BREAKING NEWS
Search

எந்திரனில் நடிக்கும் ஷங்கர்!

எந்திரனில் நடிக்கும் ஷங்கர்!

PopcornBall2சிவாஜி படத்தில் ஒரு காட்சியில் தலைகாட்டிய ஷங்கர் அடுத்து எந்திரன் படத்திலும் நடிக்கிறாராம். அவர் நடிப்பதை வரவேற்ற படத்தின் நாயகன் சூப்பர் ஸ்டார், தொடர்ந்து நடிக்குமாறு உற்சாகப்படுத்தினாராம்.

இன்னொரு விஷயம், ஷங்கருக்கு நடிப்பு புதுசில்லை… ஏற்கெனவே 10 படங்களில் சின்னச் சின்ன காமெடி வேடங்கள் செய்திருக்கிறார். இந்தப் படங்களையெல்லாம் இயக்கியவர் எஸ்ஏ சந்திரசேகன். ஷங்கர் அவரிடம்தான் 14 படங்களுக்கு உதவியாளராக இருந்தார்.

கோவா பிளான்!

PopcornBall2வெளியில் பல செய்திகள்… இருந்தாலும் அசராமல் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்கிறார் சௌந்தர்யா ரஜினி. கோவா படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை சிறப்பாக நடத்தும் வேலையில் மும்முரமாக உள்ளார் என ஆக்கர் ஸ்டுடியோ அலுவலக வட்டாரம் தெரிவிக்கிறது.

அப்பா ரஜினிதான் சிறப்பு விருந்தினர் இந்த ஆடியோ வெளியீ்ட்டு விழாவில். விரைவில் விழா அறிவிப்பு வருகிறதாம்.

‘தலைவர் வருவாரா?’

PopcornBall2ஜினி ரூட்டை சைலண்டாக பின்பற்றும் நாயகர்களில் ஒருவரான நடிகர் விஷால், தனது அடுத்த படமான தீராத விளையாட்டுப் பிள்ளையின் ஆடியோ வெளியீட்டை ரஜினியின் கையால் வெளியிட வேண்டும் என விரும்புகிறாராம்.

தானே போய் டேட் கேட்டால் ரஜினி தருவாரோ மாட்டாரோ என்ற யோசனையில், தனது அப்பா ஜிகே ரெட்டி (ரஜினியின் ஆரம்ப காலம் தொட்டே நல்ல தொடர்பிலிருப்பவர்) மூலம் ஆசையைத் தெரிவிக்க, ரஜினி தரப்பில் ஓகே சொல்லியிருப்பதாகத் தகவல். இருந்தாலும் எந்திரன் பிஸியில் ‘தலைவர்’ வருவாரா என்று நண்பர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார் விஷால்.

கவலையே வேணாம்… வர்றேன்னு வாக்கு கொடுத்திருந்தா கண்டிப்பா வந்துடுவார்!




3 thoughts on “எந்திரனில் நடிக்கும் ஷங்கர்!

  1. r.v.saravanan

    ஏற்கெனவே 10 படங்களில் சின்னச் சின்ன காமெடி வேடங்கள் செய்திருக்கிறார்.

    எஸ்ஏ சந்திரசேகran direction il seetha endra padathil villan in assistant aga varuvar
    shankar

  2. எப்பூடி

    //ஏற்கெனவே 10 படங்களில் சின்னச் சின்ன காமெடி வேடங்கள் செய்திருக்கிறார். இந்தப் படங்களையெல்லாம் இயக்கியவர் எஸ்ஏ சந்திரசேகன்.//

    நம்ம S.A.சந்திரசேகர் படமென்றால் சீடியசான சீனே ரொம்ப காமடியா எல்ல இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *