BREAKING NEWS
Search

ஒபாமா திட்டம் தோல்வி…. ஒரே மாதத்தில் 97000 பேர் பணிநீக்கம்!

ஒபாமா திட்டம் தோல்வி…. ஒரே மாதத்தில் 97000 பேர் பணிநீக்கம்!

சிகாகோ: அமெரிக்காவில் இந்த ஜூலை மாதம் மட்டுமே 97343 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 6 மாதங்களில் இந்த அளவு s-layoffsபணியாளர்கள் நீக்கப்படுவது இதுவே முதல் முறை. மேலும் அடுத்த காலாண்டிலும் இந்த நிலை தொடரும் என அமெரிக்க புள்ளியியல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆறுமாதங்களில் 1 மில்லியன் பேருக்கு வேலை என்ற ஒபாமாவின் திட்டம் போதிய பலனைத் தரவில்லை என்பது நிரூபணமாகிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தத் துவங்கியுள்ளன.

இந்தச் செய்தி உலகப் பொருளாதார நிபுணர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. சர்வதேசப் பொருளாதாரம் வீழ்ச்சியிலிருந்து மீண்டு வருவதாக கருத்து பரப்பப்பட்டு வரும் சூழலில், மீண்டும் பெருந்தொகையிலான வேலையிழப்புகள் நடந்திருப்பது, எதிர்காலம் குறித்த பயத்தை உண்டாக்கியிருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து கிடப்பதால், பல நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாதமும் வேலையிழப்போர் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் சற்றே இந்த நிலையில் மாற்றம் தெரிவது போன்ற தோற்றம் தெரிந்தது. ஆனால் அடுத்த ஒரே மாதத்தில் நிலைமை தலைகீழாகிவிட்டது. கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு 97343 பணியாளர்கள் பலவேறு நிறுவனங்களிலிருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு இதே மாதம் வேலை இழந்தோர் 1,03,312 பேர்.

ஆக கடந்த ஆண்டு அளவுக்கு இன்னும் மோசமாகவே நிலைமை உள்ளதாகவும், இந்தக் காலாண்டு முடிவிலும் இதே நிலை தொடர வாய்ப்பிருப்பதாகவும் அமெரிக்க அரசின் புள்ளிவிவரத்துறை அறிவித்துள்ளது.

அடுத்த மாதம் இந்த எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டக் கூடும் என்றும் அச்சம் தெரிவித்துள்ளது அமெரிக்கா.

2009-ம் வருடம் துவங்கி இந்த 7 மாதங்களில் மட்டும் அமெரிக்காவில் பணியிழந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்குகிறது. 2008-ல் முதல் 7 மாதங்களில் 579260 பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.

இந்த இரு ஆண்டுகளிலும் இதுவரை 20 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். ஆட்டோமொபைல் மற்றும் ஐடி துறையில்தான் அதிக பணியாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் பிலிப்பைன்சுக்கு அடுத்து அமெரிக்காவில்தான் அதிக வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

விரைவில் மாற்றுத் திட்டங்களை அறிவிக்க வெள்ளை மாளிகை தயாராகிறது!
4 thoughts on “ஒபாமா திட்டம் தோல்வி…. ஒரே மாதத்தில் 97000 பேர் பணிநீக்கம்!

 1. ss

  Hello Editor,

  I dont know your passion for publishing negative news. why should u celebrate some one’s defeat?.. It is the general disease among Tamil Nadu journalists. Why not you pickup some news of victory… You are unnecessarily creating negative vibes by publishing negative news. By reading this article people emmits negative vibes only…

  By the way, I do not understand from where you got this 97,000 figure.. As per the trend, economy is getting revived and un employment rates in US is declining. Read the below yahoo news

  http://news.yahoo.com/s/ap/20090807/ap_on_bi_ge/us_economy

 2. Mogan

  Mr. SS

  This is common disease among our people…They worry more about America than our cuntry and our people….I hope you never worried of our 20,000 Tamil people were killed recently…Not only you but also most of our people..we dont have future if we think lik this…
  First care of our country and our people, later we will think of others…
  Just see today news…every news says what our reporter saying…

 3. Bismillah

  You are absolutely right my dear friend. Your article reveals 100% true situation, what happening in US. Here I want to say one thing to the whole world. Always man proposes but GOD disposes. America has to be completely wiped out from the world. That is, my long time dream. Please write more and more like this.

 4. ss

  Mogan,

  I am no less patriotic to my country than anybody else. I make money in America and send it to my home country which definitely helps like an ‘Anil’s help in building the bridge’. And I was not supporting Obama or America… My opposition was for blind writing of negative news… Whether you like it or not, American economy has impact in all rest of the world, including India..

  What you achieve by writing negative news… By reading, writing, thinking negative will create more negative vibes and more negative acts. Thats what typically happening in Tamil Nadu.. Every day we watch/ read – news like murders, rapes, accidents in TV, newspaper and it is multiplying in folds..

  This is pyschological effect causing the environment in to that circle… You need to understand law of attraction to have an idea about it…

  In short, what I am saying is not to portray any negative news, what ever, where ever it may be.. How is that less patriotic to India.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *