BREAKING NEWS
Search

புதிய இயக்குநரின் நிஜக் கதை… கண்கலங்கிய ரஜினி…

கண்கலங்கிய ரஜினி…

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடும் உள்ளம் கொண்ட யாரும் வள்ளலாரே என்ற சான்றோர் வாக்குக்கேற்ப, சக மனிதன் துயரம் கண்டு / கேட்டதும் கண்ணீரைச் சிந்துபவர் ரஜினி. pandiraj_rajinikanth

அந்த மனிதரின் ஈரமனதைத் தெரிந்து கொள்ள பசங்க படத்தின் இயக்குநர் பாண்டிராஜூக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது சமீபத்தில்.

‘நமது பெருமையை’ நாமே சொல்லிக் கொண்டிருப்பதைவிட அடுத்தவர் சொல்லிக் கேட்பதில்தானே ஆனந்தம்… தமிழ்சினிமா இணையதளம் சமீபத்தில் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி இது…

வாய்விட்டு பாராட்டினா, நோய்விட்டு போகும். யாருக்கு? இரு தரப்புக்குமே! தனது படத்தில் மட்டுமல்ல, இப்படி ஒரு சம்பவத்தை வாழ்க்கையிலும் கண்டு இன்புற்றிருக்கிறார் பசங்க பட இயக்குனர் பாண்டிராஜ். நல்ல படங்கள் வந்தால் போதும்.

இருக்கிற வேலைகளுக்கு நடுவிலும், பொறுப்பாக அழைத்து பாராட்டுகளை தந்து ஊக்கப்படுத்துவது ரஜினியின் வழக்கம். சமீபத்தில் வெண்ணிலா கபடிக்குழு, நான் கடவுள் இயக்குனர்களை தேடி அழைத்து தித்திக்க தித்திக்க பேசி அனுப்பிய ரஜினி, லேட்டஸ்ட்டாக சந்தித்தது பசங்க படத்தின் இயக்குனர் பாண்டிராஜை.

தனது படத்தின் வால் டீமோடு போய், வாயார பாராட்டுகளை வாங்கிய பாண்டிராஜ், அப்படியே ரஜினியை கலங்கவும் வைத்தாராம். ஏன்?

சொந்த கிராமத்திலிருந்து ஏதோ ஒரு உந்துதலோடு சென்னைக்கு வந்த பாண்டிராஜ், ஏவிஎம் ஸ்டுடியோவில் வாட்ச் மேனாக கூட வேலை பார்த்திருக்கிறார்.

சென்னைக்கு போயும் மகன் நல்லபடியாக வாழ வில்லையே என்ற ஏக்கத்தில் அவரது தாயார் இறந்துவிட்டாராம். பிறகு பாக்யராஜிடம் வேலைக்கு சேர்ந்து எப்படியோ முன்னேறி பட வாய்ப்பையும் பெற்ற பாண்டி, அந்த சந்தோஷத்தை அப்பாவிடம் சொல்லலாம் என்று போனால், அதை உணரவே முடியாத மனநோயாளி ஆகியிருந்தாராம் அவர்.

கவலையோடு சென்னை திரும்பிய பாண்டிராஜ் திரும்ப ஷூட்டிங் போகும்போது அவரது அப்பா காணாமலேயே போயிருந்தார். எங்கெங்கோ தேடி அழைத்து வந்து வீட்டில் வைத்திருந்தாராம். அப்பாவின் கண் எதிரிலேயே தனது பசங்க பட ஷூட்டிங்கையும் நடத்தியிருக்கிறார். அவருக்கு புரியவில்லை என்றாலும், இதை பார்த்தாவது பழைய நிலைக்கு வந்துவிட மாட்டாரா என்ற ஏக்கம்தான். ஆனால், இந்த நம்பிக்கையையும் ஏமாற்றிவிட்டு ஒரு நாள் இறந்தே போனார் இவரது அப்பா. ஊர் உலகமே எனது படத்தை பாராட்டுகிறது. நான் நன்றாக இருப்பதை அறியாமலே இறந்துவிட்டார்கள் எனது பெற்றோர் என்று கலங்கினாராம் பாண்டிராஜ்.

ரஜினியும் கலங்கினாராம். ஏனென்றால் தென்னிந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், அதை கண்ணார பார்க்க ரஜினியின் பெற்றோரும் இல்லையே?

இவ்வாறு அந்தச் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.

-வினோ
One thought on “புதிய இயக்குநரின் நிஜக் கதை… கண்கலங்கிய ரஜினி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *