BREAKING NEWS
Search

கமலோடு படம் பண்ணலை… ஹேப்பியா இருக்கேன்! – மிஷ்கின்

பாக்யராஜ் சொன்ன ‘பலூன் மேட்டர்’!

சினிமாவுக்கு இப்ப கஷ்டகாலம். அத போக்குறதுக்கு நிறைய பேர் பல அபிப்ராயங்களை சொல்லிக்கிட்டிருக்காங்க. என்னோட அபிப்ராயம் ஒண்ணுதான். அதை அன்னிக்கும் சொன்னேன். இன்னிக்கும் சொல்றேன். பெரிய பட்ஜெட் படமா இருந்தாலும், சின்ன பட்ஜெட் படமா இருந்தாலும் கதையில் புது விஷ‌யம் இருக்கணும்.

காட்சியில் புதுமை இல்லன்னா வெற்றி கிடைக்காது. எந்த சலுகைளாலும் பயன் இல்லை. பலூன் எந்த கலரா இருந்தாலும் உள்ளே இருக்குற காத்தை வெச்சித்தான் அது உயரமா பறக்கும். அந்த மாதிரிதான் சினிமாவும்… விஷயம் இருந்தாத்தான் படம் ஜெயிக்கும். அடுத்தவங்களை குறை சொல்றதை விட்டுட்டு நல்ல சினிமாவா எடுங்க… பிரச்சினை தன்னால விலகிடும்!”

– நெல்லு என்ற படத்தின் இசையை வெளியிட்ட பின் இயக்குநர் கே பாக்யராஜ் பேசியதன் ஒரு பகுதி இது. அவர் பேசி முடித்த பின் எழுந்த கைத்தட்டல் அடங்க வெகு நேரமானது!

கமலோடு படம் பண்ணலை… ஹேப்பியா இருக்கேன்! – மிஷ்கின்

மல் ஹாஸன் ஆபீஸிலேயே பல நாட்கள் இருந்தார் மிஷ்கின். அவருக்காக ஸ்கிரிப்ட் தயார் செய்தார். உன்னைப் போல் ஒருவனுக்குப் பிறகு, மிஷ்கின் படத்தில்தான் கமல் நடிப்பார் என்றார்கள்.

இதை கமல்- மிஷ்கின் இருவருமே பல நிகழ்ச்சிகளில் சொல்லி வந்தார்கள்.

பின்னர் என்ன நடந்ததோ… கேஎஸ் ரவிக்குமார் படத்தில் நடிக்கிறார் கமல். மிஷ்கின் படம் குறித்து பின்னர் அறிவிப்பார் என கூறியிருந்தார் கமலின் மேனேஜர் நிகில்.

இப்போது விகடனுக்கு அளித்த பேட்டியில், ‘கமலோடு பண்றதா இருந்தா படம் என்னாச்சு?’ என்ற கேள்விக்கு இப்படி பதில் கூறியுள்ளார் மிஷ்கின்:

‘அப்படியே நின்னுடுச்சு. இப்ப நான் ஹேப்பியா இருக்கேன். ‘நந்தலாலா’வுக்குப் பிறகு ‘யுத்தம் செய்’ – இப்படிச் சின்னதா, நல்லதாப் பண்ணிட்டுப் போனால் போதும். நிம்மதி!’

பொறுக்கியா அடங்காதவனா சுத்திக்கிட்டிருந்தேன்! – எஸ் ஏ சந்திரசேகர்

ராமநாதபுரம் மாவட்டத்துக்கு பக்கத்திலே இருக்கிற சின்ன கிராமத்தில்தான் நான் பிறந்தேன். எங்க அம்மா கூட என்னை உருப்பட மாட்டான் என்றுதான் திட்டுவாங்க. அந்தளவுக்கு நான் பொறுக்கியா அடங்காதவனா சுத்திகிட்டு இருந்தேன். அந்த வயசில நான் செஞ்ச குறும்புகள் கொஞ்சமல்ல, அவற்றைத்தான் வெளுத்துக்கட்டுங்கிற படமா எடுத்திருக்கேன்…”

-தனது தயாரிப்பில் உருவாகும் ‘வெளுத்துக் கட்டு – என் வாழ்க்கையில் சில நாட்கள்’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் எஸ்ஏ சந்திரசேகர் சொன்னது.

இதே விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட விஜய், “ஓய்வெடுங்கன்னு சொன்னா கேக்க மாட்டேன்னு அடம் பிடிக்கிறாரு எங்கப்பா… கேட்டா, சூரியனுக்கு ஏது ஓய்வுன்னு சொல்றார். ஆனா ஒண்ணு, இப்படி அவர் ஓய்வில்லாம உழைச்சதாலதான் என்னைப் போன்ற நடிகர்கள் உருவானாங்க. விஜய்காந்த், சிம்ரன் போன்ற கலைஞர்கள் வந்தாங்க…” என்றார்.

-என்வழி
4 thoughts on “கமலோடு படம் பண்ணலை… ஹேப்பியா இருக்கேன்! – மிஷ்கின்

 1. r.v.saravanan

  காட்சியில் புதுமை இல்லன்னா வெற்றி கிடைக்காது. எந்த சலுகைளாலும் பயன் இல்லை. பலூன் எந்த கலரா இருந்தாலும் உள்ளே இருக்குற காத்தை வெச்சித்தான் அது உயரமா பறக்கும். அந்த மாதிரிதான் சினிமாவும்… விஷயம் இருந்தாத்தான் படம் ஜெயிக்கும்

  குட் பாக்யராஜ் சார்

 2. Kusuvini

  கமலே ஒரு சோம்பேறி … கொய்யால The Wednesday வ ரீமேக் பண்ணிட்டு அவனோட அலும்பு தாங்கல … கதையே சுட்ட கதை…அபாரம் என்னடா பாராட்டு விழா ..லொட்டு லொசுக்கு…

 3. Kusuvini

  சந்திர சேகரா …நீ அப்டி சுத்திக்கிட்டு இருந்திருக்கலாம் …. தமிழ் திரை உலகமாவது தப்பிதிருக்கும் … நீ மட்டும் போதாதுன்னு உன் மகன் வேறயா…

 4. Dinesh

  பாக்யராஜ் சொல்றாத பாத்தா சன் பிக்சர்ஸை வம்புக்கு இழுக்குற மாதிரி தெரியுது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *