BREAKING NEWS
Search

உக்கிரமடையும் இந்தியா – சீனா வர்த்தகப் போர்!

உக்கிரமடையும் இந்தியா – சீனா வர்த்தகப் போர்!

டெல்லி: இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான வர்த்தகப் போர் உக்கிரமடைந்துவிட்டது. ban_china_071022_ms

அதன் ஒரு கட்டமாக சீனாவிலிருந்து மொபைல் போன்கள், பால் பொருட்கள், மருந்துகள்  மற்றும் பொம்மைகள் போன்றவற்றை இறக்குமதி செய்ய இந்திய அரசு தடை விதித்துள்ளது.

இதனால் சர்வதேச வர்த்தக அமைப்பில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் கடுமையான மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

சீனத்துத் தயாரிப்புகள் இந்தியாவில் பலத்த எதிர்விளைகளை உண்டாக்குவதாகவும், இதைத் தவிர்க்கவே இந்தத் தடையை விதித்துள்ளதாகவும் இந்திய  வெளிநாட்டு வர்த்தகத் துறை அறிவித்துள்ளது.

குறிப்பாக சீனாவிலிருந்து சர்வதேச அடையாளக் குறிப்பெண்கள் (International Mobile Equipment Identity) இல்லாமல் மாதத்துக்கு 8 லட்சம் மொபைல் போன்களுக்கும் அதிகமாக இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. இன்றும் 50 லட்சத்துக்கும் இத்தகைய போன்கள் புழக்கத்தில் உள்ளன.

இந்தப் போன்கள் தீவிரவாதிகள் மற்றும் சட்ட விரோத சக்திகளுக்கு பெரிதும் உதவியாக இருந்து வந்துள்ளது. எனவே இவற்றை இறக்குமதி செய்வது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.

அதேபோல வரும் 2010-ம் ஆண்டு வரை சீனாவிலிருந்து பொம்மை மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது இந்திய அயல் வர்த்தகத்துறை இயக்குநரகம்.

அதேநேரம் சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தின் அத்தாட்சியுடன் வரும் சீன பொம்மைகளை தடை செய்யவில்லை இந்திய அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பால் பொருட்களில், கூடுதல் வெண்மை நிறத்துக்காக நச்சுத்தன்மை கலந்த ரசாயனம் உபயோகப்படுத்துவதால், அவற்றை இறக்குமதி செய்ய கடந்த ஆண்டே தடை விதிக்கப்பட்டது. அந்தத் தடை வரும் ஜூன் 24-ம் தேதி காலாவதியாகிறது. இப்போது அந்தத் தடை மேலும் நீட்டிக்கப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது.

ப்ளாஸ்டிக் மற்றும் உரத்தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் சில வகை நச்சு ரசாயனங்களைப் பயன்படுத்தி சீனத்து பால் பொருட்கள் தயாரிக்கப்படுவதால், குழந்தைகளின் உயிருக்கே அவை உலை வைப்பதாகவும், சிறு நீரகக் கோளாறுகள் ஏற்படக் காரணமாக இருப்பதாகவும் சர்வதே மருத்துவ விஞ்ஞானிகள் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

இந்தியாவைப் போலவே மற்ற ஆசிய – ஆப்ரிக்க நாடுகளும் சீனாவின் பால் பொருட்களை தடை செய்துள்ளன. ஆனால் இலங்கை மட்டும் தடை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்திலிருந்தே பால் பொருள் உற்பத்தியில் முதல்நிலையில் இந்தியா இருந்து வருகிறது. அதனால் சீனவாலிருந்து பால் பொருட்களை இறக்குமதி செய்யும் அவசியம் இந்தியாவுக்கு வந்ததில்லை. ஒரு தற்காப்பு நடவடிக்கையாகவே இந்தத் தடையை அறிவித்துள்ளது.

அடுத்து முக்கியமான தடை, சீனாவின் மருந்துகளுக்கு. சீன மருந்துகளை இந்தியாவில் இறக்குமதி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே போலி மருந்துகளைத் தயாரித்து ஆப்ரிக்க நாடுகளில் இந்தியாவின் பெயரில் மோசடியாக சீனா விற்பனை செய்ததை நைஜீரிய அரசே கண்டுபிடித்து தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசின் இந்த வெளிப்படையான தடை, சர்வதேச அரங்கில் சீனாவின் வர்த்தக இமேஜை பலமாக அசைத்துவிட்டது. இதனால் சர்வதேச வர்த்தக அமைப்பில் இந்தியாவுக்கு எதிராக காய் நகர்த்தல்களை சீனா ஆரம்பித்துவிட்டது.

இந்திய பொருட்களுக்கு எதிரான லாபியை தனது நட்பு நாடுகளிடம் இப்போதே சீனா துவங்கி்யுள்ளது.  உலக வர்த்தக அமைப்பிடமும் (WTO) இதுகுறித்து புகார் செய்ய திட்டமிட்டுள்ளதாம்.

இந்தியாவின் அந்த பகிரங்க தடையை அடுத்து சீனப் பொருட்கள் இறக்குமதி செய்ய இதர கண்டங்களின் நாடுகளும் தயக்கம் காட்டத் துவங்கியுள்ளன.




2 thoughts on “உக்கிரமடையும் இந்தியா – சீனா வர்த்தகப் போர்!

  1. kumaran

    \\இந்தியாவைப் போலவே மற்ற ஆசிய – ஆப்ரிக்க நாடுகளும் சீனாவின் பால் பொருட்களை தடை செய்துள்ளன. ஆனால் இலங்கை மட்டும் தடை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\\

    இந்தியாவை சுத்தி இருக்கிற நாடுகள் எல்லாமே இந்தியாவுக்கு எதிராவே இருக்கு. எனக்கென்னவோ சீனா பாகிஸ்தான் இலங்கை மூணு பேரும் சேர்ந்து இந்தியாவை கட்டம் கட்டி சதி பண்றாங்கன்னு தோனுது

  2. palPalani

    இப்போதுதான் சீனாவை எதிர்க்கும் மனநிலைக்கு வந்திரிக்கிறோம்! அதுவும் வியாபாரத்தில்… மற்ற துறைகளில் எப்போது?

    சீனா ஒன்றும் விடுதலை புலிகள் அல்ல, ரா -வை வைத்து மாவாட்ட அல்லது புல்டோசர் வச்சு மன்னல்லிபோட……………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *