Breaking News

என்ன செய்ய வேண்டும் நித்யானந்தனை?

Thursday, April 29, 2010 at 2:54 am | 1,805 views

மூன்றாம்தர அரசியல்வாதிகளையும் மிஞ்சும் நித்யானந்தன்!

ன்மீகப் போர்வையில் ஒளிந்திருந்த நித்யானந்தன் என்ற நபர் எத்தகைய கேவலமான, மோசடிப் பேர்வழி என்ற உண்மை சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இந்நேரம் தெள்ளத் தெளிவாகப் புரிந்திருக்கும்.

ஏதோ சில நடிகைகளுடன் மட்டுமே செக்ஸ் உறவு என்றில்லாமல், ஆசிரமத்துக்கு தன்னை நம்பி வந்த இளம் பெண்கள் அத்தனை பேருடனும் செக்ஸ் ஒப்பந்தம் போட்டு, அவர்களில் சிலரைச் சிதைத்துமிருக்கிறார் இந்த கள்ள ஆசாமி. பலர் பாதிக்கப்பட்டிருந்தாலும், இந்த விவகாரத்தில் புகார் தர யாரும் முன்வராமலிருக்கிறார்கள். நிலைமை அப்படி.

உண்மை, ஆன்மா, யோகா என்றெல்லாம் கலர் கலராக ரீல் விட்டு வந்த இந்த கபட வேடதாரி, இன்றைக்கு உண்மை என்றால் வீசை என்ன விலை என்று கேட்கிறார், கர்நாடக சிஐடி போலீஸ் விசாரணையில்.

இதுவரை இரண்டு முறை போலீஸ் காவல் நீட்டிப்பு பெற்றும் வேண்டுமென்றே காலம் கடத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார் இந்த காவி கிரிமினல்.

ஒரு நாள் முன்னுக்குப் பின் முரணாக உளறுவது போல நடிக்கிறார். இன்னொரு நாள் நெஞ்சுவலி என்று துடிக்கிறார். மருத்துவமனையில் சேர்த்து சோதித்துப் பார்த்த மருத்துவர்கள், இது டுபாக்கூர் என கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ள, காவாலித்தனமாய் பல்லைக் காட்டிக் கொண்டு மீண்டும் மவுனவிரதம், தியானம் என்று பசப்புகிறார்.

ஒரு சாதாரண விசாரணைக் கைதியை இப்படியா நடத்துகிறார்கள் போலீசார்? நித்யானந்தனுக்கு மட்டும் என்ன தனி கவனிப்பு? அப்படியெனில் இனி எல்லா கைதிகளிடமும் இதே நிதானத்துடன் விசாரணை மேற்கொள்வார்களா?

போலீசுக்கென்று அனுமதிக்கப்பட்ட விசாரணை முறைகளை இந்த நித்யானந்தனிடமும் பயன்படுத்தி உண்மைகளை வரவழைக்க வேண்டும். மாட்டிக் கொண்ட ரஞ்சிதா, மாட்டுவதற்கு முன்பே உஷாராகி போலீஸ் பாதுகாப்பு கேட்ட யுவராணிகள், மாட்டவிருக்கும் இன்னும் சில கற்புக்கரசிகளையெல்லாம் விசாரித்து, பக்தி வியாபாரத்தின் கோரத்தை மக்கள் புரிந்து கொள்ளச் செய்வதே இந்த நேரத்தில் முக்கியமானது.

ஒரு மூன்றாம் தர அரசியல்வாதியை விட மகா அயோக்கிய சிகாமணியான இந்த ஆசாமிக்கு இனியும் சிறு சலுகையோ பாரபட்சமோ தரப்படக் கூடாது!

என்ன செய்ய வேண்டும்?

இந்த விசாரணையின் முடிவு என்னவாக இருந்தாலும், அதற்கு முன்பு எடுக்க வேண்டிய சில நடவடிக்கைகளே இன்றைக்கு மிக முக்கியமானதாகும்.

நித்யானந்தன் ஆசிரமங்கள் வசம் உள்ள சொத்துக்கள் யாவும் அந்த நபர் சுயமாக, வியர்வை சிந்தி சம்பாதித்தவை அல்ல. மக்களை ஏமாற்றி நன்கொடைகளாகப் பிடுங்கியவையோ. புத்தகம் எழுதினேன், மேடையில் பேசினேன், காம ஆராய்ச்சி செய்தேன்… அதற்காகத்தான் எனக்கு இவ்வளவு பணம் குவிந்தது என்று இந்த நபர் சொல்கிறார் என்று சொல்லக் கூடும். ஆனால் அதுகூட நித்யானந்தன் என்ற பெயருக்காக வந்ததல்ல. இந்து மத நம்பிக்கை என்ற மூலதனத்தை வைத்து சம்பாதித்ததே.

நித்யானந்தனுக்கு பாத பூஜை !

பாதபூஜை என்ற பெயரில் மட்டும் பல கோடிகளை இந்த ஆசாமி சம்பாதித்திருப்பதாக பிடதி ஆசிர ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட சில தினங்களில் மட்டும் ரூ 5 கோடி பாதபூஜை காணிக்கையாகவே வந்துள்ளது!

எனவே நித்யானந்தனின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து, அவை சரியான முறையில் மக்களைச் சென்று சேர ஆவண செய்ய வேண்டும்.

இத்தனை காலமும் வரிவிலக்கு தரப்பட்ட ஆசிரம வருவாயைக் கணக்கெடுத்து, மீண்டும் வரி விதித்து வசூல் செய்ய வேண்டும்.

நியாயமான முறையில் வழக்கை நடத்தி இந்த மோசடிப் பேர்வழிக்கு தண்டனை வாங்கித் தரப்பட வேண்டும்.

இவையெல்லாம் நடந்தால் மட்டுமே, நித்யானந்தனை கைது செய்ததற்கும் விசாரணை மேற்கொள்வதற்கும் அர்த்தமிருக்கும். இல்லாவிட்டால் நித்யானந்தன் என்ற கபட வேடதாரியின் நாடகத்துக்கும் போலீஸின் விசாரணை நாடகத்துக்கும் வித்தியாசமில்லாமல் போய்விடும்!

இன்னொரு முக்கியமான சமாச்சாரம்… தயவு செய்து எந்த மனித சாமியையும் நம்பி கும்பிட்டு கோவணமிழந்து நிற்க வேண்டாம். கடவுள் எந்தக் யுகத்திலும் காலத்திலும் தனக்கு புரோக்கர் வைத்துக் கொண்டதில்லை!

-விதுரன்

என்வழி

Related Posts with Thumbnails
© The content is copyrighted to Envazhi and may not be reproduced on other websites.

Comments

11 Responses to “என்ன செய்ய வேண்டும் நித்யானந்தனை?”
 1. rajan says:

  தயவு செய்து எந்த மனித சாமியையும் நம்பி கும்பிட்டு கோவணமிழந்து நிற்க வேண்டாம். கடவுள் எந்தக் யுகத்திலும் காலத்திலும் தனக்கு புரோக்கர் வைத்துக் கொண்டதில்லை!
  EXCELLENT ! EXCELLENT ! EXCELLENT!

 2. வீரகுமார் says:

  இவனையெல்லாம் திட்டுவதே கூட நமக்கு கேவலம் சார். ஈனப்பயல். என்னமா நடிக்கிறான். போட்டுத் தள்ளனும் நாய.

 3. K S Sivakumaar says:

  நடு ரோட்டில் வைத்து சுட்டு தள்ள வேண்டும்.

  பெண்கள் முதலில் குடும்பத்து சொந்தங்களை நம்ப வேண்டும். குடும்ப அங்கத்தினர்களுகு மரியாதை கொடுக்க வேண்டும். இவன் மட்டும் அல்ல எந்த மூன்றாம் நபரும் நம் சொந்த வாழ்கையில் தலையிட விட கூடாது. சம்பந்தபட்ட பெண்களுக்கும் தண்டனை தர வேண்டும்.

  சிவகுமார்

 4. Vishnu says:

  எதுவும் நடக்காது. நமது சினிமா கற்புக்கரசிகள் ஒருமுறை போயி பெரியவருடன் படுத்து ஒஹ் மன்னிக்கவும்… காலில் விழுந்து இந்த கேஸ் ஐ ஒன்னும் இல்லாமல் பண்ண சொல்லிடுவாங்க..

 5. நண்பன் says:

  மக்களின் துயரங்களை காசாக்குகிறார்கள் இந்தக் கயவர்கள். மதத் தலைவர்கள் தங்களின் பதவியைக் காப்பாற்றுவதிலேயே கவனமாக இருக்கிறார்கள். எனவேதான் இது போன்ற அயோக்கியர்கள் ஆன்மீகம் என்ற போர்வையில் மக்களை மயக்கி வருகிறார்கள். கோவிலுக்குச் செல்வதைவிட ஆசிரமங்களுக்குச் செல்வது நாகரிகமாக கருதப் படுகிறது. கோவிலில் (பெரும்பாலும்) இரவில் தங்குவதில்லை. ஆனால் ஆசிரமங்களில் ஆண்களும் பெண்களும் பல நாட்கள் தங்கி இருக்கிறார்கள். அங்குள்ளவர்கள் அவர்களின் பாவத்தைப் போக்குவதாகச் சொல்லி, பலிகடாவாக்கி விடுகிறார்கள்.
  மக்களே சிந்தித்துப் பாருங்கள். நமது அறநூல்கள் கூறுவதைக் கேளுங்கள்.
  “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்”.
  “ஆலயம் தொழுவது சாலவும் நன்று”.
  “தாயிற் சிறந்த கோயிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை”.
  “மனிதனை (சாமியார்களை) மற, கடவுளை நினை”.

 6. r.v.saravanan says:

  நித்யானந்தனின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து, அவை சரியான முறையில் மக்களைச் சென்று சேர ஆவண செய்ய வேண்டும்.

  நியாயமான முறையில் வழக்கை நடத்தி தண்டனை வாங்கித் தரப்பட வேண்டும்.

  எந்த மனித சாமியையும் நம்பி கும்பிட்டு கோவணமிழந்து நிற்க வேண்டாம். கடவுள் எந்தக் யுகத்திலும் காலத்திலும் தனக்கு புரோக்கர் வைத்துக் கொண்டதில்லை!

  சரியான வார்த்தை

 7. குமரன் says:

  நித்யானந்தா தப்பிக்க விதவிதமாக யோசித்து காரணம் கற்பிக்கிறார்.

  இவருக்குத் தண்டனையாக 200 காத்து கேளாத குழந்தைகளைக் கெடுத்த பாதிரியார் லாரென்ஸ் மர்பியிடம் அனுப்பி வைக்கலாம். இருவருக்கும் சரியான ஜோடிப்பொருத்தம்.

 8. தேன் மொழி says:

  போடா நாய நித்தியானந்தா என்னையும் நித்தியானந்தா கேடுதுடன் என் பெயர் தேன் மொழி நீங்களும் கள்ள தொடர்புக்கு வரலாம் மேலே உள்ள இ மில்லை anuppum

 9. Ganesh says:

  அவனுடைய படுக்கை அறை நமக்கு சம்மதம் இல்லாத செய்தி. இவன் யாரைம் ஏமாத வில்லை பொது மக்கள் தான் ஏமாந்து உள்ளனர் . ஒரு பொருள் வாங்கும் நீங்கள் அதை ஆயரம் முறை சோதிக்கும் போது, ஒரு மனிதனை ஏன் ஆரய கூடாது ……. இது உங்கள் முட்டாள் செயல் …

  இது நிதி நிறுவனத்துக்கும் பொருந்தும் …… கொஞ்சம் yosikanu

 10. KarthiKeyaN says:

  கடவுள் என்பது நம்பிக்கை. வாழும் சடங்களை கடவுளாக எண்ணுவதை நிறுத்துங்கள்.

 11. reja says:

  நண்பன் கருத்து நச்சுனு இருக்கு

Speak Your Mind

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)