BREAKING NEWS
Search

எங்கப்பாவோட பட்டத்தை பறக்கவிடுங்க! – சிம்பு

எங்கப்பாவோட பட்டத்தை பறக்கவிடுங்க! – சிம்பு

கள்ளக்குறிச்சி: ‘எங்கப்பா ஜெயிச்சா நிச்சயம் நல்லது பண்ணுவார். அவரது ‘பட்டத்தை’ (டிஆரின் சின்னம்) பறக்க விடுங்க. உங்க கஷ்டம் பறந்துடும்’ என கூறி வாக்கு சேகரித்து வருகிறார் டி.ராஜேந்தரின் மகன் சிலம்பரசன்.

story_simbuகள்ளக்குறிச்சி தொகுதியில் லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக தேமுதிக சார்பில் எல்கே சுதீஷ் போட்டியிடுகிறார்.

நடிகரும் டிஆரின் மகனுமான சிலம்பரசன், தன் தந்தையின் தொகுதியில் பிரச்சாரம் செய்வதற்காக 3 நாள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளாராம்.

கள்ளக்குறிச்சி நகரில் டிஆருக்காக வாக்கு சேகரித்த சிம்பு, அங்கிருந்த மக்களிடையே இவ்வாறு பேசினார்:

பிரச்சாரத்தின் போது சிலம்பரசன், “எனக்கு அரசியலை பற்றி ஒன்றும் தெரியாது. நான் நடிகர். எனது அப்பாவுக்காக உங்ககிட்ட ஓட்டு கேட்டு வந்திருக்கேன். ஏற்கெனவே அப்பாவுக்கா பூங்கா நகர் தொகுதி மக்கள்கிட்ட ஓட்டுக் கேட்டேன். அப்பாவை ஜெயிக்க வச்சாங்க.

அவரும் வெற்றி பெற்று பல நன்மைகளை பூங்கா நகர் மக்களுக்குச் செய்தார். இந்த முறை கள்ளக்குறிச்சிக்கு வந்து நிற்கிறார். நீங்க ஏமாத்தமாட்டீங்க என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு. அப்பாவின் தேர்தல் சின்னம் பட்டம்.

இந்த பட்டத்தை உயரப் பறக்க வையுங்க. உங்களுக்கு நன்மைகள் தேடிவரும். நீங்க கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவார் டிஆர்”, என்றார் சிம்பு.




2 thoughts on “எங்கப்பாவோட பட்டத்தை பறக்கவிடுங்க! – சிம்பு

  1. கிரி

    சிம்பு படத்தை பார்த்தால் எதோ நீங்க சொல்ல நினைக்கிற மாதிரி இருக்கே 😉

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *