BREAKING NEWS
Search

‘கடவுளையும் ரஜினியையும் கேள்வி கேட்க முடியாது…!’ – வட இந்திய மீடியாவின் அசரடிக்கும் ஒப்பீடு!!

‘கடவுளையும் ரஜினியையும் கேள்வி கேட்க முடியாது…!’ – வட இந்திய மீடியாவின் அசரடிக்கும் ஒப்பீடு!!

ந்திரன் படம் வெளியாவதற்கு முன்பே, அந்தப் படத்தின் கதை, உள்ளடக்கம் என்னவென்று தெரியாமலேயே சில முந்திரிக் கொட்டைகள், “இது அந்தப் படத்தின் தழுவலாக இருக்கும்”, “இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியாக இருக்கும்” என்றெல்லாம் பீலா விட்டுக் கொண்டிருந்தன. அதையும் சிலர் படித்துவிட்டு ‘அப்படியும் இருக்குமோ’ என்று கேட்டார்களே தவிர, ‘ரூ 150 கோடிக்கு மேல் முதல் போட்டு படம் எடுக்கிறார்களே… அவர்களுக்கு எதுவுமே தெரியாதா… இதையெல்லாம் கூட யோசிக்க மாட்டார்களா.. சர்வதேச சினிமாவை விரல் நுனியில் வைத்திருக்கும் ரஜினிக்கு இது தெரியாதா…’ என்றெல்லாம் யோசிக்கக் கூட இல்லை.

இதோ எந்திரன் வெளியாகி, உலகை அதிர வைத்துக் கொண்டிருக்கிறது. ரஜினியை விமர்சிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் சிலரால் கூட ஒன்றும் பேச முடியவில்லை. ரஜினியின் கடைசி 40 நிமிஷ விஸ்வரூபத்தில் அசந்து அயர்ந்து அமைதி காக்கிறார்கள். ‘எதற்கும் இன்னொரு வாட்டி பார்த்துட்டு வந்து சொல்றேன்’ என்று டிக்கெட்டுக்கு நடையாய் நடக்கும் தீவிர விமர்சகர்களையும் பார்க்க முடிகிறது.

தமிழ் மீடியாவை அப்புறம் பார்ப்போம்… வடக்கில் என்ன சொல்கிறார்கள் என்பது முக்கியமில்லையா…

ந்திரன் – ரஜினி எக்ஸ்பிரஸ்’ – இதுதான் ரீடிஃப் இணையதளம் ரோபோ விமர்சனத்துக்கு தந்திருக்கும் தலைப்பு.

“ரஜினியைத் தவிர வேறு எந்த ஹீரோவாலும் திரையில் இந்த மேஜிக்கை நிகழ்த்தியிருக்க முடியாது. இந்தப் படத்தை இந்த உயரத்துக்குக் கொண்டு சென்றிருக்கவும் முடியாது,” என்கிறார் ரீடிஃப் விமர்சகர்.

“So, if there is just one Rajni movie you will ever watch, this is it, this is it, this is it…” – இப்படி தங்கள் விமர்சனத்தை முடித்திருக்கும் ரீடிப், படத்துக்கு 5க்கு 4 ஸ்டார்கள் கொடுத்துள்ளது. ரீடிஃப் தளத்தை தொடர்ந்து படிப்பவர்களுக்குத் தெரியும், அவர்கள் எந்த அளவு கடுமையாக விமர்சிப்பார்கள் என்று!

டைம்ஸ் ஆப் இந்தியாவின் விமர்சனம் இன்னும் ஒரு படி மேல் போய், சூப்பர் ஸ்டார் ரஜினி இந்திய சினிமாவின் சர்வதேச தூதர் என்று வர்ணித்துள்ளது.

“Robot is primarily designed as an unadulterated tribute to the charisma of Indian cinema’s ageless superstar, Rajnikanth…”-இது எப்படி இருக்கு!

ஹாலிவுட் சினிமாக்களை மட்டுமே உயர்த்திப் பிடிக்கும் சிலருக்கு டைம்ஸ் ஆப் இந்தியா சொல்லும் அட்டகாசமான பதில் இது:

“For non-Rajnikanth fans, it’s a sure-fire way to understand the mystique and magical allure of Rajni saar, a hero who enjoys a demi-god status in several parts of India. Why? Because there are almost a hundred Rajnikanths eating up helicopters, smashing cars, battering planet earth and creating havoc, like never before. If you thought Terminator, Matrix, Godzilla was fun, then we guarantee you’ll fall off your chair with glee as our desi T2-meets-Blade Runner-meets Neo-meets-Godzilla sets the screen on fire in a crazy, vengeance bid. Spoofy, yes. But super fun too…”

ரோபோவுக்கு டைம்ஸ் ஆப் இந்தியா தந்திருக்கும் அந்தஸ்து 5-க்கு 4.5 ஸ்டார்கள். எனக்குத் தெரிந்து வேறு எந்த இந்தியப் படத்துக்கும் இத்தனை பெரிய இடத்தை இந்த நாளிதழ் தந்ததில்லை!

பாலிவுட்டின் பிரபல விமர்சகர் தரண் ஆதர்ஷ் என்ன சொல்கிறார்?

“Two things… One, it’s difficult to conceptualize and execute a film like ROBOT.

Two, when Rajinikant’s name comes in the credits, one cannot hear anything for the next two minutes. His name is greeted with a thunderous applause, whistles yells and cheers. Such is the charisma of this superstar. Rajnikant is the Boss. The real Badshaah…!”

-பிரபலமான ‘பாலிவுட் ஹங்காமா’ இணையத்தில் தரண் ஆதர்ஷ் தனது விமர்சனத்தை இப்படித்தான் ஆரம்பிக்கிறார்!

இந்தப் படம் முழுக்க முழுக்க ரஜினிகாந்த் ஷோ என்கிறார் தரண். 5-க்கு நான்கு நட்சத்திரங்கள் கொடுத்து தனது விமர்சனத்தை தரண் முடித்திருக்கும் விதத்தைப் படித்தபோது மனம் இன்பத்தால் அதிர்ந்தது என்றால் மிகையல்ல. அது,

“ROBOT is a Rajnikant show from start to end. And no other actor, not from Bollywood at least, would be able to do what he does with such amazing ease.

On the whole, ROBOT is a crowd-pleasing and hugely mass appealing tale of android revolution with a thrilling plot, rich and imaginative screenplay, super action, astounding effects and most importantly, Rajnikant, who is the soul of the film. It’s the Big Daddy of all entertainers. Miss it at your own risk!”

என்டிடிவி தனது விமர்சனத்தில், “Robot rides on Rajinikanth’s shoulders and he never stoops under the burden. Aided by snazzy clothes, make-up and special effects, he makes Chitti endearing…” என்று குறிப்பிட்டுள்ளது.

இதுதவிர, தனது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அந்நிறுவனம் ரஜினிக்கு அளிக்கும் முக்கியத்துவம், ரஜினியை The Global Superstar என்று அவர்கள் விளிக்கும் பாங்கு, பார்க்கும் யாரையும் சிலிர்க்க வைக்கும்.

டிஎன்ஏ நாளிதழ் தனது விமர்சனத்தில், “இதுவரை ரஜினியின் ரசிகராக இல்லாதவர்கள் கூட, எந்திரனைப் பார்த்தபிறகு அவரது பரம ரசிகராகவே மாறிவிடுவார்கள்” என வர்ணித்துள்ளது. “Rajinikanth, whose fan following extends beyond India into many other countries of the world, gives his many admirers something to cherish in Robot. In fact, if you’re not a Rajni fan, you might just be one after watching Robot…”

தனது விமர்சனத்தின் முடிவில், “This a Rajni fest all the way, and it’s not to be missed…” என்று குறிப்பிட்டுள்ளது டிஎன்ஏ.

வற்றுக்கெல்லாம் சிகரம் வைத்த மாதிரி, ந்திய சினிமா சரித்திரத்தில் யாரும் கொடுக்காத, யாருக்கும் கிடைக்காத ஒரு அந்தஸ்தை வட இந்திய மீடியாக்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மட்டும் கொடுத்துள்ளன. நாட்டின் மிகப் பெரிய ஆங்கில நாளிதழான இந்துஸ்தான் டைம்ஸ், ரஜினியையும் அவரது நடிப்பு மீது மக்களுக்கு உள்ள அபிமானத்தையும் கடவுளுக்கும் அவரது பக்தர்களின் நம்பிக்கைக்கும் இணையாக ஒப்பிட்டுள்ளது.

“Robot takes Superstar (that being his first name!) beyond the mythology of his home state. For one, Rajni Sir, in this movie, isn’t a folk hero testing the bounds of human antics. He is himself an “andro-humanoid”. There is external logic to the madness on the movie screen…”

-இது அந்த விமர்சனத்தின் ஒரு பகுதி.

ஒரு கட்டத்தில், ரஜினி விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் என்பதை அழுத்தமாக இப்படிச் சொல்கிறார் கட்டுரையாளர்:

“கடவுளை எப்படி யாராலும் விளக்க முடியாதோ அப்படித்தான் ரஜினிகாந்தும். கடவுளும் ரஜினிகாந்தும் கேள்வியே எழுப்ப முடியாத விஷயங்கள்… கேள்வி எழுப்பினால் மக்களின் அதீத கோபத்தைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டி வரும்!” “Rajnikanth is the closest human approximation to god from an organised faith. Both are ageless in their airbrushed figures. Both demand believers, and complete devotion to unquestioned legends. You can’t explain God. You can’t explain Rajnikanth. Being critical of either can invite extreme public wrath….”

-இதற்கு மேல் சொல்ல ஏதாவது இருக்கிறதா!!

-வினோ
15 thoughts on “‘கடவுளையும் ரஜினியையும் கேள்வி கேட்க முடியாது…!’ – வட இந்திய மீடியாவின் அசரடிக்கும் ஒப்பீடு!!

 1. bahrainbaba

  அட்டகாசம்.. என்ன சொல்றது.. கடைசி வரிகளை படிக்கும்போது கிட்ட தட்ட நான் மயக்க நிலையில்.. உண்மைதானே.. கடவுளையும் தலைவரையும் விமர்சனம் பண்ணவோ கேள்வி கேட்கவோ கூடாது,.. அப்டி போட்டு தாக்குங்க..வாடா இந்திய மீடியாக்களுக்கு முதல் முறையாக ஒரு அட்டகாசமான நடிப்பை திரையில் பார்த்திருக்கார்கள்.. இத்தனை நாள் வரை எதற்கு இந்த மனிதனுக்கு இவ்வளவு அபிசேகம் அர்ச்சனை என்று கேள்விக்குறியோடு இருந்தவர்களுக்கு தலைவரின் எந்திரன்தான் ஆச்சர்ய பதில்..

  தலைவா கலக்குங்க.. நன்றி வினோ.. mind blowing நியூஸ்..

 2. peraveen

  நன்றி வினோ…

  இந்த படம் அனைவரையும் கவரும் என்பதில் சந்தேகம் இல்லை…

  தலைவர் வாழ்க….

 3. santhosh

  வட இந்திய மக்களின் மனநிலை பிரதிபலிக்கும் வகையில் விமர்சனம் எழுதியவர்களுக்கு தலைவரின் ரசிகனாய் என் நன்றிகள்.
  இனி எந்த நடிகரையும் தலைவருடன் ஒப்பிட்டு பாரக்க கூடாது.

  சங்கரின் திறமை இந்த படத்தின் முலம் தெரிந்து விட்டது. தலைவரின் கடைசி 40 நிமிட நடிப்பு என் மனதை விட்டு நிச்சியம் நீங்காது.

  படம் பார்க்கும் வரை வியாழுன் அன்று நன் தூங்கவில்லை, படத்தை பார்த்துவுடன் மீண்டும் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. நேற்று மட்டும் இரண்டு முறை பார்த்தவுடன் மன நிறைவுடன் நேற்று தூங்கினேன்.

  இந்த மாதரி சேதிகளை எங்களுடன் பகிர்யுக்கு நன்றி வினோ…..

 4. santhosh

  *Rajinikanth doesn’t wear a watch. He decides what time it is
  *Rajinikanth’s email id is gmail@ rajinikanth.com
  *When Rajinikanth does push-ups, he isn’t lifting himself up. He is pushing the earth down
  *Rajinikanth can delete the recycle bin
  _______________
  ஆம்… Hindustan Times இதுபோல நிறைய வெளியிட்டுள்ளனர். 🙂

 5. Ilavarasan

  புல்லரிக்கிது. நம்மில் இருந்து ஒரு கருப்பு மனிதன் உலக மேதாவிகளுக்கெல்லாம் கொடுத்த “மே மே மே மே மே மே” (வில்லன் சிட்டி ஸ்டைலில்!!)
  ______________

  ‘எல்லாம் வல்ல எந்திரன்’-னு நீங்க போட்ட தலைப்பு சரிதானே!!
  -வினோ

 6. eppoodi

  தமிழ் விமர்சனங்கள் பட்டையை கிளப்பும் வேளையில் ஹிந்தி விமர்சனங்களை நேற்று இரவு முழுவதும் தேடித்தேடி படித்துக்கொண்டிருந்தேன். நான் பார்க்காத பல தளங்களின், பத்திரிகைகளின் விமர்சனங்களை தந்துள்ளீர்கள். மிக்கநன்றி வினோ. தமிழ், ஹிந்தி இரண்டிலும் எந்திரன் நிச்சயம் ‘ஹிஸ்டரி ரீ ரயிட்டர்தான்’.

  தயவுசெய்து எந்திரன் தெலுங்கு வேஷனது வரவேற்ப்பு நிலவரங்களையும் விமர்சனங்களையும் உங்களது ஸ்டையிலில் தரமுடியுமா? முடிந்தால் கேரளா, கர்நாடக நிலவரங்களையும் தாருங்கள் ப்ளீஸ். காத்திருக்கிறேன்

 7. Thameez

  Great Job!! Superb compilation. Nice to know that you people are aware of Taran Adarsh and DNA paper.

 8. கிரி

  வினோ கலக்கல் ரிப்போர்ட்!

  அப்படியே எப்பூடி! சொன்ன மாதிரி மற்ற ரிப்போர்ட் ம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

 9. kicha

  Thanks vino. Nice report.

  Inime eavanavadhu thalaivara pathi vaaya thorandha kilichupuduvom kilichu.

 10. kutty

  ரிவியு பிரம் டெகண்

  Complete masala fare with Endhiran

  ரெவிஎவ் பிரோம் டெக்கான் ச்ரோநிச்லே

  Complete masala fare with EndhiranOctober 1st, 2010

  Tags: aishwarya rai, Endhiran, Rajnikanth, robor, Shankar, tamil Man makes a machine, but the machine wreaks havoc on mankind. The onus is on the creator to set things right. This is a done-to-death storyline in movies in the West. For Tamil audiences, Shankar has presented something similar in “Endhiran” in an interesting manner and Rajnikanth’s magic makes it worth a watch.

  A technical milestone in the history of Indian cinema, “Endhiran” is one of a kind and will be talked about for months. It is one of those movies where the awe factor lives forever. The script has its highs and lows and it may appeal to everyone. But if we forget logic, it is a truly entertaining movie.

  The story revolves around Vaseegaran (Rajnikanth), a robotics professor who creates an Android humanoid robot Chitty, which resembles him. The machine is programmed to be a master of all traits. Vaseegaran creates it with a sole aim of dedicating it to Indian Army to replace soldiers in the battle field.

  Vaseegaran is assisted by Siva (Santhanam) and Ravi (Karunas). The robot wins the admiration of beautiful Sana (Aishwarya Rai), ladylove of Vaseegaran.

  But trouble starts when Chitty is programmed to have emotions like any human being. As it happens, it instantly falls in love with Sana and leads to trouble for both Chitty and its creator.

  Enters Bohra (Danny Dengzongpa), who was Vaseegaran’s mentor, with an evil motive. Cashing in on the opportunity, Bhora takes control of the machine after Vaseegaran dismantles it and throws it away in a fit of rage. Now the real war erupts between Vaseegaran and Chitty.

  Chitty takes away Sana and creates its own army of robots. Their only motive is to end Vaseegaran. The robots are on killing spree and it is up to Vaseegaran to end the menace.

  Rajnikanth oozes style throughout the narrative. He impresses both as Vaseegaran and Chitty. The typical Rajnikanth may be missing here. No punchlines or intro song, yet Rajni is impressive.

  Unlike other heroines, who come and disappear in a wink of an eye, Aishwarya has a substantial role in the movie. Danny is a refreshing change from regular baddies that we see in Tamil cinema.

  Known for his big-budget sci-fi films, Shankar has gone one step further in this. Nobody other than Stan Winston studios would have carried of the special effects. “Endhiran” was like watching “Iron Man”, “Transformers” and “Superman”.

  The first half is a smooth and fun ride with cute Chitty taking centrestage. A couple of fights set the tone for the fans. A few lighter moments and two songs make it a light-hearted affair.

  However, the second half drags a bit, making the narrative less interesting. There are portions which could have been edited well. A couple of songs follow each other in quick succession which dampens things a bit. But, the rest of the second half is racy, action-packed and intelligent.

  Rahman’s music is a mix of east and west. Cinematography compliments the theme, thanks to Rathnavel. Peter Heinz’s stunts, especially the train sequence, is fast and interesting.

  Overall “Endhiran” is an awesome experience thanks to technical brilliance, gripping screenplay and good performances.

 11. r.v.saravanan

  “கடவுளை எப்படி யாராலும் விளக்க முடியாதோ அப்படித்தான் ரஜினிகாந்தும். கடவுளும் ரஜினிகாந்தும் கேள்வியே எழுப்ப முடியாத விஷயங்கள்… கேள்வி எழுப்பினால் மக்களின் அதீத கோபத்தைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டி வரும்!

  இதற்கு மேல் சொல்ல ஏதாவது இருக்கிறதா!!

  குட்

  சூப்பர் வினோ பகிர்வுக்கு நன்றி தொடர்ந்து செய்திகளை தாருங்கள்

 12. Rajmohan.K

  Mr.Vino,

  Thanks to your effort and wonderful collection of memorable reviews.

  Only u can DO!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *