BREAKING NEWS
Search

ஐடி துறையில் 2.5 லட்சம் புதிய வேலைகள்.. ஆளெடுப்பைத் துவங்கும் இந்திய நிறுவனங்கள்!

ஐடி துறையில் 2.5 லட்சம் புதிய வேலைகள்! – இன்போஸிஸ் தகவல்

பெங்களூர்: தகவல் தொழில்நுட்பத் துறை மீண்டும் சரியான employmentபாதைக்குத் திரும்பியிருப்பதால், அடுத்த ஆண்டுக்குள் இத்துறையில் 2.5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று இன்போஸிஸ் தெரிவி்த்துள்ளது.

நாட்டின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான இன்போஸிஸ் வரும் ஆண்டில் 20000 புதிய பணியாளர்களை வேலைக்கு எடுக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட, அதன் இயக்குநர் மோகன்தாஸ் பய், “ஐடி துறையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண்டுக்கு 3 லட்சம் வேலைவாய்ப்புகள் இருந்தன. 2007-ம் ஆண்டு 3 லட்சத்துக்கும் அதிகமான வாய்ப்புகள் இருந்தன. கடந்த 18 மாதங்களில்தான் நிலைமை இத்தனை மோசம். இப்போது மீண்டும் மறு எழுச்சிக்கான காலம். அடுத்த நிதியாண்டின் தொடக்கத்திலேயே நல்ல மாறுதல்களைக் காணலாம்.

2.5 லட்சம் புதிய பணியாளர்கள் இந்தத் துறையில் தேவைப்படுவார்கள். இன்போஸிஸ் மட்டுமே 20000 புதிய பணியாளர்களை நியமிக்கத் திட்டமிட்டு, அதற்கான பூர்வாங்க வேலைகளில் இறங்கியுள்ளது” என்றார்.

மேலும், தங்கள் நிறுவனப் பணியாளர்களின் சம்பளத்தையும் மீண்டும் 8 முதல் 10 சதவிகிதம் வரை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளார்.

மீண்டும் ஆளெடுப்பு துவங்கும் – நாஸ்காம்!

இதற்கிடையே இந்திய ஐடி நிறுவனங்கள் பெருமளவில் ஆளெடுப்புப் பணியை ஆரம்பிக்கவிருப்பதாக நாஸ்காம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து இந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில், “அந்த நிதியாண்டு முடிவுக்குள்ளாகவே இந்திய ஐடி நிறுவனங்கள் பழையபடி முழுவீச்சில் ஆளெடுப்பைத் துவங்கிவிடும்” என்று கூறப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *