BREAKING NEWS
Search

‘என்வழியில் எழுதினால் மட்டும் போதுமா?’ – கேள்வி பதில் -14

ஒரு வாசகர் கருத்தும் சில விளக்கங்களும்… – கேள்வி பதில் -14

ழம் தமிழ் எனும் பெயரில் கருத்தெழுதும் ஒரு நண்பர் தனது சமீபத்திய கருத்துரையில் இப்படிக் கூறியிருந்தார்:

//One small challenge to Vino (not sure whether you will publish this comment)

You are good on expose these news on seeman, suriya, vivek and asin.. it great… we understand your concerns and support for tamils and voice for them… It is all just in your site… why you can not go above that?

I found that you are one of the tamil cinema news reporter organization (some thing like) active member.. Why you could make move from tamil cinema media to show red card on their media to these people who gone SL and support Mahinda’s actions…If you can really do this small thing, then i really salute you…

And some more thing you could do on this.. such as you could get comments on south india tamil cinema union or who ever made statements earlier and now silent for these recent things which make every to go on track and keep up the words…

What i try to say is rather than just write in your site and expose to your readers and get just comments and fight with them.. you could show some thing above that… Looking forward to seeing your constructive actions which are really needed at this moment.. Pls//

திரு ஈழம் தமிழ்,

என்னைப் பற்றிய தனிப்பட்ட அல்லது துறை சார்ந்த விஷயங்களைக்கூட பொதுவாக பகிர்ந்து கொள்வதில்லை. பத்திரிகையாளனின் நதிமூலம், ரிஷி மூலம் வாசகர்களுக்குத் தேவையில்லாதது என்பதால்.

ஆனால் எல்லோருக்காகவும் சில விஷயங்களைச் சொல்ல வேண்டும் என்பதால் இதை இப்போது எழுதுகிறேன்.

மூன்று பத்திரிகையாளர் அமைப்புகளின் செயற்குழுக்களில் உறுப்பினராக இருந்து கொண்டு என்னால் முடிந்த பல விஷயங்களைச் செய்து வருகிறேன். அதில் முக்கியமானது, நான் பணியாற்றும் நிறுவன வெளியீடுகளில் ஈழப் போராட்டத்துக்கு எதிரான விஷயங்கள் இடம்பெறாமல் பார்த்துக் கொள்வது. அதில் முழுமையாக வெற்றி பெற்றுள்ளதாக நம்புகிறேன்.

பத்திரிகையாளர்கள் அனைவரையும் ஒருமித்து குரல் எழுப்ப வைப்பதில் பெரும் சவால் உள்ளது. காரணம் என்னைப் போன்றவர்கள் சுதந்திரமாக முடிவெடுக்க முடியும். பணியில் சேரும்போதே அதற்கான உறுதியைப் பெற்றுக் கொள்கிறோம். ‘நான் இப்படித்தான். என் எழுத்தும் இப்படித்தான் இருக்கும்’ என்பதைச் சொல்லிவிடுகிறோம். (அதாவது நியாயத்தை முன்னிறுத்தும் விஷயங்களுக்காக. ஆனால் எனக்கு ரஜினியைப் பிடிக்கும் என்பதால், நான் பணியாற்றும் நிறுவனத்துக்கான செய்திகளில், கட்டுரைகளில் அவரைத் திணித்ததில்லை. நடுநிலை, நியாயம் என்னவோ அதையே முன்னிறுத்துகிறேன்..)

ஆனால் எல்லா நிறுவனங்களும் இந்த நிபந்தனைகளை ஏற்பதில்லை. ஏன்.. இன்னும் ஆண்டான்-அடிமை முறையில் நடத்தப்படும் பெரும் பத்திரிகைகளும்கூட இங்கு உள்ளன. இந்தப் பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள், நிருபர்கள், புகைப்படக் கலைஞர்கள் யாரும் எந்த பத்திரிகை அமைப்புகளிலும் உறுப்பினராகக் கூட இல்லை. மீறிச் சேர்ந்தால் வேலை போய்விடும். பத்திரிகைக்கு சுதந்திரம் உண்டு… பத்திரிகையாளருக்கு கிடையாது!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தீபாவளி தினத்தன்று, ஒரு சினிமா நிருபரை, அவர் ஒரு பத்திரிகையாளர் அமைப்பில் உறுப்பினராக சேர்ந்தார் என்பதற்காகவே பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்து, அதை விளம்பரமாகவும் வெளியிட்டது ஒரு பிரபல மாலைப் பத்திரிகை. இதுதான் இங்குள்ள நிலைமை. இதில் இவர்களை ஒன்று திரட்டிப் போராடுவது எத்தனை பெரிய சவால்…?

முன்னணியில் உள்ள நாளிதழ்களில் தினமணி குழுமம் மட்டுமே, தனது பத்திரிகையாளர்களை அவர்களுக்குரிய அனைத்து அமைப்புகளிலும் சேர உற்சாகப்படுத்துகிறது. ஆங்கிலப் பத்திரிகைகளிலும் நிலைமை பரவாயில்லை. பெரும்பாலான வார, மாதப் பத்திரிகைகள் ஆட்சேபிப்பதில்லை. என்றாலும், இன்றுவரை பத்திரிகைகள் என்றாலே நாளிதழ்கள்தான் என்ற தோற்றத்தை மாற்ற முடியவில்லையே. இந்த அடிப்படை சிக்கல் பல ஆண்டுகளாக நீடிக்கிறது. அதனால்தான் ஈழப் பிரச்சினை போன்ற உணர்வுப் பூர்வமான விஷயங்களில் பத்திரிகையாளர் அமைப்புகளின் முயற்சிகள் ஒரு சிறு குழு முயற்சியாக மட்டுமே நிற்கிறது.

இதில் முன்னணி நாளிதழ்களின் நிருபர்கள் சிலரை ஹம்சா போன்ற இலங்கையின் தூதர்கள் விலைக்கு வாங்குவதும் தொடர்கிறது. விலைபோகும் இவர்களைத் திருத்த முடிவதில்லை. சுட்டிக் காட்டத்தான் முடிகிறது!

இவர்களிடம் போய், குறிப்பிட்ட நடிகரைப் பற்றி எழுத வேண்டாம் என்றால் கேட்பார்களா… ஒரு உதாரணம்: ஈனப்பிறவிகள் என்று எல்லோரைாயும் சேர்த்துத் திட்டிய சூர்யாவையும், பத்திரிகையாளர் குடும்பப் பெண்களுக்கு பிரா – ஜட்டி பரிந்துரைத்த விவேக்கையும், சின்ன பிரா சின்ன ஜட்டிக்கு பரிந்துரைத்த ‘வாழும் பெரியார்’ சத்யராஜையும் பற்றி, நல்லதோ கெட்டதோ எந்த செய்தியும் எழுதக் கூடாது என்று பத்திரிகையாளர் அமைப்புகள் வலியுறுத்தின. யார் கேட்டார்கள்…?

‘படிக்கிறவங்க கேப்பாங்களே… எழுதியே தீரணும்’  என்று முடிவெடுத்தவர்கள்தான், தங்களையும் பத்திரிகையாளர் என்றே கூறிக் கொள்ளும் பத்திரிகை முதலாளிகள். இவ்வளவு மோசமான, வக்கிர எண்ணம் கொண்ட திரைக் கலைஞர்கள் பற்றி மக்களுக்கு என்ன சொல்ல வேண்டியிருக்கிறது? என்று குறைந்தபட்சம் யோசிக்கக் கூடத் தயாராக இல்லை.  வெறும் வியாபாரிகள் பத்திரிகை நடத்துவதில் உள்ள ஆபத்து இது.

எனவே, இவர்களைப் போன்றவர்களை ஒருங்கிணைத்துக் கொண்டிருப்பதை விட, ஒரு கருத்தை உருவாக்கி, அதை எரியும் பிரச்சினையாக விஸ்வரூபமெடுக்க வைத்து, இதுவரை ஒதுங்கி நின்றவர்களையும் அதற்குள் இழுப்பதுதான் சரியான உத்தி என்பது என்னைப் போன்றவர்களின் நிலைப்பாடு.

ஐஃபா போராட்டமே செத்துப் போன ஒன்று என சூர்யா கூறியதைப் பற்றி சீமான் அவர்களிடம் நேற்று இரண்டு மணிநேரம் விவாதித்துள்ளோம். இப்போது சீமான் தனது நிலைப்பாட்டிலிருந்து மாறியுள்ளார். (அதை விரைவில் விவரமாகத் தருகிறேன்.)

தடையை மீறி அசின் இலங்கை போனால் என்ன செய்வீர்கள்? என்று நடிகர் சங்க செயலர் ராதாரவி, பெப்சி தலைவர் விசி குகநாதன் மற்றும் நாம் தமிழர் தலைவர் சீமானிடம் நேரடியாகக் கருத்துக்கள் பெற்று முதலில் வெளியிட்டது நான்தான் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. இன்னொன்று அதை என்வழியில் எழுதக்கூட நமக்கு நேரம் கிடைக்கவில்லை என்பதாலேயே இங்கே சொல்கிறோம். இதுபோன்ற விஷயங்களில் என்னை முன்னிறுத்துவதும் தவறு. பிரச்சினைதான் முக்கியம்.

இதையெல்லாம் விட ஒரு முக்கிய விஷயம்… ஐஃபா விழா… அதற்கான அழைப்பிதழை ரஜினி வாங்கவில்லை என்ற சிறு நெருப்பை முதலில் பற்ற வைத்தது நான் எழுதிய செய்திதான். அதன் பிறகுதான் இந்த விவகாரமே போராட்டக் களத்துக்கு முன்னெடுத்துச் செல்லப்பட்டது. அதை சீமான் உள்ளிட்டோர் அறிவார்கள்.

இந்தத் துறையில் ஜாம்பவான்கள் என்று பீற்றிக் கொள்பவர்கள், ஏசி அறையில் உட்கார்ந்துகொண்டு, லேப்டாப்பிலேயே ஈழப் பிரச்சினையை அலசுவார்கள்.. எங்காவது ஒஸ்தியான ஸ்பா சென்டரில், யாராவது ஒரு புள்ளியின் ஸ்பான்ஸர்ஷிப்பில் படுத்துக் கொண்டு, நெஞ்சில் ரத்தம் வடிவதாகக் கட்டுரை புனைவார்கள். இங்கிருக்கும் சில நடுநிலைப் பத்திரிகையாளர்களையும் இலங்கையின் ஆளும் வர்க்கத்துக்கு கூட்டிக் கொடுக்கும் பெரிய வேலையைப் பார்ப்பார்கள். ராஜபக்சேக்களுடன் கூடிக் குலவி பயணம் போகும் இவர்கள், மக்களை மக்களாகப் பார்த்தே பல காலமாகியிருக்கும். ஆனால் கொடுமை பாருங்கள்… இவர்களின் பத்திரிகைகளையே மக்கள் ஆர்வத்துடன் காசு கொடுத்து வாங்குகிறார்கள்.

என்னைப் போன்றவர்கள் அப்படி இல்லை. இவர்களோடு சமரசம் செய்து கொள்ளும் மனநிலையும் நமக்கில்லை!

என் எழுத்தை எனக்கான ஊடகத்தில்தான் தரமுடிகிறது… அதை முடிந்த வரை வெளியில் கொண்டு சொல்லுங்கள். அதன் தொடர்ச்சியாக ஒரு கருத்து உருவாக்கம் பெற வாய்ப்பிருக்கிறது!

உங்களுக்கு தேவையான பதில் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். நன்றி.

-ஆசிரியர்
26 thoughts on “‘என்வழியில் எழுதினால் மட்டும் போதுமா?’ – கேள்வி பதில் -14

 1. NTI

  வினோ,

  i really appriciate your explination, but I also aske lot of question still I never get answer!!

  Varummmm anna varathu…………….

  ___________

  நிச்சயம் வரும்! 🙂

 2. justin

  வினோ,
  our tamil nationall leader taught us to fight for everytiing.
  super star taught us hope and cofident.
  we follow not for anything just our satisfaction.

 3. parthiban

  அன்புள்ள வினோ,

  உங்கள் முயற்சிகளுக்கான எங்கள் ஆதரவு எப்போதும் இருக்கும்…உங்கள் மக்கள் பற்று, தமிழ் பற்று எனக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது…வாழ்த்துகிறேன்

  என்றும் அன்புடன்,
  நெ. பார்த்திபன்

 4. V.Suryakumar

  ‘நியாயம்’ அவர்களே, இதை தற்பெருமை என்று பார்க்காமல் தன்னிலை விளக்கம் என்று புரிந்து கொள்ளவேண்டும்.

 5. M.S.Vasan

  வினோ,
  உங்க‌ள், ‘நிலை’, “நில‌மை” இர‌ண்டையும்,
  ப‌த்திரிக்கை உரிமையாள‌ர்க‌ளின் ‘இர‌ட்டை’
  வேட‌த்தையும், விள‌க்கி விட்டீர்க‌ள்.
  ம்..என்னென்ன‌மோ நட‌க்குது,
  ம‌ர்ம‌மா இருக்குது!!!!

 6. Manoharan

  அசின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் ?

 7. NIYAYAM

  ஓ ! அப்படியா மன்னிக்கவும் எனக்கு உங்கள் தன்னிலை விளக்கம் தற்பெருமை போலதான் இருந்தது.
  இது வரை உங்கள் வாய் சவடாலை தவிர வேற என்ன செய்திருக்குறீர்கள்?
  இன்னும் இன்னும் எதிரிகளை கூட்டிக்கொண்டே போனதைத்தவிர
  எதற்கெடுத்தாலும் ஆர்ப்பாட்டம் உண்ணாவிரதம publicity தவிர வேறு எதைத்தான் கண்டீர்கள்.
  iifa விழாவுக்கு யாரும் போகாமல் தடுத்தீர்கள் அதிலே உங்களுக்கு வெற்றி என்று நினைக்குறீர்கள் அனால் அதை விட அனைவரும் அந்த விழாவுக்கு போய அதனூடாக அந்த கஷ்டப்படும் மக்களுக்கு எதாவது செய்திருக்கலாம்.
  இப்பொழுது அவர்களுடைய தேவையும் அதுவே.
  உரிமைதான் முக்கியம் உடைமைகள் அவசியமில்ல என்று சொல்வீர்களானால் எதுக்காக இலங்கை அரசாங்கத்திடம் அவர்கள் இன்னும் வசதி வாய்ப்புகள் செய்து தரவில்லை என்று குறை கூற வேண்டும்.
  அவ்வளவு பாசமும் உங்களுக்கு இருக்குதேன்றல் வீதியிலே ஆர்ப்பாட்டம் செய்து அங்குள்ளவர்களையும் கஷ்டப்படுத்துவதை விட ஒங்கள சொந்த காசை சேர்த்து அவர்களின் தற்காலிக மீள்சிக்கு உதவி செய்யலாமே
  அதுவெல்லாம் கஷ்டமானது யாருக்கேனும் என்னுடைய காசை கொடுப்பதா இலவசமாக அட்வைஸ் பன்ற வேலை என்றால் சொல்லுங்க வாறோம் வாய் கிழிய பேசுறோம்
  என்பதுதானே எங்கள் பாலிசி

 8. eelam tamil

  Thanks Vino.. Appreciate your reply with details. Hope now you can understand from your experience that leading or changing some thing immediately hard where we have 99% people opposite direction. I was really not supportive for your recent article on Seeman because, he also get the pressures and problems on his role which he playing.. it is not nice to blame with bad impression immediately.. What needed is try to correct the fault than make people to go away from track. Hope you will accept and i’m thanking you on your extra efforts to support eelam tamil cause and generally all tamils issues..
  In mean time, i watch films and tamil TV programs.. but, i really anger with people who follow blindly for any actors.. That is the reason some of the posting, i was against to you.. As tamils, we have many thing to consider and correct us.. and make our community to have good future.. otherwise we will lose our language and identity definitely.. this is common for all the tamils around the world.

 9. eelam tamil

  Hello Niyayam,
  What you have done first? So, you are telling that we should all actors to IIFA and do thing like what Vivek Obrei did? Can you say any small advantage with his visit? we have over list of negative for our tamils.. He made trip like politician there.. but no use for tamils.. he just want to use his name to cover sri lankan government bad name to clean this world.. you also want to do that..
  I know that some time, you may ask about some overseas tamils moving and talking with government these days.. Those are still not disclose and i still look them as it with agenda to help our people out of the struggle and who are still inside bars without any future.. so, difficult to say any thing on that.. but, I salute all tamil nadu our leaders and supporter who made the IIFA protest success..

 10. உண்மை சுடும்

  நியாயம் அவர்களே,

  //இது வரை உங்கள் வாய் சவடாலை தவிர வேற என்ன செய்திருக்குறீர்கள்?
  இன்னும் இன்னும் எதிரிகளை கூட்டிக்கொண்டே போனதைத்தவிர
  எதற்கெடுத்தாலும் ஆர்ப்பாட்டம் உண்ணாவிரதம publicity தவிர வேறு எதைத்தான் கண்டீர்கள்.//

  நீங்க “நல்ல பாத்துக்க… நான் ஜெயிலுக்கு போறேன், ஜெயிலுக்கு போறேன்” வகையறாவா.

  ஒரு விஷயத்தில், நான் இதை செய்ய போகிறேன், அதை செய்ய போகிறேன் என்று சொன்னதோடு விட்டுவிடுவதை விட, செய்ததை – செய்ய போகும் விஷயத்தை வெளியே சொல்லாமல் இருப்பது தான் சிறந்தது.

  ஒரு வாசகர் தன்னுடைய சந்தேகத்தை கேட்கிறார், நீங்கள் இதை ஏன் செய்யவில்லை என்கிறார், அதற்கு பதில் அளித்தால், உங்களுக்கு அடியில் ஏன் எரிகிறது.

  //iifa விழாவுக்கு யாரும் போகாமல் தடுத்தீர்கள் அதிலே உங்களுக்கு வெற்றி என்று நினைக்குறீர்கள் அனால் அதை விட அனைவரும் அந்த விழாவுக்கு போய அதனூடாக அந்த கஷ்டப்படும் மக்களுக்கு எதாவது செய்திருக்கலாம்.//

  சிந்தித்து தான் இந்த வாதத்தை முன் வைக்கிறார்களா? ஆட்டுக்கு தீனி போடுவது அதன் பசிக்காக இல்ல, வெட்ட தான். அதுபோல தான் iifa விழாவிற்கு போனால், அவன் தூதி பாட தான் விட்டு இருப்பானே தவிர போய் தமிழர்களுக்கு சேவை செய்யுங்கள் என்று இலங்கை அரசு கை கட்டி வேடிக்கை பார்க்காது.

  //அவ்வளவு பாசமும் உங்களுக்கு இருக்குதேன்றல் வீதியிலே ஆர்ப்பாட்டம் செய்து அங்குள்ளவர்களையும் கஷ்டப்படுத்துவதை விட ஒங்கள சொந்த காசை சேர்த்து அவர்களின் தற்காலிக மீள்சிக்கு உதவி செய்யலாமே//

  உலகமெங்கும் வாழும் தமிழர்கள் அனுப்பிய நிவாரண உதவிகளையே ராஜபக் ஷே அரசு திருப்பி அனுப்பியது மறந்துவிட்டீர்கள் போலும். அல்லல் படும் தமிழ் மக்களின் மறுவாழ்விற்காக உள்ளே செல்ல அனுமதி பெறவும், நிலைமையை சீரமைக்கவும் தான் இங்கே இவ்வளவு போரட்டங்கள். அதை கேலி செய்ய எப்படிய்யா உங்களுக்கு மனம் வருகிறது.

  //இலவசமாக அட்வைஸ் பன்ற வேலை என்றால் சொல்லுங்க வாறோம் வாய் கிழிய பேசுறோம்//

  அதை விட்டா வேற என்ன தெரியும்

 11. Dhamukanna

  நியாயம் இது அநியாயம். வினோ ஒரு பத்திரிகையாளர், மற்றும் ஈழ துயரத்தை எண்ணி மனம் புண்பட்ட கோடான கோடி தமிழர்களில் அவரும் ஒருவர். அவரால் செய்ய முடிந்ததை சிறப்பாக செய்து வருகிறார்.. உங்களால் என்ன செய்ய முடிந்தது நம் ஈழ மக்களுக்காக? நீங்கள் இங்கு சொன்னதை உங்கள் ஊரில் நீங்களே செயல் படுத்தி அதை இங்கே சொல்லவும்…. இது எங்கள் உணர்வுகளை சொல்ல உண்டான தளம்…

  ———-

  Thalaivar’s dialog for you Niyayam:

  “Dont advice or suggest others to do something which you hesitate or never want to do…”

  —–

  Vino, Thanks for creating this website… You are simply great… Continue your work to tamil people… Thanks again…

 12. Chozhan

  உங்கள் முயற்சிகளுக்கான எங்கள் ஆதரவு எப்போதும் இருக்கும்…உங்கள் மக்கள் பற்று, தமிழ் பற்று எனக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது…வாழ்த்துகிறேன்

 13. Chozhan

  NIYAYAM சொல்வது நியாயம் இல்லை. முதலில் ” நியாயம் ” என்ன சொல்ல வருகிறீர்கள். ஈழ போரட்டத்தை பற்றிய உங்கள் நிலை என்ன. ?

 14. Manoharan

  @ நியாயம் (எ) அநியாயம். அடுத்தவரை தப்பு சொல்ல ஒரு விரலை நீட்டினால், இன்னொரு விரல் உங்களை நோக்கி நீள்கிறது என்பதை உணர்ந்து பேசவும். ஈழ விஷயத்தில் நீங்கள் சொல்லும் எந்த விஷயமும் வெறும் விதண்டாவாதமாகத்தான் தெரிகிறது.

 15. NIYAYAM

  மனோகரன்

  அதேதான் நானும் சொல்கிறேன் நீங்கள் மற்றவர்களை குறை கூற ஒரு விரலை நீட்டும் போது மட்டும் மற்ற விரல்கள் என்ன வானதய்யா பார்த்து கொண்டிருக்கும்

  அதெப்படி உங்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா?

  உங்க பிரச்சினையே அதுதானே நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதைத்தான் மற்றவர்கள் கேற்க வேண்டும் என்ற அகம்பாவம்

 16. NIYAYAM

  Dhamukanna
  i also agree with u this is simply gereat web site bcoz me too reading this one

  but i cant agree with all articles

  i think i have a brain if u feel u have…….

  shombu thookkura vela inga vanam
  Thalaivar’s dialog
  Dont advice or suggest others to do something
  ithaye moham pakkura kannadiya parthu solli parunga

  eppavum aduththavnda muthukula irukkura alukkuthan kannukku theriyum athavida kooduthala avangavangada muthuhula irukku engurathayum maththavangalukkuthan athu velangum entrathayum ngafaham vechchikollunga

 17. NIYAYAM

  சோழன்
  eelam patriya ennudayya nilaippadu

  athu aarambikkappatta nokkaththilirunthu eppotho thisai mari vittathu

  ippothellam publicity kkahavum arasiyal seivathatkum better way in tamilnadu
  eelam patri athukkatharavaha pesuvathuthan

  overnightla pirapalam aahividalam eppadiyum madayar koottam (nan ,neengal ellorume)
  tamil, tamilan intha 2 varthayilum mayangi vidukirom
  athaye arivalikal payanpaduththikolhirarkal

  ennai poroththavarai ippothu vai kiliya pesum yarukkum ina unarvu iruppathaha theriyavillai anaivarum ethavathu oru suya lafaththukkaha intha vesam pottirukkurarkal entre thonuthu (orusila vizhi vilakkuhalum ondu)

  matrapadi ahathikal vazhkai mempadavendum enpathil entha karuththu verupadum illai
  avarkal verum arasiyal pahadaikkaihalakkap padak kodathu enbathuthan ennudayya nilaippadu

 18. NIYAYAM

  eelam tamil
  nanum athaithan solkiren avarkal neengal poha vendam entru solliyum ponavarkal athu engalukku avasiyamilla

  neengal poha vendam entra udan UNGALAL AVARKALUDAYYA BUSSNESS PATHIKKAP PADUM ENTRU PAYANTHU pohathavarkalai neengal ange sentru intha makkalukku kattayam ungalalana uthavikalai seithu vittuththan vara vendum entru KATTALAI pirappiththirunthal sariyaha vanthirukkum

  athayum meeri ange yarum pohamal purakkaniththal avankaudayya padangalai inth area vulaye ooda vida mattom entru oru aarppattamum unnavirathamum irunthu 2 bus kalayum koloththi irunthal eppadiyum PAYANTHE sorry INA UNARVUDAN poi uthavi seithirupparkal

 19. குமரன்

  பேனா பிடிப்பவன் பேனாதான் பிடிக்கமுடியும். வாளேந்த முடியாது. மாறிவிட்ட உலகச் சூழல்களில் வாளை விட பேனா சாதித்தது மிக அதிகம். உண்மை சுடும்தான்.

  மேலும் “இதனை இதனால் இவன் முடிப்பான் என்றாய்ந்து” என்று வள்ளுவர் சொன்னதிலிருந்து தெரிவது – சில வேலைகளைச் சிலர் தான் செய்யமுடியும், அந்தச் சிலரால் பிற வேலைகளைச செய்யமுடியாது. அதனால் அவர்கள் செய்யும் வேலைகளின் மதிப்புக் குறைந்து விடுவதில்லை.

  வினோ பத்திரிகையாளர் அல்லது எழுத்தாளர் என்றால் அவர் தனது திறமையை நல்ல விஷயத்துக்குப் பயன்படுத்துகிறாரா என்றுதான் பார்க்கவேண்டும். இக்கேள்விக்கு அனைவரின் பதிலும் “ஆமாம்” என்பதாகத்தான் இருக்கும். அது போதும். அவர் தனது மனசாட்சிக்கு விரோதமில்லாமல் செய்கிறாரா என்ற கேள்விக்கும் இதுவே பதிலாக இருக்கமுடியும். அது போதும்.

  வினோ, எதற்கும் கவலைப்படாமல் உங்கள் வேலைகளைப்பாருங்கள். போற்றுவோர் போற்றட்டும். தூற்றுவோர் தூற்றட்டும். அனைத்தும் போகட்டும் கண்ணனுக்கே.

 20. srikanth1974

  அன்புள்ள ஆசிரியர் திரு.வினோ அவர்களுக்கு நானும் எனது
  ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  அன்புடன்
  ஸ்ரீகாந்த்.ப

 21. gandhidurai

  vino….vaazhthukal. ithuvum kadanthu poahum…………naama seyyum paniyai naama senjuttu poavom.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *