BREAKING NEWS
Search

‘திடீர் தமிழ் ஈழம் கோரும் ஜெயலலிதாவின் காலில் விழுந்து கிடக்கிறார்கள்!’

திடீர் தமிழ் ஈழம் கோரும் ஜெயலலிதாவின் காலில் விழுந்து கிடக்கிறார்கள்! – கருணாநிதி

சென்னை: “எதிர்கட்சித் தலைவர் ஜெயலலிதாவுக்கு தமிழகத்தில் இந்த 5 ஆண்டுகளில் நடைபெற்றுள்ள வளர்ச்சித் திட்டங்கள் தெரியவில்லை, ஆனால் ஈழத் தமிழர் பிரச்சினை குறித்துப் பேசி திசை திருப்புகிறார்; அப்படிப்பட்டவர் காலில் விழுந்துகிடக்கிறார்கள் சிலர்”, என தீவுத்திடல் பிரச்சாரக் கூட்டத்தில் சாடினார் முதல்வர் கருணாநிதி. karu-stat2

காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியுடன் இன்று ஒரே மேடையில் பிரச்சாரம் செய்த கருணாநிதி பேசியதாவது:

வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது என்ற நிலை மாறி, வடக்கு வளர்கிறது; தெற்கு தேறுகிறது என்ற நிலை தற்போது உருவாகி உள்ளது.

தமிழகத்தின் சாலை மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள், சென்னை மெட்ரோ ரயில் திட்டம், சேது சமுத்திர திட்டம் போன்ற பல திட்டங்களுக்கு சோனியா அனுமதி அளித்துள்ளார்.

இத்தனை திட்டங்களை அறிவித்துள்ள போதும் இங்குள்ள சிலர், ஈழப் பிரச்னையைக் கிளப்பி திசை திருப்ப முயற்சி செய்து வருகின்றனர்.

இலங்கையைச் சேர்ந்த தமிழ்ச் செல்வன் கொல்லப்பட்டபோது நான் எழுதிய கவிதையைக் காரணம் காட்டி தி.மு.க., அரசைக் கலைக்க வேண்டும் என்று வலியுறுத்திய எதிர் கட்சித் தலைவர் இன்று தனி ஈழம் பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது. அப்படிப்பட்டவரின் காலில் சிலர் விழுந்து கிடக்கிறார்கள்.

இது நாடாளுமன்றத்துக்கு நடக்கிற தேர்தல். இங்கு நாட்டின் பிரச்சினைகளை, திட்டங்களை மட்டும்தானே பேச வேண்டும்? அதைவிட்டுவிட்டு ஈழப்பிரச்சினையைப் பேசுவது வேடிக்கையாக உள்ளது.

சோனியாவும் பிரதமரும் ஈழப் பிரச்னை குறித்துhd பேசவில்லை என்று எதிர் கட்சித் தலைவர் குற்றம் சாட்டியிருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன் திருச்சியில் பேசிய ராகுல் வரிக்கு வரி ஈழத் தமிழர்கள் உட்பட வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் பற்றியே பேசி உள்ளார். நேற்று சென்னை வந்த பிரதமரும் ஈழத்தமிழர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார்‌. மக்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும், என்றார்.
8 thoughts on “‘திடீர் தமிழ் ஈழம் கோரும் ஜெயலலிதாவின் காலில் விழுந்து கிடக்கிறார்கள்!’

 1. நினைவுகள்

  வரிக்கு வரி என்ன பேசினார்? ஈழத்துக்கு மக்களுக்காக அவர்களும் அனுதாபப்படுடிகிறோம் என்றார்.. இதுதான் பதிலா?

 2. SenthilMohan K Appaji

  //* ஈழப்பிரச்சினையைப் பேசுவது வேடிக்கையாக உள்ளது.**/

  காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

 3. vivek

  she always accept her stands. before this she didnt know the real situation.

  but now she understand the current situation. and one more thing , present

  situation in eezhalam is more critical than ever before. so, she has took a

  correct & bold stand ( military action) . so, everybody support her now.

  she is strong in her stand always…..

 4. Venkat

  I also accept Mr.Vivek comments. Dear all please vote for ADMK aliance and destroy the Congress & DMK. I am wondering, why the Karur SS fans supporting the wrong site.

 5. பாரதி

  ராகுல் மற்றும் ப்ரியங்கா இவர்கள் இருவரும் வடக்கே பேசும்போது புலிகளுக்கு எதிராகப் பேசுவார்கள். தமிழ் நாட்டில் பேசும்போது தமிழனுக்கு சம உரிமை என்று பேசி வோட்டை அறுவடை செய்வார்கள். நாமும் அவர்கள் பேச்சை கேட்டு உரிமை கிடைத்ததாகவே மகிழ்வோம். இவர்களோ தமிழ் நாட்டை விட்டு தாண்டியதுமே இலங்கைக்கு வேண்டிய பொருளாதார, ஆயுத உதவிகளை செய்து தமிழனை அழிப்பார்கள்.

  50 ஆண்டுகளாக ஒரு குடும்பம் இந்த நாட்டை ஆள்கிறது. காந்தி என்ற குடும்பப் பெயரையே ஓசியில் அனுபவிக்கும் இந்த குடும்பமா தமிழனுக்கு சம உரிமை பெற்றுத் தரும்.

  பழங்கதைகளைப் பேசியே தமிழன் ஒரு கற்பனை உலகில் வாழ்கிறான்.

  ஒரு நாள் தமிழன் என்ற இனமே இல்லாமல் போகும் நிலைவரும்அதற்குள்ளாகவாவது தமிழினம் கனவு கலைந்து, நம் அரசியல் பொய்யர்களின் கூட்டத்திடமிருந்து விலகி வீருகொண்டு எழும்புமா?

 6. Bhuvanesh

  //இரண்டு நாட்களுக்கு முன் திருச்சியில் பேசிய ராகுல் வரிக்கு வரி ஈழத் தமிழர்கள் உட்பட வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் பற்றியே பேசி உள்ளார்//

  //இது நாடாளுமன்றத்துக்கு நடக்கிற தேர்தல். இங்கு நாட்டின் பிரச்சினைகளை, திட்டங்களை மட்டும்தானே பேச வேண்டும்? அதைவிட்டுவிட்டு ஈழப்பிரச்சினையைப் பேசுவது வேடிக்கையாக உள்ளது//

  இப்போ என்ன சொல்லறாரு? ராகும் பேசுனது வேடிக்கைனா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *