BREAKING NEWS
Search

என்னங்க… என்னங்க!!

என்னங்க… என்னங்க!!

னைவி: ஏங்க.. சமையல்காரியை நிறுத்திட்டு இனி நானே சமைக்கிறேன்…எனக்கு மாச எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க?

ணவன்: உனக்கு எதுக்குடா சம்பளம்… நீ சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என் இன்சுரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே…!

***

மனைவி: ஏங்க உங்க நண்பர்கிட்ட பொண்ணு நல்லாருக்குன்னு பொய் சொன்னீங்க?

கணவன்: எனக்கு பொண்ணுபார்க்கும்போது மட்டும் உண்மையாச் சொன்னான் அவன்!!

***

மனைவி: ஏங்க என்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என் சிரிப்பா,கூந்தலா, என் கண்களா?? எதுங்க?

கணவன்: இப்படி சிரிக்காமலேயே சூப்பரா காமெடி பண்ணுறியே அதான் புடிச்சுருக்கு

***

மனைவி: நம்ம பையன் வளர்ந்து என்னவாக ஆசைப்படுறீங்க?

கணவன்: அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்…ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது…நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்!

***

மனைவி: என்னங்க… அதோ குடிச்சிட்டு தள்ளாடிக்கிட்டே போறாரே அவரு என்னை பொண்ணு பார்க்க வந்தாரு, நான் அவரை கல்யாணம் பண்ணமாட்டேன்னு சொல்லிட்டேன். அதை நினைச்சே அவரு இத்தனை வருஷமா தண்ணியடிக்கிறாரு!

கணவன்: அவன் கொடுத்து வச்சவன்… அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமா கொண்டாடிட்டிருக்கானேன்னுதான் ஆச்சர்யமா இருக்கு!

***

மனைவி: என்னங்க நான் செத்துப்போயிட்டா… என்ன பண்ணுவீங்க?

கணவன்: எனக்கு பைத்தியமே புடிச்சுரும்.

மனைவி: நான் செத்தா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா?

கணவன்: பைத்தியம் என்ன வேணும்னாலும் பண்ணும்.

***

டாக்டர் : உங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்… இந்தாங்க தூக்க மாத்திரை

மனைவி: இதை எத்தனை தடவை கொடுக்கனும் அவருக்கு?

டாக்டர்: இது அவருக்கு இல்லை…உங்களுக்கு!!

***

(புயல் மழையில் ஒருவன் பிஸ்ஸா வாங்க கடைக்கு செல்கிறான்)

கடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா…?

வந்தவர்: பின்ன இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னை பிஸ்ஸா வாங்க அனுப்புவாங்க…!??

***

கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?

மனிதன்: இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டு கொடுங்க சாமி!!

கடவுள்: அது கஷ்டமாச்சே…வேறு ஏதாவது கேள்.

மனிதன்: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை கேட்கனும், எதையும் வாங்கித் தரச்சொல்லிக் கேட்ககூடாது…

கடவுள்: சரி சரி… அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா…?!!

***

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்:

முல்லா நஸ்ருதீனும் அவன் மனைவியும் விவாகரத்து கேட்டு நீதிபதி முன் நிற்கிறார்கள்.

நீதிபதி: எத்தனை வருஷமாச்சு கல்யாணமாகி?

முல்லா: 30 வருஷமாச்சுய்யா

நீதிபதி: இப்ப எதுக்கு விவாகரத்து கேட்கிற?

முல்லா: எதுக்கெடுத்தாலும் கையில கிடைக்கிறத மேல வீசுறா… தட்டு, செருப்பு ஒண்ணும் பாக்கி வைக்கிறதில்ல…

நீதிபதி: எத்தனை வருஷமா இது நடக்குது?

முல்லா: 15 வருஷா அய்யா…

நீதிபதி: அதான் ஏற்கெனவே 15 வருஷம் முடிஞ்சிருச்சே.. இப்ப போயி எதுக்குய்யா விவாகரத்து?

முல்லா: விஷயம் தெரியாம பேசுறீங்களே… இப்ப புதுசா அவ துப்பாக்கி சுடறதில் வேற எக்ஸ்பர்ட் ஆகியிருக்கா..!!

-அனுப்பியவர்: வேற யாரு… நம்ம பால்பழனிதான்!

கடைசி ஜோக் மட்டும் மொழிபெயர்ப்பு!
15 thoughts on “என்னங்க… என்னங்க!!

 1. யூர்கன் க்ருகியர்

  சூப்பர் ஜோக்ஸ்… பால் பழனி !!!

 2. ss

  சூப்பர் .. சும்மா நச்சின்னு இருக்கு..

  ஆமா , பால் பழனிக்கு கல்யாணம் ஆகி எத்தன வருஷம் ஆச்சு..

  இப்படி பீல் பண்றாரே……. விடுங்க , இதெல்லாம் வாழ்க்கையிலே சகஜமப்பா…..

 3. Ramesh

  பெயரிலேயே பால் பழம் எல்லாமே இருக்கு, ஆனா நம்ம பால்பழனிக்கு பாக்கியம் தான் இல்லையோ !!!

  சும்மா அஜஸ்ட் பண்ணிக்கோங்க ப்ரதர் !!!

 4. குமரன்

  பால் பழனி
  பால் பலம் நீ
  ரசித்தேன்
  சிரித்தேன்
  நன்றி

 5. குமரன்

  பால் பழனி
  பால் பழம் நீ
  ரசித்தேன்
  சிரித்தேன்
  நன்றி

 6. sakthika

  காந்தி சொன்னார் ” என்னுடைய வாழ்கை தான் உங்களுக்கு message ” அது போல இருக்கு பால்பழனி ஜோக் ………………….good

 7. palPalani

  நன்றி நன்றி நன்றி…. கமென்ட் போட்ட எல்லாருக்கும் நன்றி நன்றி நன்றி….

 8. சகோதரன்

  கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?

  மனிதன்: இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டு கொடுங்க சாமி!!

  கடவுள்: அது கஷ்டமாச்சே…வேறு ஏதாவது கேள்.

  மனிதன்: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை கேட்கனும், எதையும் வாங்கித் தரச்சொல்லிக் கேட்ககூடாது…

  கடவுள்: சரி சரி… அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா…?!!

  சும்மா அதிருது,..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *