BREAKING NEWS
Search

‘என் ரஜினி மாறவில்லை..!’- நெகிழ்ந்த மகேந்திரன்!

ரஜினியின் ‘ஹரா’வில் வித்யா பாலன்?

டக்கு, தெற்கு என்ற பேதமில்லாமல், எல்லா நாயகிகளுமே இவருடன் ஒரு முறை நடித்துவிட வேண்டும் என்று துடிப்பது, ரஜினியுடன் மட்டுமே!

அந்த வரிசையில் இப்போது சேர்ந்திருப்பவர் வித்யா பாலன்.

தமிழில் நடிக்க பல வாய்ப்புகள் வந்தாலும், இதுவரை அவர் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை. விக்ரம் உள்ளிட்ட நடிகர்களுடன் நடிக்க வந்த வாய்ப்புகளை மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் ரஜினியின் சுல்தான் தி வாரியர் படம், ஹரா என்ற பெயர் மாற்றத்தோடு, அவதார் ஸ்டைலில் தயாராகிறது. மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் உருவாகும் இந்தப் படத்தில் நிஜ ரஜினியுடன், அனிமேஷன் ரஜினியும் தோன்றுவது போல காட்சிகள் மாற்றப்பட்டுள்ளன. இதற்காக ரஜினி 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார்.

ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை இப்போது இயக்குபவர் கே எஸ் ரவிக்குமார்.

படத்தில் முதலில் நாயகியாக விஜயலட்சுமி நடித்திருந்தார். இப்போது, இன்னொரு நாயகியாக வித்யா பாலனும் நடிப்பார் என்று கூறப்பட்டது.

இதுகுறித்து வித்யா பாலன் கூறுகையில், ரஜினி படத்தில் நடிக்க எனக்கும் ஆசைதான். தமிழ் நான் நடிக்கும் முதல் படம் ரஜினியுடன் அமைந்தால், அதைவிட அதிர்ஷ்டம் எதுவுமில்லை. இதைக் கேள்விப்பட்டதிலிருந்து எனது பெற்றோரும், நான் ரஜினியுடன் நடிக்கும் நாளை ஆவலுடன் எதிர்ப்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் இன்னும் எனக்கு முறையான அழைப்பு வரவில்லை.மீடியா செய்திகள்தான்… அழைப்பு வந்தால் அடுத்த நிமிடம் சென்னையில் இருப்பேன்”, என்றார்.

ஜப்பானில் எந்திரன் எப்போ ரிலீஸ்?

ஜினி படங்கள் இந்தியா-அமெரிக்கா-பிரிட்டன் என ரிலீஸாகும் போது தவறாமல் எழும் கேள்வி, ‘ஜப்பான்ல எப்போ ரிலீஸ்?’.

உலகம் முழுவதும் வெற்றிக் கொடி நாட்டி, வசூலில் புதிய சரித்திரம் படைத்து வரும் எந்திரன், ரஜினிக்கு பல ஆயிரம் ரசிகர்கள் உள்ள ஜப்பானில் வெளியாகவில்லை. இது பலருக்கும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.

சில ரசிகர்கள் ஜப்பானிலிருந்து ராகவேந்திரா மண்டபத்துக்கும் சன் பிக்சர்ஸ் அலுவலகத்துக்கும் தொடர்பு கொண்டு, “ஏன் எந்திரனை ஜப்பானில் வெளியிடவில்லை” என்று விசாரித்துள்ளனர்.

இதுகுறித்து சன் பிக்சர்ஸ் சிஓஓ ஹன்ஸ்ராஜ் சக்ஸேனாவிடம் கேட்டபோது, “சில காரணங்களால் ஜப்பானில் அக்டோபர் முதல் தேதியன்று ரிலீஸ் பண்ண முடியவில்லை. ஜப்பானிய சப்டைட்டிலுடன் வெளியிடத் திட்டமிட்டிருந்தோம். அநேகமாக அடுத்த மாதம் ஜப்பானில் எந்திரன் வெளியாகிவிடும்…” என்றார்.

திறமையை அங்கீகரிப்பதில் ரஜினிக்கு நிகரில்லை! – வினு சக்கரவர்த்தி

மீபத்தில் ஜெயா டிவியில் ஒளிபரப்பான சிறப்புத் தேன் கிண்ணம் நிகழ்ச்சியில் வினுச் சக்கரவர்த்தி பங்கேற்று பிடித்த பாடல்களை ஒளிபரப்ப வைத்தார்.

எம்ஜிஆர், ரஜினி, கமல், சிவாஜி கணேசன் என தனக்குப் பிடித்த, தான் பழகிய கலைஞர்களின் பாடல்களை அவர் குறிப்பிட்ட விதம் மகா இதம்.

எம்ஜிஆரின் குடியிருந்த கோயில் பாடலுக்கு அவர் கொடுத்த முன்னுரை சிறப்பாக இருந்தது. அந்த பாங்க்ரா நடனத்தை எம்ஜிஆர் ஆடியிருக்கும் விதம் இப்போதும் பிரமிப்பை வரவழைக்கும். தான் பங்கேற்கும் ஒரு பாடல் காட்சியில் உடன் நடிக்கும் நடிகைக்கும் உரிய முக்கியத்துவத்தை அவர் வழங்கியிருப்பது பாடல் முழுக்க பளிச்சிட்டது.

ரஜினியுடனான அறிமுகம் குறித்து வினுச் சக்கரவர்த்தி குறிப்பிட்டது யதார்த்தமாக இருந்தது.

“ரஜினி அறிமுகமாகி, சூப்பர் ஸ்டாரான பிறகுதான் அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. படம் தம்பிக்கு எந்த ஊரு. முதல் நாள் படப்பிடிப்பில் அவருக்கு வணக்கம் வைத்தேன். அவரும் வணக்கம் செய்தார். ஆனால் ஜனகராஜுடன் பேசிக் கொண்டிருந்தார். பின்னர், நான் நடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டார். எனது காட்சிகள் முடிந்ததும், என்னை அழைத்து, ‘ஐயாம் ரஜினிகாந்த்’ அறிமுகம் செய்து கொண்டார்.

“என்னங்க இது… உலகத்துக்கே உங்களை தெரியும்… நீங்க போய் எங்கிட்ட அறிமுகப்படுத்திக்கனுமா?” என்றேன்.

அதற்கு அவர், ‘முதல்ல உங்களப் பத்தி தெரியாது. நீங்க நடிச்சிக்கிட்டிருக்கும்போதுதான் விசாரிச்சேன்… கிரேட்” என்றபடி தோளில் கைபோட்டுக் கொண்டு ரொம்ப நேரம் பேசிக் கொண்டே, ஹோட்டல் வரை நடந்தே வந்துவிட்டார். ஏதோ பல வருடம் பழகிய இருவர் பேசிக் கொண்டிருப்பதாய்த்தான் மற்றவர்கள் நினைத்திருப்பார்கள்.

அதே போல, ஒருவரிடம் உள்ள திறமை புரிந்து உடனே அதைப் பாராட்டி அங்கீகரிப்பதில் ரஜினிக்கு நிகர் அவர்தான்…,” என்று ராஜாதி ராஜாவில் ரஜினியுடன் ஏற்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

‘மாறாத என் ரஜினி..!… நெகிழ்ந்த மகேந்திரன்!

தை ஒரு பெரிய கட்டுரையாகவே தந்திருக்கலாம்… இருந்தாலும் ஒரு முன்னுரை மாதிரி எடுத்துக் கொள்ளுங்கள்.

சமீபத்தில் இயக்குநர்கள் சங்க விழாவில், தனது குரு கே பாலச்சந்தர், ‘உனக்குப் பிடிச்ச இயக்குநர்?’ என்று கேட்க, சற்றும் தயங்காமல், ‘மகேந்திரன்’ என்று ரஜினி சொன்னாரல்லவா…

சம்பந்தப்பட்ட இயக்குநர் மகேந்திரன் இதைக் கேட்டு நெகிழ்ந்துபோனார்.

ரஜினியை அறிமுகப்படுத்தியவர் கேபி என்றாலும், அவரை புதிய பரிமாணத்தில் காட்டியவர் இயக்குநர் மகேந்திரன். முள்ளும் மலரும், ஜானி படங்களில் ரஜினியின் நடிப்பு, இளம் கலைஞர்கள் அத்தனை பேருக்கும் பாடம்!

ரஜினியைப் பற்றிப் பேசும்போதெல்லாம், ‘என் ரஜினி’ என்று உரிமையுடன் குறிப்பிடுவார் மகேந்திரன்.

இந்த நேர்காணலைப் பார்த்த பின், மகேந்திரன் சொன்னது, “என் ரஜினி மாறவே இல்லை!”

-என்வழி
17 thoughts on “‘என் ரஜினி மாறவில்லை..!’- நெகிழ்ந்த மகேந்திரன்!

 1. prakash

  Nice post vino. I wish rajini+mahendran join hands together and create a movie like Mullum Malaran and Jhonny. I know the chance is less but as a fan I wish.

 2. Manoharan

  மகேந்திரனின் பேட்டி என்வழியில் வர வாய்ப்பு உள்ளதா ?
  ________
  Coming Soon!!
  -Vino

 3. Juu

  /** எங்கள் ரஜினியும்தான் **/
  Super தல!! அதேதான்..

 4. noushadh

  வினோ,
  என்னக்கும் ஜானி வெற்றிப்படம என்று கேட்கவேண்டும் என்று தோன்றியது? நல்ல படம் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த காலங்களில் வந்த பல நல்ல படங்களில் ரஜினி நடித்துள்ளார். ஆனால் வெற்றிபெற்றதா என்று தெரியவேண்டும். 6 லிருந்து 60 வரை போன்று பல படங்கள்.
  ____________________

  ஜானி ஒரு சூப்பர் ஹிட் படம். 100 நாட்களுக்கும் மேல் ஓடியது. கேஆர்ஜி தயாரித்த இந்தப் படத்தின் பட்ஜெட் ரூ 25 லட்சம். அந்த காலத்திலேயே ரூ2 கோடி வரை வசூலாகி்யுள்ளது இந்தப் படத்தில். ஆதாரம்: பிலிம்நியூஸ் ஆனந்தன்.

  ஆறிலிருந்து அறுபது வரை ஒரு ப்ளாக்பஸ்டர் படம். லேட் பிக்கப் எனப்பட்ட எங்கேயோ கேட்ட குரல் 100 நாள் படம். திருப்தியான வசூல், தேசிய விருது என பெருமைக்குரிய படம் அது. அவ்வளவு ஏன், மகேந்திரன் கதை திரைக்கதை வசனம் மட்டும் எழுதிய காளி படம் 50 நாட்களில் ரூ 1.6 கோடி வசூல் செய்துள்ளதாக பிலிம்நியூஸ் ஆனந்தன் தெரிவித்தார்.

  -வினோ

 5. noushadh

  விளக்கங்களுக்கு மிக்க நன்றி வினோ. நீங்கள் குறிப்பிட்ட அனைத்துப்படங்களும் மிக நல்ல படங்கள். (நான் காளி பார்த்த ஞாபகம் இல்லை.)

 6. noushadh

  எங்கேயோ கேட்ட குரலுக்கு தேசிய விருது என்பது எனக்கு புது தகவல். மிக நல்ல படம். இதனை அப்போதைய மக்கள் அங்கீகரித்து, விருது கொடுத்து இருக்கிறார்கள் என்பதைக்கேட்கும்போது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி வினோ.

 7. noushadh

  எங்கேயோ கேட்ட குரல் திரு. மகேந்திரன் டைரக்ட் செய்த படம் அல்ல என்று நினைக்கிறேன்.
  _______________

  ஆம். அது எஸ்பிஎம் இயக்கிய படம்.
  -வினோ

 8. KICHA

  Vino,
  76-90 varai vandha rajini padangal list irukuma? Ungaluku time irukumbodhu veliyidalame!
  _______________
  Sure
  -Vino

 9. r.v.saravanan

  தகவல்களுக்கு நன்றி வினோ

  மகேந்திரன் பேட்டி படிக்க காத்திருக்கிறோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *