப்பாக விஸ்கிராஃப்ட் இண்டர்நேஷனல் செயல்படுகிறதே தவிர, அந்த விழாவின் இரண்டாம் நாள் நடைபெறவுள்ள வணிக ஒப்பந்த சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளது ஃபிக்கி அமைப்பே. இதற்காக ஃபிக்கி அமைப்பு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இலங்கையை ஒரு புதிய நாடு என்றம், வணிக மேம்பாட்டிற்கும் முதலீட்டிற்கும் வாய்ப்பளிக்கும் உற்சாகமான நாடாக உள்ளதாகவும் வர்ணித்துள்ளது. வணிக மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக அமித்குமார் என்பவதை பிக்கி நியமித்துள்ளது.

முக்கியமாக சுற்றுலா உள்ளிட்ட பொழுதுபோக்கு துறைகளில் முதலீட்டு வாய்ப்புகள் அதிகம் உள்ள இடமாக திகழ்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது. இதில் ஃபிக்கியின் பொழுதுபோக்கு வணிகப் பிரிவின் தலைவராக கமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால்தான் ஃபிக்கி அமைப்பின் ஊடக பொழுதுபோக்கு வணிக அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து கமல் விலக வேண்டும் என்றும், அதன் மூலம் இலங்கை இனப்படுகொலையை மூடி மறைக்க நடத்தப்படும் திரைப்பட விருது வழங்கு விழாவிற்கு தமிழர்களின் எதிப்பைத் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம்.

ஆனால், தனது கோரிக்கையை ஏற்று ஃபிக்கி அமைப்பின் பல்வேறு துறைத் தலைவர்கள் விழாவை புறக்கணிக்கப்போவதாக தனது அறிக்கையில் கமல் கூறியுள்ளார். ஃபிக்கியின் தலைவர்கள் புறக்கணிப்பது அல்ல முக்கியம், அந்நிகழ்ச்சியை கொழும்புவில் நடத்தாமல் ஃபிக்கி தவிர்க்க வேண்டும் என்பதே தமிழின உணர்வாளர்களின் வேண்டுகோளாகும்.

இரண்டாவதாக, தனக்கு இந்திய அரசு வழங்கிய பத்ம ஸ்ரீ விருதை கமல் திருப்பத் கொடுத்துவிட வேண்டும் என்று நாங்கள் கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார்கள். மே 17 இயக்கத்தின் சுவரொட்டியில் எழுதப்பட்டிருந்தது வாசகம் இதுதான்:

“பத்மஸ்ரீ பட்டத்தை திருப்பி அளித்த இயக்குனர் பாரதிராஜாவைப்போல நேர்மையான மனிதராக நிமிர்ந்து நில்லுங்கள்” என்றுதான் கோரியிருந்தோம். தமிழின படுகொலைப் போரை தடுத்து நிறுத்தத் தவறிய மத்திய அரசைக் கண்டிக்கும் முகமாக இயக்குனர் பாரதிராஜா பத்மஸ்ரீ பட்டத்தைத் துறந்ததுபோல, ஃபிக்கியில் நீங்கள் (கமல்) வகிக்கும் பதவியை துறந்து நேர்மையாக நிமிர்ந்து நில்லுங்கள் என்பதுதான் நாங்கள் விடுத்த வேண்டுகோளின் பொருள் என்பதை கூறிக்கொள்கிறோம்.

மே 17 இயக்கத்தைப் பற்றி கூறுகையில் ஒரு சிறு குழுவினர் என்று கமல் வர்ணித்துள்ளார். நம் கால்களைத் தழுவும் அலைகள் கடலின் பிரதிநிதிகளே. அவைகளே பூகம்பத்தின்போது சுனாமி அலைகளாக உருவெடுக்கின்றன. நாங்கள் தமிழின மக்களின் உணர்வுப் பிரதிநிதிகளே என்பதை தாழ்மையுன் தெரிவித்துக்கொள்கிறோம்,” என்று கூறியுள்ளார்.




4 thoughts on “கமல் பதில் வருத்தமளிக்கிறது! – மே 17 இயக்கம்

  1. செல்வா புதுப்பள்ளி

    “மே 17 ” என்று ஒரு இயக்கம் இருப்பதை திரு கமலின் வீட்டு முன் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மூலம்தான் பெரும்பான்மையான மக்கள் தெரிந்துகொண்டுள்ளனர்.அந்தவகையில் சிறுகுழுவினர் என்று கமல் சொல்லியிருந்ததில் ஒன்றும் தவறு இருப்பதாக தெரியவில்லை.இனிவரும்காலங்களில் யாரும் “மே 17 “இயக்கத்தை சிறுகுழுவினர் என்று சொல்ல வாய்ப்பில்லை.மற்றபடி கமல் அவர்கள் யாரையும் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளும் அளவிற்கு இந்தவிஷயத்தில்(பத்மஸ்ரீ) “மே 17 ” கமலுக்கு அறிவுறித்தியிருக்கதேவையில்லை…! கமல் அவர்களின் அறிவிப்பு பிரமிப்பு…!

  2. Chozhan

    கமல் ஒரு சுயநலவாதி என்பது உலகறிந்த விஷயம் மேலும் அதிமேதாவித்தனமாக எழுதுவதும் பேசுவதும் கமலுக்கு கைவந்தகலை தமிழனுக்கு மதிப்பளித்து அமிதாப் விலகியதைபோல் யாரும் “தமிழன்” கமலிடம் எதிர்பார்க்க வேண்டாம் ஏனெனில் கருணாநிதியை போலத்தான் இவறும்(பதவி முக்கியம்). அதுவும் இப்பொழுது கருணாவை புகழவே நேரம் போதவில்லை. இந்த நேரத்தில் அமிதாப் இந்தியன் சூப்பர் ஸ்டார் மட்டும் இல்லை ஒரு மனித நேயம் உள்ள உயர்ந்த மனிதன் என்பதை நினைத்து அவரை வணங்குகிறேன்.

  3. JDK

    //இந்த நேரத்தில் அமிதாப் இந்தியன் சூப்பர் ஸ்டார் மட்டும் இல்லை ஒரு மனித நேயம் உள்ள உயர்ந்த மனிதன் என்பதை நினைத்து அவரை வணங்குகிறேன்.//

    Super Mr. Chozhan, this is what we ppl are doing for decades, leaving out our own men and encouraging outsiders..kudos…keep it up.You guys will never realise.

  4. Chozhan

    Mr JDK ஒரு விசியத்தை நீங்கள் சிந்தித்து பார்க்கவும் தமிழுக்கும் தமிழனுக்கும் சம்மந்தமே இல்லாத அமிதாப் தனது பதவியை துறக்கும் போது தமிழனால் இந்த உயரத்திற்கு வந்த கமல் வியாக்யானம் பேசுவதை விட்டு விட்டு உண்மையான தமிழனாகவும் மனிதனாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்பதை எல்லோரும் எதிர்பார்க்கிறோம்.

    நீங்கள் சொல்வதை மாதிரி அமிதாப்பை நான் encourage பண்ண வேண்டிய அவசியமே இல்லை. தனது செயலால் தமிழன் மனதில் நின்றுவிட்டார்.

    குறிப்பு. நான் கமலின் மிகப்பெரிய ரசிகன் என்பதை சொல்லிக்கொள்ள விரும்பிகிறேன். ரஜினிக்கும் அமிதாப்பிர்க்கும் ஏன் ரசிகர்கள் அதிகம் தெரியுமா இவர்கள் நல்ல மனிதநேயம் உள்ள மனிதர்கள் என்பதை புரிந்துகொள்ளும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *