BREAKING NEWS
Search

உலக மொழிகளில் தமிழுக்கு 15 வது இடம்!

உலக மொழிகளில் தமிழுக்கு 15 வது இடம்!

லக மொழிகளுள் தமிழுக்குக் கிடைத்துள்ள இடம் 15! ஆம்… logo_tamilஉலகின் தொன்மைச் சிறப்பு வாய்ந்த தமிழ் மொழிக்கு 15 வது இடம் தரப்பட்டுள்ளதாக மனிதவுரிமைகளுக்கான தமிழ் நிலையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய கணக்கெடுப்பின்படி உலகில் இன்று 6 ஆயிரத்து 800 மொழிகள் பேசப்படுகின்றன.

அவற்றில், 2 ஆயிரத்து 261 மொழிகள் எழுத்துருவை பெற்றுள்ளன. ஏனைய மொழிகள் பேச்சு வழக்கில் மட்டுமே உள்ளன. எழுத்துக்கள் கிடையாது.

1996 ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சர்வதேச மொழியுரிமை பிரகடனத்தின்படி ஒரு மொழியின் வரலாற்றுத் தன்மை, அதன் எல்லை, அங்கீகரிப்பு, போற்றவற்றை அடிப்படையாகக் கொண்டு மொழிகள் தரப்படுத்தப்படுகின்றன.

ஆசியாவில் மட்டும் 2 ஆயிரத்து 200 மொழிகள் பேசப்படுகின்றன. ஆப்பிரிக்காவில் 2 ஆயிரம் மொழிகளும், பசுபிக் பிராந்தியத்தில் ஆயிரத்து 300 மொழிகளும், ஐரோப்பாவில் 230 மொழிகளும் பேச்சு வழக்கில் உள்ளன.

இந்த நிலையில், உலகில் வாழும் தொன்மை மொழிகள் என்று பார்த்தால் அதில் தமிழுக்கு 15 வது இடம் கிடைத்துள்ளது.

மலேசியா, சிங்கப்பூர், தென்னாபிரிக்கா, மொரீஷியஸ், தென்னிந்தியா, இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதி, மற்றும் 1862 ம் ஆண்டு பிரிட்டன் காலணித்துவத்தைக் கொண்ட இலங்கையின் மலை நாட்டுப்பகுதி போன்ற பகுதிகளில் தமிழ் மொழியே புழக்கத்தில் இருந்துள்ளது.

வரலாற்று ரீதியாகவும் தமிழின் சிறப்பை உணர ஏராளமான சான்றுகள் உள்ளன. போர்ச்சுக்கல், நெதர்லாந்து ஐக்கிய அரசு போன்ற இடங்களில், இதற்கான சான்றுகள் இப்போதும் காணக் கிடைக்கின்றன.

அதுமட்டுமல்லாமல் சிந்து சம வெளி நாகரிக காலத்திலிருந்தே தமிழ் மொழி எழுத்துருவைப் பெற்றிருந்ததை தொல்லியல் சான்றுகள் உணர்த்துகின்றன. இந்த சிறப்புக்குரிய மொழிகள் இன்றைக்கு வெகு அரிதாகவே புழக்கத்தில் உள்ளன.

இவற்றின் அடிப்படையிலேயே தமிழுக்கு உலக மொழிகளில் 15வது இடம் தரப்பட்டுள்ளது.

தமிழுக்கு 15வது இடம் கிடைத்துவிட்டது… தமிழனுக்கு?




5 thoughts on “உலக மொழிகளில் தமிழுக்கு 15 வது இடம்!

  1. harisivaji

    மற்ற எந்த எந்த மொழிகள் நமக்கு முன்பு உள்ளன ???

  2. குமரன்

    //தமிழுக்கு 15வது இடம் கிடைத்துவிட்டது… தமிழனுக்கு?///

    உங்கள் இன்னொரு கட்டுரையின் தலைப்புதான் ….

    மரணக்குழிகள் காத்திருக்கின்றன!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *