BREAKING NEWS
Search

ப்ரியங்கா – நளினி சந்திப்புக்குப் பிறகே போர் உச்சமடைந்தது! – ஜெ

நளினியை ப்ரியங்கா சந்தித்த பின்னரே போர் உச்சமடைந்தது! – ஜெயலலிதா

சென்னை: இப்போது என் கவனமெல்லாம் தமிழகம் மற்றும் புதுவையின் 40 தொகுதிகளையும் வெல்வதே என அதிமுக பொதுச் செயலாளர் ஜெ ஜெயலலிதா கூறியுள்ளார். _jeyalalitha11

மேலும் இப்போது, 3-வது அணியில் இருக்கும் தான் வேறு எந்தக் கூட்டணி குறித்தும் யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறினார்.

வடசென்னை தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வியாசர்பாடியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார்.

இந்த கூட்டத்திற்கு பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

3-வது அணி

கேள்வி: ராகுல்காந்தி டெல்லியில் கூறும்போது காங்கிரஸ் கட்சியுடன் ஒத்த கருத்துள்ள கட்சி அ.தி.மு.க. என்று கூறியிருக்கிறாரே?

பதில்: அப்படி சொல்லவில்லை என்று அவர்களின் கட்சி தலைமை அறிவித்து இருக்கிறதே?

கேள்வி:தேர்தலுக்கு பிறகு கூட்டணி தொடர்பாக காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி தலைவர்களிடம் பேசுவீர்களா?

பதில்: நாங்கள் 3-வது அணியில் இருக்கிறோம். 3-வது அணியில் இருக்கும் போது வேறு ஒரு கூட்டணி பற்றி சிந்திக்கும் ஆள் நான் இல்லை. அப்படி பேச வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இப்போது என் கவனம் முழுவதும் தேர்தலில் 40-க்கு 40 இடங்கள் பெறுவதிலே தான் இருக்கிறது.

பங்களாதேஷ் உருவானது எப்படி?

கேள்வி:இன்னொரு நாட்டுக்கு ராணுவத்தை அனுப்பி அங்கே தனி நாடு உருவாக்க முடியாது என்று பிரதமர் கூறியிருக்கிறாரே?

பதில்:அப்படியானால் இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது கிழக்கு பாகிஸ்தானுக்கு ராணுவத்தை அனுப்பி எப்படி வங்காளதேசத்தை உருவாக்கி கொடுத்திருக்க முடியும். இதற்கு அவரை விளக்கம் கொடுக்க சொல்லுங்க.

கேள்வி-இலங்கைக்கு பயங்கர ஆயுதங்களை நாங்கள் வழங்கவில்லை என்றும் அவர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி தான் கொடுத்திருக்கிறோம் என்று பிரதமர் கூறியிருப்பதாக கூறப்படுகிறதே?

பதில்: ஆயுதங்கள் எங்கிருந்து இலங்கைக்கு சென்றாலும் ஆயுதம் ஆயுதம் தான். அது மக்களை கொல்ல கூடிய ஆயுதம். கொல்ல முடியாத ஆயுதம் என்று பிரிக்க முடியாது. இலங்கைக்கு ஆயுதங்களை அனுப்புவது தவறு.

நளினியை ப்ரியங்கா சந்தித்த பின்னரே போர் உச்சமடைந்தது!

கேள்வி: சிறைச்சாலையில் நளினியை பிரியங்கா தனியாக சந்தித்த பிறகு தான் இலங்கையில் போர் உச்சக்கட்டத்தை அடைந்ததாக கூறப்படுகிறதே?

பதில்: இதற்கு தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி தான் பதில் கூற வேண்டும். அவருக்கு தான் எல்லாம் தெரியும். இலங்கையில் என்ன நடந்தது? என்ன நடக்கிறது என்பதை அவர் தான் விளக்க வேண்டும், என்றார்.

பின்னர் நேற்று மாலை பல்லாவரத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகையில், “வேலூர் சிறைக்கு வந்து நளினியை பிரியங்கா காந்தி சந்தித்து விட்டுச் சென்ற பின்னர்தான் இலங்கையில் தமிழர்கள் மீதான போர் தீவிரமடைந்துள்ளது. எனவே சிறையில் பிரியங்காவுக்கும், நளினிக்கும் இடையே நடந்த சந்திப்பின்போது என்ன பேசப்பட்டது என்பதை பகிரங்கமாக வெளியிட வேண்டும்” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார் ஜெயலலிதா.

தொடர்ந்து பேசுகையில், “ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா காந்தி வேலூர் சிறைக்கு சென்று ராஜீவ் கொலையாளி நளினியை சந்தித்தன் மர்மம் என்ன?. இந்த சந்திப்பிற்கு யார் அனுமதி கொடுத்தது? இருவரும் என்ன பேசிக் கொண்டார்கள்?

பிரியங்கா-நளினி சந்திப்பிற்கு பிறகு தான் இலங்கை தமிழர்கள் மீதான அந்த நாட்டின் ராணுவ தாக்குதல் தீவிரம் அடைந்திருக்கிறது. எனவே, பிரியங்கா-நளினி சந்திப்பின் போது நடந்தவற்றை பகிரங்கப்படுத்த வேண்டும்” என்றார் ஜெயலலிதா.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *