BREAKING NEWS
Search

கத்திப்பாரா மேம்பாலத்தில் இனி ஷூட்டிங் நடத்தத் தடை!

கத்திப்பாராவில் படப்பிடிப்பு நடத்த இனி தடை! – போலீஸ் அறிவிப்பு

சென்னை: எந்திரன் படக்குழுவினரால் நேற்று கிண்டி கத்திப்பாரா பாலத்தில் போக்குவரத்து பாதிப்பைத் தொடர்ந்து, இந்தப் பாலத்தில் இனி ஷூட்டிங் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

First

ரஜினி நடிக்க, ஷங்கர் இயக்கும் எந்திரன் படப்பிடிப்பு சமீப காலமாக சென்னையில் உள்ள பாலங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

சமீபத்தில் மதுரவாயல் பகுதியில் உள்ள பாலத்தில் நடத்தப்பட்டது. அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டலும், பெரிய அளவு விமர்சனங்கள் எழவில்லை. ஆனால் நேற்று கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் நடந்த எந்திரன் ஷூட்டிங்கால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.

குறிப்பாக படப்பிடிப்புக்காக போலீஸ் உடையில் வந்த தனியார் செக்யூரிட்டிகள் மோசமான முறையில் மக்களிடமும் வாகன ஓட்டிகளிடமும் நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.

கிட்டத்தட்ட 4 மணி நேரம் போக்குவரத்து தடைபட்டதால், விமான நிலையம் செல்வோர் பாதிக்கப்பட்டனர்.

இந்தப் பிரச்சினை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதால், இனி கத்திப்பாரா பாலத்தில் ஷூட்டிங் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

எந்திரன் படத்தின் பெரும்பகுதி இதுவரை சென்னையிலேயே படமாகி வந்தது. ஆனால் எங்கும் இது போன்ற விமர்சனங்கள் கிளம்பவில்லை. பொதுமக்களிடமிருந்து இதுபற்றிய புகார்கள் வந்துள்ளது இதுவே முதல்முறை.
11 thoughts on “கத்திப்பாரா மேம்பாலத்தில் இனி ஷூட்டிங் நடத்தத் தடை!

 1. Manoharan

  கண்கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம். சன்பிக்சர்ஸ் காசை மிச்சம் பண்ணுவதற்க்காக பொதுமக்கள் பாதிக்கப்படவேண்டுமா ? இதனால் நிச்சயம் ரஜினிக்கு கெட்டபெயர்தான் வரும்.

 2. anvarsha

  உலகத்திலேயே வேறு எங்கும் இது போல் நடக்காது. கத்திப்பாரா போன்ற high traffic உள்ள இடத்தில எந்த முட்டாள் படப்பிடிப்புக்கு அனுமதி கொடுத்தது? வெட்கக்கேடு!

 3. ss

  தலைவர் படம் என்றாலும் தவறு, தவறு தான்.

  இதற்கு நஷ்ட ஈடாக ஒரு குறிப்பிட்ட தொகையை, அரசு பொது நல நிதிக்கு அல்லது சாலை பராமரிப்பு நிதியாக, நன்கொடை கொடுத்தால், சிறிது ஆறுதல் படலாம்.

 4. r.v.saravanan

  தலைவர் படம் என்றாலும் பொதுமக்கlukku

  endha idaiyurum irukka kudadhu

 5. anand

  தலைவர் எப்படி ஒத்துகிட்டார் இதுக்கு.

  நாளைக்கு( ஒரு வேளை தலைவர் அரசியலில் இறங்கி நாம ஒட்டு கேட்கும்போது ) இது ஒரு பெரிய பிரச்சனையா பண்ணுவாங்க.

  மக்கள் நலனை பற்றி கவலை pada thavanga என்று.

  தலைவர் ஜஸ்ட் ஒரு வருத்தம் தெரிவிக்கலாம்.

  ஏன் என்றால் எந்திரன் தலைவர் படம் .

  இது என்னுடைய கருத்து மட்டுமே .

  தலைவா பாத்து ஜாக்கிரதையா இரு தலைவா.

  இந்த சன்டிவி கோஷ்டிங்க பக்கவா பிளான் பண்ணி உன்னைய கவுக்கறதுக்கு ரெடியா குத்த வச்சு உக்காந்திட்டு இருகிறங்கோ.

  தலைவா என்றும் உனக்க மட்டுமே

  ஆனந்த்
  பமாகோ,மாலி

 6. Gopi

  This is certainly a public disturbance. At the same time why Rajinikanth has to apologies for this issue? He is just an actor for this movie. The producers should send out an apology to the public. At the same time the government should take the blame for not providing enough security and allowing security to dress up and act like Police. The security team for Endhiran movie should be punished for taking the law in their own hands.

 7. Manoharan

  Well said Gopi. Rajini should not be blamed for this. But in future all the media and others will project this as a serious issue that Rajini doesnt care about the people. Yes as most of our viewers said Rajini should be careful with Sun.

 8. ss

  இதை பற்றி பலவிதமான கருத்துகள் உலா வரும் இந்நேரத்தில், தயவு செய்து, எந்திரன் PRO மூலம் ஒரு அதிகாரபூர்வமான அறிக்கை வெளியிட செய்யுங்களேன். வில்லங்கமான விஷயத்துக்கு ஒரு முற்றுபுள்ளி வைத்து விட்டால் நல்லது.

 9. r.v.saravanan

  ss says:
  December 1, 2009 at 1:59 pm
  இதை பற்றி பலவிதமான கருத்துகள் உலா வரும் இந்நேரத்தில், தயவு செய்து, எந்திரன் PRO மூலம் ஒரு அதிகாரபூர்வமான அறிக்கை வெளியிட செய்யுங்களேன். வில்லங்கமான விஷயத்துக்கு ஒரு முற்றுபுள்ளி வைத்து விட்டால் நல்லது.

  yes ………….. kandippaga நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *