BREAKING NEWS
Search

எனக்கும் ரஜினிக்கும் நட்பைத் தாண்டிய உறவு! – கமல்

னக்கும் ரஜினிக்கும் நட்பைத் தாண்டிய உறவு உள்ளது, என்று நடிகர் கமல்ஹாஸன் தெரிவித்துள்ளார்.

மலையாளப் பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டி:

ஒளி கொடுத்த சூரியன் சிவாஜி

என்னுடைய இத்தனை வருட பயணத்தில் எனக்கு மிகப்பெரிய முன்னோடியாக, என்னை பாதித்தவராக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்தான். ஒளி கொடுக்கும் ஒரு சூரியன் மாதிரி அவர் இருந்தார்.

விருதுகள் பற்றி கவலைப்படும் நிலையில் நான் இல்லை. விருதுகளும் பாராட்டுக்களும் ஒரு கலைஞனை உற்சாகப்படுத்துபவை என்பதை நான் மறுக்கவில்லை. எனக்கு ஆஸ்கர் கிடைக்கவில்லையே என்று வருத்தமில்லை. அதே நேரம் ரஹ்மானுக்கு அந்த விருது கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.

ஆஸ்கர் குறித்து கவலை இல்லை!

எஞ்ஜினீயரிங் படிப்பு படிக்காமலேயே எனக்கு பிஇ பட்டம் கிடைக்கவில்லையே என்று புலம்புவதைப் போலத்தான், எனக்கு விருது கிடைக்கவில்லையே என்று கூறுவது. ஒருவேளை நான் ஆஸ்கர் விருதுக்கேற்ற மாதிரி படங்கள் செய்திருந்தால், உரிய முறையில் அணுகியிருந்தால் எனக்கும் விருது கிடைத்திருக்கும். சத்யஜித் ரேக்கு வழங்கப்பட்டதைப் போல, நான் இறந்த பிறகு எனக்கும் கூட ஆஸ்கர் தரப்படலாம். அதை என் குழந்தைகள் பெற்றுக் கொள்வார்கள்.

நிறைய முறை என்னிடம் அரசியல் பற்றி பேசிவிட்டார்கள். மக்களுக்கு சேவை செய்ய அரசியலில் குதித்து பாராளுமன்றத்துக்கு செல்ல வேண்டும் என்றில்லை.

மலையாளம் சினிமா எனக்கு நிறைய கற்றுத் தந்தது. அந்த பாதிப்பில்தான் நான் மகாநதி போன்ற படங்களை எடுத்தேன். கிட்டத்தட்ட பாலச்சந்தர் எப்படி என்னை ஒரு வடிவத்துக்கு கொண்டுவந்தாரோ, அதே போன்ற பணியை மலையாளம் சினிமா செய்தது.

ரஜினிக்கும் எனக்கும் உள்ள நட்பு!

எனக்கும் ரஜினிக்கும் உள்ள உறவு மிகவும் நட்பு ரீதியானது. அதையும் தாண்டியது என்றுகூடச் சொல்லலாம். அப்போதெல்லாம் நான் சினிமா வாய்ப்புக்காக பாலச்சந்தர் போன்ற இயக்குநர்களின் அலுவலகத்திலேயே அமர்ந்திருப்பேன். அப்படி ஒரு நாள் பாலச்சந்தர் அலுவலகத்துக்குப் போய் அமர்ந்திருந்தேன்.

அப்போது, ‘வெளியில் ஒரு பிலிம் இன்ஸ்ட்டிட்யூட் மாணவர் நிற்கிறார். மராட்டி பெயர். ஆங்கிலம், கன்னடம் பேசுவார். கராத்தே தெரியும். நீ போய் அவரை வரச் சொல்’ என்றார். நானும் போய் அழைத்து வந்தேன். அவர்தான் ரஜினிகாந்த் . நானும் அவரும் இணைந்துதான் அந்தப் படத்தைச் செய்தோம்.

அந்த படத்தில் ரஜினி பிரெஞ்ச் தாடி வைத்திருப்பார். அப்போது எனக்கு ராஜன் என்று ஒரு மிக நெருங்கிய நண்பர் இருந்தார். கேன்சர் நோயாளி. அவரும் பிரெஞ்ச் தாடிதான் வைத்திருப்பார். படம் முடிந்த பிறகு ராஜன் இறந்து போனார். உடனே ரஜினியும் தன் தாடியை எடுத்துவிட்டார். அன்று முதல் ரஜினி என் நெருங்கிய நண்பர் மட்டுமல்ல… ராஜன் இடத்தில் நான் வைத்துப் பார்க்கும் நபரும் அவரே. நட்பைத் தாண்டிய உணர்வு அது.

வெற்றி தோல்விகளை நான் சகஜமாகவே எடுத்துக் கொள்கிறேன். பாட்ஷாவின் வெற்றியையும் குசேலன் தோல்வியையும் ரஜினி எப்படி எடுத்துக் கொண்டாரோ அப்படித்தான் நானும்.

நானும் ஸ்ரீதேவியும்…

என்னுடன் அதிகப் படங்களில், 27 படங்களில், நடித்தவர் ஸ்ரீதேவி. அது ஒரு இனிமையான நினைவு. நானும் அவரும் காதலிப்பதாக ஏகப்பட்ட கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் திருமணம் செய்து கொள்வோம் என்றே எல்லாரும் நம்பினார்கள். ஸ்ரீதேவியின் தாயார் கூட அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் அப்படியெல்லாம் நடக்கவில்லை. அதையெல்லாம் தாண்டிய அற்புதமான உறவு எங்களுக்குள் இருந்தது.

அப்போதெல்லாம் என்னைப் பார்த்தால் ஸ்ரீதேவி பயத்துடன் ஒதுங்கி நிற்பார். அந்த பயம் இப்போதும் அவரிடம் உள்ளது. என்னை இப்போதும் கமல் சார் என்றுதான் அவர் அழைப்பார்…”, என்று கூறியுள்ளார் கமல்.
19 thoughts on “எனக்கும் ரஜினிக்கும் நட்பைத் தாண்டிய உறவு! – கமல்

 1. karthik

  தமாசு:

  எனக்கும் ரஜினிக்கும் நட்பைத் தாண்டிய உறவு! – கமல்

  *********************

 2. karthik

  ஸ்ரீதேவியும் நானும் திருமணம் செய்து கொள்வோம் என்றே எல்லாரும் நம்பினார்கள். – கமல்

  ரசிகன் – பாவம் அந்த காலத்துல உங்கள பத்தி யாருக்கும் தெரியல. அப்படி பாத்தா நீங்க ஸ்ரீப்ரிய, ஸ்ரீலட்சுமி, குஸ்பூ, சிமரன், த்ரிசானு எத்தன பேர கல்யாணம் பண்றது??!!!

 3. Jey

  bro,i know u know about this suntv live telecast audio function sat and sun.. pls publish viewers who dont know about this will see it live …

 4. Juu

  /***அதையெல்லாம் தாண்டிய அற்புதமான உறவு எங்களுக்குள் இருந்தது.***/
  ??????
  ——–
  !!!!!!!!
  என்னங்க நீங்க?மொட்டாய சொல்லிடிங்க,எனக்கு என்னனமோ தோணுது.
  ஆனா எல்லாமே உண்மைதான்.

 5. heiskarthi

  தமாசு:

  எனக்கும் ரஜினிக்கும் நட்பைத் தாண்டிய உறவு! – கமல்

  ********************************

 6. kk

  Mr kamal do you think people who watche’s your movies are fool.
  Every one will get any English DVD’s across the world as you get

  How come you talk about oscor which you never deserve.Are we fools may be your fans.
  Oscar is not for copy cat’s mr kamal and how shame you compare you with sathyajith ray don’t tamper his name he got the credit by himself not from DVD’s

  Cartoonist Madhan,yugi sedhu may be your jalra’s who keep on telling kamal is library he is encyclopedia might be they knew your running a DVD library and your DVD library is compared to Encyclopedia..

  I have already told he is a cameleon on Vijay Tv awards when surya complimented him in turn he said sivakumar his role model for acting bla bla now again in this stage he jumped to sivaji tomorrow he goes to bombay and will say his role model is devanand.

  He thinks that he is an intellegent and born for acting ,a Just born smells his character.

  Just see the below list and tell does kamal deserve’s oscar

  Avvai shanmugi copy of MRs.Doubtfire and Tootsie.
  Raaja Paarvai copy of Butterflies Are Free (1972).
  sathya copy of Hoffman’s Marathon Man (1976) & hindi film arjun
  Enakkul oruvan copy of Reincarnation of Peter Proud(1975)
  Indiran chandiran copy of Richard Dreyfuss Starrer “Moon Over Parador”
  Thenali copy of Richard Dreyfuss & Bill Murray ‘s What About Bob
  Nayagan copy of God Father
  Kurudhi Punal copy of Drooh kaal
  Hey ram copy of Barrabbas
  Vetri vizha copy of Bourne Identity
  Virumandi copy of The Life of David Gale
  panchathanthiram copy of Very Bad Things (1998)
  Naala damayanthi copy of Green card
  Sathi leelavathi copy of She-Devil (1989, Meryl Streep, Roseanne)
  Magalir mattum copy of Nine to Five (1980, Jane fonda, Dolly Parton)
  nammavar copy of To Sir With Love (1967, Sidny Poitier)
  Anbe Sivam copy of Planes, Trains & Automobiles Zero
  GUNA copy of Tie me up Tie me down.

  There are more movies …

  Acting in a remake movies or copying is not a crime but taking the crediblity and projecting as the creator and talking too much on oscar and conducting Screen play writing @ iit
  Nooo kamal you and karunanidhi are the two craps should be thrown out of the country.

  Dont drag thalaivar name and keep on telling you both are friends.thalavar himself knews no one forget the kodaikannal and sathyaraj and You the 3-idiots.

  He plays a trick when ever his movie is released he send some junk to go and file the complaint stating that the story belongs to him which kamal is doing. Its a cheap publicity and media always
  favour kamal as he born writer some one should do the sting operation to find the person who files the complaint on story theft defnetly which leads to kamal itself

  Dasavatharam does anyone tells dasa is having any story inside may be Ascar films.

  will be back…

 7. kk

  //வெற்றி தோல்விகளை நான் சகஜமாகவே எடுத்துக் கொள்கிறேன். பாட்ஷாவின் வெற்றியையும் குசேலன் தோல்வியையும் ரஜினி எப்படி எடுத்துக் கொண்டாரோ அப்படித்தான் நானும்.//

  MR kamal your a failed actor when comes to box office collection ask kalaipuli dhanu who had a horror tales on producing you.

  Smart act you want to write off our thalaivar box office collection by simply dragging kuselan.
  thalaivar clearly told he is 25% only in kuselan but the KB (nambikkai drohi) and P.vasu(peeee vasu) projected as 100% thalaivar movie and talked business in the line of sivaji.

  You always give block buster flops and you don’t know the spelling of the collection. how come you compare with our thalaivar

  Will you get sun tv investing on you 150 crores no kamal for seven seven janmathuku you wont get a such budjet maran brother’s knews the business where they get from.

  you wont get 20 crores budjet .Take a bet from now on no producer will be showing interest on you the knew they will be on the streets.

  May be red giant and cloud nine till they have the goverment with them you can enjoy having one day room rent of 4o lacks/day do you deserve for this.

  look our thalaivar never uses caravan too and he changed the dress in the back of a bus in sivaji shoot in USA. that’ s why he wins billion hearts as fans he is a god send to us.

  Please change your name as Rajini kamal and join our league you may deserve for that not in the same league
  will be back…….

 8. Raja

  இதற்க்கு முந்தய பின்நூட்டதிர்க்கான பதிலே இது …

  எப்பா kk நீ எழுதி இருக்கிறதெல்லாம் உனக்கே கொஞ்சம் அதிகமா தெரியல…. கமல் ஒன்னும் தெரியாதவர் மாதிரி எழுதி இருக்க … உங்க தலைவர் மேல இருக்கிற மதிப்ப கெடுக்கிறதே உன்னை போன்ற ரசிகன்தான் … நீ சொல்லுறதெல்லாம் உண்மைனா? கருணாநிதிக்கு சொம்படிக்கிற ரஜினிய பத்தி என்ன சொல்லுவ….

  படத்துல வேற ஒருத்தன வச்சி சண்ட போட்டுகிட்டி நாளைக்கு அந்த சண்ட பிரபலம் ஆச்சினா இது நான் பண்ணினது இல்ல இவரு பண்ணுனதுன்னு உன்ன மாதிரி விசிலடிச்சான் குஞ்சிகளுக்கு சொல்லுவாரா?

  என்னமோ தமிழ் நாட்ட காக்க வந்தவர், கடவுளின் தூதுவன் அப்படின்னு சொல்லுறீங்களே தமிழ் நாட்ட சுரண்டிகிட்டு இருக்கிற ஒண்ணான் நம்பர் கேடி பயலுக அந்த சன் குழுமம் அவனுக கூட பிசினஸ் பண்ற இவரு யோக்கியரா?

  உங்க ஆளு காசுக்காக என்னவெல்லாம் பண்ணி இருக்காரு? மேடையில தமிழ் உணர்வாளன் மாதிரி பேசிட்டு , படத்த வெளியிட விட மாட்டோம்னு மிரட்டுனவுடனே டீவீயில கெஞ்சி மன்னிப்பு கேட்டதுக்கு பேரு என்ன பச்சோந்தி தனம்தான? கருனாநிதிய நாட்ட விடு தொரத்தனும்னு சொல்லுற உன்ன மாதிரி ரஜினி ரசிகன்தான அன்னைக்கி கருணாநிதிக்கு வோட்ட போட்டு ஜெய்க்க வச்சீங்க? அதுக்காகவே உங்களையெல்லாம் ஊரை விடு தொரத்தனும்…

  நடிகனை நடிகனா மட்டும் பாரு …. ஒவ்வொருத்தன் ஓட்டையிலும் ஆயிரம் அழுக்கு இருக்கும்…

  (நான் கமல் ரசிகனும் கிடையாது ரஜினி ரசிகனும் கிடையாது)

 9. Jon

  Hi KK, You have actually spoken on behalf of millions of Superstar fans. Kamal fans have always been accusing of Superstar movies as dubbed and never go for originals like kamal. You have actually hit the nail in the coffin. This data is excellent about his movies being actually dubbed and robbed from hollywood movies. hats off to you.

 10. Abdul rahman Indian

  KK என்ற அதிக பிரசங்கி அதிமாகவே பேசியுள்ளது. ஆஸ்கர் கமலுக்கு கிடைக்கவில்லை என்றால் , அதற்கு காரணம் கமல் அல்ல…

  இப்போது உள்ள உலக நடிகர்களிலேயே , அற்புதமான நடிகர் கமல் மட்டும் தான்.

 11. kk

  //இப்போது உள்ள உலக நடிகர்களிலேயே , அற்புதமான நடிகர் கமல் மட்டும் தான்.//

  மொக்கை புதுசா பேசி பழுகுங்கடா !!! உலக நடிகர்களை இழுகாதிங்க
  முதல்ல பரமக்குடி விக்ரம்வோட போட்டி போடா சொல்லுடா உங்க கமலை

  கிழட்டு அம்ம்பை மன்மதன் அம்பு என்று கதைகிறதை நிறுத்தி கொல்லனும்

 12. karthik

  முதல்ல வருவார்னு சொல்வாராம். அப்புறம் லேட்டா வந்தாலும் லேட்டாஸ்டா வருவன்னு சொளுவாராம்… அப்புறம் நான் வருவதும் வரதாதும் என் இஷ்டம் அப்படினு சொல்லுவாராம். கொடுத்த வாக்க காப்பத்துறது அப்படிங்கிறது இது தானா.. இத கேட்ட ரசிகர்களுக்கு கோவம் வருமாம்.. அடி பின்னி எடுபான்கலாம்.. கொலை செய்வாங்களாம்.. ஏன்னா அவங்க லட்ச கணக்கானோர் இருகன்கலாம்.. யோசிங்க நண்பா..

 13. priya

  //முதல்ல வருவார்னு சொல்வாராம்.
  அப்புறம் லேட்டா வந்தாலும்
  லேட்டாஸ்டா வருவன்னு சொளுவாராம்…
  அப்புறம் நான் வருவதும்
  வரதாதும் என் இஷ்டம்
  அப்படினு சொல்லுவாராம்//
  Ungakita vandu sonnarakum .

  Padathula pesaradha ellam ella herovum seirangala?

 14. priya

  Avar arasiyaluku vandadhan nanga avaruku rasigara irupomnu unmayana rajini rasigargal solla matanga. Avar lateah vandalum varamale irundalum engaluku avardhan thalaivar.

  Avaroda padatha pathu mattum avaruku rasigar aagalai. Nalla gunathaum parthudan avaruku rasigar aanom. Inum sollanumna avara madhiri nallavar ellam arasiyaluku vara vendamkaradudhan (idhu en sondha karuthu, matra rasigargal varanumnu ninaikalam) en ennam.

 15. kicha

  //அடி பின்னி எடுபான்கலாம்..
  கொலை செய்வாங்களாம்..,//

  Earkanave vangi irukeengala. Innum vanguveenga pola iruku.

  ”KABARDHAR”

 16. kk

  hi raja
  sorry chellam choooo choooo one sweet news for kamal fans finally kamal got oscar
  true believe me !!!

  Producer ravichandran started a movie banner on oscar so far he is been producing all his movies under Oscar films no issue till kamal stepped in. when Dasavatharam movie started thatz it Oscar ravichandran becames ASCAR ravichandran which means kamal created A’ SCAR on ravichandran.

  Now we have filmfare awards,screen awardes like many awards in all languages now similar of award named OSCAR will be sponsored by ANJAL Alluppu marundhu and RingSolin is going to initiate this award to MR kamal so guys lets celebrate kamal got an Oscar finally so what next
  Lets party …..

 17. ஆகாய மனிதன்...

  ///Avvai shanmugi copy of MRs.Doubtfire and Tootsie.
  Raaja Paarvai copy of Butterflies Are Free (1972).
  sathya copy of Hoffman’s Marathon Man (1976) & hindi film arjun
  Enakkul oruvan copy of Reincarnation of Peter Proud(1975)
  Indiran chandiran copy of Richard Dreyfuss Starrer “Moon Over Parador”
  Thenali copy of Richard Dreyfuss & Bill Murray ‘s What About Bob
  Nayagan copy of God Father
  Kurudhi Punal copy of Drooh kaal
  Hey ram copy of Barrabbas
  Vetri vizha copy of Bourne Identity
  Virumandi copy of The Life of David Gale
  panchathanthiram copy of Very Bad Things (1998)
  Naala damayanthi copy of Green card
  Sathi leelavathi copy of She-Devil (1989, Meryl Streep, Roseanne)
  Magalir mattum copy of Nine to Five (1980, Jane fonda, Dolly Parton)
  nammavar copy of To Sir With Love (1967, Sidny Poitier)
  Anbe Sivam copy of Planes, Trains & Automobiles Zero
  GUNA copy of Tie me up Tie me down.///

  அண்ணா, கண்டுபுடிசிடீங்க…அப்போ ஆஸ்கார் உங்களுக்குத்தான்….
  தசாவதாரம் படமே ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பு தான்…(எப்புடி ?)
  திறமைய பாராட்டுங்க…
  நான் உங்க கண்டுபிடிப்பு திறமைய பாராட்டினமாதிரி…(எப்புடி ?)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *