BREAKING NEWS
Search

உலகம் முழுக்க உள்ள தமிழர் எண்ணிக்கை எவ்வளவு?


உலகம் முழுக்க உள்ள தமிழர் எண்ணிக்கை எவ்வளவு?

-மறவன் புலவு சச்சிதானந்தம்

லகெங்கும் பரந்து வாழும் தமிழர் தொகையைக் கணக்கெடுக்க, உங்கள் பங்களிப்பைக் கோருகிறோம்.

நீங்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அந்த நாட்டில் எத்தனை தமிழர் வாழ்கிறீர்கள் என்பதை அடிக்கடி உங்களுக்குள்ளேயே கேட்டுக் கொள்வீர்கள்.

இந்தக் கணிப்பு அந்தந்த நாடுகளில் வாழும் தமிழரின் குரலோசைக்கு வலிமை தருவதாகும்.

தேசிய மொழிகள் நான்கனுள் ஒன்றாக, தமிழும் சிங்கப்பூரில் இருப்பதற்கு, அந்நாட்டு மக்கள் தொகையுள் 7% தமிழராக இருப்பதும் காரணம்.

மொரிசியசில் நாணயத் தாள்களில் தமிழ் வரிகள் உள்ளன எனில் அங்குள்ள மொத்த மக்கள் தொகையில் 10% தமிழராக இருப்பதும் காரணம்.

அண்மையில் ஜனனி ஜனநாயகம் என்ற இளந்தமிழ்ப் பெண் தமிழர் வாக்குகளை நம்பி, ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்குப் போட்டியிட்டார்.

ஆஸ்திரேலியாவில் சிட்னியில் இரு நகராட்சிகளில் தகவல்கள் தமிழிலும் அச்சிட்டு வழங்குமளவுக்கு அந்த நகராட்சிகளில் கணிசமான தொகையினராகத் தமிழர் உள்ளதே காரணம்.

இவ்வாறாக, உலக வளர்ச்சிக்குத் தமிழர் பங்களித்து வரும் வேளையில் எந்தெந்த நாட்டில் எவ்வெவ்வளவு தமிழர் வாழ்கின்றனர் என்ற மதிப்பீடு, உலக வளர்ச்சியில் தமிழரின் பங்களிப்பை மதிப்பிட உதவும்.

உலகில் 235 ஆட்சிப் புலங்கள் இருக்கின்றன.

பின்வரும் 39 புலங்களும் வேற்று நாடடுக்கு அடிமை நாடுகளாகவே தொடர்கின்றன.

அடிமைப் புலம் ஆதிக்க நாடு அடிமைப் புல ஆங்கிலப் பெயர்
குவாம் அமெ. Guam
சமோவா, அமெரிக்க அமெ. American Samaoa
புயெட்டோ றிக்கோ அமெ. Puerto Rico
மரியானாத் தீவுகள், வட அமெ. Northern Mariana Islands
வெர்ஜின் தீவுகள் அமெ. Virgin Islands
கிறீன்லாந்து கலாலித் நுனாத் டென். Greenland Kalalit Nunaat
பரோ தீவுகள் டென். Faeroe Islands
குக் தீவுகள் நியுசீ. Cook Islands
தொக்கேலாவு தீவுகள் நியுசீ. Tokelau Islands
நிய்யு நியுசீ. Niue
அருபா நெதர். Aruba
அன்ரில்லிஸ் நெதர். Antilles
குவாடிலோப் பிரா. Guadeloupe
நியு கலிடோனியா பிரா. New Caledonia
பியேரி-மிக்கலோன் தீவுகள் பிரா. Pierre and Miquelon Islands
பிரெஞ்சு கயானா பிரா. French Guyana
பொலினீசியா பிரா. French Polynesia
மார்ற்றினிக் பிரா. Martinique
மெயோற்றே பிரா. Mayotte
வலிஸ்-பியுடுனா பிரா. Wallis and Futuna Islands
றியுனியன் பிரா. Reunion
கேமான் தீவுகள் பிரி. Cayman Islands
சானல் தீவுகள் பிரி. Channel Islands
சென் ஹெலனா தீவு பிரி. Saint Helena Islands
துருக்க கைகோஸ் பிரி. Turks and Caicos Islands
பாக்லாந்து தீவுகள் பிரி. Falkland Islands Malvinas
பிற்கெய்ர்ன் தீவுகள் பிரி. Pitcairn Islands
பெர்முடா பிரி. Bermuda
மான் தீவு பிரி. Isle of Man
மொன்ற்செறற்று பிரி. Montserrat
வெர்ஜின் தீவுகள் பிரி. Virgin Islands
ஜிப்றால்ரர் பிரி. Gibraltor
ஜோர்ஜியா-சாண்ட்விச் தீவுகள் பிரி. Georgia and Sandwitch Islands
அசோறெஸ் போர்த். Azores
மடெயிரா போர்த். போர்த். Madeira
சஹாரா, மேற்கு மொறொ. Western Sahara
கனறி தீவுகள் ஸ்பெ. Canary Islands
செயூட்டா ஸ்பெ. Seyuta
மெலில்லா ஸ்பெ. Mellilla

இவற்றுள் பசிபிக் தீவிலுள்ள நியுகலிடோனியாவுக்கு 2010இல் விடுதலை வழங்கப் பிரான்சு ஒப்புக் கொண்டுள்ளது.

பின்வரும் 196 நாடுகளும் இறைமையும் தன்னாதிக்கமும் உடைய நாடுகள்.

இறைமையும் தன்னாதிக்கமும் உடைய 196 நாடுகள்
தமிழில் பெயர் ஆங்கிலத்தில்
அங்கோலா Angola
அண்டொரா Andorra
அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள் United States of America
அயர்லாந்து Ireland
அர்ஜென்ரினா Argentina
அல்பேனியா Albania
அல்ஜீரியா Algeria
அன்ரிகுவா-பார்புடா Antigua and Barbuda
அஸெர்பைஜன் Azerbaijan
ஆப்கானிஸ்தான் Afganistan
ஆர்மினியா Armenia
ஆஸ்திரியா Austria
ஆஸ்திரேலியா Australia
இத்தாலி Italy
இந்தியா India
இந்தோனீசியா Indonesia
இலங்கை Sri Lanka
இஸ்ரேல் Israel
ஈகுவடோர் Ecuador
ஈகுவரோறியல் கினீயா Equatorial Guinea
ஈராக் Iraq
ஈரான் Iran
உக்ரெயின் Ukraine
உகண்டா Uganda
உருகுவே Uruguay
உஸ்பெகிஸ்தான் Uzbekistan
எகிப்து Egypt
எதியோப்பியா Ethiopia
எமிரேட்ஸ், ஐக்கிய அரபு United Arab Emirates
எரித்திரியா Eritrea
எல்சால்வடோர் El Salvador
எஸ்ரோனியா Estonia
ஐவரி கோஸ்ற் Cote’ d’ Ivoire
ஐஸ்லாந்து Iceland
ஓமான் Oman
கபோன் Gabon
கம்பூசியா Cambodia
கமரூன் Cameroon
கயானா Guyana
கனடா Canada
கஸாக்ஸ்தான் Kazakhstan
காட்டார் Qatar
காம்பியா Gambia
கானா Ghana
கியூபா Cuba
கிர்கிஸ்தான் Kyrgyzstan
கிரிபாத்தி Kiribati
கிரேக்கம் Greece
கிறெனடா Grenada
கினீயா Guinea
கினீயா பிஸ்ஸாவ் Guinea-Bissau
குரோசியா Croatia
குவாதமாலா Guatemala
குவைத் Kuwait
கென்யா Kenya
கேப் வெர்டே Cape Verde
கொங்கோ Congo
கொங்கோ சயர் Congo – Zaire
கொசோவோ Kosovo
கொமொறொஸ் Comoros
கொரியா,தென் South Korea
கொரியா, வட North Korea
கொலம்பியா Colombia
கோஸ்ரா றிக்கா Costa Rica
சமோவா Samoa
சவூதி அரேபியா Saudi Arabia
சாஓதோமே பிரின்சிப்பே Sao Tome and Pincipe
சாட் Chad
சாம்பியா Zambia
சான் மறினோ San Marino
சிங்கப்பூர் Singapore
சிம்பாப்வே Zimbabwe
சியாரா லியோன் Sierra Leone
சிரியா Syria
சிலி Chile
சீசெல்சு Seychelles
சீனா China
சுரினாம் Suriname
சுலோவாக்கியா Slovakia
சுலோவேனியா Slovenia
சுவாசிலாந்து Swaziland
சுவிற்சர்லாந்து Switzerland
சுவீடன் Sweden
சூடான் Sudan
செக் Czech
செர்பியா Serbia
சென் கிற்ஸ்-நெவிஸ் Saint Kitts and Nevis
சென் லூசியா Saint Lucia
சென் வின்சென்ற்-கிறெனடயின்ஸ் Saint Vincent and the Grenadines
செனகல் Senagal
சைப்ரஸ் Cyprus
சொலமன் தீவுகள் Solomon Islands
சோமாலியா Somalia
டென்மார்க் Denmark
டொமினிகன் குடியரசு Dominican Republic
டொமினிகா Dominica
தஜிக்கிஸ்தான் Tajikistan
தாய்லாந்து Thailand
தான்சானியா Tanazania
துர்க்மெனிஸ்தான் Turkmenistan
துருக்கி Turkey
துவாலு Tuvalu
துனீசியா Tunisia
தென் ஆபிரிக்கா South Africa
தைமூர் கிழக்கு Timor Leste
தைவான் Taiwan
நடு ஆபிரிக்க அரசு Central African Repulic
நமீபியா Namibia
நவுறு Nauru
நிகாரகுவா Nicaragua
நியுசிலாந்து New Zealand
நெதர்லாந்து Netherlands
நேபாளம் Nepal
நைஜர் Niger
நைஜீரியா Nigeria
நோர்வே Norway
பராகுவே Paraguay
பல்கேரியா Bulgaria
பனாமா Panama
பஹ்ரெயின் Bahrain
பஹாமாஸ் Bahamas
பாகிஸ்தான் Pakistan
பாபுவா-நியுகினீயா Papua-New Guinea
பார்படாஸ் Barbados
பாலஸ்தீனம் Palestine
பிரான்ஸ் France
பிரிட்டன் United Kingdom
பிரேசில் Brazil
பிலிப்பைன்ஸ் Philippines
பின்லாந்து Finland
பிஜி Fiji
புறுண்டி Burundi
புறுணை Brunei
பூடான் Bhutan
பெரு Peru
பெல்ஜியம் Belgium
பெலாருஸ் Belarus
பெலாவு Palau Belau
பெலிஸ் Belize
பெனின் Benin
பொலிவியா Bolivia
பொற்சுவானா Botswana
பொஸ்னியா-ஹெர்சகோவினா Bosnia and Herzegovina
போர்த்துக்கல் Portugal
போலாந்து Poland
மங்கோலியா Mongolia
மசிடோனியா Macedonia
மடகாஸ்கர் Madagascar
மலாவி Malawi
மலேசியா Malaysia
மார்ஷல் தீவுகள் Marshall Islands
மால்ரா Malta
மாலி Mali
மாலை தீவு Maldives
மியான்மா Myanmar
மெக்சிகோ Mexico
மைக்குரோனேசியா Micronesia
மொசாம்பிக் Mozambique
மொல்டோவியா Moldovia
மொறிசியசு Mauritius
மொறித்தானியா Mauritania
மொறொக்கோ Morocco
மொன்ரெநீகிரோ Montenegro
மொனாகோ Monaco
யப்பான் Japan
யேமன் Yemen
ரினிடாட்-ரொபாகோ Trinidad and Tobago
ரொங்கா Tonga
ரோகோ Togo
ரோமானியா Romania
லக்செம்போர்க் Luxembourg
லற்வியா Latvia
லாவோஸ் Lao
லிதுவானியா Lithuania
லிபியா Libya
லெசொத்தோ Lesotho
லெபனன் Lebanon
லைச்ரென்ஸ்ரெயின் Liechtenstein
லைபீரியா Liberia
வங்காள தேசம் Bangladesh
வத்திக்கான் நகர் Vatican City
வனுவத்து Vanuatu
வியற்னாம் Viet Nam
வெனிசுலா Venezuela
றுவாண்டா Rwanda
ஹங்கேரி Hungary
ஹைதி Haiti
ஹொண்டுறஸ் Honduras
ஜமைக்கா Jamaica
ஜிபுற்றி Djibouti
ஜெர்மனி Germany
ஜோர்டான் Jordan
ஜோர்ஜியா Georgia
ஸ்பெயின் Spain

இவற்றுள், கொசோவோ, தைவான், பாலஸ்தீனம், வத்திக்கான் நகர், ஆகிய நான்கும் ஐநா. உறுப்புரிமை பெறாதவை. எஞ்சிய 192 நாடுகளும் ஐநா. உறுப்புரிமை பெற்றவை.

இந்த 235 ஆட்சிப் புலங்களிலும் தமிழ் மரபு பேணுவோர் எத்தனை ஆட்சிப் புலங்களில் வாழ்கின்றனர்?

ஒவ்வொரு நாட்டிலும் எத்தனை பேர் வாழ்கின்றனர்?

தோராயமாகவாவது கணக்கு உண்டா?

இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் வாழும் தமிழர் தொகை பற்றிய கணக்கு எவரிடமும் உண்டா?

4 புலங்களில் / 149 நாடுகளில் ஆக 153 புலங்கள் / நாடுகளில் வாழும் 93,805,905 (ஒன்பது கோடியே முப்பத்து எட்டு லட்சத்து ஐந்து ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐந்து) தமிழர் பற்றிய பட்டியலைத் தயாரித்தேன்.

இப்பட்டியல் தவறுகள் நிறைந்த பட்டியல் என்பதை முன்கூட்டியே தெரிவித்து, தவறுகளைத் திருத்த முன்வருமாறு உங்கள் அனைவரையும் கேட்கிறேன்.

மொத்த மக்கள் தொகை விவரம் ஐநா. மக்கள் தொகை அமைப்புத் தந்ததாம்.

நாட்டின் பெயர் தமிழ் அகர வரிசையில் தமிழில், அங்கு வாழும் தமிழர் தொகை (2008ஆம் ஆண்டு டிசம்பர் வரையிலான மதிப்பீடு) பின்னர் ஆங்கிலத்தில், அந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை (2008ஆம் ஆண்டு டிசம்பர் வரையிலான மதிப்பீடு), என்பன தந்துள்ளேன்.

முதலில் 149 நாடுகளைப் பார்ப்போம்.

எண் நாடு தமிழர் எண்ணிக்கை ஆங்கிலப் பெயர் மொத்த மக்கள் தொகை
1 அங்கோலா 10 Angola 18,498,000
2 அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள் 200,000 United States of America 314,659,000
3 அயர்லாந்து 2,000 Ireland 4,515,000
4 அர்ஜென்ரினா 100 Argentina 40,276,000
5 அல்ஜீரியா 100 Algeria 34,895,000
6 அன்ரிகுவா-பார்புடா 1,000 Antigua and Barbuda 88,000
7 ஆப்கானிஸ்தான் 100 Afganistan 28,150,000
8 ஆர்மினியா 300 Armenia 3,083,000
9 ஆஸ்திரியா 1,500 Austria 8,364,000
10 ஆஸ்திரேலியா 100,000 Australia 21,293,000
11 இத்தாலி 5,000 Italy 59,870,000
12 இந்தியா 81,000,000 India 1,198,003,000
13 இந்தோனீசியா 300,000 Indonesia 229,965,000
14 இலங்கை 6,000,000 Sri Lanka 20,238,000
15 இஸ்ரேல் 100 Israel 7,170,000
16 ஈராக் 1,000 Iraq 30,747,000
17 ஈரான் 500 Iran 74,196,000
18 உகண்டா 100 Uganda 32,710,000
19 உக்ரெயின் 500 Ukraine 45,708,000
20 உஸ்பெகிஸ்தான் 300 Uzbekistan 27,488,000
21 எகிப்து 1,000 Egypt 82,999,000
22 எதியோப்பியா 100 Ethiopia 82,825,000
23 எமிரேட்ஸ், ஐக்கிய அரபு 200,000 United Arab Emirates 4,595,000
24 எரித்திரியா 100 Eritrea 5,073,000
25 எல்சால்வடோர் 100 El Salvador 6,163,000
26 எஸ்ரோனியா 500 Estonia 1,340,000
27 ஐஸ்லாந்து 25 Iceland 323,010
28 ஓமான் 50,000 Oman 2,845,000
29 கம்பூசியா 1,000 Cambodia 14,805,000
30 கயானா 10,000 Guyana 762,000
31 கனடா 300,000 Canada 33,573,000
32 கஸாக்ஸ்தான் 100 Kazakhstan 15,637,000
33 காட்டார் 10,000 Qatar 1,409,000
34 கானா 500 Ghana 23,837,000
35 கியூபா 100 Cuba 11,204,000
36 கிர்கிஸ்தான் 100 Kyrgyzstan 5,482,000
37 கிரிபாத்தி 25 Kiribati 98,000
38 கிரேக்கம் 10,000 Greece 11,161,000
39 கினீயா 1,000 Guinea 10,069,000
40 கினீயா பிஸ்ஸாவ் 100 Guinea-Bissau 1,611,000
41 குரோசியா 100 Croatia 4,416,000
42 குவாதமாலா 100 Guatemala 14,027,000
43 குவைத் 10,000 Kuwait 2,985,000
44 கென்யா 300 Kenya 39,802,000
45 கொங்கோ சயர் 25 Congo – Zaire 66,020,000
46 கொமொறொஸ் 100 Comoros 676,000
47 கொரியா, வட 100 North Korea 23,906,000
48 கொரியா,தென் 500 South Korea 48,333,000
49 கொலம்பியா 500 Colombia 45,660,000
50 சமோவா 100 Samoa 179,000
51 சவூதி அரேபியா 50,000 Saudi Arabia 25,721,000
52 சாம்பியா 2,500 Zambia 12,935,000
53 சான் மறினோ 25 San Marino 31,000
54 சிங்கப்பூர் 300,000 Singapore 4,737,000
55 சிம்பாப்வே 250 Zimbabwe 12,523,000
56 சியாரா லியோன் 1,000 Sierra Leone 5,696,000
57 சிரியா 500 Syria 21,906,000
58 சிலி 100 Chile 16,970,000
59 சீசெல்சு 9,000 Seychelles 84,000
60 சீனா 5,000 China 1,353,311,000
61 சுரினாம் 130,000 Suriname 520,000
62 சுலோவாக்கியா 100 Slovakia 5,406,000
63 சுலோவேனியா 100 Slovenia 2,020,000
64 சுவாசிலாந்து 5,000 Swaziland 1,185,000
65 சுவிற்சர்லாந்து 60,000 Switzerland 7,568,000
66 சுவீடன் 12,000 Sweden 9,249,000
67 சூடான் 100 Sudan 42,272,000
68 செக் 100 Czech 10,369,000
69 செர்பியா 200 Serbia 9,850,000
70 செனகல் 25 Senagal 12,534,000
71 சைப்ரஸ் 500 Cyprus 871,000
72 சோமாலியா 25 Somalia 9,133,000
73 டென்மார்க் 15,000 Denmark 5,470,000
74 தஜிக்கிஸ்தான் 100 Tajikistan 6,952,000
75 தாய்லாந்து 10,000 Thailand 67,764,000
76 தான்சானியா 250 Tanazania 43,739,000
77 துர்க்மெனிஸ்தான் 50 Turkmenistan 5,110,000
78 துருக்கி 500 Turkey 74,816,000
79 துனீசியா 100 Tunisia 10,272,000
80 தென் ஆபிரிக்கா 750,000 South Africa 50,110,000
81 தைவான் 100 Taiwan 25,300,000
82 நமீபியா 25 Namibia 2,171,000
83 நவுறு 100 Nauru 10,000
84 நியுசிலாந்து 30,000 New Zealand 4,266,000
85 நெதர்லாந்து 12,000 Netherlands 16,592,000
86 நேபாளம் 500 Nepal 29,331,000
87 நைஜர் 25 Niger 15,290,000
88 நைஜீரியா 2,500 Nigeria 154,729,000
89 நோர்வே 15,000 Norway 4,812,000
90 பராகுவே 25 Paraguay 6,349,000
91 பல்கேரியா 200 Bulgaria 7,545,000
92 பனாமா 500 Panama 3,454,000
93 பஹ்ரெயின் 7,000 Bahrain 791,000
94 பஹாமாஸ் 200 Bahamas 342,000
95 பாகிஸ்தான் 1,000 Pakistan 180,808,000
96 பாபுவா-நியுகினீயா 500 Papua-New Guinea 6,732,000
97 பார்படாஸ் 1,000 Barbados 256,000
98 பாலஸ்தீனம் 200 Palestine 3,336,000
99 பிரான்ஸ் 50,000 France 62,343,000
100 பிரிட்டன் 300,000 United Kingdom 61,565,000
101 பிரெஞ்சு கயானா பிரா. 1,000 French Guyana 170,000
102 பிரேசில் 100 Brazil 193,734,000
103 பிலிப்பைன்ஸ் 200 Philippines 91,983,000
104 பின்லாந்து 3,000 Finland 5,326,000
105 பிஜி 125,000 Fiji 849,000
106 புர்கினோ பாசோ 100 Burkina Faso 15,757,000
107 புறுணை 1,500 Brunei 400,000
108 பூடான் 100 Bhutan 697,000
109 பெர்முடா பிரி. 100 Bermuda 63,000
110 பெரு 100 Peru 29,165,000
111 பெல்ஜியம் 12,000 Belgium 10,647,000
112 பொலிவியா 1,000 Bolivia 9,863,000
113 பொற்சுவானா 1,000 Botswana 1,950,000
114 போர்த்துக்கல் 500 Portugal 10,707,000
115 போலாந்து 500 Poland 38,074,000
116 மசிடோனியா 100 Macedonia 2,042,000
117 மலாவி 500 Malawi 15,263,000
118 மலேசியா 2,250,000 Malaysia 27,468,000
119 மால்ரா 100 Malta 409,000
120 மாலி 250 Mali 13,010,000
121 மாலை தீவு 2,000 Maldives 309,000
122 மியான்மா 600,000 Myanmar 50,020,000
123 மெக்சிகோ 3,000 Mexico 109,610,000
124 மொல்டோவியா 25 Moldovia 3,604,000
125 மொறிசியசு 126,000 Mauritius 1,288,000
126 மொறித்தானியா 100 Mauritania 3,291,000
127 மொறொக்கோ 100 Morocco 31,993,000
128 மொனாகோ 50 Monaco 33,000
129 யப்பான் 200 Japan 127,156,000
130 யேமன் 500 Yemen 23,580,000
131 ரஷ்யா 5,000 Russia 140,874,000
132 ரினிடாட்-ரொபாகோ 100,000 Trinidad and Tobago 1,339,000
133 லக்செம்போர்க் 1,000 Luxembourg 486,000
134 லற்வியா 500 Latvia 2,249,000
135 லாவோஸ் 1,000 Lao 6,320,000
136 லிதுவானியா 100 Lithuania 3,287,000
137 லிபியா 500 Libya 6,420,000
138 லெசொத்தோ 500 Lesotho 2,067,000
139 லெபனன் 5,000 Lebanon 4,224,000
140 லைபீரியா 500 Liberia 3,955,000
141 வங்காள தேசம் 1,000 Bangladesh 162,221,000
142 வத்திக்கான் நகர் 20 Vatican City 1,000
143 வியற்னாம் 3,000 Viet Nam 88,069,000
144 ஜமைக்கா 30,000 Jamaica 2,719,000
145 ஜிபுற்றி 1,000 Djibouti 864,000
146 ஜெர்மனி 40,000 Germany 82,167,000
147 ஜோர்டான் 4,000 Jordan 6,316,000
148 ஜோர்ஜியா 25 Georgia 4,260,000
149 ஸ்பெயின் 500 Spain 44,940,000

விடுதலை பெறா ஆட்சிப் புலங்கள் நான்கைப் பார்ப்போம்.

1 சானல் தீவுகள் பிரி. 25 Channel Islands 145,000
2 நியு கலிடோனியா பிரா. 500 New Caledonia 250,000
3 றியுனியன் பிரா. 500,000 Reunion 782,000
4 ஜிப்றால்ரர் பிரி. 25 Gibraltor 27,000

தமிழர் தொகை பற்றிய இந்தக் கணிப்பு மேலும் திருத்தம் பெற நீங்கள் உதவலாம். உங்களுக்குத் தெரிந்தவருக்கு இந்த விவரம் தெரியலாம். விசாரித்துஉதவுக. நீங்கள் வாழும் நாடு மட்டுமல்ல, பிற நாடுகளின் விவரங்களையும் திரட்டலாம்.

தகவல்: பால்பழனி

ஆதாரம்: சென்னை ஆன்லைன்




11 thoughts on “உலகம் முழுக்க உள்ள தமிழர் எண்ணிக்கை எவ்வளவு?

  1. கிரி

    உலகம் முழுவதும் பரவி இருக்கிறார்களே! ஆச்சர்யமாக உள்ளது

  2. Mrs. Mary

    I am proudly to say that I’m the first tamil woman since 1983 ans other tamil man before me and Eelam tamis around +- 20-22.Now including IT tamils, who came to work for short times are around 50-70.Permanent tamils living here are below 50 including eelam tamils.I am the senior most tamil in this country. According to your estimation is completey wrong. Do you know Luxembourg is a small country in Europe(EU Country), with a population of 5 lakhs. Really to know our tamils are spread around the world. Wonderful!!! job you have done. Felicitation. Mary, from Luxembourg.

  3. Valam

    Ulagileye manamketta Thamizhargal Thamizhnattu Thamizhargal yenbathu kosuru thaval. 1/4 plate biriyanikkum, 100 rubaikum oottu pottu nattai kedukkum, sagotharanai kattikodukkum, Yaarpatriyu kavalaipadamal panam yendral pinathai thinnum eena Thamizhan.

  4. ss

    I can comment on Puerto Rico, because I had been there.. This island was found by Christopher Columbus and became Spanish colony. Since then, till the Spanish loosing to America in a war, it was under Spain control. Later Spain gave this island to USA.

    USA wanted to make it as part of the country by offering Statehood. Puerto Rican people did not like it and wanted independent identity. US governement agreed and Puerto Rico has become one of the US Territories, like Andamans, Lakshwdeep islands in India.

    So, one can not call it as “slave country” to USA but very much part of USA. People living there are US citizens since birth and occupying senior positions in US government including US Military. The latest announcement of US Supreme Court first Women Judge is from Puerto Rico. Spanish is the language in Puerto Rico till now and in some places one can not communicate with out spanish (like in deep root village in Tamil Nadu)

    Becoming a State of US is something a talk going in Puerto Rico for decades. There are three political parties with agenda 1. Separate country 2. Maintain current status 3. Become US state respectively. The recent election in Nov 2008 has seen victory of party propagating to become full statehood with in USA, which means people preferences are to be part of USA as a state.

    Your statistics are good but please provide most accurate information as it may mislead who read it.

  5. palanikumar

    hello valam,
    i m kumar from madurai in tamilnadu, i m fain, you?
    ungal karuthu ennai mekaum vethanai batithiyathu. tamilnadu tamilan anaivarum
    appaty illai, tamilanai thakka “india army” uthavi pornthathai arinthu
    “india army” vakanathai (covai) thee vaithu koolithiyathum thamilnadu tamilan than…..
    ippatekgu unmai,unarum,suyamariyathaium ulla tamilan
    context me:kummm9@yahoo.ca

  6. முனைவார் துரை.மணிகண்டன்

    அருமையான பதிவு.நான் உலக நாடுகளில் தமிழ் மக்கள் தொகை எவ்வளவு இருக்கும்மென்று தேடியபோது என்வழி தனிவழி என்று தோன்றியது. உள் வந்து பார்ந்தால் அப்பா அப்பா எவ்வளவு செய்திகள். உங்கள் இந்த பணிக்கு என் வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    முனைவர் துரை.மணிகண்டன்.

  7. jathu

    மிகவும் சந்தோசமாக இருக்கிறது நாம் எல்லோரும் ஒரு இடத்தில் இருந்தால் நம் விதிய மாற்றலாம்

  8. jathu

    நாம் உலகில் ஒன்பது கோடி பேர் இருகுரோம் நாம் பல நாடுகளில் வியபிதிருந்தும் நமக்கு என்று ஒரு நாடு இல்லை நாம் பல இடங்களில் பிரிந்து சென்றதால தான ?

  9. kalaiselvam

    மியாமா தமிழரி என்னிகை 10 லட்சம் பேர்கள் உள்ளது
    மியாமா தமிழனின் வரலாறு

    இந்து என்ற சொல்லால் கனக்கு மாரிபோகின்றது

    Myanmar tamilan nin history of kings

    ျမန္မာ tamilan သိထားသင့္ ေသာ သမိုင္း……………..

    மகா சோழ சாம்ராஜ்யம் பர்மாவில் (மியன்மார் )
    கிபி 1024 இல் இராஜராஜ சோழனின் மகனான இராஜேந்திர சோழனின் பேரன் சொக்கடே பெரும்படையுடன் (கப்பற்படை) தென் பர்மாவை (மியன்மாரை) வந்தடைந்தான் .
    இன்றைய இரங்கூன் நகரை அழித்தொழித்து தென்பர்மாவைக் கைப்பற்றினான்.
    அவனுக்குப்பின்னர் அவனது இளைய சகோதரன் அனுருத்த அல்லது அனவர்த்த எனப்படுபவனால் 1079 வரை பர்மா ஆளுகைக்கு உட்படதாகப் பதிவுகள் காணப்படுகின்றன .
    ஆக அந்தக்கலப்பகுதிகளில் பர்மாவில் சைவ பௌத்த ஆலயங்கள் நிறுவப்பட்டன.
    அதன்பின்னரும் தமிழர்கள் அல்லாத மன்னர்களாலும் பௌத்த ஆலயங்கள் நிறுவப்பட்டன.

    1870 களில் ஆங்கிலேயர்களால் தமிழ்நாட்டிலிருந்து தமிழர்கள் புகையிரதப் பாதைகள் , சுரங்கங்கள் அமைத்தல் நடவடிக்கைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர் என்று சொல்லப்பட்டாலும் , உண்மையில் திட்டமிட்டு பஞ்சம் ஏற்படுத்தப்பட்டு , முகவர்குழுக்கள் உருவாக்கப்பட்டு அவர்களைப்பயன்படுத்தி ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்டனர்.
    அடிமைகள்போல் நடத்தப்பட்டு கடுமையான வேலை வாங்கப்பட்டு , ஒருவேளை மட்டுமே உணவு வழங்கப்பட்டு இலட்சக்கணக்கில் தமிழர்கள் மரணிக்க நேர்ந்தது.
    எஞ்சியோர் பர்மாவில் குடியேறினார்கள்.
    மேலும் சில தமிழர்கள் வியாபாரம் செய்யவெனவும் , வேலை செய்யவெனவும் பர்மாவில் வந்து குடியேறினார்கள்.
    ஆங்கிலேயர்களின் ஆட்சியில் பர்மா இருந்தவரை தமிழர்களின் நிலை அபரீதமாக உயர்வடைந்து வந்தது. பர்மாவின் பொருளாதாரம் தமிழர்களின் கையில் வந்தது.
    இந்த நிலை 1942 இல் ஜப்பான் உள்நுழையும் வரை நீடித்தது.
    1942 இல் பிரித்தானியா பர்மாவை விட்டு பின்வாங்கியது.

    ஜப்பான் படைகளின் பின்புலத்துடன் பர்மியர்களால் தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. ஒருநாளைக்கு 500-800 தமிழர்கள் கொல்லப்பட்டதாகப் பதிவுகள் காணப்படுகின்றன. தமிழர்கள் அகதிகள் ஆகினர் . இந்தியாவுக்கு சுமார் மூன்று இலட்சம் அகதிகள் தப்பி வந்தார்கள். சுமார் மூன்று நான்குமாத நடைப்பயணத்தில் காட்டு வழிகளில், மலைகளில் , ஆறுகளில் இறந்து போனவர்கள் இதைவிட அதிகம்.

    மீண்டும் ஒருசில ஆண்டுகளில் பர்மிய இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. நாட்டு மக்களின் சொத்துக்கள் அனைத்தும் நாட்டுடமை ஆக்கியது. இதனால் உண்மையிலேயே இழந்தவர்கள் தமிழர்கள் . அவர்களின் சொத்துக்கள் அனைத்தும் ஒரே இரவில் நாட்டுடமை ஆனது.

    இன்று தமிழர்கள் சாதாரண விவசாயிகள் அல்லது கூலித் தொழிளார்கள்.
    சுமார் பத்து இலட்சம் ஏழைத் தமிழர்கள் பர்மாவில் வாழ்கிறார்கள். இவர்கள் கோயில்களில் தமிழ் வகுப்புக்களை நடத்தி தமிழ் வளர்க்க பாடுபடுகிறார்கள்.
    1870 தொடக்கம் கட்டப்பட்ட கோயில்கள் நூற்றுக்கணக்கில் காணப்படுகின்றன.
    வறுமை நிலையிலும் தமிழ் வளர்க்கப் படாதபாடு படுகிறார்கள் . அதுவே இவர்களின் சிறப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *