BREAKING NEWS
Search

எஸ்எம்எஸ் மோசடி… உங்கள் அனுபவம் எப்படி?

எஸ்எம்எஸ் மோசடி…  உங்கள் அனுபவம் எப்படி?

sms-scam

ரு தினங்களுக்கு முன் எனக்கொரு எஸ்எம்எஸ் வந்தது… சின்ன எஸ் எம் எஸ்தான்.

இப்படி இருந்தது அந்த எஸ்எம்எஸ்:

“அண்ணா / அக்கா…

எனது தந்தை கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆபரேஷனுக்கு ரூ 3 லட்சம் தேவை. அவரை குணப்படுத்த பணத்துக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நான் அனுப்பும் இந்த செய்தியை தயவு செய்து முடிந்தவரை உங்களுக்குத் தெரிந்த அனைவருக்கும் தொடர்ந்து அனுப்பவும்.

நீங்கள் இப்படிச் செய்தால், அப்படி அனுப்பப்படும் ஒவ்வொரு எஸ்எம்எஸ்ஸுக்கும் எனக்கு 20 பைசாவை மொபைல் கம்பெனி கொடுத்துவிடும். எனக்கு அது மிகவும் உதவியாக இருக்கும். குறைந்தது 10 பேருக்காவது இதை அனுப்பவும்…”

-எனது கேள்வியெல்லாம், இந்த எம்எஸ்எஸ் கதை உண்மையா?

இதன் பின்னணி என்ன என்பதே.

இந்த எஸ்எம்எஸ் வந்தது ஒரு ஏர்செல் நம்பரிலிருந்துதான். உடனே ஏர்செல் வாடிக்கையாளர் பிரிவுக்கு போன் செய்து இதுபற்றி ஒரு புகாராக பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டேன். இது உண்மைதானா.. எஸ்எம்எஸ் மூலம் வருமானம் பார்க்க இந்த குறுக்கு வழியைக் கடைப்பிடிக்கிறார்களா என்று கேட்டேன்.

ஆனால் அவர்கள் அப்படி ஒரு புகாருக்கு வழியில்லை என்றும், தங்களுக்கு யாருடனும் அதுபோன்ற Tie-Up இல்லை என்றும் கூறிவிட்டனர்.

அப்படியெனில் அந்த எஸ்எம்எஸ்ஸின் பின்னணி என்ன? வேறு மொபைல் சேவை நிறுவனங்களிலும் இதே போன்ற எஸ்எம்எஸ்கள் வருகின்றனவா…

10 எஸ்எம்எஸ்தானே என்று அனுப்புவதில் பிரச்சினையில்லை… ஆனால் இந்த வேலையைச் செய்வது நிஜமாகவே ஒரு ஏழையா அல்லது ஏதேனும் சில நிறுவனங்களின் கள்ளத்தனமா? பெரிய தொகை என்றால்தான்மெனக்கெட்டு போலீசுக்குப் போவார்கள்… இது மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒருவருக்கு 5 ரூபாய்க்குள் முடிந்துவிடும் சமாச்சாரம். இதற்காக யார் போலீசுக்குப் போகப் போகிறார்கள் என்று திட்டமிட்டு செய்யப்படும் மோசடியா?

நண்பர்களே.. உங்களுக்கும் இப்படி அனுபவம் ஏற்பட்டு, அதில் ஏதேனும் உண்மை தெரிந்தால் சொல்லுங்கள்.

நன்றி

கே செல்வகுமார், சென்னை.

ஒரு நிமிஷம்…: குறிப்பிட்ட லாட்டரியில் பல கோடி பரிசு விழுந்திருப்பதாகக் கூறி கவிழ்க்க முயற்சிக்கும் எஸ்எம்எஸ்கள் தினசரி ஏராளமாய் வருகின்றன. இப்போது அதுகுறித்து ஓரளவு பலருக்கும் தெரிந்துவிட்டதால், இப்படி இரக்கத்தைக் கிளப்பி, நூதனமாக மோசடி செய்யும் வேலையில் பலர் இறங்கிவிட்டதாகக் கூறுகிறது சைபர் கிரைம் பிரிவு போலீஸ். அப்படியெனில் இந்தப் பணம் இந்த எஸ்எம்எஸ் மோசடிக்காரர்களைப்  போய்ச் சேரும் விதம் எப்படி… தெரிஞ்சா சொல்லுங்க!
7 thoughts on “எஸ்எம்எஸ் மோசடி… உங்கள் அனுபவம் எப்படி?

 1. MSK

  இது போன்ற எஸ் எம் எஸ் கள், ஒரு சிலரால் வேன்றுமெண்டே வேடிக்கைக்காக அனுப்ப படுவது. இது போன்ற மெயில் மற்றும் மெசேஜ் களை உடனே அழித்து விடுவது உத்தமம். இதனால் யாருக்கும் ஒரு பைசாவும் கிடைக்காது.

 2. noushadh

  இது எனக்கும் இது போல் பல sms-கள் வந்துள்ளன. நான் ஒரு வோடபோன் வாடிக்கையாளர். நான் யாருக்கும் forward செய்வதில்லை. Delete செய்து விடுவேன்.

 3. grg

  இது யாரோ கிளப்பிவிட்ட வதந்தியாகத்தான் இருக்கும். அதுபோல் இன்னும் நூதனமான திருடர்கள் உங்கள் மொபைல் மூலமாக வரலாம். எல்லாம் ஏமாற்றும் வேலை. கவனம் தேவை.
  ஜிஆர்ஜி
  புதுவை.

 4. கிரி

  இது வெட்டி வேலை…இதை அறியாமல் எல்லோருக்கும் அனைவரும் பார்வர்ட் செய்து இம்சித்துக்கொண்டுள்ளார்கள்.

  மின்னஞ்சலில் கூட ஒரு சிறுவனின் அல்லது சிறுமியின் படத்தை போட்டு, இதை அனைவருக்கும் பார்வர்ட் செய்தால் அதற்க்கு இவ்வளோ பணம் யாஹூ அல்லது ஜிமெயில் தருவார்கள் என்று அளந்து வரும்..இதை உண்மை என்று நம்மம்ம்பி நல்ல எண்ணத்தோடு நீங்கள் அனுப்பினால் அதன் பிறகு நீங்கள் குறிப்பிட்ட மின்னஞ்சல்கள் எல்லாம் ஸ்பாம் ல் வந்து விடும், பிறகு இந்த மின்னஞ்சல்களுக்கு குப்பை மின்னஞ்சல்களை அனுப்ப துவங்கி விடுவார்கள். அதில் வருவது தான் இந்த “UK லாட்டரி” “வயாக்ரா” மின்னஞ்சல் எல்லாம்.

  இனிமே சாமி கண்ணை குத்திடும், குழந்தை செத்து போய்டும் என்று டுபாக்கூர் மின்னஞ்சல் வந்தால் அனுப்பியவரை “இரண்டு காட்டு காட்டி” விட்டு மின்னஞ்சலை டெலீட் செய்து விடுங்கள்.

  SMS ம் இதை போல தான், அனைத்தும் டுபாக்கூர். உங்களுக்கு அதில் உண்மையாக இருக்கும் என்று கருதினால் விசாரித்து விட்டு பிறகு உதவுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *