‘இசையால் எனக்கு விலாசம் தந்தவர் இளையராஜாதான்!’
நன்றியறிதலில் வள்ளுவன் வாக்கை அப்படியே பின்பற்றுகிறார் முரளி.
“நன்றி உணர்வு இல்லேன்னா… நடிகன் என்பதை விடுங்க, நான் மனுசன்லயே சேர்த்தி இல்லை. நான் திரையுலகுக்கு வந்து 27 வருடங்கள் ஆகிவிட்டன. 98 படங்களில் நடித்து விட்டேன். சத்யஜோதி நிறுவனத்தின் தயாரிப்பில் ‘பகல் நிலவு’, ‘இதயம்’, ‘என்றும் அன்புடன்’ என 3 படங்களில் நடித்தேன். எங்க சாமி இளையராஜாதான் இசை. இவை மட்டுமல்ல… இன்னும் நான் நடித்த இங்கேயும் ஒரு கங்கை, பூவிலங்கு என எத்தனையோ படங்களில் அவர்தான் எனக்கு விலாசம் கொடுத்தார், தனது அற்புதமான இசை மூலம்.
என்னைப் பொறுத்தவரை இளையராஜாதான் எனக்கு கடவுள். என் படங்களில் பாடல்கள் நன்றாக இருக்கும் என நிறைய பேர் தியேட்டருக்கு வருவார்கள். என் படங்கள் ஓடியதற்கு இளையராஜாதான் காரணம்.
இப்போ என் மகன் அதர்வா (பாணா காத்தாடி) நடிக்க வந்திருக்கிறான். இந்தப் படத்தை சத்யஜோதி தியாகராஜனின் வாரிசுகள் தயாரிக்கிறார்கள். இசைஞானியின் மகன் யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
என் மகன், நடிப்பில் மக்கு என யாரும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக நானே அவனுக்கு பயிற்சி அளித்திருக்கிறேன். நடிகரின் மகன் சினிமாவில் ஜெயிப்பது சுலபம் இல்லை. அப்பாவையும், மகனையும் ஒப்பிட்டு பார்ப்பார்கள். தயாரிப்பாளரையும், நடிப்புக்கு உயிர் தரும் இசையமைப்பாளரையும் மதிக்கணும்னு என் மகனுக்கும் சொல்லிக் கொடுத்திருக்கேன்…” என்று அவர் பேசி முடித்தபோது கண்களில் கண்ணீர்!
-பாணா காத்தாடி இசை வெளியீட்டு விழாவில் நடந்த நிகழ்வு இது!
அவர்தான் எனக்கு விலாசம் கொடுத்தார், தனது அற்புதமான இசை மூலம்.
சரியாக சொன்னீர்கள் முரளி
“” என் மகன், நடிப்பில் மக்கு என யாரும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக நானே அவனுக்கு பயிற்சி அளித்திருக்கிறேன்.””
நீங்க ஏன் சார் இந்த வெட்டி வேலையெல்லாம் பார்த்துக்கிட்டு..
ராஜாவை மதிப்பதால்..உங்களுக்கு எங்க வாழ்த்துக்கள்..