BREAKING NEWS
Search

‘ஒன்இந்தியா’வுடன் என்வழி…!


ஒன்இந்தியாவுடன் என்வழி…!

ணக்கம் நண்பர்களே…

ஒரு நிஜமான அங்கீகாரம் நமது தளத்துக்குக் கிடைத்துள்ளது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

www.oneindia.in இந்திய அளவில் 40 வது இடத்தில் உள்ள ஒரு மிகப் பெரிய செய்தி தளம் (உலக அளவில் இதன் அலெக்ஸா ரேங்க் 649). சர்வதேச அளவில் இதன் ஆங்கிலம் உள்ளிட்ட 6 மொழிகளில் ஒவ்வொரு 5 நிமிடத்துக்கும் புதுப்புது செய்திகளுடன் அப்டேட் ஆகும் முன்னணி இணைய தளம்.oneindia-logo

நாளொன்றுக்கு ஏறத்தாழ 1 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்ட இந்தத் தளம், தனது நடுநிலை செய்திகளுக்காக சர்வதேச அளவில் இணைய வாசகர்கள் மத்தியில் இந்தியாவின் குரலாகத் திகழ்கிறது.

ஒன்இந்தியா தளத்தின் ‘தட்ஸ்தமிழ்’ தான் உலகின் நெம்பர் ஒன் தமிழ் செய்தித் தளம் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

தட்ஸ்தெலுங்கு, தட்ஸ் மலையாளம், தட்ஸ்கன்னடா மற்றும் தட்ஸ்இந்தி என இந்தியாவின் பிற மொழிகளிலும் முத்திரை பதித்து கடந்த 10 ஆண்டுகளாக இயங்கும் ஒரே இணைய தளம் ஒன்இந்தியா மட்டுமே. கூகுள் நிறுவனத்துடன் இணைந்து மிகச் சிறந்த மின்னஞ்சல் சேவைகளையும் வழங்குகிறது.

புதிய இணைய தளங்கள், ஒத்த கருத்துடைய தளங்களை கைதூக்கி விடுவதிலும் ஒன்இந்தியா மிகச் சிறந்த பணியாற்றுகிறது. வலைப் பதிவர்களையும் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது.

இப்போது இந்த சிறப்புமிக்க தளத்தின் மொழிகள் பிரிவில் என்வழி.காம்-ஐயும் இணைத்துள்ளதாக சமீபத்தில் அறிவித்துள்ளது.

மிகுந்த பரிசீலனைக்குப் பிறகே இந்த அறிவிப்பை அவர்கள் செய்துள்ளார்கள். சிபி, வெப்துனியா போன்ற தளங்களும் இதில் பட்டியலிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக ஒன்இந்தியா நிர்வாகம் நமக்கு அனுப்பியுள்ள இமெயில்…

Dear Sir…

Your link http://www.envazhi.com/ [ Envazhi ] can be found in the following categories:

Category Specific:

Internet > Portals > Language > Tamil

About Explore.Oneindia.in

Explore is the only directory in India that is actively being updated on a daily basis and has grown exponentially in numbers since it started in April 2006. The Explore directory is designed to maximize your website visibility across the World Wide Web by attracting visitors from various sources who are looking for a repository of useful websites.

Create the buzz – Mention your website inclusion in http://explore.oneindia.in either in your news article or on your blog. We are sure your readers will be equally excited to learn about it.

We aim to strengthen http://www.envazhi.com/ presence through the Explore OneIndia.in directory.

Regards:
Explore.Oneindia.in Team

இது தொடர்பாக ஒன்இந்தியா நிறுவனத்தின் சிஇஓ அவர்களும் நமக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார் என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இனி தட்ஸ்தமிழ் செய்திகளையும் என்வழியில் பெறலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நமது வாசகர்கள் அனைவருமே ஒன்இந்தியா அல்லது தட்ஸ்தமிழ் நியூஸ்லெட்டர்களை பெற்றுக் கொள்ளலாம். thatstamil-request@lists.oneindia –   என்ற முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி நியூஸ்லெட்டர்களைப் பெறலாம் (மறக்காமல் Ref. envazhi.com -ஐ குறிப்பிடவும்).

என்வழிக்கு இன்று கிடைத்துள்ள இந்த அங்கீகாரத்துக்கு நமது வாசகர்கள் மற்றும் நண்பர்களாகிய நீங்களே காரணம் என்பதால் இதனை உங்களுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறோம்.

தொடரும் உங்கள் ஆதரவுக்கு நன்றி.

அன்புடன்

-வினோ

ஆசிரியர்

என்வழி.காம்
29 thoughts on “‘ஒன்இந்தியா’வுடன் என்வழி…!

 1. r.v.saravanan

  உங்களுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறோம்.

  valthukkal vino

 2. வடக்குப்பட்டி ராமசாமி

  ரொம்ப சந்தோசம்!

 3. arul

  nice to hear the news congrats sir.God will never let down the persons like you who are sincere and honest in his work.best of luck for the next stage.keep going on sir.

 4. R O S H A N

  vaazhthukkal vino…..neengal maelum maelum valaravaendum…..entha situationlayum naangal unga koodavae iruppom….don’t worry

 5. vasi.rajni

  விநோஜி வாழ்த்துக்கள் .இந்த அளவுக்கு நீங்கள் சென்றதற்கு நாங்கள் மட்டும் காரணம் அல்ல , உங்களின் பதிவுகளும் அதன் தரமும் தான். மெம்மேலும் உயர இந்த சகோதரனின் வாழ்த்துக்கள் .

 6. ஈ ரா

  சூப்பர் சார்…

  கலக்குங்க……

  all the best

  ஈ ரா

 7. SenthilMohan K Appaji

  மென் மேலும் வளர வாழ்த்துக்கள்.

 8. Naanum oru Kamal Fan!

  வாழ்த்துக்கள் திரு வினோ…
  பேதங்களுக்கு அப்பால், வாழ்த்துக்களைப் பறிமாறிக் கொள்வதே நல்ல பண்பு!

 9. சிவராம்

  உண்மையிலேயே Great News Mr.Vino.

  This is the piece of example for the quality and hard work of a Rajini fan.

 10. Suresh கிருஷ்ணா

  என்வழி ஆசிரியராக உங்கள் சாதனை பெரிய விஷயம் வினோ. நானும் அந்த லிங்கில் போய் பார்த்தேன். பல ஜாம்பவான் தளங்களின் பட்டியிலில் என்வழியும் இடம்பெற்றுள்ளது சந்தோஷமாக உள்ளது.

  நமது சாதனை என்றாலும், அதற்காக நீங்கள் செலவழிக்கும் நேரம் எவ்வளவு என்பது எனக்கும் தெரியும். உங்களுக்கு வாழ்த்துக்கள்… ஒன் இந்தியாவுக்கு நன்றிகள்.

  குறிப்பு 1: தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும் 🙂
  குறிப்பு 2: ‘100 கமெண்ட்’ வந்துடுச்சி போல 😉

  -Suresh கிருஷ்ணா

 11. வடக்குப்பட்டி ராமசாமி

  பூக்களாக இருக்காதே
  உதிர்ந்துவிடுவாய்
  செடிகளாக இரு
  அப்போதுதான்
  பூத்துக்கொண்டே இருப்பாய்…

  —-
  நீங்க மத்தவங்ககிட்ட சேருரதைவிடை பிறரை நீங்க சேத்துக்கிட்டா ரொம்ப நல்லா இருக்கும்!

 12. Shivaji

  Belated heartiful wishes Vinoji.
  Wishing you for more laurels and recognition in the future.

  Endrum anbudan,
  Shivaji.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *