BREAKING NEWS
Search

என்னால் லாபமடைந்தோர் பலர்; நஷ்டம் வெகு சிலருக்குத்தான்! – ரஜினி பேச்சு

என்னால் நிறைய பேர் லாபமடைந்துள்ளனர்… சிலருக்குதான் நஷ்டம்! – ரஜினி

சென்னை: என்னால் லாபமடைந்தவர்கள் நிறைய பேர். நஷ்டமடைந்தவர்கள் வெகு சிலர்தான். அதில் ஆர்எம் வீரப்பனும் ஒருவர், என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

ரஜினி நடித்து 1995-ல் ரிலீசான பாட்ஷா படம் தமிழக அரசியலில் பெரும் திருப்பங்கள் ஏற்பட காரணமாக அமைந்தது. அப்போது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசில் அமைச்சராக இருந்த ஆர்.எம். வீரப்பன் இப்படத்தை தயாரித்தார். இந்தப் படம் பெரும் வெற்றி பெற்று வெள்ளி விழாவைத் தாண்டி ஓடியது. பாக்ஸ் ஆபீஸ் வசூலில் இன்றுவரை அசைக்க முடியாத சாதனைகளைச் செய்துள்ள படம் பாட்ஷா.

பாட்ஷா வெற்றி விழாவில் ரஜினி பங்கேற்று பேசினார். அது தமிழக அரசியல் சரித்திரத்தையே புரட்டிப் போட்டது. தமிழகத்தில் நடந்த வெடி குண்டு சம்பவங்களை கண்டித்து பேசி அதிமுக அரசை மறைமுகமாக விமர்சித்தார். இதையடுத்து ஆர்.எம். வீரப்பன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

அதன் பிறகு நடந்ததெல்லாம் தமிழக அரசியல் சரித்திரத்தில் மறக்க முடியாத நிகழ்வுகள்.

ஆர்.எம். வீரப்பன் மகன் தங்கராஜ் திருமணம் இன்று வியாழக்கிழமை சென்னை ராஜா முத்தையா மகாலில் நடந்தது. முதல்வர் கருணாநிதி கலந்து கொண்ட இந்த விழாவில் ரஜினியும் பங்கேற்றுப் பேசினார்.

தனது பேச்சின்போது பாட்ஷா பட பிரச்சினைகள் பற்றிக் குறிப்பிட்டார்.

அவர் பேசியதாவது:

சற்று இடைவெளிக்குப் பிறகு இன்று கலைஞரை ஒரே மேடையில் சந்திக்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஆர்.எம். வீரப்பன் எனது நீண்ட கால நண்பர். அவருக்கும் எனக்கும் உள்ள நட்பு ஆழமானது. அன்பானது.

என்னால் நிறைய பேர் லாபம் அடைந்து இருக்கிறார்கள். சிலர் நஷ்டம் அடைந்துள்ளனர். அவர்களில் ஆர்.எம். வீரப்பனும் ஒருவர் (அரசியல் ரீதியாக).

பாட்ஷா படத்தால் உங்களுக்கு இப்படியொரு நிலைமை ஆகிவிட்டதே என்று கேட்டேன். அதற்கு அவர் இது காலத்தின் கட்டாயம் என்றார். ஆத்திகவாதி என்றால் கடவுள் செய்தது என்பார்கள். இவர் நாத்திக வாதியாக இருந்ததால் காலத்தின் கட்டாயம் என்றார்.

ஆர்.எம். வீரப்பன் நண்பராக மட்டுமின்றி வழி காட்டியாகவும் இருக்கிறார். என் மேல் மிகுந்த அன்பு வைத்துள்ளார்.

பாட்ஷா படம் எனக்கு ரொம்ப பெரிய பேர் வாங்கி கொடுத்தது. அதற்கு முக்கிய காரணம் ஆர்.எம். வீரப்பன். அந்த படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்பதில் அக்கறையும் ஈடுபாடும் காட்டினார். அவரது தயாரிப்பில் வந்த மூன்று முகம் படமும் அபாரமாக வெற்றி பெற்றது. சத்யா மூவீசில் நான் நடித்த அத்தனை படங்களுமே சிறப்பானவை.

பாட்ஷா படம் மாதிரி மீண்டும் ஒரு படம் எடுக்க வேண்டும் என்று பலர் என்னிடம் சொன்னார்கள். அப்படி எடுத்தால் ஆர்.எம். வீரப்பன்தான் அந்தப்படத்தைத் தயாரிக்க வேண்டும் என்றேன். அவரால்தான் அப்படி ஒரு படத்தை எடுக்க முடியும்.

எம்.ஜி. ஆருடன் எப்படி நட்புடன் இருந்தாரோ அதே போல் கலைஞருடனும் நட்பு பாராட்டுகிறார் ஆர்எம்வீ…” என்றார் ரஜினி.

-என்வழி
6 thoughts on “என்னால் லாபமடைந்தோர் பலர்; நஷ்டம் வெகு சிலருக்குத்தான்! – ரஜினி பேச்சு

 1. Chozhan

  அப்பாடா, என்ன பலநாளாக ரஜினி கருணா மேடை ஏறவில்லையே என்று ஏக்கமாக இருந்தது. இனி தமிழன் தலைநிமிர்ந்து நடப்பான்.

 2. Siva

  வீரப்பன் மகன பாத்தா ஏற்கனவே நெறைய கல்யாணம் பண்ணவன் மாதிரி தெரியுது

 3. Manoharan

  ///இந்தப் படம் பெரும் வெற்றி பெற்று வெள்ளி விழாவைத் தாண்டி ஓடியது. ///

  இந்தப் படம் கோவையில் 378 நாட்கள் ஓடியது .

 4. raja

  லாபமடைந்தோர் is கருணாநிதி …..am i right?

 5. khalifa

  காவியங்கள் உன்னை பாட காதிருகிறது தலைவா, காத்து இருப்பது எத்தனை பேரோ உன்னிடம் தோற்பதற்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *