BREAKING NEWS
Search

இவர் பெயருக்குள்ளே காந்தமுண்டு… இந்தச் சொல்லில் பெரும் உண்மையுண்டு!’

இவர் பெயருக்குள்ளே காந்தமுண்டு…  இந்தச் சொல்லில் பெரும் உண்மையுண்டு!’

ஜினிகாந்த்….
இவர் பெயருக்குள்ளே காந்தமுண்டு…
இந்தச் சொல்லில் பெரும் உண்மையுண்டு!’5e0a

என்று ரஜினியைப் பற்றி கவிதை நடையில் சொல்லி ஆனந்தப்பட்டார் கவிஞர் வைரமுத்து, ஒரு மேடையில்.

ரஜினியின் அருகில் இருக்கும் வைரமுத்து இப்படி என்றால், கூகுள் நிறுவனம் இப்படிச் சொன்னது:

“உலக அளவில் வெளியாகும் படங்கள் பற்றிய தேடல் முடிவுகளை விட, இந்தியாவின் மாநில மொழி ஒன்றில் தயாரிக்கப்பட்ட ஒரு படத்துக்கான தேடல் முடிவுகள் ஒன்றரை மடங்கு அதிகமாக இருந்தது. இது மிகப்பெரிய ஆச்சர்யம். அந்தப் படம் சிவாஜி – தி பாஸ்…” என்றது.
சிவாஜி வெளியான சமயத்தில் ஸ்பைடர்மேன், ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கான தேடல் முடிவுகளை விட, சிவாஜிக்குதான் மிக அதிகமான முடிவுகள் கிடைத்தன.

அதேபோல, சிவாஜி பற்றிய செய்திகள் படங்கள் கேட்டு கூகுளில் தேடியவர்கள்தான் மிக அதிகம் என்றது கூகுள் அறிக்கை.

இப்போது அந்தச் சாதனையை இன்னொரு படம் தகர்க்கப் போகிறது.

அந்தப் படம்… வேறு எதுவுமில்லை ரஜினியின் கனவுப் படமான எந்திரன் தி ரோபோதான்‍!

சிவாஜியாவது ரிலீஸாகும் தருணத்தில்தான் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட முடிவுகளைக் காட்டியது. ஆனால் எந்திரன் – தி ரோபோவோ இன்னும் படப்பிடிப்பிலிருக்கிறது. இப்போதே சிவாஜியின் பப்ளிசிட்டியை ஓவர்டேக் செய்கிறது இந்தப் படம் என்றால், இன்னும் வரவிருக்கும் நாட்களில் எந்திரன் ஜூரம் எப்படி எகிறும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறதல்லவா…

‘அய்யோ… ஓவர் பப்ளிசிட்டியாக இருக்கே… அதுவே படத்தை பாதித்துவிடுமோ’ என பல நண்பர்கள், நண்பர்கள் போர்வையில் நக்கலடிக்கும் சிலர் கவலைப்படுவதைப் பார்க்கிறோம்.

‘ரஜினியின் படத்துக்கு எதிர்பார்ப்பு இல்லாமல் இருக்கவேண்டும் என்பது, நயாகரா சத்தமில்லாமல் விழவேண்டும் என்பதற்குச் சமம்!’, என்றார் கவிஞர் பா விஜய் ஒருமுறை.

ரஜினி என்ன சொன்னாலும் அதற்கு ஒரு அர்த்தம் காண்பதும், அவரது ஒவ்வொரு அசைவுக்கும் மீடியா புதுப்புது விளக்கங்கள் கொடுப்பதும்…. அந்த மனிதருக்கு மக்கள் தரும் மரியாதை, மக்கள் மீதான அவரது ஆளுமை புரிந்துதான்.

எனவே எதிர்பார்ப்புகள் இருக்கவே செய்யும்… அதை ரஜினியும் ஷங்கரும் மிக நன்கு புரிந்தே இந்த பிரம்மாண்ட கலைப் படைப்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இதோ… எந்திரன் குறித்த மேலும் இரு செய்திக் குறிப்புகள்:

எந்திரனில் நடிக்கும் சூப்பர் ஜிப்ஸி!

எந்திரன் – தி ரோபோ படத்தில் சில முக்கிய, ஆனால் ஜாலி காட்சிகளில் ஒரு எந்திரம் நடிக்கப் போகிறது. எந்திரம் என்றதும் ரோபோ என நினைத்துவிட வேண்டாம். இது ஒரு கார்… மாருதி ஜிப்ஸி. இதில் புதுமை என்ன என்கிறீர்களா…p33b

இந்தக் கார் சாதாரண காரல்ல… அட்டகாசமான புதிய வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட சூப்பர் கார்.

காரை  மறுவடிவமைப்பு செய்திருப்பவர் பெயர் ஜாஃபர்.

சென்னை புதுப்பேட்டை கார் மெக்கானிக் மற்றும் டிசைனர். அஹமத் ஆட்டோ-மோட்டீவ் இன்டஸ்ட்ரி என்கிற பெயரில் திருவொற்றியூரில் மாடிஃபிகேஷன் பட்டறை வைத்திருக்கிறார்.

”முதலில் இந்த ஜிப்ஸியை தேர்தல் பிரசாரத்துக்காக ரெடி செய்தேன். தேர்தல் முடிஞ்சதும் டாய் கார் மாதிரி மாற்றினேன். ஒருவர் இந்த ஜீப்பைப் பார்த்துட்டு நேராக ஷங்கர் சார்கிட்ட கொண்டு போய் விட்டுட்டார். ஜீப்பைப் பார்த்ததும் த்ரில்லானவர், ‘எந்திரன் படத்தில் இந்த ஜீப்பும் நடிக்குது’ன்னு சொல்லிட்டார்” என்றார் மகிழ்ச்சியாக!

‘கிட்டத்தட்ட பஸ்ஸுக்கு இணையான உயரத்தில் இருக்கிறது இந்த ஜிப்ஸி. டிராக்டரில் உள்ள 20 இன்ச் அளவு கொண்ட முன் வீல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பம்பர் மற்றும் ரோல் பார்கள் முழுவதும் பிவிசி பைப்புகளால் செய்யப்பட்டு இருக்கிறது. இன்ஜினிலும் பல மாறுதல்கள் செய்துள்ளார். இந்த மாற்றத்துக்காக மட்டும் இரண்டரை லட்ச ரூபாய் வரை செலவழித்திருக்கிறாராம் ஜாஃபர்!

ரஹ்மான் பயன்படுத்தும் நவீன கீ போர்டு!

‘Continuum fingerboard’ என்கிற நவீன கீ-போர்டுதான் இசையுலகில் இப்போது லேட்டஸ்ட் வரவு. image1061

அதில் கறுப்பு-வெள்ளை கட்டைகள் இருக்காது. டச் ஸ்க்ரீன் மொபைல் போல அதிலிருக்கும் ஸ்க்ரீனை விரலால் தொட்டே இசையை உருவாக்கலாம். இதுவரை இந்த கீ-போர்டை ‘ட்ரீம் தியேட்டர்’ ஜோர்டன் ரூடஸ் போன்ற இசை ஆளுமை உள்ள ஏழு இசை வல்லுநர்கள் மட்டுமே வாசித்து இருக்கிறார்கள்.

இசைக்கருவிகளில் என்ன மாதிரி லேட்டஸ்ட் மாடல் வந்தாலும் அதை முதலில் பரீட்சித்துப் பார்ப்பவர்கள் இருவர் இந்தியாவில் இருக்கிறார்கள். ஒருவர் நமது மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா.

ஹங்கேரியிலிருந்து ஓபோ என்ற கருவியை வரவழைத்து நந்தலாலா மூலம் இந்தியாவுக்கே அறிமுகப்படுத்தியவர் ராஜா. இதற்ககு முன் ‘காலாபாணி’யிலும் ஒரு புதிய கருவியை அறிமுகப்படுத்தினார்.

அடுத்தது நமது ஆஸ்கர் டார்லிங் ஏஆர் ரஹ்மான். இந்த நவீன கீ போர்டை இந்தியாவுக்குக் கொண்டுவந்து, முதல்முறையாக படத்திலும் பயன்படுத்தியிருப்பவர் ரஹ்மான்தான்.

‘டெல்லி 6’ ஹிந்திப் படத்தில் ஒரு பாடலுக்கு அதன் மூலம் இசையமைத்துச் சோதித்துப் பார்த்த ஏ.ஆர்.ரஹ்மான், இப்போது ‘எந்திரன்’ படத்தின் இசைக்கு இதிலேயே முழுவதுமாக மெட்டுக்கள் அமைத்திருக்கிறார்!

இந்த வகை கீ போர்டை இந்தியாவிலேயே முதல்முறையாக ரஹ்மான்தான் பயன்படுத்துகிறார் என்பது சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன!

-சங்கநாதன்

www.rajinifans.com
3 thoughts on “இவர் பெயருக்குள்ளே காந்தமுண்டு… இந்தச் சொல்லில் பெரும் உண்மையுண்டு!’

  1. BaijuBalakrishnan/Bangalore

    “ஜோம்ஸ்பாண்ட் படங்களுக்கான தேடல்” அல்ல வினோ ஜேம்ஸ்பாண்ட் என திருத்தவும்.www.rajinifans.com பதிவாக இருப்பினும் என்வழி.காம்மில் சரியாக இருக்கவேண்டும் எனும் ரசிகனின் விருப்பம்…

    மிகச்சரியான அருமையான பதிவு.

    நன்றி!சங்கநாதன் & வினோ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *