BREAKING NEWS
Search

எஸ்எம்எஸ் கட்டணங்கள் அடியோடு குறைப்பு: இனி ஒரு எஸ்எம்எஸ் ஒரு பைசா!!

எஸ்எம்எஸ் கட்டணங்கள் அடியோடு குறைப்பு: இனி ஒரு எஸ்எம்எஸ் ஒரு பைசா!!

send.smsஎஸ்எம்எஸ் என்ற பெயரில் பல செல்போன் நிறுவனங்களும் மக்களை ஏமாற்றி வருவது குறித்த பதிவு ஒன்று சூடான அலசல் பகுதியில் சில தினங்களுக்கு முன் வெளியானது நினைவிருக்கும் (மீண்டும் மிஸ்டு கால் கலாச்சாரத்துக்கு துரத்திடாதீங்க!).

இந்த மோசடியை முதன்முதலில் அம்பலப்படுத்தியது டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ். அந்த செய்தியின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை அது. இன்னும் சில தினங்களில் எஸ்எம்எஸ் கட்டணங்கள் அடியோடு குறையும் என்பதையும் குறிப்பிட்டிருந்தோம்.

இதோ… அறிவிப்பு வந்தே விட்டது.

ரிலையன்ஸ் நிறுவனம் இப்போது எஸ்எம்எஸ் கட்டணத்தை ஒரு பைசாவாகக் குறைத்துவிட்டது. இனி ஒரே பைசாவில் நீங்கள் எஸ்எம்எஸ் அனுப்பலாம்.

நேற்றுவரை ஒரு எஸ்எம்எஸ்ஸுக்கு வசூலிக்கப்பட்ட கட்டணம் 50 பைசா முதல் 1 ரூபாய் வரை!

ஒரு நாள் முழுக்க இனி நீங்கள் எஸ்எம்எஸ் அனுப்பினாலும் ரூ 1 மட்டுமே இதற்காக செலவாகப் போகிறது.

ரிலையன்ஸின் புதிய திட்டப்படி, இனி ஜிஎஸ்எம் / சிடிஎம்ஏ என எந்த சர்வீஸிலிருந்து எஸ்எம்எஸ் அனுப்பினாலும் ஒரு பைசாதான்.

பேக்கேஜ் ஸ்கீம் என சிலவற்றை அறிவித்துள்ளனர். இதில் ஒரு நாள் முழுக்க எத்தனை எஸ்எம்எஸ் வேண்டுமானாலும் அனுப்பிக் கொள்ளலாம். அதற்கு ரூ 1 மட்டும் செலுத்தினால் போதும்.

அல்லது மாதத்துக்கு ரூ.11 மட்டும் செலுத்தி தனி வவுச்சர் பெற்றுக் கொண்டால் மாதம் முழுக்க அன்லிமிட்டட் எஸ்எம்எஸ் அனுப்பிக் கொள்ளலாம்.

நேற்றுவரை நிலவி வந்த கட்டணத்தில் 99 சதவிகிதம் குறைத்துள்ளது ரிலையன்ஸ்.

இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மொபைல் சர்வீஸ் நிறுவனங்களுக்கிடையே. இனி ஏர்டெல், வோடபோன், பிஎஸ்என்எல் போன்றவையும் இதே திட்டத்தை அறிமுகப்படுத்தும் போட்டியில் இறங்கக் கூடும்.

கவனத்தில் கொள்க: ஒரு எஸ்எம்எஸ் அனுப்ப 1 KBக்கும் குறைவாகத்தான் செலவாகிறது. அதாவது பைசாவுக்கும் குறைந்த செலவுதான் பிடிக்கிறது. இந்த உண்மை மீடியா மூலம் மக்களுக்குத் தெரிந்துவிட்டதால், வேறு வழியின்றி கட்டணக் குறைப்பை அறிவிக்கத் துவங்கியுள்ளன செல்போன் நிறுவனங்கள்!!

-என்வழி




4 thoughts on “எஸ்எம்எஸ் கட்டணங்கள் அடியோடு குறைப்பு: இனி ஒரு எஸ்எம்எஸ் ஒரு பைசா!!

  1. Deepak

    இந்தன நாலா நம்மகிட்ட கொள்ள அடிச்சா பணம்???
    பகல் கொள்ள மாதிரி மொபைல் கொள்ளையா??
    என்ன கொடும சரவணன் இது ?

  2. manik

    /ஒரு எஸ்எம்எஸ் அனுப்ப 1 KBக்கும் குறைவாகத்தான் செலவாகிறது. அதாவது பைசாவுக்கும் குறைந்த செலவுதான் பிடிக்கிற /

    நீங்கள் infrastucture (Tower,Eqpt rooms,Power Plant, ElectricityCharges), Equipment, Nation wide Optical fiber Network, Maintenance charge ஆகிய செலவுகலை! கண்டு கொண்ட மாதிரி தெரியலையே?

    அணைத்து டெலிகாம் கம்பெனி களும் போட்டி போட்டு கட்டணங்களை குறைத்து கொண்டு இருகின்றன?

  3. peraveen

    சபாஷ்….
    இது தான் பெரும்பான்மையான மக்களின் விருப்பமாக இருந்தது …
    hats off to TIMES OF INDIA & என்வழி …

    அன்புடன்
    பிரவீன்.

  4. r.v.saravanan

    இந்த உண்மை மீடியா மூலம் மக்களுக்குத் தெரிந்துவிட்டதால், வேறு வழியின்றி கட்டணக் குறைப்பை அறிவிக்கத் துவங்கியுள்ளன செல்போன் நிறுவனங்கள்!!

    i am really thank to மீடியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *