BREAKING NEWS
Search

உலகம் சுத்தலாம் வாங்க! – புதிய பகுதி

பயணங்களே நல்ல படிப்பினைகள்!

யணங்கள் சுகமானவை மட்டுமல்ல… சுவாரஸ்யமான பல பாடங்களைத் தருபவையும் கூட.

பல நாட்டு சரித்திரங்களின் முக்கிய ஆதாரமே பயணக் குறிப்புகள்தான். யுவான் சுவாங், பாஹியான், பதூதா போன்ற வெளிநாட்டுப் பயணிகளே இன்றைய இந்தியாவின் உண்மையான வரலாறு, மக்களின் வாழ்க்கைச் சூழல், அரசியல் கட்டமைப்பு முறைகளை குறிப்புகளாக எழுதி வைத்துச் சென்றார்கள். இல்லாவிட்டால் நமக்கு அசோகர் மரம் நட்டதும் தெரியாது, ராஜேந்திரன் ஈழத்தை வென்றதும் தெரியாமல் போயிருக்கும்.dsc011941

நம் நண்பர் ஒருவர் இருக்கிறார்… எங்கள் ஊரிலேயே முதல்முதலாக எம்.பில் வரை படித்தவர் என்ற பெருமை அவருக்கு உண்டு.

நேரம் கிடைத்தால் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டே இருப்பார். அது ஆயிரம் இரண்டாயிரம் கிலோ மீட்டர்கள் தாண்டினாலும் அவருக்குக் கவலையில்லை. அவருக்குத் தேவையெல்லாம் பேச்சுத் துணைக்கு ஒரு ஆள். அவ்வளவுதான். மாதமெல்லாம் சுற்றிவிட்டு ஒரு நாள் வேறு ஆளாகத் திரும்பி வந்து நாள்கணக்கில் எழுத உட்கார்ந்து விடுவார்.

அப்படி அவர் சொல்லித்தான் கொல்லி மலையும், அதன் உள்ளே அடங்கியுள்ள சித்தர் ரகசியங்களும், சித்தன்னவாசலும், மாமண்டூர் குகைக் கோயில்களையும் நேரில் பார்த்து வியந்தோம்.

கல்லூரி நாட்களில், திருப்பத்தூரிலிருந்து ஏற்காட்டுக்கு சைக்கிளிலே சுற்றுலா கிளம்ப வைத்தவர் அவர்தான். ஒரு கோடை நாளின் பின்னிரவில், நிலவொளியில் 7 நண்பர்கள் இணைந்து ஏற்காட்டுக்குப் பயணமானதும்,  இருபுறமும் அடர்ந்த மூங்கில் காடுகள் நிறைந்த சேர்வராயன் மலையடிவாரத்தில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பயணப்பட்டதும் இப்போது நினைத்தாலும் புதிய அனுபவமாகவே தோன்றுகிறது.

எழுத்தாளர் அமரர் தி ஜானகிராமனும் சிட்டியும் காவிரி உற்பத்தியாகும் தலைக்காவிரியில் தொடங்கி, கடலுடன் கலக்கும் பூம்புகார் வரை நடைபயணம் மேற்கொண்டனர். அதையே பின்னர் ‘நடந்தாய் வாழி காவேரி’ என எழுதினர். அந்த அனுபவங்கள் சொன்ன விஷயங்கள், அதுவரை பலரும் அறியாதவை.

ஜானகிராமனையும் சிட்டியையும் முன்னோடிகளாக வைத்துக் கொண்டு, ஒரு முறை நாம் பிறந்த மாவட்டத்தில் ஓடும் பாலாற்றங்கரையோரம் ஒரு பயணம் மேற்கொண்டால் என்ன என்ற யோசனை வந்தது. அப்படி ஒரு பயணத்தின்போதுதான், இயற்கையை மனிதன், குறிப்பாக தமிழன் எந்த அளவு சின்னா பின்னப்படுத்தி வைத்திருக்கிறான் என்ற உண்மை புரிந்தது. ‘பாழாறு’ என்ற தொடர் கட்டுரையை எழுதவும் காரணமாக அமைந்தது அந்தப் பயணம்.

ஒவ்வொரு பயணமும் தொடங்கும் வரை சோம்பேறித்தனமாகவும், துவங்கிய பின் சுகமான அனுபவங்களாகவும் மாறிவிடுபவை.

நிறைய பணம், கிரெடிட் கார்டு, ஏகப்பட்ட பொருட்களுடன்தான் பயணம் செய்ய வேண்டும் என்றில்லை. குறைந்த பட்ச தேவைகளுக்கான பணம் மட்டும் இருந்தால் போதும்… இயற்கையோடு இணைந்து வாழ இப்போதும் இங்கே இடங்கள் இருக்கின்றன.

காதலியோடு போனால்தான் தாஜ்மகாலை ரசிக்க முடியுமாம் என நண்பர்கள் சொன்னதால், தாஜ்மகாலுக்காக ஒரு காதலி தேடியதும், டாப் ஸ்லிப் வுட் ஹவுஸில் விலங்குகளால் சிறை வைக்கப்பட்டதும், ஏலகிரி பழங்குடிகளிடம் எக்குத் தப்பாக மாட்டிக் கொண்டதும் உங்கள் வாழ்க்கையிலும் நிச்சயம் நடந்திருக்கும்…!

இந்த அனுபவங்களையெல்லாம் பகிர்ந்து கொள்ள ஒரு தளமாக இந்தப் புதிய பகுதி துவங்கப்படுகிறது.

எல்லா விஷயங்களும் ஏதோ கட்டத்தில் நிறைவுற்றுவிடும். ஆனால் பயணங்கள் மட்டும் எந்தக் கட்டத்தில் நிறைவு பெறாதவை. தொடர்ந்து கொண்டே இருப்பவை…

தொடர்வோம்..!

-எஸ்எஸ்
4 thoughts on “உலகம் சுத்தலாம் வாங்க! – புதிய பகுதி

 1. வடக்குப்பட்டி ராமசாமி

  நமக்கெல்லாம் ஒரு பில்டர் சிகரெட்டு பாக்கெட்டு போதும்பா! நல்லா ஊர் சுத்துவேன்!

  ஆனா பாருங்க எழுத முடியாது, அதுனால நல்ல எழுதுநீங்கன்ன படிச்சிட்டு போறேன்!

 2. Kamesh (Botswana)

  Hi Vino

  I used to go around but writing is not my forte..Getting ready to read your posts let this be the beginning for me to read “Payanak Katturaigal”

  By the way Vino Could you please guide me to buy the books about Dalavai Muthanna Where can I get them and what is the way to get them…

  I got the information from you that the English Transalations are available for the Kannada Books written by Mr.Tha.Ra.Su.

  Waiting

  Kamesh
  _________________
  Sure… the information will be sent to your mail ID…
  Thanks

 3. Suja

  hi,
  It is really true that tours help you to learn more about nature, people, heritage and culture and above all our own country. We had visited Darjeeling this summer. Ofcourse the entire Darjeeling is very small. But the people are very active. Everyo0ne gets up by 4 AM in the morning. Most of them depend only on toursim. And the most unforgettable thing we found there is you cannot find even a single beggar on the streets. You will be amazed to hear about this. But this is 100% true. We should learn many things from this. And we should also thank God for making us to live in plains not on hills. FOr every single thing, they have to bring from plains. Really it was a nice experience and everyone should visit these places once in lifetime to appreciate the mother nature.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *