எப்போது திருந்தும் ஏர்டெல்?
Saturday, August 13, 2011 at 12:33 pm | 2,972 views
எப்போது திருந்தும் ஏர்டெல்?
என்னதான் தொழில்நுட்பத்திலும், சேவையிலும் முதலிடத்தில் இருந்தாலும் வாடிக்கை யாளர்கள் கிட்ட சரியான அணுகுமுறை இல்லேன்னா அந்த நிறுவனம் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைக்கிறது ரொம்ப கஷ்டம்தான். ஆனால் ஒரு மொபைல்சேவை தரும் நிறுவனத்துக்கு அவங்க எதிர்பார்த்ததுக்கும் அதிகமாக வாடிக்கையாளர்கள் வந்துவிட்டால் அந்த நிறுவனத்தோட அடாவடிச் செயல்களுக்கும் அளவே இல்லாமப் போய்விடுகிறது. ஏர்டெல் நிறுவனத்தோட சமீபகால நடவடிக்கைகள் இப்படித்தான் இருக்கு.
இந்தியாவை பொருத்தவரைக்கும் செல்போன் துறையில ஏர்டெல், ஏர்செல், வோடபோன், டாடா இண்டிகாம், ரிலையன்ஸ், ஐடியா, டோகோமோ, எம்.டி.எஸ், வெர்ஜின், யுனிநார், எம்,டி.என்.எல், பி.எஸ்.என்.எல், வீடியோகான் உள்ளிட்ட பல நிறுவனங்கள் நாட்டின் பல மாநிலங்களில் செல்போன் சேவையை அளித்து வருகின்றன.
இதில் ஏர்டெல் நிறுவனம் தான் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருவதாக நாம் அடிக்கடி செய்தித்தாள்களில் படிப்பதுண்டு. அதேபோல் மாதம்தோறும் புதியபுதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொள்வதிலும் ஏர்டெல் நிறுவனம் தான் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருவதாக அந்த செய்திகள் நமக்கு சொல்கின்றன.
இதனாலோ என்னவோ ஏர்டெல் நிறுவனத்துக்கு செல்போன் சேவையில் அசைக்க முடியாத ‘நம்பர் ஒன்’ இடம் கிடைத்துள்ளது. ஆரம்பித்த புதுதில் மொபைல் சேவையை சிறப்பாக கொடுத்து வந்த ஏர்டெல் நிறுவனத்துக்கு அளவுக்கு அதிகமா பெருத்துப் போன வாடிக்கையாளர்களால் சமீபகாலமாக அது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை செய்வதில் சுணக்கம் கொண்டுள்ளது. அதைவிட அந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்கும் விதத்திலும், அவர்களை அணுகும் முறையிலும் பெருத்த மாற்றங்களை கொண்டுள்ளது. ‘விருப்பம் இருந்தா இரு இல்லேன்னா வெளியே போ…’ என்பது மாதிரி தான் தான் அதன் சமீபகால நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அதுமட்டுமில்லாமல் அது ‘சிறப்பு சலுகைகள்’ என்ற பெயரில் தரும் எல்லா சலுகைகளும் அதன் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் விதத்தில் இருப்பதாக உள்ளது.
உதாரணம் -1 : முன்பெல்லாம் வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொண்டால் உடனே இணைப்பு கிடைத்து விடும், சேவையில் நமக்கு என்ன சந்தேகம் இருந்தாலும் எதிர் முனையில் இருப்பவர் எந்தவித சங்கடமும் இல்லாமல் நமக்கு பொறுமையாக பதில்கள் சொல்வார்கள். ஆனால் சமீபகாலமாக வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொண்டால் ஒரு இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் பதிவு செய்யப்பட்ட செய்திகள் முழுவதையும் கேட்டு விட்டுத்தான் கஸ்டமர் கேர் அதிகாரியை நேரடியாக தொடர்பு கொள்ள முடிகிறது. அவ்வாறு நாம் அவர்களை தொடர்பு கொள்ள கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் ஆகிவிடுகிறது.
அதே போல்,சேவையில் நமக்கு எந்த சந்தேகம் எழுந்தாலும் முழுமையாக பதில்களை சொல்வதில்லை. மாறாக சொல்லாமல், கொள்ளாமல் இணைப்பை துண்டித்து விடுகிறார்கள். குறிப்பாக டாக்டைம் குறைபாடு, வேலிடிட்டி பிரச்சனை, நம்மிடமிருந்து முன் கூட்டியே பணத்தை எடுத்துக்கொள்ளும் VAS என்று சொல்லப்படுகின்ற மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளில் உள்ள பிரச்சனை போன்றவற்றில் நாம் ஏதேனும் சந்தேகம் கேட்டால் லைனில் இருக்கச் சொல்லிவிட்டு சில நொடிகள் கழித்து இணைப்பை தானாக துண்டித்து விடுவது அதிகமாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் ஒருநாளைக்கு அதிகபட்சம் மூன்று முறைக்கு மேல் வாடிக்கையாளர் சேவையை நீகள் தொடர்பு கொண்டு சந்தேகம் கேட்டால் அதன் பிறகு நீங்கள் வாடிக்கையாளர் சேவையில் அவர்களுடன் பேச முடியாதபடிக்கு செய்து விடுகிறார்கள்.
அதன்பிறகு மீண்டும் நீங்கள் வாடிக்கையாளர் சேவையில் இணைப்பை ஏற்படுத்த வேண்டுமென்றால் அதே ஏர்டெல் சேவை வைத்திருக்கும் வேறொருவரின் மொபைலி லிருந்தோ, அல்லது லேண்ட்-லைனில் இருந்தோ நீங்கள் கோரிக்கை வைக்க வேண்டும்.
உதாரணம் – 2 : முன்பெல்லாம் தினம் ஒரு குறுஞ்செய்தி, தினம் ஒரு பிக்சர்மெசெஜ் இவையெல்லாம் நாம் உபயோகப்படுத்த நமது மொபைலுக்கு தினமும் குறைந்தது ஐந்து முறையாவது அந்த லிங்கை அனுப்பி தொல்லை கொடுப்பார்கள். அதை நாம் தேர்ந்தேடுத்தால் மட்டுமே அதற்கு மாதக்கட்டணம் முப்பது ரூபாயை பிடித்து விட்டு அந்த சேவையை வழங்குவார்கள்.
ஆனால் சமீபகாலமாக நாம் தேர்ந்தேடுக்காமலேயே அவர்களாகவே ‘நீங்கள் இந்த சேவையை தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி. இதற்குரிய மாதக்கட்டணத்தை நாங்கள் பிடித்தம் செய்துள்ளோம்’ என்று குறுஞ்செய்தி அனுப்பி இம்சிக்கிறார்கள்.
உடனே நாம் அந்த சேவையை துண்டிக்க சொல்லி வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொண்டால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட தேதியை சொல்லி அதற்குள் அதை நிறுத்தி விடுகிறோம் என்று சொல்லி வைத்து விடுகிறார்கள். ஆனால் பிடித்தம் செய்த முப்பது ரூபாய் ‘அவ்ளோ’ தான்.
உதாரணம் 3 : ‘சிறப்புசலுகை’ என்ற பெயரில் ஏர்டெல் நிறுவனம் அடிக்கும் கொள்ளைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. 70ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 85 ரூபாய் டாக் டைம்’ என்று சலுகை தருவார்கள். உடனே, அட… கட்டும் தொகையை விட கூடுதலாக பேசும் நேரத்தை தருகிறார்களே? என்று ரீசார்ஜ் செய்து விடக்கூடாது. ஏனென்றால் அந்த முழுத்தொகையையும் அவர்கள் சொல்லும் தேதிக்குள் நாம் பேசி முடிக்க வேண்டும் என்று சொல்வார்கள். இதைத்தான் புத்திசாலித்தனமாக ஏமாற்றுவது என்று நம்மூரில் சொல்வார்கள். நாம் கொடுக்கும் பணத்தின் மதிப்புக்கு பேச அவர்கள் காலக்கெடு விதிக்கிறார்கள். இந்த கொடுமையை எங்கே போய் சொல்வது?
அதேபோல் 120 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 120 ரூபாய் முழு டாக்டைம் (full talk time) தருவார்கள். அந்த சலுகை ‘இன்று ஒருநாள் மட்டும்’ என்ற குறிப்புடன் நமக்கு குறுஞ்செய்தி வரும். அதனால் பணம் அதிகம் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் 120 ரூபாய்க்கு ஒரேநாளில் இரண்டு அல்லது மூன்று முறை ரீசார்ஜ் செய்து கொள்வார்கள். இதை கவனித்த ஏர்டெல் நிறுவனம் அதற்கும் ஆப்பு வைத்தது. ஆமாம், இப்பொழுதெல்லாம் முதல் ரீசார்ஜ்க்கு மட்டுமே முழு பேசும் மதிப்பு (full talk time) தருகிறார்கள். அதுவும் கூட முழு டாக் டைமை உடனே தருவதில்லை. மீதி டாக்டைம் 48 மணி நேரத்துக்குள் உங்கள் அக்கௌண்ட்டில் கிரெடிட் செய்யப்படும் என்று சொல்வார்கள். நமக்கு இருக்கும் பிஸியான வேலைகளில் அவர்கள் மீதி டாக் டைமை கொடுத்தார்களா..? இல்லையா..? என்பதையே நாம் மறந்து விடுவோம். இதுதான் அவர்கள் நம்மை ஏமாற்றுவதற்கு வசதியாகிப் போய்விடுகிறது.
இப்படி ஏர்டெல் நிறுவனம் சமீபகாலமாக அதன் சேவையின் தரத்தை அதன் வாடிக்கை யாளர்களை முமுமையாக ஏமாற்றும் விதத்தில் மாற்றிக் கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் “நாம்தான் முதலிடத்தில் இருக்கிறோம் நாம்மை யாரும் அசைக்க முடியாது” என்ற அசட்டு தைரியம்தான்.
சேவையை தருவது மட்டுமே ஒரு நிறுவனத்தின் வெற்றியாகி விடாது அதில் ஒரு துளியாவது உண்மையும், நேர்மையும் கலந்திருக்க வேண்டும். அப்போது தான் ‘நம்பர் ஒன் இடம்’ நிலை யானதாக இருக்கும். சமீபத்தில் தமிழகத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை பார்த்த பிறகாவது ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய மனநிலையை மாற்றிக் கொள்ளும் என்று நம்புவோம். எப்போது திருந்தும் ஏர்டெல்?
இந்தக் கட்டுரையின் நோக்கம் : நாட்டில் மொபைல் சேவை தரும் எல்லா நிறுவனங்களின் செயல்பாடுகளிலும் குறைகள் இருக்கும்போது ஏர்டெல் நிறுவனத்தை மட்டும் குறிப்பிட்டு எழுத காரணம் என்ன?
நாட்டின் ‘NO1’ மொபைல் சேவை நிறுவனம் என்று சொல்லிக்கொள்ளும் ஏர்டெல் நிறுவனம் தான் மற்ற நிறுவனங்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை பெற்று முதலிடத்தில் இருக்கும் ஏர்டெல் நிறுவனத்தைப் பற்றித்தான் டிராய் அமைப்பிடம் அதிகமாக புகார்கள் சொல்லப்படுகிறதாம். கடந்த மூன்றாண்டுகளில், டிராயிடம் அளிக்கப்பட புகார்களில் 3571 புகார்கள் ஏர்டெல் நிறுவனத்தை பற்றியவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை மக்களவையில் அமைச்சர் சச்சின் பைலட் தெரிவித்ததாக ‘தி எக்னாமிக் டைம்ஸ்’ நாளிதழ் கடந்த 2011-03-09 தேதி அன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இன்னொன்று, வாடிக்கையாளர்கள் என்றில்லாமல், கேள்வி எழுப்பும் யாருக்குமே ஏர்டெல் உரிய பதிலோ முறையான விளக்கங்களோ தர மறுப்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.
இதை கவனத்தில் கொண்டு நாட்டில் முதலிடத்தில் இருக்கும் ஏர்டெல் நிறுவனம் மற்ற நிறுவனங்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே இந்தக் கட்டுரை.
-சக்திவேல்
அடுத்து…. மொபைலுக்கான ‘செய்தித்தாள் அப்ளிகேஷன்கள்’
மேலும் தொடர்புடைய கட்டரைகள்…
ஆன்-லைனில் மொபைல் வாங்குவது பாதுகாப்பானதா? – ஒரு விரிவான அலசல்
கூகுள் + ஐ மொபைலில் பயன்படுத்துவது எப்படி?
மொபைலில் தமிழ்த் தளங்களை வாசிக்க எளிய வழி!










அபூர்வ ராகங்கள் முதல் கோச்சடையான் வரை.. தொடர் ஆரம்பம்




அவனுங்க திருந்த மாட்டானுங்க பாஸ். நாமதான் உடனே மாறிக்கணும்?
நல்ல அவசியமான கட்டுரை
நல்ல பயனுள்ள கட்டுரை.
வாடிக்கையாளர் வசதி குறித்த கவலைகளைப் பரப்புரை செய்யும் சீரிய முயற்சி.
உபயோகிப்போர் நலன் / பாதுகாப்பு (consumer protection) என்ற ரீதியிலான பதிவு. தொடரட்டும் உங்கள் பணி.
ஆனால் இதில் இருந்த அரசியல் குறித்த விழிப்புணர்வைத் தரவேண்டிய கட்டாயம் உள்ளது.
முன்பெல்லாம் சேவை நன்கு இருந்தது, சேவை குறித்த புகார் பெரும் முறை நன்றாக இருந்தது, பணம் பறிக்கும் வேளையில் ஏர் டெல் நிறுவனம் ஈடுபடவில்லை, ஆனாக் தற்போது நிலைமை மோசம் என்பதே கட்டுரையின் கரு.
காரணம் வெகு சிம்பிள். முன்பு நிறுவன முதலாளி சிவசங்கரன், இப்போது தயாநிதியும் கலாநிதியும் பின்னணியில் இருக்க முன்னாள் தெரியும் அனந்தநாராயணன். அடித்துப் பிடுங்கிய கம்பெனிக் காரன் வாடிக்கையாளரை மட்டும் மரியாதையாக நடத்துவான, நேர்மையாக இருப்பானா?
//காரணம் வெகு சிம்பிள். முன்பு நிறுவன முதலாளி சிவசங்கரன், இப்போது தயாநிதியும் கலாநிதியும் பின்னணியில் இருக்க முன்னாள் தெரியும் அனந்தநாராயணன். அடித்துப் பிடுங்கிய கம்பெனிக் காரன் வாடிக்கையாளரை மட்டும் மரியாதையாக நடத்துவான, நேர்மையாக இருப்பானா?//
-அடடா… திமுக எதிர்ப்பு என்பது எந்த அளவுக்கு கண்ணை மறைக்கிறது என்பதற்கு இன்னுமோர் சான்று இந்த கருத்து.
அய்யா குமரன் அவர்களே, இங்கே வெளியாகியுள்ளது ஏர்டெல் குறித்த கட்டுரை. ஏர்செல் பற்றியதல்ல.
ஏர்செல் பற்றி எழுதும்போது இந்தக் கருத்து தேவைப்படும். இப்போதைக்கு வாபஸ் பெற்றுக் கொள்ளுங்கள்!
வெங்கடேஷ் தவறுக்கு வருந்துகிறேன்.
நன்றி
சக்திவேல், சத்தியமான உண்மையை சொல்லியிருக்கிறீர்கள்.. எதுக்கும் கொஞ்சம் பாதுகாப்பாக இருங்கள்.. உண்மையை சொன்ன காண்டுலெ ‘ஆட்டோ’ அனுப்பினாலும் அனுப்புவாங்க.
இன்னொன்னு தெரியுமா?. 2 ஜி விவகாரத்திற்கு பிள்ளையார் சுழியே ஏர்டெல் தான்.. அருண்ஷோரிக்கு முன்னர், பிரமோத் மகாஜன் அமைச்சராக இருந்த போது, ஏர்டெல் நிறுவனம் வெறும் ஐந்து தொலைதொடர்பு வட்டத்திலிருந்து 21 தொலை தொடர்பு வட்டமாக உருவெடுத்து பி.எஸ்.என்.எல் ஐ பின்னுக்கு தள்ளியது.
பி.ஜே.பியின் பிரமோத் மகாஜனுக்கு ஏர்டெல் ஆஃபீஸில், இன்னொரு கிளை அலுவலகம் செயல்பட்டது போல், வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் ஏர்டெல் அலுவலகத்தில் தான் இருப்பார்.
இப்போது நடைபெறும் 2 ஜி, வழக்குவிசாரணை ‘ஏர்டெல் எப்படி லைசென்ஸ் பெற்றார்கள்’ என்பது வரை நீட்டிக்கபடவேண்டும்..
இன்னைக்கு இந்த விஷயம் சந்திக்கு வந்ததே ராசா ஏர்டெல்லிடம் முரண்டு பிடித்ததனால் தான்.. ஆனால் ஏர்டெல் மட்டும் விசாரணை வளையத்திலிருந்து தப்பிவிட்டால் எப்படி?
அப்பட்டமான உண்மை .மக்களின் வெறுப்பை சம்பாதித்து பணம் சேர்ப்பவர்கள் ரொம்ப நாள் நிலைக்க முடியாது ! “airtel ” சீக்கிரமாக வீழும்
Especially they are cheating and making money on per day charges for jokes or astro.. whatever. customer wouldn’t have asked but still they will start deducting money.
Few people realize that money is getting deducted. Few people or in villages people don’t realize if money goes on daily basis for cricket, joke or astro.
This has to be taken seriously. They are looting money – though per day 1 rupee may look small for one customer, but if they charge 1 rupee for 2 lkh’s customer without subscribing then there is no doubt they will be the NO.1.
அவனுங்க திருந்த மாட்டானுங்க பாஸ். நாமதான் உடனே மாறிக்கணும்?பேசாம நம்ம பி.எஸ்.என். எல்.க்கு மாறுங்க! .
டைம் சரியில்லை அவர்களுக்கு
Emaarukiravarkal irukkum varai emaatrubavargal iruppaarkal
அருமையாக சொன்னீர்கள் திரு.சக்திவேல்…
.
செல்போன் சேவையில் மட்டும் இல்லை…அவர்களது இன்டர்நெட் (BroadBand ) சேவையிலும் இதையே கடைபிடிகிறார்கள்…
.
முன்பு புதிய connection வாங்கும் பொது தொலைபேசியும் மோடம் (MODEM ) -ம் கொடுத்தார்கள்…இப்பொழுது அதை தருவதில்லை..வேண்டும் என்றால் அதற்கும் சேர்த்து பணம் வசூல் செய்கிறார்கள்……
.
பொதுமக்கள் டிராயிடம் எப்படி புகார் அளிக்கவேண்டும் என்பதையும் தெரிவித்தல் மிகவும் வசதியக இருக்கும்…..நன்றி திரு.சக்திவேல்
…
கண்ணன்
நாம் ஏதேனும் சந்தேகம் கேட்டால் லைனில் இருக்கச் சொல்லிவிட்டு சில நொடிகள் கழித்து இணைப்பை தானாக துண்டித்து விடுவது அதிகமாக உள்ளது…. // Its true..
even i worked with airtel customer care for 6months, pressurised work, employees -ku rest ellam edhum kedayadhu paavam atleast 400-500 calls-ku kurippitta time-kulla answer pannanum, quality irukanum etc., neraya rules… na andha vela pidikama velaya vituten..
naan neraya pera paathu irukren answer panitu irukumbodhe cut pannidaradhu..
not only that, neraya poi sollanum andha job la..
அருமையான பதிவுகள் நண்பரே! எனது பக்கம் ஒரு முறை வந்து போங்கள்!
உண்மை உண்மை உண்மை சத்தியம் சத்தியம் அனைத்தும் சத்தியம்