BREAKING NEWS
Search

‘உளறும் கருணாநிதி’ – இது விஜய்காந்தின் உளறல்!

‘உளறும் கருணாநிதி’ – இது விஜய்காந்தின் உளறல்!

ரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?vk

இந்தக் கேள்விக்கு விடை கிடைத்துவிட்டால் இன்றைய அரசியல்வாதிகளில் யார் நல்லவர் என்ற கேள்விக்கும் விடை கிடைத்துவிடும்!

அதிமுக களத்தில் இல்லை என்ற தெம்பில், நாளுக்கு நாள் விஜய்காந்தின் அறிக்கைகளில், பேச்சுக்களில் ஆணவம் தலை விரித்தாடுகிறது.

சமயத்தில் குறைந்தபசட்ச அரசியல் நாகரீகம் கூடத் தெரியாமல் இவர் ‘உளறுவது’ சகிப்புத் தன்மைக்கு அப்பாற்பட்டதாக மாறியிருக்கிறது.

முதல்வர் கருணாநிதி, தனது நான்காண்டு கால ஆட்சியின் சாதனைகளைச் சொல்லி ஓட்டுக் கேட்கிறார். அதை மக்கள் நம்புவதும், நம்பாமல் போவதும் அவர்கள் பாடு.

ஆனால் இந்தச் சாதனைகளைச் சொல்லும் ஒரு மாநில முதல்வரை, எந்த அடிப்படைத் தகுதிகளுமே இல்லாத ஒருவர், தான் ஒரு பிரபலம் என்ற ஒரே காரணத்துக்காக மனம் போன போக்கில் விமர்சித்துள்ளார்.

‘கலைஞர், டிவியில் உளறுகிறார்’ என சொல்லும் அளவுக்கு விஜய்காந்த் இறங்கிப் போயிருப்பது, உள்ளபடியே அவரது தரத்துக்கு ஒரு சான்று.

சாம்பிளுக்கு இதோ… இளையான்குடியில் நடந்த ஒரு தேர்தல் பிரச்சார கூட்டத்தில் விஜய்காந்த் பேசியது:

இலவச திட்டங்களுக்காக 74 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளார் கருணாநிதி. இதனால் தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் 12,000 ரூபாய் கடனுடன் பிறக்கிறது. இவர்களின் தவறான அணுகுமுறையால் அரசு கஜானா காலியாகி வருகிறது. அடுத்து ஆட்சிக்கு வரும் எங்களுக்கு(நெனப்புதான்…!!!!) இது பெரிய தலைவலியை ஏற்படுத்தும்.

சிறுவயதில் நெல் கொள்முதலுக்காக எனது அப்பாவுடன் இந்தப் பகுதிக்கு வந்துள்ளேன். அன்றிருந்த பசுமை இன்று இல்லை. இப் பகுதியே வறட்சியாகிவிட்டது.

உலகளவில் ‘நான்’ என்ற அகங்காரம் கொண்ட அரசியல்வாதிகள் பாதிப்பை சந்திந்து வருகின்றனர். கருணாநிதிக்கும் அதே நிலை ஏற்படும். நான் கூறும் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க முடியாத கருணாநிதி நேரடியாக பதிலளிக்காமல் டிவியில் உளறுகிறார். எனக்கொரு சேனல் இருந்திருந்தால் அவரது உளறலுக்கு மறுநிமிடமே நானும் என் பதிலை தந்திருப்பேன் (பதிலுக்கு தாறுமாறாக உளறியிருப்பாரோ!).

52 ஆண்டு பொது வாழ்க்கையிலும், ஐந்து முறை முதல்வராகவும் இருந்த கருணாநிதியால் தமிழகத்துக்கு என்ன பயன்? (ஆளுயர தங்கப்பேனா கொடுத்தபோது அறிவை மெரினாவில் அடகு வைத்துவிட்டிருப்பாரோ!)

டிவி கொடுப்பதற்கு பதிலாக வீட்டுக்கு வீடு வேலை கொடுப்பேன் என்று சொல்ல முடியுமா? பெண்களிடம் தட்டில் பணம் வைத்து சத்தியம் வாங்கி ஓட்டுகேட்டு வருகின்றனர். கேட்டால், ‘திருமங்கலம் பார்முலா’ என்கின்றனர். அப்படியென்றால் அவர்களின் சாதனை எடுபடவில்லை என்றுதானே அர்த்தம்.

இலவச திட்டங்களுக்காக 74 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளனர். இதனால் தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் 12,000 ரூபாய் கடனுடன் பிறக்கிறது. இவர்களின் தவறான அணுகுமுறையால் அரசு கஜானா காலியாகி வருகிறது.

அடுத்து ஆட்சிக்கு வரும் எங்களுக்கு(!!!!) இது பெரிய தலைவலியை ஏற்படுத்தும்.

எம்.ஜி.ஆரின் விசுவாசிகள் திமுகவுக்கு ஓட்டுப்போடக் கூடாது. நல்ல கட்சிக்கு ஓட்டுப்போடுங்கள். ஏழைகள் ஏழைகளாகவே இருக்ககூடாது என்பதுதான் தேமுதிகவின் கொள்கை.

எதிர்க்கட்சியே இல்லாமல் போக வேண்டும் என்று நினைக்கிறார்கள். நிச்சயம் அது நடக்காது.

எம்.ஜி.ஆர். திண்டுக்கல் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது போல இளையான்குடி இடைத்தேர்தலில் இந்த விஜய்காந்துக்கு வெற்றியைத் தாருங்கள்…!

-சரீ… கருணாநிதி உளறுகிறார் என்ற இருந்துவிட்டுப் போகட்டும்… அதைப் பார்த்து இவர் ஏன் இப்படி அலறுகிறார்?!

கருணாநிதி மீது ஏராளமான விமர்சனங்களை வைக்கலாம் என்பது உண்மையே… ஆனால் அதை வைக்கும் அளவு தகுதி விஜய்காந்துக்குக் கிடையாது என்பதும் உண்மைதானே!

கருணாநிதி டிவியில் உளறுகிறார் என்று சொல்ல இந்த ‘உளறல் மன்ன’னுக்கு எந்தத் தகுதியும் இல்லையே!
11 thoughts on “‘உளறும் கருணாநிதி’ – இது விஜய்காந்தின் உளறல்!

 1. sivasankar

  I too feel that MK and JJ are far better than this Guy.. initially i also thought he might be the person TN can look upon as an alternate but he is more dangerous than these two . at least MK has some achievements to his credit in terms of infrastructure development, with respect to JJ we can say that maintainig law and order, veeranam water etc. but this guy even before assuming power, there were allegations that he has taken some money from Congress for standing alone in TN which has helped division of anti incumbency factor.. voting for this guy is a mere waste…. voters can better vote for DMK than this guy..(even though i am not a DMK supporter, if given a choice between Vijayakanth and MK i will defintely vote for MK)

 2. Master

  The DMK and ADMAK dont want to our people to think beyong these two options. Vijayakanth also shown as a normal politician..People have to realize and analyze who is doing what and who is better!! Enough…so far we believed DMK and ADMK added to Vijayakanth…no one here to save Tamil people…thay just want to loot everything in the name of Tamil..These guys not able to save our Fisher men as well our Tamil people in Eelam… We need to have some one who is true to the people..i can say that’s MDMK under Mr.Vaiko…i see him as the true leader …Our people must come out the illution created by DMK and ADMK…Please…come out..

 3. வழிப்போக்கன்

  நீங்க ஒரு ஓசி (WordPress Powered) பிளாக்கை வச்சுகிட்டு இந்த போடு போடும் போது, 10 லட்சம் மக்களின் ஆதரவை பெற்றவர் பேச உரிமையில்லையா?

  தப்பு செய்றவங்களை நீங்க கேட்கலாம், ஆனா உங்களுக்கு பிடிக்காதவங்க கேட்ககூடதா? என்ன கொடுமை சாமி!!

 4. வழிப்போக்கன்

  sivasankar அவர்களே, விஜயகாந்தை வச்சு கலைஞர் நல்லவர்ன்னு சொல்லாதீங்க!

 5. Manoharan

  ஜெயலலிதாவுக்கும்,கருணாநிதிக்கும் தன்னை மாற்றாக இவர் வேண்டுமானால் நினைத்துக்கொள்ளலாம்.மக்கள் அப்படி நினைக்கவில்லை. புலியை பார்த்து பூனை சூடுபோட்டுக்கொண்டதாம். ரஜினி அரசியலுக்கு வராததால்,அந்த இடத்தை தான் பிடித்துக்கொள்ளலாம் என்ற பேராசையால் அரசியலுக்கு வந்தவர்தானே இவர். காவேரிப் பிரச்சனையில் திரையுலகம் நெய்வேலியில் போராட்டம் நடத்தியபோதே ஆண‌வத்தில் பேசியவர் இவர். மறுநாளே ரஜினியிடம் தோற்றுப்போனது வேறு விஷயம். ஏதோ தமிழ்நாடே இவரை அரசியலுக்கு வரச்சொன்னது போல தனக்குத்தானே உளரிக்கொண்டு வந்து விழுந்த உளறல் மகன் இவர். குடித்துவிட்டு வருகிறார் என்று ஜெ. சொன்னதுக்கு இன்று வரை இவரிடமிருந்து பதில் இல்லை. ஒருவேளை தெளிந்தபின் சொல்வாரோ ? ஜெ.போட்டியிடாததால் ஏதோ தாந்தான் எதிர்கட்சி என்று “புல்”நம்பிக்கையில் இருக்கிறார். 2011 வரை இதேபோல் ‘புல்” நம்பிக்கையில் இருக்கட்டும். அப்புறம் எல்லா டி.வியிலும் வருவார். காணாமல் போனவர்கள் வற்றிய அறிவிப்பில்….

 6. indian

  hello envazhi magazine vk faar better then other all karunanith, jj,ramadass, others too why vk do not talk about dmk. i thing this magazine dose not like vk. (marunanith and jj talk more then this many time in the poblic place)

 7. குமரன்

  சென்ற ஆண்டு ஸ்ரீராமரைப்பற்றித் தமிழக முதல்வர் உளறிய போது அவரது மகளின் பெங்களூரு வீட்டுக்கு அங்குள்ள மக்களால் வந்த அச்சுறுத்தல் காரணமாகத் தான் ஒரு முதல்வராக இருக்கும்போதே பத்து நாட்கள் இருந்து அந்த வீட்டுக்கும் மகளின், மறுமகனின் எல்லாத் தொழிலுக்கும் எல்லாவிதமான பாதுகாப்பையும் நிலைசெய்யவே திருவள்ளுவர் சிலை, சர்வக்ஞர் சிலை, கர்நாடக முதல்வருடன் ஒத்துழைப்பு என்ற ஓரங்க நாடகத்தை இப்போது கலைஞர் நடத்துகிறார்.

  இப்படி பத்து நாட்கள் பெங்களுருவில் தங்க முடிந்தவர் ஏன் காவிரிக்காகவோ, ஹொகேனக்கல்லுக்காகவோ ஒரே ஒருமுறை கூட இப்படி பெங்க‌ளூரு போய் இருந்து காரியத்தை முடிக்க முயற்சி எடுக்கவில்லை?

  ஈழத்திலே தம்ழர்கள் செத்துக்கொண்டிருக்க, தனது செல்ல மகளின் சொத்தைக் காக்கச் செல்லும் தமிழக முதல்வரை விட, விஜயகாந்தின் வீட்டுக் காவலாளி கூட மேலான தமிழனே.

 8. FUTURE DIRECTOR

  விஜயகாந்து கு எந்த தகுதியும் இல்லை என்று எப்படி கூறுகிறிர்கள் இப்போது உள்ள நிலைமையில் அ தி மு க கு அடுத்த படி நிலையான விறுவிறுப்பான எதிர்க்கட்சி விஜயகாந்த் மட்டும் தான். விஜையகந்தின் மீது என் இப்படிபடி உங்களுக்கு பயம் பொறாமை ,ofcourse சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு வந்தால் இவர் ஏன் தி முக வே காணாமல் போகலாம்,தலைவர் first அரசியலுக்கு வரட்டும் பின்பு நிங்கள் விஜயகாந்தை விமர்சிக்கலாம்,இப்போது உள்ள கல கட்டத்தில் தி மு க என்ற பிசாசை கண்டு அ தி மு க வே ஒதுங்கும் களத்தில் இவர் எதிர்த்து குரல் கொடுக்கிறார் அது உங்களுக்கு பிடிக்க vellaiya கலைஞர் யாரை பாராட்டும் அளவுக்கு அவர் சரித்திரம் ஒன்றும் நல்ல சரித்திரம் அல்ல.

 9. Ganesh.S.N.

  விஜயகாந்த் அவர்கள் நடந்துமுடிந்த தேர்தலுக்கு எங்கள் தொகுதியில் வாக்கு சேகரிக்க வந்த சமயத்தில் அவர் பேசியது :

  யாராவது, எந்த கட்சியை சேர்ந்தவாங்களாவது உங்கள பார்க்க வந்து இருக்காங்களா? வந்திருக்கமாட்டாங்க (உடனே பிராசார வேன்னின் உள்ள இருந்தவர் : நேற்று இரவு தான் ஸ்டாலின் வந்தார் என்றார்) சுதாரித்த வி.கா. “என்னை போல இந்த உச்சி வெயில்ல வந்திருக்காங்களா? வரமாட்டாங்க, வெயில் போன பிறகு தான் வந்திருப்பாங்க, என்ன்னா அவங்கயெல்லாம் நல்லா சம்பாதிச்சுட்டாங்க, அதனால தான் சொல்றேன் எனக்கு ஓட்டு போடுங்க” என்று. அதற்கு கூட்டத்தில் இருந்த விஜயகாந்த் ஆதரவாளர் ஒருவர் “அப்போ ஜெய்ச்சுட்டா நீங்க கூட அப்படி தான் வருவீங்களா தலைவா” என்று கேட்க, அதை கண்டுக்கொள்ளாமல், வேறு பக்கம் திரும்பி பேச (உளர …. ஏதோ ஒன்னு) ஆரம்பித்தார். அந்த தொண்டன் விடாமல் தலைவா இங்க பாருங்க, தலைவா இங்க பாருங்க என்றே கத்திக்கொண்டு இருந்தார், இவர் பக்கம் திரும்பி “என்ன? இந்தா பார்த்துக்க… போதுமா….. ஒன்னு என்னைய பேச விடு இல்ல நீ பேசு” என்றார்.

  இதில தொழில் ரகசியம் என்னன்னா….. கடைசி வரை கலைஞரை திட்டிக்கொண்டு தான் இருந்தாரே அன்றி இவர் என்ன செய்வார், இவர் வெற்றி பெற்றால் மக்களுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி சொல்லவேயில்ல….

 10. அட ராமா!

  இன்னும் அதிகரமில்லாத கட்சியை வைத்து கொண்டே இப்படின்ன கலைஞர் மாதிரி ஜெ ஜெ மாதிரி இருந்தால் அவ்வளவு தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *