BREAKING NEWS
Search

கண்ணிவெடிகளை அகற்றும் ‘ரஜினிகாந்த்!’

கண்ணிவெடிகளை அகற்றும் ஆசிரியர் ரஜினிகாந்த்!

வாகரை (மட்டக்களப்பு): கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வாகரைப் பகுதியில் விடுதலைப் புலிகள் புதைத்து வைத்த கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார் முன்னாள் ஆசிரியரான ரஜினிகாந்த்.kannivedi-mines-001

ஒரு தனிக் குழுவை ஏற்படுத்திக் கொண்டு, அந்தக் குழுவினருடன் ஒவ்வொரு பகுதியாகச் சென்று கண்ணிவெடிகளை அகற்றி வருகிறார் ரஜினிகாந்த்.

2007ம் ஆண்டு கிழக்கு மாகாணத்தின் அனைத்துப் பகுதிகளையும் புலிகள் வசமிருந்து மீட்டது இலங்கை ராணுவம். புலிகள் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்துவிட்டாலும் கூட அவர்கள் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் புதைத்து வைத்து விட்டுப் போன கண்ணிவெடிகள் இன்னும் கூட முழுமையாக அகற்றப்பட முடியாத நிலை.

காரணம், கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்து அகற்ற போதிய நிபுணர்கள் இல்லாதது ஒரு பக்கம், அரசின் அலட்சியம் மறுபக்கம்.

இதன் காரணமாக எங்கு கண்ணிவெடி இருக்குமோ என்ற பீதியில்தான் மக்கள் இங்கு வசித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஒரு காலத்தில் முந்திரித் தோப்புகள் நிறைந்திருந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பகுதி கண்ணிவெடிகளால் நிரம்பிக் கிடக்கிறதாம். பல இடங்களில் இன்னும் கூட கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க முடியாத நிலை. காரணம், புதைத்து நீண்ட காலமாவதால் அவை மண்ணுக்குள் ஆழப் போய் விட்டனவாம்.

இதன் காரணமாக மட்டக்களப்பு முதல் திருகோணமலை வரையிலான ஏ-15 நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் இன்னும் கூட கண்ணிவெடிகளை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு குழுதான் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த கண்ணிவெடி அகற்றும் குழு. இதன் தலைவராக இருப்பவர் ரஜினிகாந்த்.

இவருக்கு இந்தப் பெயர் வரக் காரணம் சுவாரஸ்யமானது. இவரது தந்தைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி என்றால் உயிராம். இதன் காரணமாகவே தனது மகனுக்கு ரஜினிகாந்த் என்று பெயரிட்டாராம்.

30 வயதாகும் ரஜினிகாந்த், வவுனியாவைச் சேர்ந்தவர். தமிழ் ஆரம்பப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.

ரஜினி என்று பெயர் வைத்து விட்டதால் சூப்பர் ஸ்டார் ரஜினியைப் போல மனித நேயம் கொண்டவராக, மனித நலன் குறித்து அதிக அக்கறை காட்டுபவராகவே திகழ்கிறாராம் இந்த ரஜினிகாந்த்தும்.

அதன் ஒரு பகுதியாகவே மனித உயிர்களைப் பறிக்கும் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் – வேலையை கூட விட்டு விட்டு.

கடந்த ஐந்து ஆண்டுகளாக கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்து அகற்றும் சேவையை செய்து வருகிறார் ரஜினிகாந்த். கண்ணி வெடிகளை அகற்றும் குழுக்களுக்கு உதவியாக இருந்து வருகிறார். கண்ணி வெடிகள் அகற்றப்பட்ட பகுதிகளில் மக்கள் மீண்டும் குடியேறவும் அவர் உதவிகள் செய்து வருகிறார்.

வாகரை முழுவதும் ரஜினிகாந்த்தின் குழுவினர் கண்ணிவெடிகளை கண்டுபிடித்து அகற்றி வருகின்றனர். மிக மிக மெதுவாகவே இந்தப் பணி நடந்து வருகிறதாம். ஒரு நாளைக்கு 10 சதுர மீட்டர் அளவு மட்டுமே பணிகள் நடக்குமாம்.

இந்த ஐந்து ஆண்டு காலத்தில் ரஜினிகாந்த் மட்டும் 260, ஜானி 99 ரக கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்து அழித்துள்ளாராம்.

ரஜினி என்ற பெயரே, ஒரு மனிதருக்குள் ஏற்படுத்தும் மாற்றம் பாருங்கள்!
4 thoughts on “கண்ணிவெடிகளை அகற்றும் ‘ரஜினிகாந்த்!’

 1. KAMESH

  Vinoji this is for Q&A section :

  விநோஜி

  தலைவர் பற்றி வெகு நாளாக எனக்குள் இருக்கும் சந்தேகம் இது. தாங்கள் இதை கேள்வி பதில் பகுதியில் பதிலளித்தாலும் சரி அல்ல வேறு பதிவில் தெரிவித்தாலும் சரி.

  தலைவர் 1996 ஒரு அறிய வாய்ப்பு இழந்ததாக பலரும் சொல்கிறார்கள் நானும் அப்படிதான் எண்ணுகிறேன்… உண்மையில் (கலைஞர், மூப்பனார் அவர்கள் இருக்கும் போது ) இது எப்படி சாத்யம் … தனியாக போட்டியிடும் என்னமா ?

  பிறகு கோயம்புத்தூர் குண்டு வெடிப்பின் போது எதற்காக தி மு க விற்கு ஆதரவாக குரல் கொடுத்தார் ? அப்போது ஆ தி மு க விற்கு தான் அதிக வாய்ப்பு இருத்து ?

  பிறகு காவிரி உன்ன விரத போராட்டத்தை வெற்றிகரமாக முடித்து விட்டு நதி நீர் பற்றி (தேசயாமயமாகும் திட்டம்) எதுவும் சொல்லல் தான் அதற்கு ஒரு கோடி தருவதாக அறிவிப்புடன் நிறுத்தி கொண்டது என்

  அவர்தம் எண்ணத்தில் அரசியல் வழக்கை பற்றி எதாவது திட்டம் இருக்கிறதா.. தாங்கள் அவருடன் உரையாடிய போது அதுபற்றி கோடிட்டு ஏதாவது சொன்னாரா..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *