BREAKING NEWS
Search

‘கடவுளைப் போன்றவர் ரஜினி!’ – பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர்

ரஜினியை பேட்டி எடுக்க ஆசை! – கரண் ஜோஹர்

பாலிவுட்டின் சூப்பர் ஹிட் இயக்குநரான கரண் ஜோஹருக்கு ஒரு நீண்ட நாள் ஆசை.

அது சூப்பர் ஸ்டார் ரஜினியை பேட்டி எடுக்க வேண்டும் என்பது (ஏற்கெனவே ரஜினிக்கு பிரதமர் விருது கொடுத்த என்டிடிவி நிகழ்ச்சியில் அவரது இந்த ஆசை கொஞ்சம் நிறைவேறியிருந்தது!).

இப்போது ஸ்டார் வேர்ல்டு தொலைக்காட்சியில் ‘காஃபி வித் கரண்’ நிகழ்ச்சி வரும் நவம்பர் 7-ம் தேதி ஒளிபரப்பாகவிருக்கிறது.

இதில், பிரபலங்களுடன் உரையாடுகிறார் கரண். இந்த நிகழ்ச்சியில் யாரை நேர்காணல் செய்ய அவர் பெரிதும் விரும்புகிறார்?

ரஜினியை…!

ஃபேஸ்புக் ரசிகர்கள் கைவண்ணம்!

“இந்த நிகழ்ச்சியில் ரஜினி போன்ற சாதனையாளரை, சகாப்தம் படைத்தவரை பேட்டி காண விரும்புகிறேன். ரஜினி யாருக்கும் பேட்டி தருவதில்லை. எனக்கும் தருவாரா தெரியவில்லை. ஆனால் நான் முயற்சி செய்வேன். காரணம் அவர் அந்த அளவு பெருமைக்குரியவர். சகாப்தம் படைத்தவர். இந்த நாட்டின் கடவுளைப் போன்றவர் (I thinks, almost God of the Country!)”, என்கிறார் மிகுந்த மரியாதையுடன்.

தனது நிகழ்ச்சிக்கான Promo-வில் ரஜினி பற்றி கரண் ஜோஹர் கூறியதன் வீடியோ:

எந்திரன் புடைவைகளுக்கு ஏக மவுசு!

மிழகத்தின் ஜவுளிக் கடைகளில் ஹாட்டஸ்ட் சேல்ஸ் எந்திரன் புடவைகள். ஆனால் இங்குள்ளதைவிட பல மடங்கு அதிகம் விற்பனையாவது மலேசியாவில்தானாம்.

மலேசியாவின் லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள துணிக்கடைகளில் இந்தப் புடவைகளுக்கு வைக்கப்பட்டுள்ள விலை 450 முதல் 500 மலேசிய ரிங்கிட். நம்ம ஊர் பணத்தில் கிட்டத்தட்ட 13000 ரூபாய்!

மற்ற தமிழ்ப் படங்களின் பெயர்களிலும் புடவைகள் விற்பனை செய்யப்படுகின்றனவாம். ஆனால் அவற்றுக்கு பெரிதாக விற்பனை இல்லை… விலையும் 100 வெள்ளிக்குள்தான் என்கிறார் அனிதா சாரீஸ் கடைக்காரர் அழகர்சாமி!

தொடர்பான செய்திக்கு…

-என்வழி




5 thoughts on “‘கடவுளைப் போன்றவர் ரஜினி!’ – பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர்

  1. KICHA

    Thanks vino.
    Appadi oru interview vandha TRB tharu marudhan ponga.

    Comment anupumbodhu thalaivar photovodu anupa enna seiyanum? Udhava mudiuma?

  2. DEEN_UK

    வட மாநிலத்தவருக்கு தான் தலைவரின் அருமை புரிகிறது..மனதில் வஞ்சனை இல்லாமல் தலைவரை பாராட்டுகிறார்கள்..அவர்கள் இங்குள்ளவர்கள் போல ஜெலுசில் பார்ட்டிகள் அல்ல என்பதை கரன் ஜோகர் நிரூபித்துள்ளார்..அவருக்கு தலைவனின் ரசிகன் என்ற முறையில் எனது நன்றிகள்…

  3. Sadagopan

    Hi Vino,
    Please let me know the thalaivar interview in YAHOO is original. In that he said there is no more politics in future and may be Endhiran is his last movie.
    Below is the link for your reference.
    http://in.movies.yahoo.com/interview-detail/601/11475/Rajinikanth-Im-retiring-place-unknown-family.html
    Thanks…..
    _________________________

    Hi
    I had seen this earlier. But Thalaivar never speaks like that and even in his recent Mumbai visit (after the mega success of Robot), he told that he didn’t like to comment anything on his future plans including his political entry.

    So, lets wait and watch. He is beyond the predictions!
    -Vino

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *