BREAKING NEWS
Search

கண்ணீரில் தத்தளிக்க வைத்த பிரேம் கோபால்!

கண்ணீரில் தத்தளிக்க வைத்த பிரேம் கோபாலின் ‘போராட்டம்’!

ங்களில் யார் அடுத்த பிரபுதேவா?’

– வியாழன் மாலை விஜய் டிவியில் இந்த நிகழ்ச்சி தொடங்கிய போது பெரிய ஈர்ப்பில்லாமல்தான் வேடிக்கை பார்த்தோம். காரணம் பொதுவாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் மானாட மயிலாட, ஜோடி நம்பர் ஒன் போன்ற நிகழ்ச்சிகளை நாம் கடுமையாக விமர்சித்து வந்துள்ளோம்.

ஆனால் இந்த குறிப்பிட்ட நிகழ்ச்சியில், ‘நீங்கள் நடத்தப்போகும் நிகழ்ச்சி பற்றி இரண்டு வரிகளில் கூறுங்கள்’ என்று அதை நடத்தும் பெண் கேட்டபோது, ‘இது நான் சம்பந்தப்பட்டது, நாடு சம்பந்தப்பட்டது!’ என்று எடுத்த எடுப்பில் பிரேம் கோபால் என்ற அந்த ஈழத்து இளைஞர் சொன்னதும், நிமிர்ந்து உட்கார்ந்தோம்.

நிமிடங்கள் கரைய, மனம் நம் வசமில்லை. கூப்பிடு தூரம்தான் என்றாலும், தொலை தூரமாக மாறிவிட்ட வன்னிப் போர்க் களமும், அங்கே குண்டு மழைக்கிடையில் வாழ்க்கையின் நிமிடங்களை எண்ணிக் கொண்டிருக்கும் ஈழத்து உறவுகளும் கண்முன் வந்துபோக, கட்டுப்படுத்த முடியாமல் மனமும் விழிகளும் கண்ணீரில் தத்தளித்தன.

‘எமது உறவுகளே… இந்த சுதந்திர நாட்டில் ஈழப் போர் என்பது வெறும் கதைகள்… தேர்தல் உபாயங்களில் ஒன்றாகிவிட்டது. நிஜத்தில் உங்களை எப்படி, யார் வந்து காப்பாற்றப் போகிறார்களோ…’ என்ற முடிவற்ற யோசனை துக்கப் பந்தாய் மாறி தொண்டையை அடைக்கிறது.

நன்றாக ‘பர்ஃபார்ம்’ செய்தீர்கள் என்று நிகழ்ச்சியை நடத்தியவர்கள் பாராட்டினார்கள். அட கொடுமையே… இதற்குப் பெயர் நடிப்பாய்யா…

இவர்களுக்கு இது ஒரு நிகழ்ச்சி. தத்ரூபமாக அமைந்த ஒரு எபிஸோட். அவ்வளவுதான்.

ஆனால் இந்த தருணத்தைப் பயன்படுத்தி, தம் உறவுகளைக் காக்க ஏதாவது செய்தாகவேண்டுமே என்ற சிந்தனையை உலகத் தமிழர்கள் மனதில் தூண்ட பிரேம் கோபால் என்ற தமிழ் இளைஞன் தன்மட்டில் செய்த ஒரு போராட்டம் இது என்பதே நிஜம்!

நண்பர்களே… லட்சக்கணக்கான நமது உறவுகளின் கண்ணீரும் ரத்தமும் உங்கள் மனங்களை நனைத்திருந்தால், அவர்களின் அடிமை மண், சுநத்திர நாடாய் திரும்பக் கிடைக்க மன்றாடுவோம் இறைவனிடம்… இப்போதைக்கு அந்த இறைவனே எமது சொந்தங்களைக் காக்க வேண்டும்!

அந்த வீடியோ உங்கள் முன்:

பகுதி-1

பகுதி-2
18 thoughts on “கண்ணீரில் தத்தளிக்க வைத்த பிரேம் கோபால்!

 1. prabakar

  At most Cong will get defeated in TN but not sure what else Tamils in TN could do. By the time our central Govt really start supporting as Prem Gopal mother said no one will be there.

 2. raj.s

  Guyz please wake up atleast this time ..if we allow congress to win its as equal to allowing a person to walk through the street who raped our mother..who are reading this message please get atleast 5 votes in favour of anti congress..thanks

 3. palZ

  மரத்துப்போன தமிழா, நீ அழுவதற்கு மீண்டும் ஒரு காணொளி!

 4. Amuthan

  Spleechless,

  after my mom’s death,today only i was cried because these performence..

  Che…chee….Iam very very ugly like an indian…

  Intha nadum(india) nattu makkalum nasama pokadum…

 5. Ramanan

  Ennada nadu ithu-people are dying and no one seems to do anything. Atleast India shouldn’t have helped these Sinhalese- it is killing all our good human beings, intha saabam- nallathu illai- I am ashamed to say I am an Indian.

  Romba paavamda intha makkal- manasu kekka mattengarathu. It is like visiting a funeral or unable to stop it and unable to help.

  This hurts and I was crying forever. Ennada Thamizhan, oh man – All I can do is cry. Prem Gopal namma naadu uruvakum, Envazhi -Vino- mikka nandri for sharing this and making us feel human again.

  There are many things people fight for- money, power, women etc… but Eazha makkal are the only people fighting for their land and being massacred for doing the right thing!

  Thamizh Eazham malaranthey Theerum!

 6. Kandiah Thillai

  What I can say! This is what I experienced in Sri Lanka!!!

  The performers were just telling the audiences through this“Dance Drama Compaction”(this real Tamil drama) , that this is the real status of Tamils in Sri-Lanka with no food, medicine, water and they are dying due to continuous bombing. The Tamils are covering there injury with sand as there is no medical treatment.
  It is very short and to the point. Every one must spent their time to see this real ‘Naatia Nadakam’ in the comfort of your house, these Tamils in Sri-Lanka have lost every thing and have the land below them and the sky above with Cluster Bombs, Phosphor Bombs above them and Sri-Lankan Government is spraying Nerve Gas around them, while the International Community and India is thinking what they can do to help these people.
  Stil the World Leaders are reluctant to open their golden mouth as it may offend the Barbaric Buddhist Sri-Lankan Government carrying out continuos genocide of Tamils for the past 65 Years, since the British left the Country with a very unreasonable majority (ie. 20% Tamils with 80% Singhalese) rule combing the Tamil and Sinhalese Kingdoms. Before the British the Tamils of Ceylon had their own Kingdom.

  Thanks & Kind regards
  Kandih Thillai

 7. Nattu

  இதை பார்த்தவிட்டு வீட்டின் கதவை மூடிவிட்டு கதறி அழுதேன்.. கோழையாக.. அது தானே உண்மை.. அந்த நிலையில் தானே நான் இருக்கிறேன்.. என்னை போல் ஒருவன் அழுதால் அது கோழை தனம். ஆனால் ஒட்டு மொத்த என் தமிழினமும் அழுகிறதே.. என் தமிழினம் கண்டிப்பாக கோழைகள் அல்லவே…

  வேறு என்ன தான் பிரச்னை ?

  என்ன தான் முடிவு ?

  யார் தான் இதை முடிவிருக்கு கொண்டு வர போகிறார்கள் ?

  இன்னும் எத்தனை எத்தனை உயிர் இழப்புகளுக்காக இந்த உலகம் காத்து இருக்கிறது?

  ‘எங்களுக்கு உதவுங்கள்’ என்று என் சகோதரி அங்கு கதறிய பொது.. ஒன்றும் செய்ய முடியா கையாலாகாதவர்களாக இருக்கிறோமே என் அருமை தமிழினமே..

  நம்மால் ஒன்றுமே செய்ய முடியாதா ? இதை வைத்து பிழைப்பு நடத்தும் நம் தமிழக மற்றும் இந்திய அரசியல்வாதிகள் வேறு நம் இனத்தை அசிங்க படுத்தி வருகிறார்களே..

  யாரை குறை கூறுவது ? என்ன செய்வது?

  இறைவா.. என் தமிழ் இனத்தை காப்பாற்று.. எங்களை தமிழர்களாக படைத்தவன் நீ. இல்லையென்றால் உன் மேல் எஞ்சி இருக்கும் சின்ன நம்பிக்கை கூட காணாமல் போய் விடும்.

 8. Paarvai

  இந்நிகழ்ச்சி விடியோவை நானும் நேற்று பார்த்தேன்… வார்த்தைகள் இல்லை. உள்ளுக்குள் குமுறத்தான் முடிந்தது. நட்டு சொல்வது போல் இறைவனிடம் மன்றாடுவதை தவிர வேறு வழியில்லை.

 9. Raja

  தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்திய பிரேம் கோபாலுக்கு வாழத்துக்கள். ஆனால் இனப் பிரச்சனையை தீர்க்கும் சக்தி படைத்தவர்கள் மற்றும் உலக நாடுகள் அமைதி காப்பது வருத்தமாக உள்ளது. அழ வைத்து விட்டது. இப்படி அழுது மறுத்துப் போன நிலைக்கு வந்து விடுவோமோ என பயமாக உள்ளது.

 10. தோமா

  எனக்கு நினைவு தெரிந்த வரையில் என் தந்தை இறப்பிற்கு பின் இன்னகழ்சியின் போதுதான் மீண்டும் அழுதேன்

 11. vasu

  எல்லோரையும் அழவைத்த நிகழ்ச்சி..
  தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை தனது நாட்டு மக்களுக்காக பயன்படுத்திய பிரேம் கோபாலுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.
  நடனம் மூலமாக உணர்வுகளை இப்படியெல்லாம்
  வெளிப்படுத்தலாம் என காட்டி உள்ளார்.
  அவரது முகபாவங்கள் பிரமிக்க வைத்தது.
  அகிம்சை , ஆயுதம் , உண்ணாவிரதம், ஊர்வலம் என்று போய்க்கொண்டிருக்கிற‌
  போராட்டத்திற்கு கலை வடிவாக தனது பங்களிப்பை செய்து பல மக்களுக்கு
  இலங்கை பிரச்சினையை கொண்டு சென்றவருக்கு வாழ்த்துக்கள், நன்றிகள், பாராட்டுக்கள்.
  சந்தர்ப்பம் கொடுத்த விஜய் தொலைக்காட்சிக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

 12. ஈ ரா

  வார்த்தை வரவில்லை வினோஜி…

  நான் சொல்ல நினைத்ததை நட்டுவும், பார்வையும் கூறி விட்டார்கள்…

  // நிமிடங்கள் கரைய, மனம் நம் வசமில்லை. கூப்பிடு தூரம்தான் என்றாலும், தொலை தூரமாக மாறிவிட்ட வன்னிப் போர்க் களமும், அங்கே குண்டு மழைக்கிடையில் வாழ்க்கையின் நிமிடங்களை எண்ணிக் கொண்டிருக்கும் ஈழத்து உறவுகளும் கண்முன் வந்துபோக, கட்டுப்படுத்த முடியாமல் மனமும் விழிகளும் கண்ணீரில் தத்தளித்தன. //

  இதை பார்த்த பின்பும், ஈழ நினைவுகளை புரிந்து கொள்ளாதவர்களும், அல்லது புரியாதது போல் நடித்து சுயநலமாய் இருப்பவர்களும் மனிதர்கள் என்பதில் அர்த்தம் இருக்காது…

  ஈ ரா

 13. This is real

  தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை தனது நாட்டு மக்களுக்காக பயன்படுத்திய பிரேம் கோபாலுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.

  பிரேம் கோபால் நீங்களும் ஔ போராளிதான்!

 14. நினைவுகள்

  எத்தனை துன்பங்கள் வந்தாலும், தடைகள் வந்தாலும், எங்களுக்கு கவலை இல்லை. ஏனென்றால் நாங்கள் நூறு முறை ஜெயித்தவன் அல்ல. ஆயிரம் முறை தோற்றவன்.’

 15. Ravi

  From Neteherlands.

  It is very emotion to watch this. I am speak less. Words no not coming out. Eyes are full with tears when you are watching. Reality!
  We are staving for our freedom sinds 1956. We need to live that’s all we want.
  Help us. Many many thanks to Prem & family to show this to world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *