BREAKING NEWS
Search

கமல்ஹாசனை இந்திய அரசு கவுரவிக்கும்! – அம்பிகா சோனி

கமல்ஹாசனை இந்திய அரசு கவுரவிக்கும்! – அம்பிகா சோனி

சென்னை: கமல் போன்ற ஒரு சாதனையாளரின் பெருமையை 3 படங்களில் மட்டும் சொல்லிவிட முடியாது. எனவே டெல்லியில் மத்திய அரசு FICCI-A Soniஆதரவில் நடக்கும் திரைப்பட விழாவில் அவரது படங்கள் தனியாக திரையிட்டுக் காட்டப்படும், என மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அம்பிகா சோனி இன்று தெரிவித்தார்.

சென்னையில் நடக்கும் நடிகர் கமல்ஹாஸன் தலைமையில் நடக்கும் FICCI அமைப்பின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு வர்த்தக மாநாட்டில் பேசும்போது அம்பிகா சோனி இதைத் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், “கலைக்கு வடக்கு தெற்கு பேதமில்லை. எந்த மாநிலத்தவராக இருந்தாலும் அவர்கள் இந்தியக் கலைஞர்கள்தான். இந்தியக் கலைஞர் பிரகாஷ் ராஜுக்குதான் சிறந்த நடிகர் விருது கொடுத்துள்ளோம். ஒரு மலையாளப் படம்தான் சிறந்த படமாகத் தேர்வானது.  இந்தியாவின் எந்த மாநிலத்தில் உருவானாலும் அது இந்தியப் படமே. அதில் பங்கு பெற்றோர் தமிழ்க் கலைஞரா வட இந்தியரா என்று பார்ப்பதில்லை. இனி ஒருபோதும் அப்படி பார்க்கப்படமாட்டாது.

கமல்ஹாஸன் மிகப்பெரிய திரைக் கலைஞர்.  அவரைப் போன்ற கலைஞர்களால் இந்தியத் திரையுலகுக்குப் பெருமை.

இன்று பத்திரிகைகளில் ஒரு செய்தியைப் பார்த்தேன். அதன் மூலம், இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் அவரது படங்கள் திரையிடப்படாததும், அதன் அமைப்பாளர்கள் பதிலால் கமல் அடைந்துள்ள அதிருப்தியும் எனக்குப் புரிகிறது.

நிச்சயம் அவரது சாதனைகளை விளக்க 3 படங்கள் போதாதுதான்.

கமல்ஹாஸனை இந்திய அரசு உரிய முறையில் கவுரவிக்கும். அவரது பொன்விழா சாதனைகளைப் பாராட்டி, இந்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகமும், திரைப்பட விருது விழா இயக்ககமும் இணைந்து  சிறப்பு திரை விழாவை வரும் பிப்ரவரி மாதம் டெல்லியில் நடத்த உள்ளது. அந்த விழாவில் சர்வதேச அழைப்பாளர்கள் பலர் இடம்பெறுவர். அங்கு கமல் படங்கள் மட்டுமே திரையிடப்பட்டு அவர் உரிய முறையில் கவுரவிக்கப்படுவார்” என்றார்.

இஃபி என்ற அமைப்பும், அதன் சார்பில் கோவாவில் நடக்கும் விழாவும் கூட இந்திய அரசு நடத்துவதுதான்.  அதன் அமைப்பாளர்களுக்கும் இதே உரையை கொஞ்சம் வாசித்துக் காட்டியிருக்கலாம் மத்திய அமைச்சர்!




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *