BREAKING NEWS
Search

‘ஒத்தைக்கு ஒத்த ரெடியா!’ – அழகிரி


ஒண்டிக்கு ஒண்டி வர்றியா! – அழகிரி

மதுரை: ஒண்டிக்கு ஒண்டி வர்றீயா… என இந்தத் தேர்தலிலும் முண்டா தட்டுகிறார் கருணாநிதியின் ஒரு வாரிசு. அவர்தான் கருணாநிதியின் மகன் முக அழகிரி. azhagiri

இந்தத் தேர்தலை விடுங்க… இனி வரும் தேர்தலில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தன்னை எதிர்த்து போட்டியிட தயாரா என மதுரை தொகுதி திமுக வேட்பாளர் மு.க. அழகிரி சவால் விட்டுள்ளார்.

மதுரை தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் தென் மண்டல அமைப்புச் செயலாளர் அழகிரி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மோகன் நிறுத்தப்பட்டுள்ளார்.

நேற்று எஸ்.எஸ்.காலனியில் பிரசாரத்தை துவக்கிய அழகிரி அரசரடி, மேலபொன்னகரம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறி அரசியல் ஆதயம் தேடுவது ராமதாசும், அவரது மகன் அன்புமணியும் தான். ஐந்து ஆண்டுகள் பதவியில் இருந்துவிட்டு இப்போது அதிமுக அணிக்கு சென்றுவிட்டனர்.

வேட்டியையும், சேலையையும் மாறி மாறி சுமப்பதே அவர்களது வேலையாகி விட்டது. ராமதாசும், அன்புமணியும் தான் அரசியல் நாடகம் ஆடுகிறார்கள். எனக்கு அரசியல் தெரியாது என்கின்றனர். அன்புமணி என்னை எதிர்த்து ஒத்தைக்கு ஒத்தையா எங்கு வேண்டுமானாலும் போட்டியிட்டு பார்க்கட்டும். அவரை டெபாசிட் இழக்கச் செய்வேன் என சவால் விடுகிறேன்.

முதல்வர் கருணாநிதி பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கிலோ அரிசி ஒரு ரூபாய், விவசாய கடன் ரத்து, முதியோர், கர்ப்பிணி பெண்கள், வேலையில்லாதோருக்கு உதவி தொகை வழங்கி வருகிறார்.

அவர் சொன்னதை செய்யக்கூடியவர். அதே போல் நானும் சொன்னதை செய்து காட்டுவேன். மதுரை தொகுதியின் அடிப்படை தேவைகள் அனைத்தையும் தீர்த்து வைப்போன். மத்தியில் சோனியா தலைமையில் மீண்டும் ஆட்சி மலரவும், தமிழகத்தில் மக்கள் நலன் காக்கும் ஆட்சி தொடரவும் என்னை வெற்றி பெற செய்யுங்கள் என்றார் அழகிரி.




6 thoughts on “‘ஒத்தைக்கு ஒத்த ரெடியா!’ – அழகிரி

  1. raj.s

    I got already 500 rupeess 😀 …but vote pannalama vendama nu yosichukittu irukennnn…:-P

  2. senthil

    Don’t vote for Alagiri OR Money. Vote for your own true feeling.
    Communist candidate P.Mohan is very simple man still comes in bicycle.

  3. pannadai

    raj.s, collect money how much maximum,thats your money coming back to you,but don’t vote to DMK. put vote to ADMK !!!

  4. Kamesh Botswana

    “முதல்வர் கருணாநிதி பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கிலோ அரிசி ஒரு ரூபாய், விவசாய கடன் ரத்து, முதியோர், கர்ப்பிணி பெண்கள், வேலையில்லாதோருக்கு உதவி தொகை வழங்கி வருகிறார்.”

    “மதுரை மக்களே ஒரு ரவுடி மக்கள் அவை உறுப்பினர் ஆவதற்கு சாவு மணி அடியுங்கள் ”
    திருக்குவளை வாத்தியார் மகன் இன்று ஆசியாவின் ஐந்தாவது பணக்காரன்

  5. muktha

    நன்றி இன்று போய் போரை நிறுத்திய பின் நாளை வாருங்கள் நிச்சயம் தமிழர்கள் உங்களை வரவேற்பார்கள்

  6. velan

    சரியான திமிரு புடிச்ச அழக்ரிக்கு படம் புகட்டுங்க அப்பதான் அவன் த்மிரு அடங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *