Breaking News

என்றும் மனதில் நிறைந்த தேவ் ஆனந்த் – ரஜினி

Monday, December 5, 2011 at 1:32 pm | 876 views

என்றும் மனதில் நிறைந்த தேவ் ஆனந்த் – ரஜினி


டைசி வரை கதாநாயகனாகவே திகழ்ந்த ‘பாலிவுட்டின் எவர்கிரீன் ஹீரோ’ தேவ் ஆனந்த் (88) கடந்த சனிக்கிழமை இரவு மரணமடைந்தார். அவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பல வெள்ளிவிழாப் படங்களின் நாயகன் தேவ் ஆனந்த். 1940களில் தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கிய அவர் 65 ஆண்டுகளில் 114 படங்களில் நடித்தார். இதில் 110 படங்களில் அவர் ஹீரோ வேடமேற்றார். 60களில் ரொமான்டிக் ஹீரோவாக கொடிகட்டிப் பறந்த தேவ் ஆனந்த், 70களில் இயக்குநராகவும் வெற்றி பெற்றார். அவரது ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இன்றும் இந்தியாவின் குறிப்பிடத்தக்க படங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

எமர்ஜென்சி காலத்தில் அன்றைய பிரதமர் இந்திராவை எதிர்த்து நேஷனல் பார்ட்டி ஆப் இந்தியா என்ற கட்சியையே இவர் தொடங்கினார்.

இசைமேதைகள் எஸ்டி பர்மன், ஆர்டி பர்மன் மற்றும் கிஷோர் குமாரின் மிக நெருங்கிய நண்பராகத் திகழ்ந்தார்.

இந்தியாவின் கிரிகோரி பெக் என்று புகழப்பட்ட தேவ் ஆனந்த், சூப்பர் ஸ்டார் ரஜினியின் நலம் விரும்பியாகத் திகழ்ந்தார்.


இரு ஆண்டுகளுக்கு முன் லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஷ்ரம் பள்ளியின் ஆண்டு விழாவில், தேவ் ஆனந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கினார் ரஜினி. அந்த விழாவில் “ரஜினி உயர்ந்த குணங்களுடன் உயர்ந்த இடத்தில் இருக்கும் அற்புத கலைஞர். அவருடனான நட்பு எனக்குப் பெருமை அளிக்கிறது. மிக நல்ல முன்மாதிரியாகத் திகழும் மனிதர் அவர்,” என்றார்.

அதன் பின்னர், எந்திரன் மும்பையில் திரையிடப்பட்ட போது, கொட்டும் மழையிலும் தன் வயதைப் பார்க்காமல் வந்து படம் பார்த்து ரஜினியை கட்டிப் பிடித்து வாழ்த்தினார். ரஜினிக்கு உடல்நலம் சரியில்லாத போது அவருக்காக பிரார்த்தனையும் செய்தார்.

தேவ் ஆனந்த் மறைவையொட்டி ரஜினி விடுத்த இரங்கல் செய்தியில், “நடிகர் தேவ் ஆனந்த் மிகவும் சுறுசுறுப்பானவர். திறமையான நடிகர். அவரை 2 வருடத்துக்கு முன்பு சந்தித்தேன். அப்போது கட்டிப் பிடித்தது, நலம் விசாரித்ததெல்லாம் மனதில் நிழலாடிக் கொண்டிருக்கிறது. அந்த நிமிடங்களை மறக்க முடியாது.

தேவ்ஆனந்த் எப்போதும் என் மனதிலும் என் குடும்பத்தினர் மனதிலும் இருக்கிறார்,” என்று  கூறியுள்ளார்.

சாதனையாளர் தேவ் ஆனந்த்துக்கு ‘என்வழி’யின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

-என்வழி

Related Posts with Thumbnails
© The content is copyrighted to Envazhi and may not be reproduced on other websites.

Comments

One Response to “என்றும் மனதில் நிறைந்த தேவ் ஆனந்த் – ரஜினி”
  1. jayaramputtur says:

    Rajinikanth in ஜப்பான்
    http://www.youtube.com/watch?v=mUATbzTqYb8
    Every Rajinikanth fanz must watch this….Plz Plz Now i am become proud to be ரஜினிகாந்த் fan….
    (This is Speech about how the Rajinikanth become Famous in Japan…

Speak Your Mind

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)