BREAKING NEWS
Search

ஒருவேளை அசின் மன்னிப்புக் கேட்காவிட்டால் என்ன செய்யும் நடிகர் சங்கம்?

சங்கத்திடம் மன்னிப்பு கேட்கவில்லை… அசின் மீது நடவடிக்கை நிச்சயம்! – சொல்கிறார் ராதாரவி

சென்னை: நடிகர் சங்கம் மற்றும் திரையுலக அமைப்புகளின் எதிர்ப்புகளையும் மீறி இலங்கைக்குப் போன நடிகை அசின் மீது நடவடிக்கை நிச்சயம் என்று நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் ராதாரவி கூறினார்.

வன்னிப் போரில் சர்வதேச போர் விதிமுறைகளை மீறி தமிழர்களை கொன்று குவித்த சிங்கள அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இலங்கைக்கு நடிகர், நடிகைகள் செல்லக் கூடாது என திரைப்பட கூட்டமைப்பு தடை விதித்தது. அதன் படி இலங்கையில் நடந்த ஐஃபா விழாவை பெரும்பான்மையான இந்திய கலைஞர்கள் புறக்கணித்தனர். அதே போல  படப்பிடிப்புக்காகவும் இலங்கை செல்லக்கூடாது என தடை விதிக்கப்பட்டது.

ஆனால் இதனை மீறி இலங்கையில் நடந்த ரெடி என்ற இந்தி படப்பிடிப்புக்கு அசின் சென்றார். படப்பிடிப்போடு நிற்கவில்லை அவர்.

ராஜபக்சே அரசின் ஊதுகுழலாக மாறி, இலங்கை தமிழர் பகுதிகளில் அதிபர் ராஜபக்சே மனைவியுடன் இணைந்து சுற்றுப்பயணமும் செய்தார். இலங்கை அரசு தமிழர்களைச் சிறப்பாகப் பராமரிப்பதாக சான்றிதழ் வழங்கினார். மேலும் விஜய் உள்ளிட்ட தமிழ் நடிகர்களைப் பார்க்க ஈழத்த்து மக்கள் ஆர்வத்துடன் உள்ளதாக மறைமுக அழைப்பும் விடுத்தார். சூர்யா போன்ற நடிகர்கள் உதவத் தயாராக உள்ளதாகவும் கொழும்பில் வைத்துப் பேட்டிகள் கொடுத்தார்.

இதற்கு நடிகர் சங்க நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சங்கத்தின் கூட்டத்தில் அசினுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது.

நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி, செயற் குழு உறுப்பினர் போன்றோர் அசினுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் அவர் நடிகர் சங்கத்தில் ஆஜராகி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார்.

ஆனால் இந்த நேரத்தில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் அசினுக்கு ஆதரவாகப் பேச ஆரம்பித்துவிட்டார். இலங்கைக்கு நடிகர் நடிகைகள் சென்றால் தடை விதிக்கக் கூடாது என்றெல்லாம் பகிரங்கமாகவே அவர் கூற, நடிகர் சங்கத்தின் நிலைப்பாடு குறித்து பெரும் கேள்விக் குறி எழுந்தது.

இறுதியில் அசின் நடிகர் சங்கத்துக்கு வந்து விளக்கம் அளித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார் பொதுச் செயலாளர் ராதாரவி.

இதையடுத்து அசின் நடிகர் சங்கத்துக்கு வந்து விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை அவர் வரவில்லை.

எனவே அசினுக்கு ராதாரவி மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “இலங்கைக்கு நடிகர், நடிகைகள் யாரும் செல்லக்கூடாது என திரைப்பட கூட்டமைப்பு சார்பில் அறிவுறுத்தப்பட்டது. அதை மீறி அசின் இலங்கை சென்றார்.

இந்திப் படங்களில் நடிப்பதால் தயாரிப்பாளர் சொல்வதை கேட்க வேண்டி உள்ளது என்றும், தயாரிப்பாளர் படப்பிடிப்புக்காக எங்கு போகச் சொல்கிறாரோ அங்கு போகத்தான் வேண்டும் என்றும் அசின் கூறி இருந்தால் பிரச்சினை ஏற்பட்டிருக்காது.

ஆனால் அவர் கிரிக்கெட் வீரர்கள் இலங்கைக்கு போக வில்லையா? தொழில் நிமித்தமாக எத்தனையோ பேர் போகவில்லையா? என்றெல்லாம் பேசுகிறார்.

நடிகர் சங்கம் எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்படுவேன் என்று அறிக்கை கொடுத்து இருக்கிறார். ஆனால் இதுவரை சங்கத்துக்கு விளக்க கடிதம் எதுவும் அனுப்பவில்லை. சங்கம் எடுக்கும் முடிவுகளை யாராலும் மாற்ற முடியாது…” என்றார்.

ஒருவேளை இந்த முறையும் அசின் மன்னிப்புக் கேட்கா விட்டால் என்ன செய்யும் நடிகர் சங்கம்? மறுபடியும் ஒரு கண்டனத்தைப் பதிவு செய்துவிட்டு கம்மென்று ஆகிவிடுமோ என்று கேள்வி எழுப்பியுள்ளனர் தமிழ் உணர்வாளர்கள்.

-என்வழி
5 thoughts on “ஒருவேளை அசின் மன்னிப்புக் கேட்காவிட்டால் என்ன செய்யும் நடிகர் சங்கம்?

 1. P.G.R

  குரைக்கிற நாய்களெல்லாம் கடிப்பதில்லை என்ற பழமொழிக்கு ஏற்ப நடிகர் சங்க நிர்வாகிகளெல்லாம் பேசுவதற்கு மட்டுமே லாயக்கு…. இவர்களால் ஒன்னும் உபயோகமில்லை என்பது எல்லாருக்கும் தெரியும் அதான் ஒருவரும் இவர்களுது பேச்சை மதிப்பதில்லை… நடிகர்கள் இலங்கை தமிழர் போன்ற மிகவும் முக்கியமான பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது அனைவருக்கும் நலம்… அவர்களது மானமாவது போகாமல் இருக்கும்… இந்த விசயத்தில் இவர்கள் அடிக்கும் கூத்து இதுவரை தங்களுடைய உயிரைகுடுத்து போராடியவர்களை கொச்சைபடுத்துவதகவே இருக்கிறது… நடிகர் சங்கம் இது போன்ற கோமாளித்தனமான பேட்டி குடுப்பதை நிறுத்துவது நல்லது….

 2. thamil ealem...

  இவர்கள் அடிக்கும் கூத்து இதுவரை தங்களுடைய உயிரைகுடுத்து போராடியவர்களை கொச்சைபடுத்துவதகவே இருக்கிறது…

  தமிழன்… என்று ஒற்றுமையா இருப்பானோ அன்று…. தமிழீழம் தானாக கிடைக்கும்….

  எம் தலைவர் வழி நாளை அணிதிரள போகும் எமக்கு இந்த துரோகிகளின் ஆசீர்வாதம் தேவை இல்லை…..

  தமிழனின் தாகம் தமிழீழ தாயகம்….

 3. Magesh

  Vino,
  I have a question for you. Salman and other gangs have attended IIFA in Colombo. At the time our film council or theatre council said we wont screen the personalities film those who participated in IIFA. But now Salman’s Dabaang is running successfully in Tamilnadu.
  What happened to our media and others none of them make any issues on this. Then there will be no problem on Raktha Charithra also.
  I have not understand why you are also not making any comments on this. Please explain.

 4. Manoharan

  குரைக்கிற நாய்களெல்லாம் கடிப்பதில்லை என்ற பழமொழிக்கு ஏற்ப நடிகர் சங்க நிர்வாகிகளெல்லாம் பேசுவதற்கு மட்டுமே லாயக்கு…. இவர்களால் ஒன்னும் உபயோகமில்லை என்பது எல்லாருக்கும் தெரியும்

 5. Eswaran

  நடிகர் சங்கத்தை ஒட்டு மொத்தமாக குறை கூற முடியாது…சரத் குமார் போன்ற சில புல்லுருவிகளை சங்க தலைவராக தேர்ந்து எடுத்ததுதான் தவறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *