BREAKING NEWS
Search

கபிலுக்கு செய்த அவமானத்தை சச்சினுக்கும் செய்துவிடாதீர்கள்!

விலைமதிப்பில்லா விளையாட்டு வைரம் டெண்டுல்கர்!

ண்பதுகளில், கபில்தேவ் சகாப்தத்தில் தீவிர கிரிக்கெட் ரசிகர்களாக இருந்த பலரும், இன்று கிரிக்கெட் என்றாலே வெறுப்புடன் பார்க்கும் நிலை. எங்கும் சூதாட்டம், வீரர்களின் பண வெறி, கிரிக்கெட் வாரியத்தின் அரசியல் விளையாட்டு என இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், கபிலுக்கு நிகரான இயல்புகளுடன் கூடிய கிரிக்கெட் வீரர்கள் இல்லாமல் போனது முக்கிய காரணம்.

அன்றைக்கு இந்திய அணியின் ஸ்கோர் என்னவென்று கேட்கும்போதே, “கபில் இருக்காரா.. அவுட்டா?” என்று கூடவே ஒரு துணைக் கேள்வியும் கிளம்பியதைப் பாரப்த்திருப்பீர்கள். இன்றும் அந்தக் கேள்வி தொடர்கிறது, ‘சச்சின் ஆடறாரா?’.

கபில், அமர்நாத், பின்னி காலத்து ரசிகர்களுக்கு இன்று பெரும் ஆறுதலாக இருக்கும் ஒரே வீரர், சச்சின் டெண்டுல்கர்தான் என்றால் மிகையல்ல. ‘இது தனிமனித துதிதானே… குழு விளையாட்டான கிரிக்கெட்டில் இது ஆபத்தல்லவா?’ என்று கேட்கலாம்.

இதற்கான காரணத்தை ஆராயப்போனால், அது இந்திய அணியின் தேர்வு முறை, எப்போதும் தனியொரு வீரரே அணியின் வெற்றியை தோளில் சுமப்பது என வேறு திக்கில் போகும். இப்போதைக்கு அது வேண்டாம்.

இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே பெங்களூரில் புதன்கிழமை முடிந்த டெஸ்ட் போட்டியில் டெண்டுல்கர் ஆடிய ஆட்டம், நீண்ட நாட்களுக்குப் பிறகு கிரிக்கெட் ரசிகர்களை உள்ளம் குளிர வைத்தது.

முதல் இன்னிங்ஸில் அட்டகாசமாக இரட்டை சதமடித்த டெண்டுல்கர், இரண்டாவது இன்னிங்ஸில் அவுட்டின்றி 53 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய தூணாக நின்றார்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவை 2-0 என்ற கணக்கில் புரட்டி எடுக்க டெண்டுல்கர் பெரும் உதவி் புரிந்தார். இந்திய பந்துவீச்சாளர்களும் சோடை போகவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். பெங்களூர் டெஸ்டில் ஜாஹீர் கானின் பந்துவீச்சு ரோஜர் பின்னியின் மாயாஜால மீடியம் பேஸை நினைவூட்டியது.

எல்லோரும்தான் கிரிக்கெட் ஆடுகிறார்கள்… டெண்டுல்கரிடம் மட்டும் என்ன சிறப்பு?

கிரிக்கெட்டை ஜென்டில்மென் விளையாட்டு என்பார்கள். அந்த வார்த்தைக்கு அர்த்தம் தந்தவர்கள் கபில்தேவ், மால்கம் மார்ஷல், கர்ட்னி வால்ஷ்… இப்போது சச்சின் டெண்டுல்கர்.

மைதானத்தில் சிறப்பாக ரன்கள் குவிக்கும் ஆஸ்திரேலியாவின் பாண்டிங் அல்லது அவரது சீனியர் ஸ்டீவ் வாஹ் அல்லது அவருக்கும் முந்தைய ஆலன் பார்டர் போன்றோர் புரிந்த சாதனைகள் நினைவுக்கு வருவதில்லை. அவர்களின் அழுகுணித்தனங்கள்தான் நமக்கு முதலில் நினைவுக்கு வரும். பாகிஸ்தான் வீரர்கள் இந்த விஷயத்தில் ஆஸ்திரேலியாவை விட பலமடங்கு மோசமானவர்கள்.

ஆனால் கபில்தேவை நினைத்தால் அவரது சிரித்த முகமும், மைதானத்தில் எதிரணி வீரர்கள் தோளில் கைபோட்டுக் கொண்டு விளையாட்டை விளையாட்டாய் நேசிக்கும் மனப்பாங்கும் நமது மனக்கண்ணில் மின்னும்.

ஹைதராபாதில் மேற்கிந்திய தீவுகளுக்கெதிராக நடந்த ஒருநாள் போட்டியில் கடைசி ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினால் வெற்றி என்ற நிலை. வழக்கம்போல கபில்தான் கடைசி ஓவர் வீசினார். முதல் விக்கெட் விழுந்துவிட்டது. அடுத்த இரு பந்துகளில் 4 ரன்கள் கொடுத்தார். இன்னும் 5 ரன்கள் எடுத்தால் மேற்கிந்திய தீவு வென்றுவிடும் நிலை. கபில் பந்து வீசும் முனையில் வில்லியம்ஸ் என்ற விக்கெட் கீப்பர் ஆடிக்கொண்டிருந்தார். நான்காவது பந்தைப் போடும் முன் அவர் தோளில் கை போட்டுக் கொண்டு பேசிய கபில், சிரித்தபடி ஸ்டம்புகளைக் காட்டி ‘பேக்அப்’ என்று கூறிவிட்டு, மீண்டும் பந்து வீச ஓடி வந்தார்.

அவர் சொன்னதுபோலவே, எதிர்முனையில் ஸ்டம்புகளைப் பதம் பார்த்தது கபில் பந்து. இந்தியா வென்றது. உடனே வில்லியம்ஸ் கபிலை நோக்கி கட்டை விரலை உயர்த்திக் (தம்ஸ்அப்) காட்டி சிரிக்க, அவரை கபில் தட்டிக் கொடுத்துவிட்டுச் சென்றார்.

இந்த மாதிரி ஒரு ஸ்போர்டிவான முடிவை எந்த கிரிக்கெட் போட்டியிலாவது சமீப நாட்களில் பார்த்திருப்பீர்களா…

1987-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியின் போது, பாகிஸ்தானுக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில், பந்தை அடிக்காமலேயே ரன் எடுக்க அவசரப்பட்டு ஓடி வந்தார் அபுதுல் காதர். க்ரீஸை விட்டு சிறிது தூரம் வந்துவிட்டார். விதிப்படி அது தவறுதான். அப்போது பந்து கர்ட்னி வால்ஷ் கையில் இருந்தது. ஆனால் அவர் ஸ்டம்பை நோக்கி வீசாமல், காதரை எச்சரித்தார். அவரும் உடனே க்ரீஸுக்குள்ளே போய் விக்கெட்டைக் காப்பாற்றிக் கொண்டார். அதன் பிறகு போர், சிக்ஸர் என வெளுத்தார். விளைவு, போட்டியிலிருந்தே மேற்கிந்தியத் தீவு வெளியேறியது. இருந்தாலும் பாகிஸ்தானின் வெற்றியைவிட, வால்ஷின் அந்த பெருந்தன்மை பெரிதும் பேசப்பட்டது.

இவர்கள் வரிசையில் வைத்து பாராட்டப்பட வேண்டிய அதிசயமான வீரர்தான் சச்சின் டெண்டுல்கரும்.

மைதானத்தில் கெட்ட வார்த்தைகள் பிரயோகிப்பது, எதிரணி வீரர்களிடம் மல்லுக்கு நிற்பது, அம்பயரை முறைப்பது என எதிலும் இறங்காதவர் சச்சின். எந்த நாட்டு கிரிக்கெட் வீரரும், சச்சினை மட்டும் மிக நாகரீகமான, பண்புள்ள வீரர் என்று பாராட்டுவதைக் கேட்கலாம். இன்று, ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேனுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுகிறார் சச்சின்.

ஆஸ்திரேலிய பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள சர்வே முடிவில் 84 சதவீத ஆஸ்திரேலியர்கள் சச்சினை சிறந்த வீரராகக் கருதுவதாக கருத்து தெரிவித்துள்ளனர். ‘இந்தியாவின் விலை மதிப்பில்லா விளையாட்டு வைரம் சச்சின் டெண்டுல்கர்’ என்று பெருமைப்படுத்தியுள்ளது அந்தப் பத்திரிகை.

உலகில் கிரிக்கெட் விளையாடும் அத்தனை நாடுகளிலும் சச்சின் ஒரு மரியாதைக்குரிய வீரராகவே பார்க்கப்படுகிறார்.

சச்சின் தன் சொந்த சாதனைகளுக்காகவும் பணத்துக்காகவும் ஆடுவதாக நீண்ட காலமாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் அதில் சற்றும் உண்மையில்லை என்பது அவர் ஆட்டத்தைத் தொடர்ந்து பார்ப்பவர்களுக்குத் தெரியும்.

“கிரிக்கெட்டில் நான் அதிக முக்கியத்துவம் தருவது ஒரேயொரு விஷயத்துக்குத்தான்… அது நேர்மை. இந்த விளையாட்டை நேர்மையான முறையில், சுத்தமாக ஆட வேண்டும். பணம் பெரிதல்ல. அதுதான் இருபதாண்டுகள் கடந்தும் இன்னும் இந்த விளையாட்டில் என்னை இருக்க வைக்கிறது” என்கிறார் சச்சின்.

“கிரிக்கெட் மட்டையை கையிலெடுத்த பிறகு பணத்தைப் பற்றியோ, எனது தனிப்பட்ட சாதனைகள் குறித்தோ நான் யோசிப்பது கூட கிடையாது. அதிக பணம், குறைந்த ரன்கள் என்ற கேவலமான நினைப்பு என் மனதிலிருந்திருந்தால் என்னால் தூங்கமுடியாமலே போயிருக்கும்” என்ற அவரது வார்த்தைகளில் எந்த பாசாங்கையும் காண முடியாது.

சர்வதேச டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ள சச்சின், இந்திய அணிக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் ஒரு விலை மதிப்பற்ற கோஹினூராய் ஜொலிக்கிறார்!

இந்திய அணி தேர்வாளர்களுக்கு ஒரேயொரு விண்ணப்பம்… கபிலுக்கு செய்தது போல, ‘எப்போது ஓய்வு பெறப் போகிறீர்கள்’ என்ற கேள்வியை சச்சினிடமும் கேட்குமாறு மீடியாவைத் தூண்டிவிடாதீர்கள்..!

-வினோ
16 thoughts on “கபிலுக்கு செய்த அவமானத்தை சச்சினுக்கும் செய்துவிடாதீர்கள்!

 1. santhosh

  பினிஷிங் டச் சூப்பர் வினோ….
  சச்சினிக்கு வயதுஆகுது என்று நினைத்தால் மனம் சற்று ரணமாகுது………. இன்னும் எத்தனை நாட்கள் நாம் சச்சின் ஆட்டத்தை பார்க்க போறோம்………………

  சச்சினிக்கு என்று ஒரு வரி ” கிரிக்கெட் மதம் என்றால் சச்சின் கடவுள்”

 2. endhiraa

  I think steve waugh is also a very gentle cricketer unlike you specified. In fact, Australia’s one and only gentle cricketer who never abuse anybody on or off the field. Steve Waugh பற்றிய உங்கள் கருத்துக்கள் “அழுகுணி ” திருத்தப்பட வேண்டியவை என்பது என்னுடைய கருத்து !

 3. chakrapani r

  சச்சினும் கபிலும் கிரிக்கெட் என்கிற சிச்சி விளையாட்டால் நன்கு பணம் சம்பதிதர்கள். கபில் மேட்ச் பிசிங் மோசடியால் பணம் சம்பதிதஹக் கேள்வி
  பணம் சம்பாதித்தது போதும் கிழவர்கள போய் வீட்ல் ரெஸ்ட் எடுக்கட்டும்

 4. Paul

  After a very long time I am seeing an article about Kapil. Man, I am in 30’s and I am a die hard fan of Kapil. Those days during one day matches first people would ask, Whats the score? Then how much “”See kaa”” scored ( They assume he is out 🙂 already and assuming 95% of the run being scored by Sreekanth only. Then has Kapil batted or not? What ever may be the chase, if Kapil is there the match still has a life and people still clued to the television set or radio. Man, what a wonderful days! If he is from Mumbai, they would have never let the media to talk about his retirement and that’s the fact. He is like our S*. With out any back up from Mumbai or BCCI, he just survived just because of the love from Indians.

  Now coming to the article, When Kapil played India was a third world country. We did not have money to sponsor. Being a socialist country, our economy was driven by PSU companies so there was no private players from abroad because of our government policy. That too, back in 1990 we were almost bankrupt and we did many reforms. Our rupee was trading 16 Rs for a US dollar and then we devalued it to 45 just to keep the exports and put our economy back in track. We have opened the flood gate and let the MNCs to invest here. By the time our economy picked up Kapil has retired. He really played the game just for the country and not for the money. Mohindar Amarrnath has written an article in rediff long back saying, he has asked Kapil to wash his cloths in bath tub in hotel – England ( to avoid laundry) so that they could save money from their washing allowance. Those were the days, our BCCI could not afford to pay reasonable allowances. Now they could charter a flight to threaten Australian board to get the Indian players back home with out playing a one day match :). See the revolution. It just because of the economic growth by our government to let the MNCs to come in here. IPL brand is valued around 5B US$ 🙂 now. Mark my words, ICC(Dominated by Indian money) will make the following changes in 20 over format with in few years. I mean each team has 11 special batsman (Only to bat) and 11 bowlers (only to bowl) and 11 fielders (only to field). They can use any one during the game. So all the 11 batsman would be the best one, that applies to both bowlers and fielders.. So match will get more interest and until the last ball is being bowled you would see real cricket. Now after the first 5 batsman got out, people just walk away from the stadium. So each team will have min 40 players and 40 more support staff and that would become a company and it would give opportunities for more players and it will become more commercialized soon.

  Tendullkar came in to picture when India started a real economic growth, With in next 30 years we will be number third in GDP wise. We will grow 10% each year.Coming to your question, media or board will not ask Teldulkar to retire. Here is the reason. I hope couple of years back, I think two years back Teldulkar was not playing up to his potential. If it is other player board must have sacked from the team like Ganguly. They need a player like him to be kept in the team just to sell the team to the sponsors. Now Indian economy is driven by private players and from here onwards, some how media needs to project some one as a star player, so that they can sell their add to get money from sponsors. Board need money from them as well. But the fact is for the past two years he is really playing very well. Now he has broken may records and media look at him as a gold mine so they can milk money from him. When Teldulkar was not playing his potential, media look at that as a threat for them and they projected Dhoni to back him off in case.

  On a side note, Why media project Big B as a biggest star, reason being THEY HAVE TO and THEY MUST. This year alone 20B US$ has been pumped in by the FII (Foreign institutional investors ) to our country. They borrow money with 0% interest from US and pump it here. At the end of the day all these investments has to produce something and sell it to Indian common man. It could be a financial services product or any FMCG product shit. Our economy is consumption based and we have 1B people to consume. Many years back, western countries make fun out of our population and see how the trend has changed. That 1B population is our strength and that drives the consumption based economy. Thats why IPL has become so popular and there are tons of money out there for advertisement to sell their product. So they need Bib B or Sachin to sell their FMCG products from soup, toilet cleaner, cell phone or car. Other wise they lose money from these FMCG companies. The only exception is our Super star 🙂 which is really unbelievable. Specially he does not give an exclusive interview to north media, still they project him as a god. Its not because of his stardom. North media learned how simple this human is, how truthful this person is. ( How truthful?- In this booming economy, using his stardom he never sells any of the FMCG product to a common man or his fans). He does not act in real life. Superstars truthfulness, specially makes them to project him as a god of Indian cinema to show to the north Indian citizens, hey look at a guy here and learn from him.
  __________

  Same feeling… Straight from the heart. 🙂
  Thanks Paul.
  -Vino

 5. a.mohan

  யு ஆர் வெரி கரெக்ட்.கபில் வாஸ் ஒன் of தி ஆல் டைம் கிரேட்.வால்ஷ் அகின்ச்ட் பாக்.தி batsman இஸ் அப்துல் khather .இட் ஹப்பேன் அட் லாஸ்ட் ஓவர்.

 6. Bhuvanesh

  ///மீடியாவைத் தூண்டிவிடாதீர்கள்..!//

  கரெக்ட் சார். மீடியா க்கு சொந்த புத்தி இல்ல .. மத்தவங்க தூண்டுனா தான் இப்படி கேப்பாங்க! பொதுவா அவங்க எல்லாம் ரொம்ப ரொம்ப நல்லவங்க 🙂

 7. Venky

  சூப்பர் வினோ….Nice one…i still remember…Indian tried many things with Kapil…one point of time..we dint have proper openers to score run in first 15 overs at one dayers….I think Kapil was coming himself as opener…

 8. Manoharan

  இப்போது சச்சின் பங்கேற்கும் ஒவ்வொரு ஆட்டத்திலும் ஒரு சாதனை தகர்க்கப்படுகிறது. இது போன்ற ஒரு விளையாட்டு வீரரை நான் பார்த்ததுமில்லை கேள்விப்பட்டதும் இல்லை. அவர் செய்து வரும் சாதனைகள் எல்லாம் நமக்கு போனஸ்தான். அவர் விளையாடும் ஸ்டைல்தான் உண்மையான விருந்து. என்னை பொறுத்தவரை இந்தியாவில் இரண்டே சூப்பர் ஸ்டார்கள்தான் ஒன்று சச்சின் இன்னொன்று ரஜினி. சத்தியமாக இதை நான் ரஜினி ரசிகன் என்பதற்காக சொல்லவில்லை. இருவருக்கும் உள்ள ஒற்றுமைகள் நிறைய. முதல் ஒற்றுமை, துவக்க காலத்தில் இருந்தே இருவருமே தங்கள் துறையில் முடி சூடா மன்னர்களாக இருக்கிறார்கள். இருவருமே தங்களுக்கு முன் தங்கள் துறையில் உச்சத்தில் இருந்தவர்களை காப்பி அடிக்காமல் தங்களுக்கென்று ஒரு பிரத்தியேக ஸ்டைலை உருவாக்கினர். இன்று இவர்களை பார்த்துத்தான் மற்றவர்கள் காப்பியடிக்கிறார்கள். வயது ஆக ஆக இருவரின் திறமையும்,புகழும் கூடிக்கொண்டே போகிறது. இருவருமே மற்றவர்களை விட அதிக பட்சமான எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தவர்கள். அந்த எல்லா விமர்சனங்களுக்கும் பேச்சில் பதில் சொல்லாமல் செயலில் பதில் சொன்னவர்கள். ஒவ்வொரு முறையும் தங்கள் சாதனைகளை தாங்களே முறியடிப்பவர்கள். புகழின் உச்சத்தை பார்த்த பின்னரும் தன்னிலை மாறாமல் அடக்கமாக இருக்கிறார்கள். இருவருமே தங்கள் துறைகளில் தங்களுக்கும் தங்களுக்கு அடுத்து இருப்பவர்களுக்குமான இடைவெளியை மிகவும் அதிகப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இரண்டாமிடத்தில் இருப்பவர்களால் நெருங்கவே முடியாத உயரம் அது. இருவருமே தங்கள் குடும்ப வாழ்வில் மிகவும் வெற்றிகரமாக இருக்கிறார்கள். இருவருமே இன்னும் கற்றுக் கொள்வதை நிறுத்தவில்லை. இருவரின் ஓய்வை பற்றியும் மற்றவர்கள் விவாதிக்கிறார்கள், ஆனால் இவர்களோ இன்னும் ஒரு தலைமுறையை பார்ப்பார்கள் போலிருக்கிறது. அடுத்த சச்சின் அடுத்த ரஜினி என்று வர்ணிக்கப்பட்டவர்கள் எல்லோருமே இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார்கள். பெரும்பாலான மக்களுக்கு, கிரிக்கெட்டும், சினிமாவும் விருப்பமானவை அல்ல. ஆனால் சச்சினும், ரஜினியும் விருப்பமானவர்கள். இவர்கள் எது செய்தாலும் மீடியாவுக்கு அதுதான் தலைப்பு செய்தி. சச்சின் விளையாடுவதை நிறுத்தும்போது என்னைப் போன்ற நிறையப் பேருக்கு கிரிக்கெட் மீதான ஆர்வம் போய்விடும். ரஜினி நடிப்பதை நிறுத்தும்போது என்னைப்போன்ற நிறையப் பேருக்கு சினிமாவின் மீதான ஆர்வம் போய்விடும. அதுவரை சச்சினின் ஆட்டத்தையும், ரஜினியின் படத்தையும் அணு அணுவாக ரசிப்போம். இது இனி எப்போதும் கிடைக்கப் போவதில்லை.

 9. JB

  I read this article after a long time. I do have something to say. It seems pretty biased towards Indian players and not others. There are plenty of honorable players in other teams (other than those you have mentioned in the article) who still play the game fairly.

  As another commenter has said above, Steve Waugh is not a bad player as you have suggested. And another player from Australia is Adam Gilchrist. It’s well known in Cricket about his walking regardless of umpire’s decision. It’s not expected from the batsman but some batsman do walk when they edge and is given not out. Sachin doesn’t do that (I have video evidence of this).

  Sachin is respected by everyone because of his talent and his personality. Not all Indian players are like him and not every player from other teams are not like him (personality wise). There are some from each country’s team who are similar to Sachin in personality. But they may not have the talent that he has in batting.

 10. Rajasekar

  கபில் போன்ற உன்னத வீரன் அவருக்கு பின் இந்தியாவுக்கு கிடைக்கவில்லை என்பதே உண்மை. அவர் ஒன்றும் கவாஸ்கரை போன்ற உலகத்தரம் வாய்ந்த batsman கிடையாது ஆனாலும் அவர் அடித்த 175 த்ரில் ரன்களுக்காக நாம் உயிரையே கொடுக்கலாம். அவர் அவுட் ஆகாமல் இருப்பதற்காக முன்னணி வீரர்கள் நின்றது நின்றவாறே தேநீர் கோப்பையை கூட கீழே வைக்காமல் இதயத்துடிப்பு எகிறியவாறு பெவிலியனில் நின்றது எத்தனை பேருக்கு தெரியும். அவரின் தேசத்திற்கான ,அணிக்கான அர்ப்பணிப்பு ஈடு இணையற்றது. 1983 பைனலில் ஸ்ரீகாந்தின் 38 ரன்களும் ,கபில்,மதன்லால், ரோஜர் பின்னி,அமர்நாத் ஆகிய மீடியம் பேசெர்களின் அசத்தலான போவ்லிங்கும் இந்தியாவின் கனவை நனவாக்கியது என் போன்றவர்களுக்கு சாகும் வரை மறக்காது. அதன் பிறகும் இந்தியாவுக்கு உலக கோப்பை வாய்ப்பு நிறையவே இருந்தது ஆனால் இவர்களின் அடிமுட்டாள் தனமான (டோஸ் வென்ற பின் எடுத்த)முடிவுகள் (1987 செமி பைனலில் இங்கிலாந்துக்கு எதிராகவும் , 1996 இல் இலங்கைக்கு எதிராகவும் ,2003 பைனலில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராகவும் ) அணியை புதை குழியில் தள்ளியது. நம் தெருவோரம் கிரிக்கெட் ஆடும் பையன்களுக்கு புரிந்த விஷயங்கள்கூட நாம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் ஜாம்பவான்களுக்கு புரியவில்லையா அல்லது மேட்ச் fixinga ? தோனியும் பல சமயங்களில் முட்டாள்தனமான முடிவுகளை எடுத்துள்ளார் . இந்த உலக கோப்பையிலும் அப்படி செய்தால் அது கண்டிப்பாக மேட்ச் fixing என புரிந்து கொள்ளலாம். சச்சின் சிறந்த வீரர் ,ஆனால் முடிவுகள் எடுப்பதில் வல்லவர் அல்ல. டிராவிட் ,கங்குலியும் அப்படியே. இம்முறை இந்தியாவுக்கு பொன்னான வாய்ப்பு இதை தவற விட்டால் இனி எப்போதும் கிடைக்காது .-வாழ்த்த்துக்கள் டோனி அண்ட் crew .-ராஜசேகர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *