BREAKING NEWS
Search

ஒரு சலூனுக்கு ரஜினி தந்த ஸ்டார் அந்தஸ்து!

ஒரு சலூனுக்கு ரஜினி தந்த ஸ்டார் அந்தஸ்து!

ஜினி செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது. கீழே உள்ள விஷயத்தைப் படித்த பிறகு அது எந்த அளவு உண்மை என்பதைச் சொல்லுங்கள்…

ரு நாள் திடீரென்று சென்னை சேத்பட்டிலிருக்கும் எல்லீஸா என்ற அந்த ஹைகிளாஸ் சலூனுக்கு வருகிறார் ரஜினி. நன்கு பழக்கமான நபரின் கடைதான்… முடிவெட்டிக் கொள்கிறார்… ஒரு மணிநேரம் இருந்து பேசி, கடைகாரருக்கு புதிய பரவசத்தை தருகிறார்.

அந்த சலூன் கலைஞரின் குடும்பத்தை அழைத்துப் பேசி மகிழ வைக்கிறார்… குழந்தைகளை உடன் நிறுத்தி ஆட்டோகிராப் போட்டுத் தருகிறார்… மறக்காமல், ஒரு புகைப்படக்காரரை வைத்து இதையெல்லாம் புகைப்படமாகவும் வீடியோவாகவும் எடுத்துக் கொள்ளச் சொல்கிறார் ரஜினி!

அடுத்த வாரம்…

இந்தியாவின் அனைத்து முன்னணிப் பத்திரிகையிலும் அந்த சலூன் கடைதான் கட்டுரைப் பொருள்!

இப்போது சொல்லுங்கள்… முதல் வரியில் நாம் சொன்னது சரிதானே…!

குறிப்பு: சலூன் கடைக்குச் சொந்தக்காரர் பெயர் கண்ணன். ரஜினிக்கு பத்து ஆண்டுகளாக ஹேர் ஸ்டைலிஸ்ட். சிவாஜி – தி பாஸ் படத்தில் ரஜினிக்கு விக் டிசைன் பண்ணவர் இவர்தான். ரோபோ ரஜினி கண்ணாடி முன் நின்று வித விதமாக ஹேர் ஸ்டைல் செய்து பார்க்கும் காட்சியில் வரும் விக்குகளும் இவர் டிஸைன் பண்ணதுதான்!

‘சாதாரண சலூனாகத்தான் இத்தனை நாள் இருந்தது என் கடை. சார் வந்து போன பிறகு இது ஸ்டார் சலூன்… இல்லையில்லை சூப்பர் ஸ்டார் சலூன்’ என்கிறார் ஹேர் ஸ்டைலிஸ்ட் கண்ணன்!!

கண்ணன் தந்த புகைப்படங்களின் தொகுப்பு இது (கோடி ரூபாய் செலவழித்து பிரஸ் மீட் வைத்தால் கூட கிடைக்காத அந்தஸ்து… பப்ளிசிட்டியை தலைவரின் ஒரு விசிட் சாத்தியமாக்கியிருக்கிறது!).

ரஜினியின் எல்லீஸா விசிட்… முழுப் படங்களின் தொகுப்பு (க்ளிக் செய்தால் பெரிதாகப் பார்க்கலாம்!)

-வினோ

என்வழி ஸ்பெஷல்




One thought on “ஒரு சலூனுக்கு ரஜினி தந்த ஸ்டார் அந்தஸ்து!

  1. Anu

    யப்பா இந்த சலூனுக்கு விளம்பரமே வேண்டாம்பா , ஸ்டார் ஹோட்டல் மாதிரி irukkae…. காசு சேருற இடத்துலதான் serum….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *