BREAKING NEWS
Search

ஒரு தமிழ்ப் போராளிக்கு நேர்ந்த கொடூரத்தின் பதிவு…

ஒரு தமிழ்ப் போராளிக்கு நேர்ந்த கொடூரத்தின் பதிவு…

லகில் இந்த அளவு கொடுமையை, சர்வதேசங்களின் துரோகத்தை வேறு இனங்கள் அனுபவித்திருக்குமா?

இதற்கான பதில்.. ‘நிச்சயம் இருக்காது’ என்பதுதான்.

ஈழத் தமிழர்களை, அவர்களுக்காகப் போராடிய புலிப் படையினரை ஒழிக்க உலகின் வல்லரசுகள் திரண்டு நிற்க, அதை பிற தேசங்கள் கைகட்டி வேடிக்கைப் பார்த்தன.

அப்பாவித் தமிழர்கள் அடித்துக் கொல்லப்பட்டனர்.. சுட்டு வீழ்த்தப்பட்டனர். கையில் சிக்கிய போராளிகளுக்கோ நரகத்தை விடக் கொடிய சித்ரவதைகளை அரங்கேற்றிக் கொன்று குவித்துள்ளது வெறி பிடித்த சிங்கள ராணுவம்.

வட இலங்கை முழுவதும் தமிழர் பிணங்கள், இன்னும் கூட அழுகிய நிலையில் அல்லது எலும்புக் கூடுகளாக கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கை யுத்த செய்தியை ஏதோ கிரிக்கெட் ஸ்கோர் மாதிரி அவ்வப்போது கேட்டு மறந்துவிட்டு, கருணாநிதிக்கு நடக்கும் பாராட்டுவிழாவை கண்டு ரசிக்கும் ‘மரத்’ தமிழர்களை நன்கு தெரிந்து வைத்துள்ளன சர்வதேச நாடுகள். தமிழன் எப்போதும் ஒரு இனமாக, ஒருமித்த சக்தியாகத் திரண்டு எதிர் நிற்க மாட்டான் என்பதை கருணாநிதி, சோனியா, மன்மோகன் சிங்குகள், ராஜபக்சேக்கள் போலவே சர்வதேச நாடுகளும் புரிந்து வைத்துள்ளன. இந்தக் கொடுமைகள் கூட கொஞ்ச நாளைக்கு பேசப்பட்டு பின் மறக்கடிக்கப்பட்டுவிடுமோ என்னவோ!

இங்கே தரப்பட்டுள்ள படங்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஒரு போராளிக்கு நேர்ந்த கொடூரத்தின் பதிவுகள். இன்று காலை இந்தப் படங்களைப் பார்த்த போது, அவை குறித்து எழுதவும் திராணியற்றுப் போனோம்.

இவற்றுக்கெல்லாம் விடிவு என்ன..? மனித நேயம், மனித உரிமை பற்றியெல்லாம் பேசும் வல்லரசுகள் இப்போது வாய்மூடிக் கிடப்பதேன்?

தாயகத்தின் விடுதலைக்காகவும் தன்னினத்தின் உரிமைக்காவும் போராடிய ஒரு வீர மறவர் கூட்டத்தின் உறுப்பினர்கள் போர் முனையில் சிக்கிய போதெல்லாம் இந்தக் கொடுமைகள்தான் நிகழ்ந்துள்ளன. தமிழ் பெண் போராளிகளின் பிணங்களைக் கூட கற்பழித்து, உடலைத் துண்டு துண்டாக்கி சாலைகளில் சிதறவிட்ட கொடும் அரக்கர் கூட்டம்தான் சிங்கள ராணுவம். அதற்கான ஆதாரங்கள், வீடியோக்கள் கிடைக்கப் பெற்றும் கூட சர்வதேசம் வாய் மூடிக் கிடந்தது.

அடுத்து, போராளிகள் சிலரை நிர்வாணமாக்கி, கைகளைப் பின்புறம் கட்டி, பூட்ஸ் கால்களால் உதைத்து, தலையில் துப்பாக்கியை வைத்து சுட்டுக் கொன்றனர் சிங்கள காடையர்கள். இந்த ஆதாரங்களைக் கையில் வைத்திருந்தும் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றன உலக நாடுகள்.

இதோ இப்போது மேலும் ஒரு கொடூரத்தின் சாட்சி, வீடியோவாய், புகைப்படங்களாய் விரிந்துள்ளது.

என்ன செய்யப் போகிறார்கள்… கொஞ்ச நாள் இதற்கும் கண்டனம் தெரிவித்துவிட்டு, அடுத்த கொடூரம் பற்றி பேசி பொழுதைக் கழிக்கப் போகிறார்களா?

இந்தக் கொடூரத்தின் வீடியோ:
9 thoughts on “ஒரு தமிழ்ப் போராளிக்கு நேர்ந்த கொடூரத்தின் பதிவு…

 1. முல்லை மைந்தன்

  கொதிக்கிறது ரத்தம். துடிக்கிறது நெஞ்சம் பகையை அழித்திட விரைவோம். தெற்கிலும் ஒரு முல்லைத்தீவை உருவாக்குவோம். எம்மினம் அழுததைவிட அவர்கள் அதிகமாக அழுவார்கள். காலாகாலத்திற்கு தமிழீழ குடியரசின் அபரிதமான வளர்ச்சியின் முன் கைகட்டி கூனிக்குறுகி நிற்பார்கள். விரைவில் இந்தியதேசம் எதோ ஒரு பேரழிவை சந்திக்கும். ஆண்ட தேசத்தை அடிமையாக்கியவர்கள் அடிபணிந்து போவார்கள். இது இயற்கையின் விளைவாகும்.

 2. sakthivel

  சிங்கள இரத்த காட்டேரிகளுக்கு அந்திமகாலம் நெருங்கிவிட்டது….

  ஒவ்வொரு தமிழனின் இரத்தத்திற்கும் பதில் சொல்லவேண்டிய காலம் வந்தே தீரும்…..

 3. eelam tamilan

  முல்லை மைந்தன்,
  I donot agree on disaster to India.. We all affected by indian ruling party and not with people.. They all our brothers and sisters. but, mislead in past.. i still have some hope TN tamils, never with Karuna.. So, donot say or pray for disaster to India.. Say specifically who were resason for our cause…

 4. Chozhan

  //இந்தக் கொடுமைகள் கூட கொஞ்ச நாளைக்கு பேசப்பட்டு பின் மறக்கடிக்கப்பட்டுவிடுமோ என்னவோ!// வினோ நீங்கள் எழுத திராணியற்று போனீர்கள் ஆனால் ஜால்ரா கூட்டங்களோ ரஜினி/கமல்/வைரமுத்து போன்றோர் எப்பொழுது வாய்ப்பு கிடைக்கும் மேடை ஏறலாம் கருணாவுக்கு சோப்பு போடலாம் என்று எதிர்பார்கிறார்கள் இவர்கள் கையில்தான் அனைத்தும் இருக்கிறதே எளிதாக மறக்கடிக்கபடுபோம். நமக்குள் ஒற்றுமை இல்லை வரவும் செய்யாது. இது உங்களை போன்றோர் உரம்போட்டு வளர்க்கவேண்டும்.

 5. முல்லை மைந்தன்

  இந்திய அரசின் உயர்மட்டத்தில் ஈழத்தமிழர்கள் தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றம் வராமல் எமது தமிழீழம் தோன்றுவது சாத்தியம் குறைவானது. அப்படி ஒரு வித்தியாசமான முடிவை சிங்கள தேசத்திற்கு எதிராக இந்தியா எடுக்க வேண்டுமாயின் , இந்தியா இவ்விந்து சமுத்திர பிராந்தியத்தில் மிகப்பெரிய ஒரு அசம்பாவிதத்தை சந்திக்க வேண்டிவரலாம். அது சீனா அல்லது பாகிஸ்தான் நாடுகளுடான மோதலாக கூட இருக்கலாம். அப்படி ஒரு நிலை ஏற்படுகின்ற வேளையிலே இந்தியாவினுடைய இப்பிராந்தியத்திட்கான நிகழ்ச்சிநிரல் மாறுவதற்கான வாய்ப்பு உண்டு. இது வேறு வழிகளில் கூட அமையலாம். ஆனால் கடந்த காலத்தில் ஈழத்து சொந்தங்களையும் தமிழக பந்தங்களையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான வடஇந்திய பேய்களையும் அனுப்பி எம் மண்ணின் மைந்தர்களை வணங்கா வன்னியில் மடிய வைத்த இந்திய அரசுக்கு இயற்கையின் எதிர்விளைவாக இவ்வாறு நடைபெறுவது ஏன் சாத்தியமில்லை? இந்திய தேசத்தின் அழிவு என்று நான் குறிப்பிடுவது மக்களின் அழிவை அல்ல. இந்திய அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டுவதற்காக வடஇந்திய படைகளுக்கு ஒரு தற்காலிக பின்னடைவையே.

 6. பஹ்ரைன் பாபா

  கையாலாகாத நிலையில் இருக்கிறோம்.. என்னத்த சொல்ல.. சிங்கள இன வெறியாட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதென்பது முடியாத காரியம்.. இந்திய சந்தோசமாக வேடிக்கை பார்க்கும் வரை..

 7. kp

  now we realise y prabhakaran told his cadres to swallow cyanide in case of imminent capture…its better to die quickly than undergo this type of torture….anyway u l be killed in the end….nd by the way wat about the boycott cal issued by the tamil film industry to bollywood and others…dont think they l boycott colombo….the only reason amitabh n his family hav decided not to go is because of the adverse effect it may hav in tamilnadu to the raavan film…..alll of them are opportunists…..shame on us really for just being mere spectators…..

 8. vedamgopal

  “Missionaries are perfect nuisances and leave every place worse than they found it.” – Charles Dickens (1812-1870).

  இன்று இலங்கையில் நடந்தது என்ன ? பல தமிழர்களும் சிங்களத்தவர்களும் படி படியாக கிருஸ்துவர்களாக மாற்றப்பட்டார்கள்.
  இவர்கள் இருவரிடைதிலும் அவர்களே அறியாமல் பகைமை தீயை ஏவி விட்டார்கள், நஞ்சு விதைகளை அங்கே வித்திட்டாற்கள். (தமிழ் நாட்டில் ஆரியன்-திராவிடன், தமிழ்-சமஸ்கிரதம், பிராமிணன்- பிராமிணன் அல்லாதாவர் என்பதுபோல்). இரண்டுபிரிவிலும் தலை ஆட்டி பொம்மைகளை உருவாக்கினார்கள். இலங்கையை 15 ஆண்டுகளுக்கு மேல் ஆண்டுவருவது கிருஸ்துவர்களாக மாறிய சிங்களத்தவர்கள் ஆவார்கள். ( சாலமன் பண்டாரநாயகா சூலியஸ் ஜயவர்தனே சந்திரிகா குமாரதுங்கா சிரில் மகேந்திர ராஜபிராகாசே). ஆனால் இவர்கள் தாங்கள் கிருஸ்துவர்கள் என்று அடையாளம் காட்டி கொள்வதில்லை. எல்டிடியிலும் மற்ற தமிழ் பேராளிகளிலும் பலர் கிருஸ்துவர்களாக மாறியவர்கள். (லஷ்மன் கதிர்காராமன் டக்லஸ் தேவாநந்தம் பிராபகரன் மற்றும் பலர்). இப்படி கிருஸ்துவர்களாக மாறியவர்கள் தங்களுக்குள் ஏன் ஒற்றுமையாக இருக்க முடியவில்லை. குரங்கு ஆப்பதத்தை பங்கிட்ட கதை உங்களுக்கு தெரியாதா ! (சர்சிலும் அப்பம் கொடுப்பார்கள்)

  ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாடம் என்பதை புரிந்துகொள்ள வேண்டாமா. சிறந்த தலைஆட்டி ராஜபிராகாசேவா அல்லது பொன்சேகாவா என்று அமெரிக்கா முடிவு செய்கிறது. முன்னேரிய நாடுகள் இவ்வாறு முன்னேரிவரும் நாடுகளில் மதமாற்றத்தை செய்து தலையாட்டி பொம்மைகளை உருவாக்கி (இங்கே சோனியாவின் கைதடிக்கு மன்மோகன்சிங் ஆடுவதுபோல்) அவர்கள் அறியாமலே மொத்தஇனத்தையும் முன்னேறவிடாமல் தடுப்பதே கிருஸ்துவத்தின் குறிக்கோள் ஆகும். அப்படி செய்தால்தான் அவர்கள் நாடு சுபிஷ்ஷமாக இருக்கமுடியும். நமது முதல்வர் பதவி ஆசையை விட்டு காங்கிரஸ் ஆட்டியிலிருந்து விலகியிருந்தால் இலங்கையில் இறந்த பாதி உயிரை காப்பாற்றியிருக்கலாம். தமிழன் உயிரைவிட பதவி பெரிது. இதை ஏன் இந்த திராட-கிருஸ்துவர்கள் உணரவில்லை.
  இப்படி இங்குள்ள தமிழர்கள் கிருஸ்துவனுக்கு வால் பிடித்து சென்றால் இலங்கைதமிழனுக்கு நேர்ந்தகதி இங்கே உள்ள தமிழர்களுக்கும் ஒர்நாள் நிச்சியம் நிகழும்

 9. radha

  இத பாக்க போன நாம்ம ஊரு****** மகன்களும் மகள்களும் விருந்து சாப்டு… ரொம்ப நல்ல இருக்கு சொல்லுவாங்க… இவனுகளுக்கெல்லாம் அறுத்து விடனும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *