BREAKING NEWS
Search

‘ஓங்கியடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா.. பாக்குறியா!’

‘ஓங்கியடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா.. பாக்குறியா!’

ய்யோ.. வேணாம்யா.. தமிழ் ரசிகர்கள் பாவம், இந்த வெயிட்டை தாங்க மாட்டாங்க’, என்று ஓங்கிக் கத்த வேண்டும் போலிருந்தது, மேலே நீங்கள் படித்த பஞ்சர் டயலாக்கை கேட்டபோது.

சிங்கம் படத்தில் சூர்யா பேசும் வசனம் இது. ட்ரெயிலர்களில் இந்த வசனத்தையே திரும்பத்திரும்ப போட்டு பீதியைக் கிளப்புகிறார்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். மொத்தப் படத்துக்கும் இந்த ட்ரெயிலர்தான் சாம்பிள் என்றால்… சாதனையில் சுறாவை மிஞ்சிடும் போலிருக்கே இந்த சிங்கம்!

விமர்சகர்கள் இப்போதே படத்தின் விமர்சனத்துக்கு கடைசி வரியைத் தயார் செய்திருப்பார்கள், தலைப்போடு ஒரு ‘அ’ சேர்த்து!


முதல்வரின் ஓட்டு நமீதாவுக்கு!!

பா விஜய் ஹீரோவாக நடிக்கும் இளைஞன் படத்துக்கு கதை திரைக்கதை வசனம் முதல்வர் கருணாநிதி என்பது தெரிந்திருக்கும்.

இந்தப் படத்துக்காக அவருக்கு ரூ 1 கோடி சம்பளம். படத்தில் அதிக சம்பளம் பெற்றிருப்பவர் இவர்தான். அதுமட்டுமல்ல.. இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கிய கதை வசனகர்த்தாவும் இவர்தான்.

இந்தப் படத்தில் வில்லி கேரக்டருக்கு ரம்யா கிருஷ்ணன் மாதிரி ஒரு நடிகை வேண்டும் என்று இயக்குநர் கேட்டதால், பல முன்னாள் டாப் நடிகைகளையெல்லாம் லிஸ்ட் போட்டார்களாம். இதில் மீனாவும் உண்டு. ஆனால் முதல்வரின் ஓட்டு இந்நாள் நடிகையான நமீதாவுக்கு விழ, சட்டென்று பெரும் தொகைக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர்.

பஞ்ச் டயலாக், பில்ட் அப் சீனுக்கு நோ… விஜய்க்கு சித்திக் கொடுத்த ஷாக்!

பாடி கார்டு படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் விஜய், படத்தின் முக்கிய காட்சிகள் சிலவற்றில் மாறுதல்களைச் செய்யச் சொல்லியிருக்கிறார். சிலவற்றுக்கு ஒப்புக் கொண்டு உடனே செய்து கொடுத்துள்ளார் சித்திக்.

அடுத்து ஓபனிங் பில்ட்-அப், பஞ்ச் டயலாக் என விஜய் போட்ட அடுத்தடுத்த ஆர்டர்களுக்கு சற்று தயக்கத்துடன் மறுப்பு சொன்னவர், சுறா ரிசல்டை வேறு சுட்டிக் காட்ட செம கடுப்பாகிவிட்டாராம் விஜய்.

இதன் விளைவுதான் சமீபத்தில் நடந்த சித்திக் வீட்டுக் கல்யாணத்தில்கூட தலைகாட்ட விரும்பாமல் பாங்காக் பறந்துவிட்டாராம்!

-என்வழி
13 thoughts on “‘ஓங்கியடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா.. பாக்குறியா!’

 1. palPalani

  அந்த “ஒன்றரை டன்” டயலாக்கு படத்த ஓடவிடுமான்னு தெரியல, ஒரு வேல படம் நல்ல இருந்தாலும். இப்பவே கடுப்படிக்கிராணுக!

 2. sakthivel

  சுறாவையும் கொஞ்சம் ஓங்கி அடியுங்க, தமிழ்நாட்ல கொசுக்கடியவிட சுறா கடி தாங்க முடியல சாமி…..

 3. Chozhan

  இப்படி பட்ட தமிழ் படங்கள் எப்படி ஆஸ்காருக்கு போகும். அடுத்த ஆண்டே நினைவில் நிற்காது. ஒருவேளை இதற்கும் நக்மா புண்ணியத்தில் விருது கிடைக்கலாம்.

 4. Venky

  singam will roar definnitely…im sure that it will be better than any othr recent vijay movies..

 5. sekar

  சிங்கம் ன நாடார் ட. இது என்ன நடிகர் கார்த்தி சிங்கம்நு நெனச்சியா……..

 6. mukesh

  ஓங்கியடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா.. பாக்குறியா
  ஷு போடாமே உன்னை விட ரெண்டு இஞ்சு அயிட்டுடா.. பாக்குறியா —JK ரிதீஷ் பஞ்ச்

 7. Shanmu

  ஏன்டா ஜாதி வெறி பிடிச்ச நா….களே இந்த இணையத்துலயும் ஜாதிய கொண்டு வரீங்க.. வயற வேலையே கிடையாத உங்களுக்கு..
  எங்கே போனாலும் நீ நாடார், நீ தேவர், நீ sc , நீ இந்த ஜாதின்னு பேசுறது.. நீங்க ஜாதி பேசுறதுக்கு எவனாவது வாந்தி எடுத்து வைத்ததை பொய் சாபிடுவீன்களோ.. ஜாதிங்கறது எவனோ தமிழர்களை பிரிக்க செய்த எடுத் வாந்தி அதை இன்னும் நக்கிட்டு இருக்குரவனுங்களை என்னனு சொல்ல.. இன்னும் என்னெனவோ தோணுது.. அனால் தமிழனுக்கு உரிய பகைவனுக்கும் மடியாதி கொடுக்கும் பண்பு என்னை தடுக்கிறது..
  திருந்தன்கப்பா.. இனிமேலாவது ஜாதியின் மூலம் மனிதர்களை பிரிக்காதீர்.. தமிழனாக ஒன்று சேருங்கள்.. எவனோ சுயநலக்காரன் எடுத்த ஜாதி வாந்தியை இன்னும் நக்கி கொண்டிருக்காமல் சுய அறிவு உள்ள மனிதனாய் நம் வருங்கால சந்ததி முன்னேறுவதற்கான வலி முறைகளை தேடி அனைவரையும் முன்னேற்றுவோம்..

 8. r.v.saravanan

  ஓங்கியடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா.. பாக்குறியா

  எஸ்

  இது பஞ்ச் டயலாக்

  அல்ல
  பஞ்சர் டயலாக்

 9. குமரன்

  . ///ஆனால் முதல்வரின் ஓட்டு இந்நாள் நடிகையான நமீதாவுக்கு விழ, சட்டென்று பெரும் தொகைக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர்.///

  ஆஹா, சிலஞர்ணா சிலைஞர்தான். நமக்கு இருக்கும் முதலமைச்சர் போல உலகெல்லாம் தேடினாலும் கிடைக்க மாட்டார்.

  என்னே ஜனநாயகக் கடமை! எப்படியெல்லாம் ஆற்றுகிறார்!!!

  அடுத்ததாக நமீதாவும் தி.மு.கவில் சேருவார் என்று எதிர்பார்க்கலாம்.
  சிலைஞரும் நமீதா முற்போக்கான (!!!!) கொள்கை உடையவர் என்று சான்றிதழ் கொடுப்பார். தமிழக மக்களும் “ஆ” வென்று வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள். தமிழனின் தலைவிதி!

 10. madhumidha

  சிங்கம் லொள்ளுக்கு இப்படி சொல்றீங்க

  எந்திரன் படத்துக்கு இருபத்து நாலு மணி நேரமும் தொடர்ந்து போட்டு கொன்னு எடுக்க போறாங்க

  அதை என்ன என்று சொல்லுவீங்க?

  மதுமிதா
  madhumidha1@yahoo.com

 11. கணேசன்.நா

  //ஓங்கியடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா.. பாக்குறியா//

  சுறா : நான் அடிச்சா தாங்கமாட்ட நாலு மாசம் தூங்கமாட்ட….

  அய்யோ அய்யோ

 12. mukesh

  madhumidha
  //எந்திரன் படத்துக்கு இருபத்து நாலு மணி நேரமும் தொடர்ந்து போட்டு கொன்னு எடுக்க போறாங்க//

  இருபத்து நாலு மணி நேரமும் எந்திரன் நினைப்பாவே இருப்பீங்க போல இருக்கு!!! உங்களை நினைச்சா எனக்கு பாவமா இருக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *