BREAKING NEWS
Search

ஈழத் தமிழர் துயரம் பாதித்ததால் விழாக்களைத் தவிர்த்தேன்! – ஏஆர் ரஹ்மான்

ஈழத் தமிழர் துயரம் பாதித்ததால் விழாக்களைத் தவிர்த்தேன்! – ஏஆர் ரஹ்மான்

சென்னை: இலங்கையில் நடந்த துயர சம்பவங்கள், என் மனதை rahmanமிகவும் பாதித்துவிட்டன. இதனால்தான் ஆஸ்கர் விருதுக்குப் பிறகு சில விழாக்களைத் தவிர, வேறு எதிலும் நான் பங்கேற்கவில்லை.

ஒரு பக்கம் நமது சகோதரர்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்க, நமக்கு எதற்கு ஆடம்பர விழாக்கள்?, என்றார் இசை அமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் உருக்கமாக.

அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு பட்டமளிப்பு விழாவில் ரஹ்மானுக்கு, கௌரவ டாக்டர் பட்டத்தை தமிழக ஆளுநர் பர்னாலா வழங்கினார்.

பட்டத்தை பெற்றுக் கொண்ட ரஹ்மான் தனது ஏற்புரையில் இப்படிக் குறிப்பிட்டார்:

இலங்கையில் நடந்த வன்முறை சம்பவங்கள் எனது மனதை மிகவும் பாதித்தன.

திரையுலகின் மிகப் பெரிய ஆஸ்கார் விருது பெற்ற பின்னரும், கடந்த 2 மாதங்களாக எந்த விழாவிலும் நான் பங்கேற்பதைத் தவிர்த்து வந்தேன்.

ஒரு பக்கம் நம் சொந்த சகோதரர்கள் இப்படி கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும்போது, நமக்கு எதற்கு இந்த ஆடம்பர விழாக்கள் என்றே தவித்தேன். அவர்கள் மீ்ண்டும் மகிழ்ச்சியான சூழலில் வாழ வேண்டும்.

அமெரிக்காவுக்குச் சென்று இசையமைப்புப் பணிகளில் ஈடுபட்டு திரும்பிய எனக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை அளித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்ததைக் கேட்டபோது என் மீது முத்து மழை பொழிந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது,” என்றார் ரஹ்மான்.

விழாவில் ரஹ்மானின் தாய் மற்றும் உறவினர்கள் பங்கேற்றனர்.

இதே விழாவில், சந்திராயன்-1 விண்கலத்தை வடிவமைத்த இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரைக்கும் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.




2 thoughts on “ஈழத் தமிழர் துயரம் பாதித்ததால் விழாக்களைத் தவிர்த்தேன்! – ஏஆர் ரஹ்மான்

  1. Bharathi

    தினமும் என் மனம் உருத்துகிரது…. இவரை போலவே..

  2. Mogan

    Why our Tamilnadu people not realizing the situation of our Tamil peoples in Srilanka?
    If we are not showing our support we cant save those people in the concentration camp!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *