BREAKING NEWS
Search

‘எனக்கு முன்னால் செல்லுங்கள்!’

‘எனக்கு முன்னால் செல்லுங்கள்!’

ஜினி சாருடன் இணையாகவோ அல்லது அவரைத் தொடர்ந்தோ நடந்து செல்வது மிகவும் சவாலான சமாச்சாரம். அவ்வளவு வேகமாக நடப்பார் அவர். அந்த ஸ்டைல், சிங்கம் மாதிரி கம்பீரம்… வேறு யாராலும் நெருங்கக் கூட முடியாது போங்கள்!

நடிகர் ஜெயம் ரவியின் திருமண நிகழ்ச்சி அது. இடம்: சென்னை பார்க் ஷெரட்டன். நான்தான் அந்த நிகழ்ச்சிக்கான பிஆர்ஓ.

சரியாக சொன்ன நேரத்துக்கு 5 நிமிடம் முன்பே வந்திறங்கினார் ரஜினி சார்.

அவரை வரவேற்று அழைத்துச் செல்ல ஜெயம் ரவி குடும்பத்தினருடன் சென்றேன். காரை விட்டிறங்கியதும் மின்னல் வேகத்தில் அவர் நடக்க, நாங்கள் அவர் பின்னால் ஓட வேண்டியிருந்தது. புகைப்படக்காரர்கள் பாடுதான் படு திண்டாட்டம்.

லிப்டில் ஏறிய பிறகு அவரிடம், “சார்… நீங்க நடந்தா உங்க பின்னாடி ஓடி வரக்கூட முடியல.. அத்தனை வேகம்” என்றேன்.

தனக்கே உரிய வசீகர புன்னகையை உதிர்த்தவர், சொன்ன பதில் எத்தனை காலமானாலும் மறக்க முடியாதது… பொன்னெழுத்தில் பொறிக்க வேண்டியது:

“என் பின்னால வராதீங்க… எனக்கு முன்னாடி போய்ப் பாருங்க, ஈஸியா இருக்கும்!”

அசந்துபோனேன்… என்றும் அவர் வெற்றிகரமான மனிதராக இருப்பதன் எளிய தத்துவத்தை அழகாகச் சொல்லிவிட்டார்.

தனக்கு முன்னால் சுலபமாக செல்லக் கூடிய உத்தியை அடுத்தவருக்கு சொல்லித்தருகிறார் பாருங்கள்… வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டவர் இந்த மனிதர் என்பது புரிந்து பிரமித்தேன்!

இங்கே நீங்கள் பார்ப்பது அந்த சம்பவத்தின் போது எடுத்த படங்கள்தான்.. பக்கத்தில் நான்!

-ஜான்
16 thoughts on “‘எனக்கு முன்னால் செல்லுங்கள்!’

 1. கிரி

  ஜான் பின்னிட்டீங்க! 🙂 படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் பட்டய கிளப்பும் ஒரே ஸ்டார் எங்கள் சூப்பர் ஸ்டார் தான்.

 2. krishsiv

  ஒருவர் முன்னேறி போய்ட்டு இருகிறபோ மத்தவங்க தனக்கு இணையா வரத கூட சிலபேருக்கு புடிக்காது
  ஆனா தன்ன மிந்தி போக சொல்ற மன பக்குவம் அந்த மனசு
  இது அவருக்கு கூடவே பிறந்தது
  என்றைக்கும் மாறாது

  ரஜினி என்ற நடிகனுக்கு ரசிகனா இருப்பதை விட
  ரஜினி என்ற மனிதனுக்கு ரசிகனா இருப்பதை நான் பெருமை கொள்கிறேன்

  உங்களை போன்ற மனிதனாய் மாற முயற்சிக்கும்
  ரஜினி ரசிகன்

 3. Vazeer Kuwait

  ஜான் என்பது நம்ம வினோ தானே…..?

  ____________

  இல்லை… அவர் எனது நண்பர். திரைப்பட மக்கள் தொடர்பாளர்! 🙂
  -வினோ

 4. r.v.saravanan

  “என் பின்னால வராதீங்க… எனக்கு முன்னாடி போய்ப் பாருங்க, ஈஸியா இருக்கும்

  தனக்கு முன்னால் சுலபமாக செல்லக் கூடிய உத்தியை அடுத்தவருக்கு சொல்லித்தருகிறார் பாருங்கள்…

  ரஜினி என்ற நடிகனுக்கு ரசிகனா இருப்பதை விட
  ரஜினி என்ற மனிதனுக்கு ரசிகனா இருப்பதை நான் பெருமை
  கொள்கிறோம்

 5. r.v.saravanan

  “என் பின்னால வராதீங்க… எனக்கு முன்னாடி போய்ப் பாருங்க, ஈஸியா இருக்கும்

  தனக்கு முன்னால் சுலபமாக செல்லக் கூடிய உத்தியை அடுத்தவருக்கு சொல்லித்தருகிறார் பாருங்கள்…

  ரஜினி என்ற நடிகனுக்கு ரசிகனா இருப்பதை விட
  ரஜினி என்ற மனிதனுக்கு ரசிகனா இருப்பதில் பெருமை
  கொள்கிறோம்

 6. eelam tamilan

  Good statement… but, i guess that hidden agenda for this news item to show john’s close relationship with Rajani… Good luck john…

 7. குமரன்

  அவர் வேகத்துக்கே நடக்க முடியவில்லை என்னும்போது அவருக்கு முன்னாள் போகச் சொல்கிறார் என்றால் ?

  அவரைவிட வேகமாக நடப்பவர்களால் மட்டுமே அது முடியும்.

  அப்படியானால் தன்னை விட வேகமாக இருக்கப் பழகு என்றுதானே சொல்கிறார்.

  எப்படியானாலும் நடப்பதைப் போலவே சிந்திப்பதிலும் பேசுவதிலும் கூட வெகு வேகமாக இருக்கிறார் எனபது புலனாகிறது.

 8. Manoharan

  சில அரைவேக்காடுகளுக்கு இந்த பதில் மிகப் பொருத்தம்.

 9. yuvaraj

  வணக்கம் வினோ,
  வாழ்க்கயின் தத்துவத்தை இப்படித்தான் பலமுறை ஒரு வரியல் பளிச்னு கூறுவார் நம் தெய்வம்

  யுவராஜ்
  தலைமை மன்றம்
  பாண்டிச்சேரி
  ________________
  ஆமாம், யுவராஜ்
  திருக்குறள் மாதிரி.. தலைவர் சொல்வதை புதுக்குறளாகவே எடுத்துக்கலாம்!
  -வினோ

 10. SVR

  ரஜினி என்ற நடிகனுக்கு ரசிகனா இருப்பதை விட
  ரஜினி என்ற மனிதனுக்கு ரசிகனா இருப்பதை நான் பெருமை கொள்கிறேன்

  உங்களை போன்ற மனிதனாய் மாற முயற்சிக்கும்
  அன்பு பிறவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *