BREAKING NEWS
Search

என்னிடம் இரவில் மட்டும் விசாரணை நடத்துங்கள்… பகலில் தொந்தரவுகள் இருக்கும்! – நடிகை ரஞ்சிதா

என்னிடம் இரவில் மட்டும் விசாரணை நடத்துங்கள்… பகலில் தொந்தரவுகள் இருக்கும்! – நடிகை ரஞ்சிதா

பெங்களூர்: நான் கண்டிப்பாக விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன். ஆனால் என்னிடம் இரவில் மட்டும் விசாரணை நடத்துங்கள், பகலில் வேண்டாம். தொந்தரவுகள் இருக்கும் என போலீசாரைக் கேட்டுக் கொண்டுள்ளார் நடிகை ரஞ்சிதா.

ரஞ்சிதாவும் நித்யானந்தனும் பெங்களூர் ஆசிரமத்தில் நடத்திய காம லீலைகள் அம்பலமானதைத் தொடர்ந்து, இருவரும் தலைமறைவானார்கள்.

45 நாட்கள் வரை நித்யானந்தன் கும்பமேளா, இமாசலப் பிரதேசத்தின் உள்ளார்ந்த பகுதிகளில் பதுங்கியிருக்க, அமெரிக்கா, ஆந்திரா, கேரளா என பறந்து பறந்து பதுங்கினார் ரஞ்சிதா.

இந்த காலகட்டத்தில் எப்போதும் நித்யானந்தன் தொடர்பிலேயே இருந்துள்ளார் அவர். இருவரும் 174 முறை செல்போனில் பேசிக் கொண்டிருந்தது தெரியவந்துள்ளது.

இப்போது இருவரின் ஓட்டம் முடிவுக்கு வந்துள்ளது. நித்யானந்தன் போலீஸ் காவலில் உண்மைகளைச் சொல்லாமல் முரண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார். ரஞ்சிதா இருக்குமிடத்தையும் அவரது நம்பரையும் கூட போலீசார் கண்டுபிடித்துவிட்டனர். அவரைத் தொடர்பு கொண்டு விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர்.

“நித்யானந்தாவுடன் உள்ள தொடர்பு குறித்து உங்களிடம் விசாரிக்க வேண்டியுள்ளது. நீங்கள் உடனடியாக வந்து வாக்குமூலம் அளிக்க வேண்டும். நீங்களாக வருகிறீர்களா, அல்லது நாங்களே அங்கு வர வேண்டுமா?” என்று இன்ஸ்பெக்டர் யோகப்பா கேட்டார்.

அதற்கு பதிலளித்த ரஞ்சிதா, “நான் தற்போது கேரள மாநிலத்தில் இருக்கிறேன். நீங்கள் இங்கு வர வேண்டாம். நானே இன்னும் 2 நாட்களில் உங்களை நேரில் வந்து சந்தித்து வாக்குமூலம் அளிக்கிறேன்.

தயவு செய்து பகல் நேரத்தில் விசாரணை நடத்த வேண்டாம். பகலில் தொந்தரவுகள் இருக்கும். எனவே, இரவில் மட்டும் 2 நாட்களுக்கு விசாரணை நடத்திக் கொள்ளுங்கள். நீங்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவும் தயாராக இருக்கிறேன்.

ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்துங்கள். நீங்கள் தெரிவிக்கும் இடத்துக்கு நானே வந்து வாக்குமூலம் அளிப்பேன்…” என்று கூறியுள்ளார்.

ரஞ்சிதாவின் ‘கண்டிஷனுக்கு’ போஸீசாரும் ஒப்புக் கொண்டுள்ளனர்!




One thought on “என்னிடம் இரவில் மட்டும் விசாரணை நடத்துங்கள்… பகலில் தொந்தரவுகள் இருக்கும்! – நடிகை ரஞ்சிதா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *