BREAKING NEWS
Search

‘ஐஃபா விழா போராட்டம் செத்துப் போன விவகாரம்!’- சூர்யாவின் எகத்தாளம்

ஐஃபா விழா செத்துப் போன விவகாரமாம்!- சொல்கிறார் சூர்யா

விவாதத்துக்குப் போகும் முன் முதலில் செய்தி:

இன்று வியாழக்கிழமை பெங்களூர் மிர்ரர் நாளிதழுக்கு நடிகர் சூர்யா அளித்துள்ள பேட்டி இது:

தடையை மீறி கொழும்பில் நடந்த ஐஃபா விழாவில் பங்கேற்ற விவேக் ஓபராயுடன் இணைந்து நீங்கள் நடித்துள்ள படம் ரத்த சரித்திரா. இந்தப் படம் தென்மாநிலங்களில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதுபற்றி என்ன சொல்கிறீர்கள்?

“ஐஃபா விழா விவகாரம் செத்துப் போன ஒன்று. அதை இனியும் இங்கே பேசிக் கொண்டிருக்கக் கூடாது. அது ஒரு சின்ன விஷயம். அதைப் போய் இன்னும் பெரிதாக்கிக் கொண்டிருக்கிறீர்களே… என்னுடைய ரத்த சரித்திரா வெளியீட்டை அந்த விழா தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகள் ஒன்றும் செய்துவிடாது. சமீபத்தில் ராவணன் ரிலீஸானபோதுகூட யாரும் ஒன்றும் சொல்லவில்லையே (என்ன சொல்லணும்?).

ரத்த சரித்திரம் படப்பிடிப்பின்போது நான் விவேக் ஓபராயோடு பேசினேன். அப்போது யுனிசெப் மற்றும் அந்நாட்டின் உள்ளூர் தமிழர்களுடன் இணைந்து புதிய பள்ளி ஒன்றை அமைத்திருப்பதாகச் சொன்னார். இந்த விஷயத்தில் அவர் என்ன உதவி கேட்டாலும் செய்ய நான் தயாராக உள்ளேன்.

நடிகர்கள் இலங்கை சென்றது வெறும் கேளிக்கைக்காக அல்ல. அங்குள்ள மக்களுக்கு உதவத்தான். இந்தப் பிரச்சினை அன்றோடு முடிந்துவிட்டது. திரும்பத் திரும்ப அதை கிளறுவது ஏன்?” என்று கேட்டுள்ளார் சூர்யா.

கொழும்பில் நடந்த சர்வதேச இந்திய திரை விழாவை தென்னகத் திரையுலகமே புறக்கணித்தது. வட இந்தியாவின் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஷாரூக்கான், அமீர்கான், ஐஸ்வர்யா ராய், ஜான் ஆபிரகாம், அக்ஷய் குமார் என முன்னணி நட்சத்திரங்கள் தமிழர் வேண்டுகோளை ஏற்று இலங்கை போகாமல் தவிர்த்தனர். இதையும் மீறி சிலர் போனார்கள். அவர்களின் படங்கள் இனி தென்னிந்தியாவின் 5 மாநிலங்களில் திரையிடப்பட மாட்டாது எனறு தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவித்தது.

விழாவும் படுதோல்வியடைந்தது. ஈழத் தமிழர் படுகொலைக்கு இந்தியத் திரையுலகம் இலங்கை அரசுக்கு தெரிவித்த பெரும் கண்டனம் இது என்றே சர்வதேச அளவில் பார்க்கப்பட்டது. டைம்ஸ் போன்ற பத்திரிகைகளே இதைக் குறிப்பிடிருந்தன.

இன்னொரு பக்கம் தடையை மீறி ஐஃபா விழாவுக்குப் போன விவேக் ஓபராய், சல்மான்கான், ஹ்ரித்திக் ரோஷன் படங்கள் தென்னகத்தில் வெளியாகத் தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், சூர்யா நடித்து அடுத்து வெளியாக உள்ள ரத்த சரித்திரம் தமிழ், இந்திப் படங்களில் சூர்யாவுடன் விவேக் ஓபராய் இன்னொரு நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தை வெளியிடக் கூடாது என தமிழ் உணர்வாளர்கள் எதிர்ப்புக் குரல் கொடுத்து வருகின்றனர்.

ஐஃபா விழாவை எதிர்த்து மும்பையில் ஆர்ப்பாட்டங்களில் இறங்கி அமிதாப் போன்றவர்களை விழாவுக்குச் செல்லாமல் தடுத்த சீமானின் நாம் தமிழர் கட்சி, ரத்த சரித்திரம் ரிலீஸ் விஷயத்தில் மட்டும் அடக்கி வாசிக்கிறது. “சூர்யா என் தம்பி. அவரது படத்தை மட்டும் மன்னிக்கலாம்” என்று பல்டியடித்துள்ளார் சீமான். ஆனால் உண்மையில் சூர்யாவும் கார்த்தியும் தந்தை சிவகுமாருடன் போய் சீமானை நேரில் பார்த்து சமாதானப்படுத்தியுள்ளனர். அதுவே இந்த பல்டிக்குக் காரணமாம்.

சீமானின் இந்த கொள்கை நழுவலுக்கு உணர்வாளர்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. தமிழுணர்வை தனது கட்டப்பஞ்சாயத்துக்காகப் பயன்படுத்துவதுதான் இவரது நோக்கமா? என கேட்கத் துவங்கியுள்ளனர்.

இந்த நேரத்தில்தான் சூர்யா, மிக அலட்சியாகவும் திமிராகவும் இந்தப் பேட்டியை அளித்துள்ளார்.

ஐஃபா விழா முடிந்தால்… எல்லாம் முடிந்துவிட்டதாக அர்த்தமா? தமிழர் பிரச்சினை தீர்ந்துவிட்டதா? அவரவர் வசதிக்கேற்ற வகையில் போராட்டத்தையும், தடைகளையும் உடைத்துக் கொள்ளலாமா?

இந்த கருமத்தை முன்பே சொல்லியிருந்தால், அமிதாப்பும், அபிஷேக்கும், ஐஸ்வர்யா ராயும், ஷாரூக்கும் தடையை சுலமாக மீறி கொழும்பு போய், சிங்களர்களைக்  குளிர்வித்து, இலங்கை அரசிடம் ஏகப்பட்ட சலுகைகளை அனுபவித்திருப்பார்களே (சல்மானும் விவேக் ஓபராயும் இப்போது வடக்குப் புணரமைப்பு திட்டத்தின் பங்குதாரர்கள். பல ஒப்பந்தங்களை இருவரும் பெற்றுள்ளனர்)… உண்மையில், இவர்களுக்கும் தமிழர் பிரச்சினைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?

தமிழனுக்கு எதிரி எங்கிருந்தோ வரவேண்டும் என்பதில்லை.  சினிமாக்காரர்களை நம்பி ஒரு இனப் போராட்டத்தை நடத்த முடியாது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர். இவர்கள் வெறும் வியாபாரிகள். அண்ணன் எப்போ சாவான், திண்ணை எப்போ காலியாகும் என்பதுதான் இவர்கள் சித்தாந்தம்!

பெங்களூர் மிர்ரர் வெளியிட்டுள்ள சூர்யாவின் பேட்டி

-வினோ
43 thoughts on “‘ஐஃபா விழா போராட்டம் செத்துப் போன விவகாரம்!’- சூர்யாவின் எகத்தாளம்

 1. Gopiramesh

  இவர்கள் எல்லாம் பணத்துக்காக எதை வேண்டுமானுலும் விட்டு தருவார்கள்.. தமிழ் உணர்வுள்ள நாம் அனைவரும் இந்த திரைபடத்தை புறக்கணிக்க வேண்டும்… இது போன்ற பச்சோந்திகளை நம்பி ஆரம்பிக்க பட்டதல்ல தமிழர் போராட்டம்..!!!!

 2. Arun

  நன்றி வினோ. உண்மையிலேயே சொல்லனும்னா எனக்கு உங்க பேர்ல ரொம்ப வருத்தம் இருந்துச்சு வினோ. என்ன உங்களுக்கு நல்லாவே தெரிஞ்சு இருக்கும் நு நம்புறேன் இந்த ப்ளாக் ஆரம்பிச்ச டைம் ல இருந்து விடாம உங்க கேள்வி பதில் ல என்னோட கேள்வி இருக்கும் அவளவு தூரம் உங்க ப்ளாக் ரசிச்சு படிச்சவன் நான்.

  உங்க பேர்ல இருந்த ஒரே வருத்தம் – நான் ரொம்ப தீவரமான ரஜினி ரசிகன். jaquar தங்கம் அடிச்ச அந்த நாடகத்துக்கு சீமான், திருமாவளவன் நேரடியா போயி தன்னோட ஆதரவ தெரிவுசாங்க. அந்த டைம் ல உங்க கிட்ட இருந்து ஒரு எதிர் பதிவாது சீமான், திருமாவளவன் மேல பண்ணுவீங்க நு ரொம்ப ஆர்வமா காத்து இருந்தேன் வினோ. நிச்சயமா நீங்க அந்த jaquar ர கிழிச்சு டீங்க அதுல மாற்று கருத்து இல்லை ஆனா அந்த நேரத்துல ல தமிழன் நு சொல்லிடு இந்த சீமான் ஆளுங்க தலைவருக்கு எதிரா பேசினத நான் நேரடியா பாத்தேன் வினோ சார்.. எனக்கு அதான் கொஞ்சும் வருத்தமா இருந்துச்சு என்ன காட்டிலும் ரஜினி சார் ரோட பண்புகள் ரசிகுற மனுஷன் நு நான் நம்புற வினோ சார் அமைதியா இருந்துட்டார் நு ரொம்ப வருத்தப்பட்டேன் இப்ப நீங்க கொஞ்ச நாள் சீமான் தப்பு செஞ்சப்ப தட்டி கேட்டதும் உங்க நேர்மையா பாராட்ட நும் நு தான் இந்த கமெண்ட் போடுறேன்

  ஏன் மனசுல உங்க பேருல இருந்த அந்த வருத்தத்தையும் ஷேர் பண்ண ஆசை பட்டேன் அதன் சொல்லிட்டேன் வினோ சார்.. உங்க ப்ளாக் எப்பவும் நேர்மையா இருக்கனும் நு ஆசை படுற ஒரு சாதாரன ரசிகன்

  – அருண்

 3. s

  சூர்யா ஒரு தமிழ் மறந்த தமிழன் தானே அவரிடம் போயி நியாயம் கேட்டால் கிடைக்குமா? இல்லைனா இதனை தமிழச்சிகள் இருக்கும் போது ஒரு வட நாட்டு முஸ்லிம் பெண்ணை காதல் கத்திரி காய்னு போய் கல்யாணமும் பண்ணி குடும்பம் நடத்துவாரா????
  பணத்துக்காக பிணமும் தின்னுவர் அவர்….
  ஐஃபா விழா செத்துப் போன விவகாரமா இவருக்கு….. அவரும் சாகதனே போறார் அப்புறம் பணம் பதவி புகழ் இதெல்லாம் ஏன்?
  எப்படி விவேக் தமிழரை திருப்தி படுத்தி உள்ளார்? கலப்பு திருமணம் பண்ணி எங்கள் இனத்தையே அளிக்க வழி பண்ணியா???? அந்நாட்டின் உள்ளூர் தமிழர்களுடன் இணைந்து புதிய பள்ளி ஒன்றை அமைத்திருப்பதாகச் சொன்னர????? என்ன பாடம் சொல்லி தர இந்த பள்ளி???? ஈழத்தில் தமிழன் என்ற ஒரு இனம் இருக்கவே இல்லை என்ற???? அல்லது ஒவ்வொரு தமிழச்சியும் சிங்களவனுக்கு தன முந்தானை விரிக்க வேணும் என்ற??? இதுக்கு வெட்கமில்லாமல்…. சூர்யா உதவப்போஹிரற???? நல்ல இருக்கு இவர்கள் நாடகம்….

 4. பாலா

  வாழ்க்கையிலும் வேசமிடும் நபர்கள். ஒன்று மட்டும் நிச்சயம் ஈழ தமிழர்களுக்கு எமனே இங்கு உள்ளவர்கள்தான். அரிதாரம் பூசுபவர்களை எல்லாம் தலைவர்களாக ஏற்றுகொண்டதன் விளைவு.. சினிமாக்காரர்கள் பலர் தான் ஈடுபடும் ஒவ்வொரு நிகழ்வையும் தனது புகழுக்காகவும் வியாபாரத்திர்க்காகவும் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். இது எல்லாம் பெரியவர்கள் எவ்வழியோ அவ்வழியே அவர்கள் வழி வந்தோரும். சூர்யாவும், சிவகுமாரும் தமிழ் பத்திரிகைகள் மூலம் நேரடியாக தமிழ் மக்களிடம் பேசி தங்கள் கருத்தை பேசி இருக்கலாம். புற வாசல் வழியாக சீமான் போன்றோர்களிடம் சென்று தங்களையும் இழிவு படுத்தி போராட்டத்தையும் கொச்சைப்படுத்தி இருக்க வேண்டாம். ஈழப்போராட்டத்தில் இன்னும் எத்தனை துரோகங்களை பார்க்க வேண்டுமோ..?

 5. santhosh

  ரத்த சரித்திரம் படத்தை ரிலீஸ் செய்ய கூடாது. தமிழர்கள் ஒன்று பட வேண்டும். சூர்யாவிற்கு பாடம் கற்பிக்க வேண்டும்.

 6. Raj Devar

  அருண் நல்லா வினோத்துக்கு ஜால்ரா போடுற ……………….வினோ நீங்களே அருண் அப்டிங்கிற பேர்ல கமெண்ட் எழுதிகிட்டின்களா ???

 7. Raj Devar

  அருண் நல்லா வினோத்துக்கு ஜால்ரா போடுற ……………….

 8. வள்ளுவன்

  முதலில் இந்த IIFA என்ற பெயரை IHFA என்று மாற்ற சொல்லி நாம் போராட வேண்டும். இது International Indian Film Academy அல்ல. இது International Hindi Film Academy.

  வெறும் இந்தி படங்களுக்கு விருது வழங்கி கொண்டாடி, அதை ஒட்டு மொத்த இந்திய திரை பட உலகின் பிரதிநித்துவ விழாவாக பிரகடனப்படுத்துவது அயோகியத்தனம்.

  இது இலங்கையில் மட்டுமல்ல. உலகில் எங்கு நடந்தாலும் தென் இந்தியர்கள் மற்றும் இந்தி அல்லாத மற்ற திரை உலகத்தினரும் புறக்கணிக்க வேண்டும்.

 9. palPalani

  *சிங்கம் டயலாக்* – சிரிக்க மட்டும், யாரும் செஞ்சு பார்க்க வேண்டாம்!

  நீ மூத்தரத்த பாத்ரூம்ல அடிச்சிருப்ப
  செவத்துல அடிச்சிருப்ப
  கரண்டு கம்பத்துல அடிச்சிருப்ப
  ஏன், தூங்கும்போது பெட்ல கூட அடிச்சுருப்ப
  நடு ரோட்டுல கம்பீரமா நின்னு அடிச்சுருக்கியா?
  ஸ்டெடியா நின்னு தலைக்கு மேல தூக்கி அடிச்சிருக்கியா?
  முக்கி அடிச்சா ஒன்ர லிட்டர் வரும்டா
  பாக்குரியா? பாக்குரியா?

 10. eelamtamil

  கொழும்பில் நடந்த சர்வதேச இந்திய திரை விழாவை தென்னகத் திரையுலகமே புறக்கணித்தது. வட இந்தியாவின் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஷாரூக்கான், அமீர்கான், ஐஸ்வர்யா ராய், ஜான் ஆபிரகாம், அக்ஷய் குமார் என முன்னணி நட்சத்திரங்கள் தமிழர் வேண்டுகோளை ஏற்று இலங்கை போகாமல் தவிர்த்தனர். இதையும் மீறி சிலர் போனார்கள். அவர்களின் படங்கள் இனி தென்னிந்தியாவின் 5 மாநிலங்களில் திரையிடப்பட மாட்டாது எனறு தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவித்தது

  Vino & every one, Pls just turn all your fingers alone to seeman if we are really consider real punishment to Vivek Obrai & Salman, Pls take move warning to whole south indian fim industry federation.. Anyway Seeman has responsibility.. No point on fight within us… Hope you all understand…

 11. Arun

  ராஜ் தேவர் சார்,
  என்ன சார் அப்படி ஜால்ரா போட்டேன் என்னோட கமெண்ட் ல??
  ஏதோ type பண்ணனும் நு பண்ணாதீங்க சார்.. கொஞ்சும் யோசிச்சு பேசுங்க.. நான் சொல்லுறது தப்பு ந அந்த ஜால்ரா எது நு கொஞ்சும் சொலுங்க உங்கள மாதிரி புத்திசாலி சொல்லி நாங்க கத்துக்க வேண்டியது நெறைய இருக்கு

 12. kiri

  palPalani says:
  June 24, 2010 at 10:14 am

  *சிங்கம் டயலாக்* – சிரிக்க மட்டும், யாரும் செஞ்சு பார்க்க வேண்டாம்!

  நீ மூத்தரத்த பாத்ரூம்ல அடிச்சிருப்ப
  செவத்துல அடிச்சிருப்ப
  கரண்டு கம்பத்துல அடிச்சிருப்ப
  ஏன், தூங்கும்போது பெட்ல கூட அடிச்சுருப்ப
  நடு ரோட்டுல கம்பீரமா நின்னு அடிச்சுருக்கியா?
  ஸ்டெடியா நின்னு தலைக்கு மேல தூக்கி அடிச்சிருக்கியா?
  முக்கி அடிச்சா ஒன்ர லிட்டர் வரும்டா
  பாக்குரியா? பாக்குரியா?//

  பிரமாதம்!!!Super!!!

 13. KUMAR

  சீமான் இந்த விஷயத்தில் தவறு செய்வதாகவே தோன்றுகிறது…. சூர்யாவும் கூட…. நன்றி வினோ…. உங்களது நேர்மைக்கு… தவறு யார் செய்தாலும் சுட்டிக்காட்டவேண்டும்….

 14. KUMAR

  சூர்யா இப்படி பேசியதற்கு காரணம் சீமான் தான்….. ஒருவர் தவறு செய்யும் பொது அதை சுட்டிக்காட்டா விட்டால், கண்டிக்காவிட்டால் மேலும் பல தவறுகள் செய்வார்கள்…. சூர்யா ஒரு எடுத்துக்காட்டு….

 15. V.Suryakumar

  சூர்யா மோசமான மனிதனுக்கு உதாரணம். நீ இதற்குப் பிறகு என்ன சமூகசேவை செய்தாலும் உன் மேல் எங்களுக்கு நல்லெண்ணம் வராது. எல்லாவற்றிற்கும் மூல காரணமான ஒரு கிழ…. அங்கே இன அழிப்பிற்கு தூணாய் நின்றுவிட்டு இப்போது மாநாடு கொண்டாடுகிறது. தூ…

 16. palPalani

  @V.Suryakumar: அவர்களுக்கு,
  /*
  சூர்யா மோசமான மனிதனுக்கு உதாரணம். நீ இதற்குப் பிறகு என்ன சமூகசேவை செய்தாலும் உன் மேல் எங்களுக்கு நல்லெண்ணம் வராது
  */
  உங்கள் கருத்துபடி அவரு பெரிய சமூக செவகர்மாதிரி நினைக்க தோணுது,
  சமூக சேவையெல்லாம் இன்கம் டாக்ஸ் சேவிங் -க்காக பண்றது! இது இவருக்கு மட்டுமில்ல, இன்னும் சில நடிகர்களுக்கும்(மற்றும் சில பெரிய கம்பெனி, தனி மனிதர்களுக்கும்) பொருந்தும்! இதுல விஜயகாந்த் மற்றும் விஜயோட இலவசமெல்லாம் வேற ஒரு கனவுல செய்யுறது!

 17. Manoharan

  வினோ, சூர்யாவின் பேட்டியை விட உங்கள் மொழிபெயர்ப்பில் நெகட்டிவ் தன்மை அதிகம் உள்ளது. அவர் திமிராகவோ எகத்தாளமாகவோ பதில் சொல்லவில்லை. இது முடிந்துபோன விஷயம் என்றும் சின்ன விஷயத்தை ஏன் பெரிதுபடுத்துகிறீர்கள் என்று சொல்லியிருக்கிறார். இது நிச்சயம் தப்புதான்.இந்த ஒரு விஷயத்திலாவது தமிழர் ஒற்றுமைக்கு வெற்றி கிடைத்திருக்கிறது என்று நாம் பெருமைப்படும் வேளையில், சூர்யாவின் இந்தப் பேச்சு தேவையற்றது,கண்டிக்கத்தக்கது. இதில் இன்னொரு விஷயம் கூட இருக்கிறது. ஆனால் அது இப்போது வேண்டாம். சூர்யா மறுபடியும் பேசினால் சொல்கிறேன்.

 18. Sivaji

  ஐஃபா விழாவுக்கு எதிர்ப்பு..! இலங்கையில் ஷூட்டிங் நடத்த எதிர்ப்பு.. இலங்கை ஆளும் தலைவர்களைச் சந்தித்தால் எதிர்ப்பு என்று சகல வழிகளிலும் அவர்களைப் புறக்கணிக்கச் சொல்லும் தமிழ்த் திரையுலகம் தன்னுடைய படங்களை மட்டும் ஏன் அங்கே அனுப்புகிறது என்றுதான் எனக்குப் புரியவில்லை..!

  வருடாவருடம் சென்னையில் ஐ.சி.ஏ.எஃப். சார்பில் நடக்கும் சிங்களத் திரைப்பட விழா இரண்டு வருடங்களாக இங்கே நடக்கவில்லை. ஆனால் புதியத் தமிழ்த் திரைப்படங்கள் மட்டும் தொடர்ந்து இலங்கையில் திரையிடப்பட்டு வருகிறது. புறக்கணிப்பு என்பது ஒரு வழிப் பாதையா..?

  நாம் நடத்திய போராட்டத்தைப் போலவே ஈழத்திலும் அவர்கள் ஆரம்பித்துவிட்டார்கள். மட்டக்களப்பு நகரில் ராவணன் படம் திரையிட இருந்த சாந்தி தியேட்டரை முதல் நாள் இரவு அடித்து நொறுக்கி திரையை எரித்துவிட்டார்கள்..!

  இப்போது ஒரு வாரத்திலேயே தியேட்டரைச் செப்பனிட்டுவிட்டு இப்போது ராவணன் படத்தினை திரையிட்டுவிட்டார்கள். ராவணன் படத்தை யாராவது எதிர்த்து ரகளை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்கிறது இலங்கை அரசு. இதுவே ஒரு விதத்தில் அவர்களுக்கு உதவுவதைப் போலத்தானே..? நாம் ஏன் இதனைச் செய்ய வேண்டும்..?

  நமது சொந்தங்கள் அங்கே போகக் கூடாது.. படப்பிடிப்புகள் நடத்தக் கூடாது.. நம்மால் அவர்களுக்கு எந்த பண வரவு ஆதாயங்களும் வரக்கூடாது என்றால் சரிதான்.. அதேபோல் நாம் நமது படங்களையும் அங்கே ரிலீஸ் செய்யாமல் இருக்கலாமே..? இது மட்டும் எதற்காகவாம்..?

  சில லட்சங்கள் கிடைக்கிறது என்பதற்காக நாமே நமது கொள்கையை அடகு வைக்கலாமா..? திரையுலகம் யோசிக்கட்டும்..!

 19. Arun

  சிவாஜி சார்,
  நீங்க **** site ல இருந்து இந்த content எடுத்து இருக்கீங்க. ப்ளீஸ் அந்த site detail லும் போடுங்க ****

  நன்றி,
  அருண்
  _____________
  அருண்-
  அதை எடிட் செய்துதான் அனுமதித்துள்ளோம்!

  -என்வழி

 20. Manoharan

  @ சிவாஜி. தமிழ் படங்களை அங்கு திரையிடுவதால் தமிழர்கள்தானே அதை பார்க்கப் போகிறார்கள். அவர்களுக்கு அந்தப் பொழுது போக்காவது இருக்கட்டுமே.

 21. Sivaji

  நன்றி வினோ.

  மனோ, உங்கள் கருத்தும் ஒருவிதத்தில் சரிதான்.

 22. தேவகுமாரன்

  ஏய் சூரியா! அகரம் பௌண்டேஷ்ன் வெச்சு கல்வி உதவி செய்யுறேன்னு வருஷா வருஷம் உங்க அப்பனோட சேர்ந்து ஃபங்க்‌ஷன் நடத்தி விளம்பரம் தேடிக்கிறியே. உன்னோட சம்மந்த பட்டவங்க , ஏழை சொந்தக் காரங்கண்ணு எவ்வளவு பேர் படிக்க பணமில்லாம கஷ்டபடுறாங்க.. ஏன் அவங்களுக்கு கொடுக்கல. முதல்ல செய்யுற உதவிய ஒழுங்கா செய்யி. உன்ன சுத்தியிருக்கவங்களுக்கு என்ன தேவைன்னு பார்த்து செய்யி. அப்புறமா ஈழத்துக்கு ஸ்கூல் கட்டப் போகலாம். தமிழர்கள் போடுற பிச்சையில சொறு தின்னுட்டு தமிழனுக்கே ஆப்பா..? கோழப்பயலே… அனுஷ்கா கூட ஸ்டூல் போட்டு நடிச்ச நீயேல்லாம் பேசி என் தமிழினம் கேட்குற நிலையில இருக்கு பாரு..? அதான் கொதிக்குது.

 23. vicna

  நல்லது வினோ;
  உங்கள் முயற்சி தொடரட்டும். அத்தோடு ஒரு வேண்டுகோள்…. இது தொடர்பான செய்திகள் புலம்பெயர் தமிழர்களுக்கு சென்றடைய வழிசெய்யுங்கள்….

  தமிழ்நாடில் உள்ள அரசியல்வாதிகளும் சரி, நடிகர்களும் சரி (தொப்பி அளவானவர்கள் போட்டுக்கொள்ளலாம்) பணத்திற்காகவும், பதவிக்காகவும் எதையு……மே செய்வார்கள். இவர்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கும் சரி, மற்றய தமிழர்களுக்கும் சரி எந்த பிரியோசனமும் இல்லை.

  இதில் பெரிய சாபக்கேடு நமக்கு நாம்தான். நமது இனமே அழிந்தாலும் சரி அல்லது என்ன நடந்தாலும் சரி நாம் எப்போதுமே அரசியல் அடிமைகளாகவும், சினிமா பைத்தியங்களாகவும் இருக்கத்தான் விரும்புகிறேம். அதாவது சுருக்கமாய் சொல்வதானால் ‘கெட்டு போகிறேன் பந்தயம் பிடி’ என்பதுபோல.அதை நாம் எத்தனையோ தடவை நிருபித்து இருக்கிறோம்.
  நாம் இப்படியே இருக்கும் வரை இவர்களும் இப்படியே இருக்கத்தான் செய்வார்கள். அதாவது அவர்களின் பார்வையில் ‘மழையும் பொழிவதுதான், தவளையும் கத்துவதுதான்’ என்பது போல.

  இவை தமிழனுக்கான சாபக்கேடுகள்……..

  உலகிலேயே பழமையான மொழி, இனம்களில் நாமும் ஒன்று என்பது போல உலகிலேயே மிக கேவலமான ஒற்றுமை இல்லாத இனமும் நாம்தான். அதனால்தான் அண்டை மாநிலக்காரர்கள் நமது தமிழ்நாட்டிலேயே வந்து அனைத்து துறைகளிலும் நம்மை ஆள்கிறார்கள்.இதையே நாம் போய் அங்கு செய்யமுடியுமா? அவர்களிடம் இருக்கும் ஒற்றுமையில் ஒருதுளிகூட நம்மிடம் கிடையவே கிடையாது.

  இதை நடிகர் சூரியா பார்ப்பாரோ இல்லையோ தெரியாது வினோ!இறுதியாக நடிகர் சூர்யாவிற்கு இதன் மூலம் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்;

  அதாவது ஈழதமிழரின் உண்மையான பிரச்சினைகளைப்பற்றி முலுமையாக அறியாமல் உங்களின் சுயலாபத்திற்கா அவசரப்பட்டு முடிவுகளை மேற்கொண்டு வார்த்தைகளை விடாதீர்கள்….. ஏனெனில் ஈழதமிழர்கள் எந்த நிலையிலும் பழயதை மறக்கமாட்டார்கள். அது யார் செய்த உதவியாக இருந்தாலும் சரி, யார் செய்த துரோகமாக இருந்தாலும் சரி,,,,, அதனை வரலாறுகள் சொல்லும்.
  ஈழத்தமிழரை அழித்தவர்களுடன் கூட்டுச்சேர்ந்து அவர்களை வாழ வைக்கிறோம் என்ற போர்வையில் ‘இலங்கை, இந்திய கூட்டுச்சதியில்’ மேற்கொள்ளப்படும் இன அழிப்பில் நீங்களும் பங்காளியாகாதீர்கள்……

  உங்களுக்கு ஒன்று தெரியுமா? 2001 ம் ஆண்டுக்கு முன்னர் இப்போது நீங்களும் உங்கள் நண்பரும் சேர்ந்து உதவபோவதாக கூறும் முகாம்களில் உள்ள இதே மக்களின் வாழ்விடங்களும், வாழ்வின் அடிப்படைகளும் இலங்கை அரசால் அழிக்கப்பட்டபோது அவர்கள் யாரிடமும் கையேந்தவில்லை. அந்த நெருக்கடிக்குள்ளும் சுயமாக உழைத்து வாழ்ந்தவர்கள். அதன்பின்னர் ஏற்பட்ட சமாதான காலத்திலும்கூட யாரையும் எதிர்பார்க்காமல் தமது மண்னை இலங்கையின் மற்றய நகரங்களுக்கு இணையாக வேகமாக கட்டியெலுப்பியவர்கள்…. அப்போது நீங்களும் உங்கள் நண்பரும்போய் உதவியதாக ஏதாவது ஞாபகம் இருக்கிறதா? அவ்வளவு ஏன் அவர்கள் பிச்சைக்காரர்களையே கண்டிராதவர்கள்……..
  அவர்களுக்கு நீங்கள் உதவவேண்டும் என்றால் முதலில் நீங்கள் தன்மானம் உள்ள தமிழராக இருங்கள், பின்னர் உங்கள் நண்பர்மூலமாக இலங்கை அரசிடம் கதைத்து அவர்கள் சுதந்திரமாக வெளியே நடமாட அனுமதிமட்டும் வாங்கிகொடுங்கள்.அதன்பின்னர் இருந்து பாருங்கள் அவர்கள் கடின உழைப்பை…..
  இதைப்பற்றி நீங்கள்சரி உங்கள் நண்பர்சரி ஒருவார்த்தை கதைத்தாலே போது அடுத்த நாள் உங்கள் இருவரது படங்களுக்கும் இலங்கையில் தடைவந்துவிடும் என்பது உங்களுக்கு தெரியுமா?

  நன்றி.

 24. Sasidaran

  தமிழன் பச்சோந்தி என்பதற்கு இன்னும் ஓர் ஆதாரம். பணத்திற்கு தான் இவர்கள் எல்லோரும் ஆடுகிறார்கள் பணத்தினால் தான் ஆட்டுவிக்கப்படுகிறார்கள். பணத்திற்கு ஆப்பு விழுமோ என்ற பயத்தில் தான் இவர்கள் எல்லாம் உரிமைக்குரல் கொடுத்தார்கள் போராட்டம் நடத்தினார்கள். பிறகேன், இவர்களைப் பற்றி அங்கலாத்துக் கொள்ள வேண்டும். இவர்களை விடுங்கள் இன்று போராட்டம் நடத்தும் புலம்பெயர் ஈழத்தமிழர்களில் பெரும்பாலோனோர் தனது இனத்தினரையே(உறவுகளையும் அயலவரையும் ஏழை நட்புகளையும்) பணயமாய் வைத்துவிட்டு புலம்பெயர்ந்தவர்கள் என்பதனை மறந்து விடாதீர்கள். நன்றியையும் உணர்வினையும் தமிழனிடம் எதிர்பார்ப்பது தவறு.

 25. tamil4true

  நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. சூர்யாவின் இந்த பேட்டியின் மூலம், இந்த பிரச்சனையை பற்றிய அவரின் அறைகுறை அறிவு விளங்குகிற்து. நானும் ஒரு மூட்டாள் நடிகன் தான் என்பதை நீருபிக்கிறார்.

  IIFA விழாவின் பொது தமிழகத்தில் நடைபெற்ற எதிர்ப்பை, இது LTTE லாபியின் பொய் குற்றச்சாட்டு எனவும் இலங்கை தமிழர்களின் இந்த கோரமானா நிலைக்குக்காரண்ம் LTTE தான் என்பதை போன்ற கருத்தை வடநாட்டு ஊடகங்களில் பரப்பினார். இவ்வாறு இலங்கையின் கைப்பாவை விவேக் ஒபராய் நடந்ததற்கு ஒரு பின்னனியும் உண்டு. தனது முன்னால் காதலியின் குடும்பத்தில் (ஐய்ஸ்வர்யா ராய்)) மேல் உள்ள கோபத்தால், அவர்கள் போகாததால் விழாவிற்கு எற்ப்பட்ட தோல்வியை மறைக்க, சிங்களவெறியனின் கையாலாக தமிழற்களின் போராட்டத்தை கொச்சைபடுத்தி வடநாட்டு ஊடகங்களில் பேட்டியளித்தார். இது தெரியாத சூர்யா மடத்தனமாக பேசுகிறார்.சிங்களவெறியனின் தமிழின படுகொலையை மறைக்க துணைபோன விவேக் ஒபராய் நடித்த ரத்த சரித்திரத்தை,இன உண்ர்வுள்ள ஒவ்வொறு தமிழனும் எதிர்ப்போம்.

 26. eelam tamilan

  Good link taml4true… Guys Pls have look.. Look like good politician grown from cinema.. Better check with him whether he has any political party in SL or India?
  Other thing, i wish to say, as i seen none of the tamil media in SL which are really voice for tamils did not take serious on these peoples… Can tamil nadu media and people can do that for us…?

 27. palanivel

  அப்படி செய்தால் இவர்களது கோரிக்கையை ஏற்று விழாவில் கலந்து கொள்ளாத சூரியா, ராம்கோபால்வர்மா, படத்தின் தயாரிப்பாளர் போன்றோரது உணர்வுக்கு என்ன மரியாதை

 28. palanivel

  தனி மனிதர்களின் தீய நோக்கங்களுக்கு பலியாகி விடாதீர்கள் .

 29. palanivel

  **********************

  ______________________

  நேர்மையை எதிர்கொள்ள முடியாத கோழைகள், ஈனப் பிறவிகளிடமிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகளையே எதிர்ப்பார்க்க முடியும். மனிதப் பிறப்பையே கேவலப் படுத்தும் இழிவான மனிதரான உமக்கு இங்கே என்ன வேலை?
  -என்வழி

 30. Cuddalore Shanthakumar

  சிவக்குமாரின் மகனா இவன் என்ற கேள்வி ஆழமாக எழுகிறது !
  மன்னிப்பு கேள் இல்லை இந்திக்கு போ…
  தமிழனை கேவலப்படுத்த இவன மாதிரி நிறைய ஈரோ திரியறானுங்க…..!

 31. Indian

  *சிங்கம் டயலாக்* – சிரிக்க மட்டும், யாரும் செஞ்சு பார்க்க வேண்டாம்!

  நீ மூத்தரத்த பாத்ரூம்ல அடிச்சிருப்ப
  செவத்துல அடிச்சிருப்ப
  கரண்டு கம்பத்துல அடிச்சிருப்ப
  ஏன், தூங்கும்போது பெட்ல கூட அடிச்சுருப்ப
  நடு ரோட்டுல கம்பீரமா நின்னு அடிச்சுருக்கியா?
  ஸ்டெடியா நின்னு தலைக்கு மேல தூக்கி அடிச்சிருக்கியா?
  முக்கி அடிச்சா ஒன்ர லிட்டர் வரும்டா
  பாக்குரியா? பாக்குரியா?//
  Unga Velaya Parungada Tamila Eppadinalum Develop Pannalam !
  comment Koduthavanallam Varengala Kolumbu (Silanka) ? Povama Oru Paya Varamattingada ! Pesrankalam Petchu!

 32. karthik

  ஏன் சூர்யா, பேச தெரியாட்டி சும்மா இருக்க வேண்டியது தானே…

 33. முற்றம்

  ராவணன் இருந்துதானா? தெரியாது. ஆனால் தமிழ் நாட்டின் வீதிக்குவீதி இவர்கள் போன்ற விபீஷனர்கள் வாழ்ந்து கொண்டு( கொன்று) தான் இருக்கிறார்கள்.

 34. karthik

  சூர்யா தான் தற்போது இந்தியவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் என்பதை உணரவேண்டும். வார்த்தைகளை மிகவும் நிதானித்து பேச வேண்டும், அதுவும் இது போன்ற ஆழ்ந்த விசயங்களில். சூர்யா எப்போ தடுமாறுவான், காலை வாரலாம் என பல பேர் காத்து இருக்கான். உன்னோட வளர்ச்சி கண்டு மாஸ் ஹீரோகளே வயறு எரியாராணுக..

 35. அரசன்

  இந்தியா இலங்கை கிரிக்கெட்டை எத்தனை பேர் பார்க்கமல் இருக்கப் போகிறீர்கள்

 36. karthik

  ரஜினி சோனியா காந்திய அவர் பொண்ணு கல்யாணத்துக்கு கூப்பிடுறத எதிர்த்து அவரோட ரசிகர்கள் போராடனும்.

 37. karthik

  சிவாஜி டயலாக்..

  பண்ணிங்க தாண்ட கூட்டமா கக்கூஸ் போகும்.
  சிங்கம் சிங்களா தான் கக்கூஸ் போகும்.

  பாட்ஷா டயலாக்:

  நான் ஒரு தடவ உச்சா போன
  நூறுதடவ போன மாதிரி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *