BREAKING NEWS
Search

கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது!

கனடாவில் இயக்குநர் சீமான் கைது!

டொரண்டோ: கனடாவில் நடந்த மாவீரர் நாளில் உரையாற்றிய இயக்குநரும் நாம் தமிழர் இயக்கத்தின் தலைவருமான சீமான் இன்று கைது செய்யப்பட்டார்.seeman-toronto

அந்நாட்டு சட்டத்துக்குப் புறம்பாகப் பேசினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் கைதாகியுள்ளார். மேலதிக விவரங்கள் கிடைக்கவில்லை.

முன்னதாக, கனடாவில் உள்ள டொரொண்டோவில் மாவீரர் வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. கனடா தமிழ் மாணவர் அமைப்பால் நடந்தப்பட்ட இந்த நிகழ்வுக்கு திரண்டு வந்திருந்தனர் தமிழ் மக்கள்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சீமான் பேசுகையில்,

“பிரபாகரன் என்ற மாமேதையின் கையில் ஓரு நாடு அல்லது தேசம் இருந்தால் உலகத்தின் வல்லரசாக சில வருடங்களிலேயே வந்துவிடும்.

பிரபாகரனின் ஆட்சியைப் பார்த்து, தமிழ்நாட்டு அரசை விமர்சிப்பார்கள் என்ற பயம், துணிவான தூய்மையான நீதி, நிர்வாகம், கட்டுக்கோப்பான அரசு என்ற பெருமையை ஈழத் தமிழன் பெற்று விடுவான் என்ற பயம்.

ஊழல் இல்லாத தமிழீழத்திற்குப் பயந்த ஊழல் மிக்க ஒரு அரசாட்சி, பிரபாகரன் என்ற மாமேதை அழிக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்தது.

இத்தாலியிலே பிறந்த சோனியா காந்தியை இந்தியர்கள் அன்னை என்று மொழியலாம்… பிரபாகரனை நான் அண்ணன் எனக் கூறினால் என்னைப் புலி என்கிறார்கள். பிடி என்கிறார்கள்.

கற்பழித்தவன், கொலை செய்தவன், எரித்தவன், பள்ளியில் குண்டு போட்டவன் ஒருவரும் பயங்கரவாதிகள் இல்லை. கற்பழிக்காத கொலைசெய்யாத, போர்க் கைதிகளைப் பாதுகாத்த புலிகள் இயக்கம் பயங்கரவாதிகள் இயக்கம் எனச் சொல்லுகிற பயங்கரவாதத்தை என்னவென்று கூறுவது…

ஈழத் தமிழனுக்கு ஏற்ற ஒரு அரசாட்சி புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்குப் பிறகு தமிழ்நாட்டில் வரவே இல்லை.

விடியலுக்குப் போராடிய விடுதலைப் புலிகள் எதிரியோடு மட்டும் போராடியிருந்தால் இந்நேரம் வென்றிருப்பார்கள்.

ஆனால், ஊழல் நிரம்பிய தமிழ் எதிரிகளோடும் அவர்கள் போராட வேண்டியிருந்தது. ஆனால், இந்த வரலாற்றில் தமிழனுக்குத் தோல்வி இல்லை. துடித்து எழுவான். தமிழீழத் தேசம் பிறக்கும் என்றார்.

இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறார்!

கைது செய்யப்பட்டுள்ள சீமானை விரைவில் இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது கனடா அரசு.




3 thoughts on “கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது!

  1. ksk

    “கனடாவில் சீமான் கைது ” என்ற தலைப்பே சரியாக இருக்கும் போது “கனடா போலீசாரால் சீமான் கைது” என்பது உங்கள் தமிழ் தரத்தை தினத்தந்தி அளவிற்கு குறைத்து விடுகிறது.

  2. Manoharan

    இதையும் கடந்து வருவார் சீமான். மேலும் புகழடைய வாழ்த்துக்கள்.

  3. வீர புகழேந்தி

    உண்மையான வீரத்தமிழனே உன் பின்னே உன் தம்பிகள் இருக்கிறோம்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *