BREAKING NEWS
Search

ஒரு மாபெரும் இசைமேதையை இப்படியா அவமதிப்பீர்கள் விஜய்டிவி?

ஏமாற்றம்!

12801419_1676609442601457_2739426323421729660_n
ழுதலாமா வேண்டாமா என்று கொஞ்சம் யோசனையாகத்தான் இருந்தது, நேற்று முன்தினம் இரவு நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்துக்குப் போய் வந்த பிறகு.

எனக்குத் தெரிந்து இளையராஜாவின் பெரும்பாலான இசை நிகழ்ச்சிகளை நேரில் அனுபவித்து ரசித்திருக்கிறேன். இது ராஜாவுக்கான பாராட்டு விழா என்பதால் அவர் பாடவோ, இசையை நடத்தவோ மாட்டார் என்பது புரிந்துதான் போனேன். ஆனால் ராஜா சாரின் இசைக்குழு இருக்கிறதே.. குறைந்தது 30 பாடல்களாவது உத்தரவாதம் என நம்பி போனது தவறுதான்.

ஒரு பள்ளிக்கூட ஆண்டு விழாவுக்கான ஏற்பாடுகளை விட மோசமாக செய்திருந்தார்கள் விஜய் டிவிக்காரர்கள். ஆனால் டிக்கெட் கெடுபிடிகளுக்கு மட்டும் பஞ்சமில்லை.

நிகழ்ச்சி முழுக்க பேசிப் பேசியே கொன்று விட்டார்கள். இந்த பேச்சுக் கச்சேரிக்கு அப்பாற்பட்டவர் ராஜா என்பது அவரது ரசிகர்களுக்கு நன்றாகத் தெரியுமே.. அவரது அருமையான பாடல்களை, அட்சரம் பிசகாமல் இசைத்துப் பாடியிருந்தால் அதை விட மகிழ்ச்சி, மரியாதை அவருக்கு வேறென்ன இருக்கப் போகிறது?

அந்த மேடையில் ராஜா சார் பற்றி பேச தகுதியான, உரிமை கொண்ட, உண்மையான மனிதர் பஞ்சு அருணாச்சலம் மட்டுமே. அவர் பேச்சை முழுமையாகக் கேட்டவர்களுக்கு அது தெரிந்திருக்கும்!

ஒரு முறை கிரீன் பார்க் ஹோட்டலில் ராஜாவுக்கு மரியாதை செய்கிறேன் என்ற பெயரில் சிலர் ஏதோ இசைத்துக் கொண்டிருக்க, பார்வையாளர் வரிசையில் அமர்ந்த ராஜா, தாங்க முடியாமல் ‘என்னை இப்படி உட்கார வைத்திருப்பதற்கு பதில், மேடையில் ஏற்றுங்கள், அங்கே தப்புத் தப்பாய் என் பாடல்களைப் பாடிக் கொண்டிருப்பவர்களை சரி செய்கிறேன்,’ என்றார்.

நேற்றைய நிகழ்ச்சியில் அவர் எத்தனை முறை இப்படிச் சொல்லிக் கொண்டிருந்தாரோ…

குறிப்பாக கவுதம் மேனன் – கார்த்திக் – பிரசன்னா வெறுப்பேற்றிய அந்த பாடல்கள்.. கவுதம் தேர்வு செய்து அரைகுறையாக மேடையில் இசைத்த அந்த 6 அற்புத பாடல்களையும் ராஜா குழுவினரின் அபார வாசிப்போடு கேட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும்? போட்டு வைத்த காதல் திட்டம்.. பாட்டெல்லாம் ராஜாவின் இசை இல்லாமல் கேட்கக் கூடிய பாட்டாய்யா..

வரலாற்று சிறப்பு மிக்க ஒரு நிகழ்ச்சியை இப்படி சொதப்பிய குற்றத்துக்காகவே விஜய் டிவிக்கு தமிழ் சினிமாக்காரர்கள் ஆயுள் தண்டனை தரலாம்!

raja-kamal

நல்ல வேளை… இந்த பாலு என்ற ராட்சஸன் மட்டும் வராமல் போயிருந்தால் அத்தனை பேரும் கொலவெறியாகியிருப்பார்கள்.

இந்த நிகழ்ச்சியைப் பொருத்தவரை இளையராஜாவும் ஒரு பார்வையாளர்தான். அவரை 7 மணி  நேரம் வரை உட்கார வைத்து படுத்தி எடுத்துவிட்டது விஜய் டிவி.   வந்திருந்த அனைவரும் இத்தனை இம்சைகளையும் பொறுத்துக் கொண்டு அமர்ந்திருக்கக்  காரணம் ராஜா என்ற ஒற்றை மனிதர்தான்.

மக்களின் மனநிலைப் புரிந்ததாலோ என்னமோ… விரைவில் ஒரு முழுமையான இசை விருந்து தரப் போவதாக இளையராஜா அறிவித்தார்.

ராஜா சார்… உங்க வாக்குறுதியை நம்பறோம். நீங்கள் தரவிருக்கும் உண்மையான இசை விருந்துக்குக் காத்திருக்கிறோம்!

குறிப்பு: பார்த்திபன், டிடி, கவுதம் மேனன்… ராஜா பற்றிய உங்கள் பேச்சுக் கச்சேரியை விஜய் டிவிக்கு ஒரு தொடராகக் கொடுங்கள். இன்னொரு முறை ராஜா சார் மேடையில் உங்களைப் பார்த்தால் கல்லடி நிச்சயம்!

-வினோ
4 thoughts on “ஒரு மாபெரும் இசைமேதையை இப்படியா அவமதிப்பீர்கள் விஜய்டிவி?

 1. Rajagopalan

  First Thanks for the update. Hope u understand.
  But after reading this , i felt really bad..Raja Sir is a world genius…
  Thats why no other media / paper put this news?
  Vijay TV is always not good at organising an event that too an event of this magnitude….
  I think because of Vijay TVs capabilities, thalaivar didnt came…

 2. jegan N

  After vijay awards function vijay TV is losing the goodwill of celebretes as well as public….even sun tv is good they ll respect others and also they were successfull I such kind of programs…

  From 2014 onwards vijay tv flopped with vijay awards..it is beingc ritisized …

  Previously kamal50 is the only program which was successful

 3. anbudan ravi

  எதற்க்காக விஜய் டி.வி -க்கு இந்த விழா உரிமை வழங்கப்பட்டது…..வேறு எந்த டி.விக்கலும் எந்த ஒரு பெரும் கலைஞர்களுக்கும் விழா எடுத்ததாக நினைவில்லை…..நடிகர் சங்கங்கள் உட்பட அனைத்து சங்கங்களும் அல்லவா விழா எடுக்க வேண்டும் இளையராஜா போன்ற மாபெரும் கலைஞர்களுக்கு.

  அன்புடன் ரவி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *