மணிரத்னம் புது படம் பூக்கூடை!
ராவணன் தோல்வியால் துவண்டுவிடாத மணிரத்னம் ஒரே நேரத்தில் இரு படங்களை ஆரம்பிக்கிறார்.
இதில் ஒரு படத்தை அவரே இயக்குகிறார். இதற்கு பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்வார் என்று கூறப்படுகிறது. தலைப்பு பூக்கூடை எனப் பதிவு செய்துள்ளார்களாம். தனுஷிடம் பேசிக் கொண்டுள்ளார் மணிரத்னம் என்று ஒரு பிரிவினரும், இல்லையில்லை, கார்த்திக்கின் மகனை இந்தப் படத்தில் நடிக்க வைக்கப்போகிறார் என்று சிலரும் பேசத் தொடங்கியுள்ளனர்.
இன்னொரு படத்தை அவரது உதவியாளர் இயக்குகிறார். இரு படங்களையும் தயாரிக்கிறது மெட்ராஸ் டாக்கீஸ்.
தனுஷ் – ஆன்ட்ரியா -செல்வராகவன்… மாலை நேரத்து மயக்கம்!
விக்ரமை வைத்து எடுக்கவிருந்த போலீஸ் கதை அப்படியே நிற்கிறது… ராணா டக்குபட்டியுடனான சரித்திர தமிழ் – தெலுங்கு படமும் இப்போதைக்கு இல்லை என்றானதால், கைவசம் இருந்த சொந்தப் படத்தை ஆரம்பித்துள்ளார் செல்வராகவன்.
இது, தனுஷ் -ஆண்ட்ரியா ஜோடியை வைத்து முன்பு துவங்கி அப்படியே அவர் நிறுத்திவிட்ட மாலை நேரத்து மயக்கம். கஸ்தூரி ராஜா தயாரிப்பு.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு திங்கள்கிழமை துவங்கியது.
இதுகுறித்து தனுஷ் கூறுகையில், “மீண்டும் பள்ளிக்குத் திரும்பியதைப் போன்ற உணர்வு, அண்ணன் செல்வா படத்தில் நடித்த போது..,” என்றார்.
கடிதம் ரெடி… கலவரத்தில் ஹீரோக்கள்!
தனது வாய்த்துடுக்கான பேட்டி வெளியானதிலிருந்து புலம்பெயர் தமிழர்களிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளால் கொஞ்சம் மிரண்டுதான் போயிருக்கிறாராம் சூர்யா.
அவரது ரத்த சரித்திரம் படம் பெரும் விலைக்கு விற்கப்பட்டுள்ளதாம் வெளிநாடுகளில். இந்த நேரம் பார்த்து இவர் இலங்கைக்குப் போய் விவேக் ஓபராயுடன் இணைந்து சேவை செய்யப்போவதாக பேட்டி தர, படத்தைப் புறக்கணிக்கும்படியான அறிக்கைகள் தயாராகின்றனவாம்.
இலங்கைக்குப் போயுள்ள அசின் நடித்திருக்கும் விஜய்யின் காவல்காரனுக்கும் புறக்கணிப்புக் கடிதம் தயாராவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஷயம் தெரிந்து வேக வேகமாக சமாதானப் படலத்தைத் தொடங்கியுள்ளனர் சம்பந்தப்பட்டவர்கள்!
-என்வழி
எதற்கும் கவலைபடாமல் சூர்யா மற்றும் அசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.. அப்பொழுது தான் இது மற்றவர்க்கு ஒரு பாடமாக அமையும்… இல்லாவிட்டால் யாருக்கும் பயம் இல்லாமல் போய்விடும்… தமிழ் உணர்வை காலில் போட்டு மிதித்து விடுவார்கள்.. தமிழ் உணர்வை எந்த தடை வந்தாலும் விட்டு குடுக்க கூடாது, அதுவே இந்த பிரச்சனைகாக உயிர் துறந்த தியாகி களுக்கு செய்யும் மரியாதையும் ஆகும்… !!!!
சூர்யா மற்றும் அசின் படத்தை வெளியட தடை விதிக்கவேண்டும்.
அடே கேன பயலுங்களா, உங்களுக்கு வேற வேலையே இல்லையா..? அடே சூர்யா விவேக் ஒபரோய் இலங்கைக்கு போய் உதவி செய்ய ரெடியா இருக்குறாங்க, அவங்க படத்த ஓட விட கூடாது, போராட்டம் பண்ணனும்னு பேசுற நீங்க என்னிகாவது இலங்கையில இன்னும் கஷ்டப்படுற மக்களுக்கு ஒரு வாய் சோறு போட யோசிச்சி இருப்பீங்களா..? சீமான் என்னடானா போராட்டம் போராட்டம்னு அலையுறான், அடே இலங்கையில பசிக்கு எதிரா போராட்டம் பண்ணுற மக்களை எவனாவது நெனெச்சு பார்த்தீங்களா..? அவ்வளவு பேர் செத்தாங்க இவ்வளவு பேர் சேத்தாங்கனு பேசுறீங்க, பசியால எத்தனையோ பேர் இன்னும் அங்க சாக போறாங்க எவனாவது அத பத்தி பேசுறீங்கள..? திருமாவளன் ” ராஜபக்ஷவ என்னவெல்லாம் சொல்லி பேசுனான் ..? ஆனா இலங்கைக்கு கூப்பிட்டதும் அவன் வீட்ல போய் சாபிட்டுட்டு அவன் சொன்ன ஜோக்க கேட்டு சிரிச்சிட்டு வந்தான், வெளிநாட்ல இருந்து போராட்டம் பண்ணுறவங்களுக்கு இலங்கைய பத்தி என்ன தெரியும்.. ?உயிருக்கு பயந்து நாட்ட விட்டு ஓடுன பொட்ட பயலுங்க தானே, அங்க இருந்து வீரம் பேசுற அவனுங்க உண்மையிலயே தாய் நாட்டு மேலயும் தன் மக்கள் மேலயும் பாசமும் அக்கறையும் இருந்திருந்தா இங்கயே இருந்து போராட இருந்துச்சு தானே ..? அடே அங்க ஒளிஞ்சு இருந்து வீரம் பேசாம களத்துல இறங்கி மோதி பார்க்கணும் இல்ல செத்து மடியனும், அது தான்டா உண்மையான தமிழனுக்கு பெருமை. அடே இந்தியாவுல இருந்து இலங்கைக்கு எவ்வளவு தூரம்..? உண்மைக்குமே தமிழன காப்பாத்தனும்னு நெனெச்சு இருந்தா எவ்வளவு நேரம்டா ஆகும் இலங்கைக்கு வர …? ஒட்டு மொத்த தமிழ் நாடும் வந்திருந்த இன்னைக்கு உலக மப்லயே இலங்கை காணாம போயிருக்கும், நீங்கதான் எதுவுமே பண்ண இல்லையேடா ..? அடே இவ்வளவு பேசுறீங்களே இந்தியாவுல அகதியா இருக்குற இலங்கை தமிழன உங்கள்ள எத்தன பேர்டா போய் பார்த்திருப்பீங்க ..? ஒரு வாய் சோறாவது உங்க சொந்த செலவுல குடுத்திருப்பீங்களா..? அடே நடிகர்களுக்கு எதிரா போராட்டம் பண்ணுறீங்க, அந்த போராட்டத்துக்கு செலவளிக்குற பணத்தை கஷ்டப்படுற அகதிகள்ட நலனுக்கு பாவிக்கலாம் தானே..? வெளிநாட்ல வாழுற தமிழனுங்க ஆளுக்கு ஒரு டாலர் தந்தாலே இங்க இருக்குற அகதிகளுக்கு இருக்க வீடும் சாப்பிட சோறும் போடலாம் தானே..? ஆனா பண்ண மாட்டாங்களே..? ஆயுதம் வாங்க கோடி கோடியா அள்ளி குடுப்பானுங்க, ஆனா யாரையும் வாழ வைக்கணும்ன அஞ்சு சதம் குடுக்க மாட்டனுங்க, ஏனா யுத்தம் பண்ணுறது யாரோ அதுல சாக போறது யாரோ, தமிழீழம் கெடைச்சா சந்தோஷமா வந்து வாழலாம் கெடைக்க இல்லைனா வெளிநாட்டுலையே இருந்திறலாம். அடே நீங்களாவது முடிஞ்சா யாராவது வாழ வைங்க , இல்லைனா வாய மூடிகிட்டு சும்மா இருங்க …!
சரி, தடை விதிச்சிருவோம். எங்க தைரியமிருந்த அடுத்த படத்தை தடுத்து நிறுத்துங்க பாப்போம். அவங்க செஞ்சது தப்பு தான். நான் இல்லைன்னு சொல்லலை.
அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி..
அவங்க படத்தை வெளியிடலேன்னா நட்டம் தயாரிப்பளருக்கு தான். இப்ப சூர்யா அடுத்த படம், உதயநிதி ஸ்டாலின் தயாரிகுராறு. அந்த படத்தை வெளியிட கூடாதுன்னு சொல்ல யாருக்காவது தைய்ரியமிருக்கா ?
இருந்த சொல்லுங்க நான் ஒத்துக்குறேன்.
எல்லாரையும் கட்டாயப்படுத்தி தமிழ் உணர்வை திணிக்க முடியாது. அது அவங்களுக்கே வரணும்.
தண்டிக்கப்பட வேண்டியவர்கள் யார் ?
1. பார்வதி அம்மாவை திருப்பி அனுப்புனவங்க
௨. ராஜபக்ஷே இந்திய வர அனுமதிச்சவங்க
௩. அங்க தமிழர்கள் இறந்ததுக்கு இரங்கல் கூட்டம் போடாம மாநாடு நடத்துனவங்க
௪ தேர்தல் அப்ப ஈழம் பத்தி பேசிட்டு இப்ப ஓய்வெடுப்பவங்க.
இவங்களை எல்லாம் என்ன செய்றது
வெளிய சொன்னது தப்பு ? சொல்லாததால அது சரியா ?
Hats off to u aryan.
All the points which u have mentioned are hundred percent true.These so called tamil saviours will never bother about people suffering because of Eelam War They will always bother about Eelam and LTTE only.Nobody will spend single peny to the welfare of these refugese.They will always voice to unneccesary issues to get media limelight.
Actors are always easy target for these people.Will these people try to block films from Sun pictures / Red Giant Movies/Cloud nine movies.They will never do such thing.They will try to attack actors which are always soft target.I dont know who has given authority to these so called tamil saviours to ban movies.
i think from now onwards producers should get censor certificate from Seeman and Co and then release pcitures in taminadu.Govt should dissolve Censor board and ask producers to get certificate from Seeman & Co to release their movies
Who the hell are these people to decide what people in tamilnadu should watch.Govt has to strictly deal with these people or otherwise he will become another Raj Thackery.
Again hats off to u Aryan for your wonderful points.
டேய் ஆர்யா உனக்கு தான் எழுத தெரியும்னு லூசு மாதிரி எழுதிருக்கே நீ ராஜபக்சேவோட பினாமினு தெரியுது.உனக்கு சப்போர்ட்டுக்கு கோகுல் லூசு பய வேற .ரெண்டு பெரும் ஸ்ரீலங்கா போய் ராஜபக்சேவோட தண்ணி அடிச்சி ஜமாயுங்க
குமார் . யாரையும் எப்போதும் அசிங்கமா திட்டக்கூடாது. லூசு , பினாமி அப்பி டின்னு பேசாதீங்க. நல்ல தமிழ்ல அவங்களுக்கு புரயுறமாதிரி ராஜபக்சேவோட அடிவருடி அப்டின்னு சொல்லுங்க…
ஆர்யா அவர்களே! உங்கள் பதிவு உண்மையில் ஒரு சவுக்கடி. வலிக்கிறது எனக்கு.
உங்கள் பதிவில்…
// அடே இவ்வளவு பேசுறீங்களே இந்தியாவுல அகதியா இருக்குற இலங்கை தமிழன உங்கள்ள எத்தன பேர்டா போய் பார்த்திருப்பீங்க ..? ஒரு வாய் சோறாவது உங்க சொந்த செலவுல குடுத்திருப்பீங்களா..?//
…. இது ஒரு சோறு பதம்.
நீங்கள் கை நீட்டும் குற்றவாளிகளில் நானும் ஒருவன் என்ற தார்மீக உணர்வில் வெட்கி தலை குனிகிறேன். என்னால் இயன்றதை செய்ய இன்றே செயல் படுகிறேன்.
நன்றி திரு கண்ணையா ,
இன்னைக்கு அகதியா இருக்குற ஒவ்வொரு இலங்கை தமிழனுக்கும் தேவை உங்கள மாதிரி ஒரு சிலர் உண்மையான மனசாட்சியோட செய்யுற உதவிதான். இதுல கமெண்ட் பண்ணி இருந்தவங்க போராட்டம் போராட்டம்னு சொல்லுறாங்க, ஆனா போராட்டம்னா என்னானு அவங்களுக்கு இன்னும் சரியாய் தெரியாது 30 வருஷமா நாங்க போராடுனதுல ஒரு கொஞ்சமாவது இவங்க போராடி இருப்பாங்களா..? இவங்களுக்கு தெரிஞ்ச போராட்டம் எல்லாம் சினிமா படம் வெளிவராம தடுக்குறதுதான், உங்கள மாதிரி உண்மையான மனசாட்சியோட ஒவ்வொருத்தரும் முன்னுக்கு வந்தாலே போதும், எந்த அரசியல்வாதிகிட்டையும் கை நீட்டாம எங்க கையாலயே எங்க சகோதரர்கள தூக்கி விடலாம். கோகுல் நானும் நீங்களும் மட்டும் இப்படி அக்கறை பட்டு முடியாது, வெட்டியா பேசிகிட்டு இப்படி திரியுற இவனுங்களும் இவனுங்க மனசாட்சிய தட்டி கேட்கணும்.
ஆர்யன்…
நீ ஓர் அரைவேக்காடு……….. எம்மால் முடிந்த இந்த மாதிரி போராட்டத்தால் தான் மிஞ்சி இருக்கும் கொஞ்சம் தமிழனும் உயிரோடு உள்ளார்கள்…. நம் எதிருப்பை இவ்வாறு காண்பிக்கவில்லை என்றால் ராஜபக்ஷே & கோ……. என்னவெல்லாம் பண்ணிருப்பான் என்று கற்பனை பண்ண முடியுமா உம்மால்…
புறகணிப்பு போராட்டம் என்பது காலத்தின் கட்டாயம்…. இந்திய தலைவர்கள் ஆங்கிலயர்களை விரட்ட புறகணிப்பு போராட்டம் நடத்திய அந்த வரலாறு உமக்கு தெரியுமா…
இந்த புறகணிப்பு போராட்டம் இலங்கைன் பொருளாதார ஆணி வேரையே பிடுங்கி விடும்…
சரி சரி இதையெல்லாம் ஆர்யனிடம் பொய் திராவிடன் சொல்லி என்ன பயன்….
தண்டிக்கப்பட வேண்டியவர்கள் யார் ?
1. பார்வதி அம்மாவை திருப்பி அனுப்புனவங்க
௨. ராஜபக்ஷே இந்திய வர அனுமதிச்சவங்க
௩. அங்க தமிழர்கள் இறந்ததுக்கு இரங்கல் கூட்டம் போடாம மாநாடு நடத்துனவங்க
௪ தேர்தல் அப்ப ஈழம் பத்தி பேசிட்டு இப்ப ஓய்வெடுப்பவங்க.
இவங்களை எல்லாம் என்ன செய்றது
வெளிய சொன்னது தப்பு ? சொல்லாததால அது சரியா ? 100% right —does anybody have guts to ask this?
இது சரியான வழி இல்லை!!!
இந்த போராட்டம்,நடிகர்களுக்கு தடை,படங்களுக்கு தடை எல்லாம்
உண்மையான ஈழ போராட்டத்தை அரசியல் ஆக்குகிறதோ என சந்தேகம் கொள்ள வைக்கிறது!!!
இவ்வாறான தடைகள் இப்படி மாறிவிடுமோ என அச்சம் கொள்ள வைக்கிறது.
ஒன்று மட்டும் புரியவில்லை..
யாருமே அங்கு செல்லக்கூடாது எனில்,இந்த தடை சிங்கள அரசுக்கா???
இல்லை தண்ணீர் கேட்டு தவிக்கும் தமிழர்களின் வாய்களுக்கா????
Mr.Raavanan i dont understand how come ur protests in tamilnadu will cripple the economy of Srilanka.Today also our naval chief was having talks with srilankan naval cheif in colombo.Just recently our cricket team was there playing cricket.Can u stop them from going there.
You can only stop cine people from going there.They also don’t want to go there because some of the rowdy elements here in chennai will immediately attack theatres in which their films are running .Theatres are always a easy target,whether it is for PMK or for Seeman & Co.Whatever may be the protest that should be in peaceful manner.
How comic is that these people are comparing their violent protests with freedom movement protests which is always non violence.
ஆர்யன் மற்றும் செல்வகுமார் அவர்களே… உங்களுடையே கருத்துகளை அன்புடம் வரவேற்கிறேன்… எனக்கு மற்றவர்களை பற்றி தெரியாது.. ஆனால் என்னால் முடிந்ததை செய்து கொண்டு தான் வருகிறேன்… போரின் போது நான் பல முறை ஈழ தமிழருக்காக புலம் பெயர்ந்த தமிலர்களிடத்து நன்கொடை வழங்கி இருக்கிறேன்… ஆனால் அது எப்படி பயன்பட்டது என்று எனக்கு தெரியவில்லை… ஈழ அரசியல் பற்றி பலமுறை அவர்களிடம் பேசி இருக்கிறேன்… கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை… அதற்காக போராட்டத்தையும் கைவிட கூடாது என்பது தன் என்னுடைய கருத்து… போராட்டம் கைவிடபட்டால் உணர்வு மழுங்கடிக்க படலாம்.. எனக்கு இலங்கைக்கு வர வாயிப்பு கிடைத்தால் கண்டிப்பா வருவேன் மேலும் உதவி செய்வேன் …. புலம் பெயர்ந்த தமிழர்கள் அளித்த ஆதரவு பல விதத்தில் தாயகத்து தமிழர் களுக்கு உதவியாக இருந்தது என்பதை நீங்களும் அறிவீர்கள்.. இப்போதைய நிலையில் புலம் பெயர்ந்த தமிழர்களின் போராட்டமே சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்கிறது என்பது எதார்த்தம்… செய்யும் உதவி கஷ்டப்படும் மக்களுக்கு நேரடியாக போய் சேர எதாவது வழி இருந்தா சொல்லுங்கள் … நான் மேலும் உதவி செய்ய தயாராக இருக்கிறேன் …
சூர்யா மட்டும் நடித்திருந்தால் யாரும் தடை கோரி இருக்க மாட்டார்கள்.. விவேக் ஓபராயும் சேந்து நடித்ததுதான் பிரச்சினையே… அவர் சிங்கள அரசை ஏற்கனவே பாராட்டி பேசிக்கொண்டு இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே … அது எந்த விதத்திலும் ராஜபக்சேவுக்கு ஆதரவாக போய்விட கூடாது… எம்முடைய எதிர்ப்பும் அதுற்காக தான்…
சுப்பர் பாயிண்ட் மிஸ்டர் கோகுல், ஹலோ தமிழருக்காக போராடும் போராட்ட வீரர் ராவணன் அவர்களே, இப்போ இலங்கையில இந்திய கிரிக்கெட் டீம் டெஸ்ட் மேட்ச் விளையாட போகுது , உங்களால முடிஞ்சா அவங்க மேட்ச் விளையாடுறத விட்டுட்டு உடனே நாடு திரும்பனும்னு உங்க அல்லகைகள வச்சுகிட்டு ஒரு சின்ன போராட்டம் நடத்தி காட்டுங்க பார்போம்….!
ஆர்யன், கோகுல்-
நீங்கள் யாருக்குமே பயனில்லாதவர்கள் என்பதை நிரூபித்திருக்கிறீர்கள்.
மனைவிக்கு குழந்தையில்லை என வைத்தியரிடம் போகிறீர்கள். அவர் சில யோசனைகளைச் சொல்கிறார். இல்லையில்லை, இது என்னால் முடியாது. நீங்களே எனக்குப் பதில் அந்த வேலையையும் செய்துவிடுங்கள் என்று கேட்டுக் கொள்வீர்களா?
இங்கே ஒரு பத்திரிகையாளன் தன் கருத்தை, தனக்குத் தெரிந்த வழி்முறையைச் சொல்கிறார். அவர் சரி என்று நினைப்பதை ஆதரித்து எழுதுகிறார். அவரை வழிமொழிந்து பலரும் கருத்து சொல்கிறார்கள். உங்களுக்கு அது பிடிக்கவில்லை. அதற்காக, அவர்களே நேரடியாக போராட்டத்தில் இறங்க வேண்டும் என்பது உங்கள் கோணல்புத்தியின் உச்சம்.
பரப்புரை என்பதே பெரும் போராட்டம்தான். அந்தப் பரப்புரை யுத்தத்தையே வினோ போன்றவர்கள் செய்கிறார்கள். ஈழ தமிழ் இணையதளங்களின் நடத்துநர்கள் எங்கெங்கோ இருந்து கொண்டு பரப்புரை யுத்தம் செய்கின்றனர். அதற்காக அவர்கள் அனைவரும் இறங்கிப் போராடி, சிறை சென்றால்தான் ஒ்பபுக் கொள்வீர்களா?
சினிமாவை நிறுத்துவதும் சினிமாக்காரர்களுக்கு எதிரான கருத்துக்களும் ஈழப்போராட்டத்தின் அங்கம் இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். இருந்தும், அது இந்திய-இலங்கை அரசுகளின் திட்டமிட்ட சதியின் ஒரு குறியீடு. அதை எதிர்க்கத்தான் வேண்டும்.
இலங்கையில் இந்த நடிகர் நடிகைகள் திரட்டித் தந்த/தரும் நிதியில் நயா பைசா கூட அங்கே துன்பப்படும் தமி்ழனுக்குக் கிடைப்பதில்லை. சிங்கள ராணுவத்துக்கு இன்னும் போஷாக்கு அளிக்கவே உதவுகிறது. விவேக் ஓபராய்களும் சல்மான்கான்களும் போனதால் என்ன சுகம் கண்டுவிட்டான் ஈழத் தமிழன்? சிங்களத்தின் உளவியல் போரை முன்னெடுத்துச் செல்லவே இந்த இருவரும் பயன்பட்டார்கள். பதிலுக்கு வட இலங்கையில் ஆளுக்கு 150 ஏக்கர் நிலம் கிடைத்துள்ளது. அங்கு பெரிய பண்ணை இல்லம் அமைப்பார்களாம் பின்னாளில்.
இப்போது முள்வேலிச் சிறையில் அடைபட்டிருப்பவர்களுக்கு தரப்படுவதில் ஒரு பைசா கூட ராஜபக்சே அரசுடையதல்ல. அத்தனையும் ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெப் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் தரும் உதவி. அதைக்கூட முழுசாகத் தராமல், முக்கால்வாசியை திருடிக் கொள்கிறார்கள் அரசாங்கத்தினர். ஐநா கண்காணிப்பாளற்கள் இருந்தும் இதுதான் நிலைமை.
இந்த லட்சணத்தில் சினிமாக்காரர்கள் வேறு ஆடிப்பாடி சம்பாதித்துத் தரவேண்டுமா?
எல்லாவற்றையுமே புலிகளுக்கு ஆதரவான நடவடிக்கைாயாக பார்க்க வேண்டாம் (இப்படி சொன்னபிறகும், அது புலிகளுக்கு ஆதரவான நடவடிக்கையாகவே உங்களுக்குத் தெரிந்தால், அது ஒருவிதத்தில் மகிழ்ச்சியே. காரணம், புலிகள் வேறு, மக்கள் வேறல்ல என்ற உண்மை நிரூபணமாகிறது). நம் நோக்கம், இலங்கையை சீக்கிரம் போர்குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்பதே.
இந்த ஐஃபா புறக்கணிப்பு, இன்று உலகம் தழுவிய கவனத்தைப் பெற்றுள்ளது. போர்க்குற்றத்துக்கான ஆதாரங்களை நடுநிலை அமைப்புகள் சேகரித்து ஐநாவிடம் தந்துள்ளன. தாமதமாகவென்றாலும் ராஜபக்ச கும்பல் தண்டிக்கப்படும் சாத்தியம் உள்ளது.
அதற்கான பல வழிமுறைகள், போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இன்னொன்று, எல்லாவற்றையும் எதிர்த்துக் கொண்டிருக்க முடியாது. கிரிக்கெட் என்பது மத்திய அரசின் விளையாட்டு. வெளியில் அது பிசிசிஐ கட்டுப்பாட்டில் உள்ளதுபோலத் தெரிந்தாலும், மத்திய அரசு ராணுவத்தை அனுப்பி இலங்கைக்கு உதவுவதைப்போலத்தான், கிரிக்கெட் குழுவையும் அனுப்புகிறது. இன்னொன்று கிரிக்கெட் வீரர்கள் வெறும் மிஷின்கள். ரன் அடிக்கும், பணம் பண்ணும் மிஷின்கள். அந்த மிஷின்கள் நமக்கு ஆதரவாக இயங்கும் என எதிர்ப்பார்ப்பது முட்டாள்தனம்.
சரியோ தப்போ, திரைத்துறையினர் நம் உணர்வுடன் கலந்திருக்கிறார்கள். நம்மை வெகுவாய் பாதிக்கிறார்கள். அவர்களின் புறக்கணிப்பு கவனம் பெறுகிறது.
இதுவல்ல விடுதலைப் போர். சுதந்திரப் போராட்டத்தின் போது, நெல்லைச் சீமையி்ல், வெள்ளையருக்கு முகச் சவரம் செய்ய மாட்டோம் என்று நாவிதர்கள் போராடியதாகச் சொல்வார்கள். போராட்டத்தை ‘சென்சேஷனலைஸ்’ ஆக்க அது உதவவில்லையா? அப்படித்தான் இதுவும்.
ஆர்யன், கோகுல் போன்றவர்களின் அதிகபட்ச நோக்கம் என்னவென்று பாருங்கள், தங்களுக்கான ஒரு குழு சேர்ப்புதான். போட்டு வைத்த கோலத்தில் சிறு நீர் கழிக்கும் சிறுபிள்ளைத்தனம் இது. மீண்டும் உங்கள் அபத்தக் குப்பைகளை இங்கே கொட்டாதீர்கள்.
-சண்முகராஜா
//ஆர்யன், கோகுல் போன்றவர்களின் அதிகபட்ச நோக்கம் என்னவென்று பாருங்கள், தங்களுக்கான ஒரு குழு சேர்ப்புதான். போட்டு வைத்த கோலத்தில் சிறு நீர் கழிக்கும் சிறுபிள்ளைத்தனம் இது. மீண்டும் உங்கள் அபத்தக் குப்பைகளை இங்கே கொட்டாதீர்கள்.
-சண்முகராஜா//
-சூப்பர்… செருப்படி!!
ஆர்யன் & கோகுல், (Brothers of ராஜபக்சே)
every Tamilans in elam they will never ask any one help for food and your money… they only need their seperate country………
we are not begger to take your money….. we are begging your support to get our own country….
first of all your name is totally Wrong against Tamilans “Aaryan” and gokul try to think from your mind…..
i think there is some manufacturing defect for “Aaryan”
ஆர்யன் & கோகுல்…
உமக்கு நான் எழுத நினைத்த கருத்துகளையும் சேர்த்தே எழுதி விட்டார் சண்முகராஜா….
ஆனால் ஓன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன்…. போராட்டம் பன்னுவர்களை கலாய்பது என்பது எல்லா கால கட்டத்திலும் உண்டு.. ஏன் என்றால் உம்மை போன்ற பச்சோந்திகள் அன்றும் உண்டு இன்றும் உண்டு என்பதை உம போன்றோர் நிருபணம்.
உம்மை போன்றோர் தான் இந்திய அரசை வழிநடத்துகிறார்கள்…..
சண்முகராஜா (ரஞ்சன்) அவர்கள் அனைவரின் மனதில் இருப்பதை அழகாக சொல்லியுள்ளார் . அவர் சொன்ன கருத்து அனைத்தையும் என்னுடைய கருத்தாக நான் கருதுகிறேன். மிக்க நன்றி சண்முகராஜா (ரஞ்சன்) அவர்களே.
இவ்வளவு தெளிவாக கூறியும் ஒரு சில விளம்பர விரும்பிகள், பச்சோந்திகள், அடிவருடிகள்….etc போன்றவர்களுக்கு புரியாது என்று நினைக்கிறன். ஆனால், இந்த மாதிரி இருப்பவர்களையும் உண்மையை உணரசெய்ய நாம் முனையவேண்டும்.
திரு கோபி ரமேஷ் அவர்களே, விவேக் ஒபரோய் நடிச்சதால படம் தடை பண்ண சொல்றீங்க. சரி ஒத்துக்குறேன். சுனாமியால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தை தத்தெடுத்து வேண்டியதை செஞ்சு கொடுத்தாரே, அப்ப இவர்ஒரு சின்ன நன்றி கூட சொல்லலையே.
தவிரவும் அவர் ஒரு நடிகன், அதனால தான் அவரு அங்க இருக்குற தமிலர்கலூகு உதவனும்னா அதுக்கு ராஜபக்ஷே அனுமதி வேணும். அந்த அனுமதி குடுத்ததுக்காக தான் அவரு பாரடி பேசுறாரு.
வினோ அவர்களே
சண்முகராஜாவின் கமெண்டை தனி பதிவாகவே போடலாம். அனைவருக்குமான, ஒரு பதிலாக அமையும்.
Shanmugaraja great reply… i was tired on writing comments.. see after shanmugaraja’s reply, what this selvakumar talking.. better read before comment…. 🙁
What great confident on south india.. may be because of people like selvakumar there… Read what Salman khan telling….:
—————————————————————————-
Bollywood Superstar Salman Khan says he is not worried about the repercussions which may arise in South India as a result of his decision to shoot his latest movie‘Ready’ in Sri Lanka.
“It’s not a big deal. I have not faced any barriers so far. And I don’t think I will have any problems in screening the movie in South India,” Khan told reporters in Colombo today adding that the movie was being shot in Sri Lanka as it saves a lot of money and time.
The movie was scheduled to be shot in Mauritius, Singapore and Thailand but instead they found all the locations for the movie in Sri Lanka. Salman Khan is a producer cum lead actor while Kollywood actress Asin is paired alongside with him
சண்முகராஜா (ரஞ்சன்) அவர்கள் அனைவரின் மனதில் இருப்பதை அழகாக சொல்லியுள்ளார் . அவர் சொன்ன கருத்து அனைத்தையும் என்னுடைய கருத்தாக நான் கருதுகிறேன். மிக்க நன்றி சண்முகராஜா (ரஞ்சன்) அவர்களே.
@ சண்முகராஜன் . உங்கள் கருத்தை அப்படியே வழிமொழிகிறேன்.
@ ஷண்முக ராஜா.
முதலில் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
ஆர்யரும் சரி,கோகுலும் சரி நீங்களும் சரி எல்லாருகுமே ஒரே கொள்கையாக பாதிகப்பட்ட மக்கள் நன்றாக இருக்க வேண்டும், அவரகளுக்கு எல்லா வளமும் கிட்ட வண்டும் என்பது தான் குறி.எனினும் வழி முறைகளும்,எண்ணங்களும் மாறுகின்றன,அவ்வளவு தான்.
எனவே இங்கே கருத்து தெரிவித்த ஆர்யாவையும் கோகுளையும் ராஜபக்ஷேவின் அடியாட்களை போல சித்தரிப்பதும்,
அதே போன்று ஆர்யா அவர்கள் ஒருமையில் பேசியிருப்பதும்,உபயோகபடிதியா வார்த்தைகளும் அவளவு நாகரீகமாக இல்லை என்பது என் கருத்து.
//இங்கே ஒரு பத்திரிகையாளன் தன் கருத்தை, தனக்குத் தெரிந்த வழி்முறையைச் சொல்கிறார். அவர் சரி என்று நினைப்பதை ஆதரித்து எழுதுகிறார். அவரை வழிமொழிந்து பலரும் கருத்து சொல்கிறார்கள். உங்களுக்கு அது பிடிக்கவில்லை. அதற்காக, அவர்களே நேரடியாக போராட்டத்தில் இறங்க வேண்டும் என்பது உங்கள் கோணல்புத்தியின் உச்சம்.//
இந்த கூற்றில் ஒரு பிழை இருக்கிறது.ஆர்யார்ரோட கூற்றில் எல்லாவற்றையும் ஏற்க முடியாவிட்டாலும்,மேல சொல்லியுள்ள உங்களுட பதில் கூற்றையும் ஏற்க முடியாது. ஆர்யர் நேரடியாக போராட சொல்ல வில்லை.அவர் சொல்வது நிரந்தரமான ஒன்றாக இருக்கிறது.உண்மையாக யோசித்தால் போராட்டம் என்பது எதற்கு என்பது புரியும்,போரினால் பதிக்க பட்ட மக்கள் நன்றாக வழ வேண்டும் என்பது தான்.எவ்வாறு அவர்கள் நன்றாக வாழ்வார்கள்,திரைபடத்தை புரகநிபதலா? இல்லை. அவர்களுக்கு உன்ன உணவு,உடுக்க உடை,இருக்க இடம் வேண்டும்.இதை கொடுங்கள் எல்லாரும் என்று சொல்கிறார்.நன்றாக யோசித்தி பார்கில் திரைபடத்தை நிறுத்தும் போராட்டம் இருந்தாலும் சரி,இல்லா விட்டாலும் சரி அவர்களுக்கு அத்தியாவசிய தேவைகள் கிடைக்காது,அனால் ஆர்யர் சொல் படி பார்த்தல் தான் அவர்களுடைய உண்மை குறையை போக்க முடியும்.மேலும் சினிமாகாரர்கள் மக்களோடு ஒன்றோடு கலந்தவர்கள்,கிரிக்கெட் ஆடுபவர்கள் அவ்வாறு இல்லை என்பது போலவும் சித்தரிதுலீர்கள்.இதை ஏற்க முடியாது.சினிமா என்பது ஒரு என்டேர்டைன்மென்ட் என்ற பீல்டின் ஒரு பகுதி,அதே போல கிரிக்கெட் என்பது ச்போர்த்சின் ஒரு பகுதி.இவாறு ஒவோவன்றும் ஒரு பீல்டை சார்ந்தது.இதில சில மக்குடன் நெருங்கிய உறவையும்,பரவலான மக்களையும் சென்றடையலாம்,ஒரு சில அவ்வாறு இல்லாமல் இருக்கலாம்.அதற்காக மக்களுடன் நெருங்கிய தொடர்புள்ள ஒரு பீல்டை சேர்ந்தவர்கள் மட்டும் தெருவில் போராடவேண்டும் என்று சொல்வது,அதிலிருந்து சிலவற்றுக்கு(கிரிக்கெட்) விலகு அளிப்பது எந்த விதத்தில் ஞ்யாயம்?.எல்லா பீல்டையும் சம பார்வையில் பார்க்க வேண்டும்.மேல பேசப்படும் பிரச்சனை இதை எல்லாம் தாண்டி அரசியலுக்கு சம்பதபட்டது,அவ்வாறு பார்க்கையில் எந்த அரசியல் கட்சி சரியான கொள்கையி கடிபித்கிறது,இல்லை வைக்கின்ற கொள்கையில் உறுதியாக இருகின்றது.அதிலே தான் நமது கவனமும் கருதும் முக்கியமாக ஒன்றி போய் இருக்கவேண்டுமே தவிர,சம்பதம் இல்லாமல் சினிமாகாரர்களை வைத்து போராட்டம் என்பதெல்லாம் தேவை இல்லாத ஒன்று,மற்றும் நலத்துக்கு பயன்படாத ஒன்று,சர்ச்சைகளையும்,வாகுவதங்களையும் மட்டுமே இது தோற்றுவிக்கும்.
நாட்டாமை கணேஷ்…
கொஞ்சம் ஒதுங்கு…..
@இராவணன்
கருத்து சொல்லும் உரிமை எல்லாருக்கும் உண்டு எனும் போது எதற்கு ஒதுங்க வேண்டும்.
ஏன் கருத்துகளை ஜீரணிக்க முடியவில்லையோ?இல்லை பதில் சொல்ல முடியவில்லையோ?
சூர்யா பெரிய இவன்னு நினைப்பு.நெனப்பு தான் பொழப்ப கெடுக்கும்.
உன் பொண்டாட்டி ஜோதிகா வட நாட்டுக்காரி உனக்கு விசுவாசம இருக்கா.அவள பாத்து வளர்த்து விட்ட தமிழர்களுக்கு நன்றியோட இருக்க முயற்சி பண்ணு.இல்ல அண்ட சராசரத்தையும் மூடிகிட்டு இரு.