BREAKING NEWS
Search

‘இவன் பேரைச் சொன்னதும் பெருமை சொன்னதும் கடலும் கடலும் கைதட்டும்…’ – ஒரு ரசிகரின் விமர்சனம்

எந்திரன் திரைப்பட பாடல் விமர்சனம்!

ப‌ட‌ம்: எந்திர‌ன்

ந‌டிப்பு: ர‌ஜினிகாந்த், ஐஸ்வ‌ர்யாராய்

இசை: ஏ.ஆர்.ர‌குமான்

பாட‌ல்க‌ள்: வைர‌முத்து, பா.விஜ‌ய், கார்க்கி

இய‌க்க‌ம்: ஷ‌ங்க‌ர்

பாட‌ல்: புதிய‌ ம‌னிதா

பாடிய‌வ‌ர்க‌ள்: எஸ்.பி.பால‌சுப்ர‌ம‌ணிய‌ம்,ஏ.ஆர்.ர‌குமான்,க‌தீஜா

பாட‌லாசிரியர்: வைர‌முத்து

பொதுவாக‌ ஓப்ப‌னிங் பாட‌லில் த‌ன் புக‌ழ் ம‌ற்றும் த‌ன் ர‌சிக‌ன் புக‌ழ்பாடும் ர‌ஜினிகாந்த், இதில் வ‌ழ‌க்க‌த்திற்கு மாறாக‌ எந்திர‌ன் புக‌ழ் பாடியிருக்கிறார். ப‌திலுக்கு இர‌ண்டாவ‌து ச‌ர‌ணத்தில் எந்திர‌ன் த‌ன் “எஜ‌மான்” புக‌ழ்பாடுகிற‌து. சென்டிமென்டாக சிவாஜிக்கு பிற‌கு பாலு பாடியிருக்கும் இந்த‌ பாட‌லின் பிர‌தான‌ அம்ச‌ம் வைர‌முத்துவின் வ‌ரிக‌ள் ம‌ற்றும் அறிமுக‌ பாட‌கி க‌தீஜாவின் குர‌ல். ந‌ல்ல‌ ப‌யிற்சியோடு பிற‌ இசைய‌மைப்பாள‌ர்க‌ளிட‌மும் தொட‌ர்ந்து பாடினால் க‌தீஜாவிற்கு ந‌ல்ல‌ எதிர்கால‌ம் உண்டு.

“ஆறாம் அறிவை அரைத்து ஊற்றி, ஏழாம் அறிவை எழுப்பும் முய‌ற்சி” போன்ற‌‌ த‌ன‌து ஸ்பெஷாலிட்டி வ‌ரிக‌ளைக் காட்டிலும் “க‌ருவில் பிற‌ந்த‌ எல்லாம் ம‌ரிக்கும், அறிவில் பிற‌ந்த‌து ம‌ரிப்ப‌தே இல்லை”, “ஆண் பெற்ற‌வ‌ன் ஆண்ம‌க‌னே”, ” என் த‌ந்தை மொழி த‌மிழ் அல்ல‌வா” போன்ற‌ வ‌ரிக‌ளில் க‌வ‌ன‌த்தை ஈர்க்கிறார் வைர‌முத்து.

விஞ்ஞானிக்கும் எந்திர‌னுக்கும் த‌னித்த‌னி குர‌ல்க‌ளை ப‌ய‌ன்ப‌டுத்தி வித்தியாச‌ப்ப‌டுத்தியிருக்க‌லாம். பாட்டுக்கு மெட்டு போட்ட‌து போல‌த் தெரியும் இந்த‌ பாட‌லின் வ‌ரிக‌ளும் மெட்டும் மொத்த‌ப்பாட‌ல் முழுவ‌தும் ஓன்றுட‌ன் ஒன்று ஒடாம‌ல் ப‌ய‌னிப்ப‌து  ப‌ல‌வீன‌ம். ஓப்ப‌னிங் பாட‌லுக்குரிய‌ துள்ள‌ல் இல்லாத‌து ச‌ராச‌ரி ர‌சிக‌னுக்கு ஏமாற்ற‌த்தை அளிக்கும்.

பாட‌ல்: காத‌ல் அணுக்க‌ள்

பாடிய‌வ‌ர்க‌ள்: விஜ‌ய் பிர‌காஷ், ஸ்ரேயா கோஷ‌ல்

பாட‌லாசிரியர்: வைர‌முத்து

70 க‌ளில் வ‌ந்த‌ ராஜா பாட‌லின் (தேவ‌ன் திருச்சபை ம‌ல‌ர்க‌ளே – அவ‌ர் என‌க்கே சொந்த‌ம்) சாய‌லில் தொட‌ங்கும் இந்த‌ பாட‌ல் ர‌குமானின் ஸ்பெஷாலிட்டியான‌ ப‌ல்ல‌வி ச‌ர‌ண‌ம் என்ற‌ க‌ட்டுமான‌த்திற்குள் அட‌ங்காத‌ அற்புத‌மான‌ மெல்லிசைப் பாட‌ல். பாட‌லின் துவ‌க்க‌த்தில் வ‌ரும் மெல்லிய‌ கிடார் இசை ம‌ன‌தை ம‌யிலிறகாய் வ‌ருடிச்செல்கிறது. விஜ‌ய் பிரகாஷ், ர‌குமான் சாய‌லில் பாடியிருப்ப‌து உறுத்த‌ல். காந்த‌ர்வ‌க் குர‌லில் ம‌ய‌க்கும் ஷ்ரேயாவிட‌ம் ஏனைய‌ வ‌ட‌மொழி பாட‌க‌ர்க‌ள் உச்ச‌ரிப்பு ப‌யிற்சியே பெற‌லாம்.

“ப‌ட்டாம் பூச்சி கால்க‌ளை கொண்டுதான் ருசிய‌றியும்”, “ஓடுகிற‌ த‌ண்ணியில் ஆக்சிஜ‌ன் மிக‌ அதிக‌ம்” போன்ற‌ அறிவிய‌ல் வ‌ரிக‌ள் த‌மிழ் சினிமாவிற்கு புதிது என்றாலும் காத‌ல் பாட‌லுக்கு தேவையில்லாத‌து. விஞ்ஞானி என்றால் காத‌ல் செய்யும் போது கூட‌வா அறிவிய‌ல் த‌மிழில் பாட‌வேண்டும்!

” நேச‌ம் வ‌ள‌ர்க்க‌ ஒரு நேர‌ம் ஒதுக்கு எந்த‌ன் நெஞ்ச‌ம் வீங்கிவிட்ட‌தே” (காத‌ல‌னை காண‌த‌ ஏக்க‌த்தில் விடும் பெரும் மூச்சினால் நெஞ்ச‌ஞம் வீங்கி விட்ட‌தாம்) என்ற‌ வ‌ரியில் வைர‌முத்துவின் அக்மார்க் குறும்பு ர‌சிக்க‌ வைக்கிற‌து.

பாட‌ல்: அரிமா அரிமா

பாடிய‌வ‌ர்க‌ள்: ஹ‌ரிஹ‌ர‌ன், சாத‌னா சர்க்க‌ம்

பாட‌லாசிரியர்: வைர‌முத்து

ர‌ஜினி புக‌ழ்பாடும் க‌ம்பீர‌மான‌ வ‌ரிக‌ளோடு துவ‌ங்கும் இந்த‌ காம‌ம் க‌ல‌ந்த‌ காத‌ல் பாட‌லில் அரிமா அரிமா என்ற வ‌ரிக‌ளுக்கு ஏற்ப‌ இசையும் பாட‌க‌ரின் குர‌லும் க‌ர்ஜிப்ப‌து ர‌சிக‌ர்க‌ளை ஆன‌ந்த‌ வெள்ள‌த்தில் ஆழ்த்தும்.

” உன் போல் ஒரு பொன்மான் கிடைத்தால் யெம்மா சும்மா விடுமா?”, “சிற்றின்ப‌ ந‌ர‌ம்பு சேமித்த‌ இரும்பில் ச‌ட்டென்று மோக‌ம் பொங்கிற்றே” போன்ற‌ காம‌ம் த‌தும்பாத‌ காத‌ல் வ‌ரிக‌ளை வைர‌முத்து த‌ன்னுடைய‌ பாணியில் பாட‌ல் முழுவ‌தும் ப‌ய‌ன்ப‌டுத்தியிருப்ப‌து பாட‌லுக்கு பெரும் ப‌ல‌ம் சேர்க்கிற‌து. அதை ஹருஹரன் பாடியிருக்கும் விதம் அத்தனை அழகு.

குசேலன் ப‌டம் தொட‌ங்குவ‌த‌ற்கு முன்பே எந்திர‌ன் ப‌ட‌ வேலைக‌ளை ஷ‌ங்க‌ர் துவ‌ங்கி விட்டார் என்ப‌தை ஊர் அறியும். இந்த‌ பாட‌லின் மெட்டும், குசேல‌ன் ப‌டத்தில் உள்ள‌ “ஓம் ஷார‌ரே” என்ற‌ பாட‌லின் மெட்டும் எப்ப‌டி ஒரே மாதிரி அமைந்த‌து என்ப‌தை ஏ.ஆர்.ர‌குமானும், ஜி.வி.பிர‌காஷூம் தான் தெளிவு ப‌டுத்த‌வேண்டும். ஒரு வேளை ர‌குமானுக்கு தெரியாம‌லே மெட்டு க‌ள‌வு போகிற‌தோ என்ன‌வோ?

பாட‌ல்: கிளிமாஞ்சாரோ

பாடிய‌வ‌ர்க‌ள்: ஜாவித் அலி, சின்ம‌யி

பாட‌லாசிரிய‌ர்: பா.விஜ‌ய்

முத‌ல்முறை கேட்ட‌வுட‌ன் அனைத்து த‌ர‌ப்பின‌ரையும் க‌வ‌ரும் இந்த‌ ப‌ழ‌ங்குடிப்பாட‌ல் தான் த‌ற்போத‌ய‌ நில‌வ‌ர‌ப்ப‌டி முன்ன‌னியில் இருக்கிற‌து.

அதிர‌டியான‌ இசை, புதுமையான‌ மெட்டு, இதுவ‌ரை கேட்டிராத ஒலிக்கோர்வை மூல‌ம் பாட‌லின் த‌ர‌த்தை எங்கோ உய‌ர்த்திச் செல்கிறார் ர‌குமான். முன்வ‌ரிசை ர‌சிக‌ர்க‌ள் திரையின் முன்னால் ஆடுவ‌த‌ற்கு தோதான‌ பாட‌ல் இது.

வ‌ழ‌க்க‌மாக‌ பெரும்பாலான‌ ஷ‌ங்க‌ர் ப‌ட‌ங்க‌ளில்‌ கிளைமாக்ஸ்க்கு ச‌ற்று முன்பு வ‌ரும் அதிர‌டிப் பாட‌லுக்கு அதிரிபுதிரியாக‌ வ‌ரிக‌ளை எழுதி கைத‌ட்டல் வாங்கும் க‌விஞ‌ர் வாலி இந்த‌ ப‌ட‌த்திற்கு எழுதாத‌ குறையை அவ‌ர‌து சிஷ்ய‌ர் பா.விஜ‌ய் தீர்த்து வைக்கிறார். மெட்டிற்கு தேவையான‌ எளிமையான‌ ச‌ந்த‌ வார்த்தைக‌ளை எழுதி பாட‌லை மெருகேற்றும் விஜ‌யின் கிளிமாஞ்சாரோ வார்த்தை க‌வ‌னிக்க‌த்த‌க்க‌து. இந்த‌ வார்த்தையை த‌மிழ் அக‌ராதியில் தேடினால் கிடைக்காது, ஏனென்றால் கிளிமாஞ்சாரோ என்ப‌து கிழ‌க்கு ஆப்பிரிக்காவில் உள்ள‌ எரிம‌லைத் தொட‌ரின் பெய‌ர்.

பாட்டு புத்த‌க‌த்தில் உள்ள‌ “அக்க‌க்கோ ‍ நான் கின்னிக்கோழி, அப்ப‌ப்போ என்ன‌ப் பின்னிக்கோ நீ” என்ற‌ வ‌ரி பாட‌லில் காணாம‌ல் போய்விட்ட‌து தான் ஒரே குறை.

பாட‌ல்: பூம் பூம் ரோபோடா…

பாடிய‌வ‌ர்க‌ள்: கீர்த்தி ச‌காத்தியா, யோகி, ஸ்வேதா, த‌ன்வீஷா

பாட‌லாசிரிய‌ர்: கார்க்கி

இந்த‌ பாட‌ல் ப‌ட‌த்தில் இருக்குமா என்ப‌து ச‌ந்தேக‌மே, ப‌ட‌ம் முடிந்த‌ பின்ன‌ர் வ‌ரும் ரோலிங் டைட்டில் / மேக்கிங் ஆப் எந்திர‌ன் பாட‌லாக‌ இருக்க‌லாம் என்ற‌ ச‌ந்தேக‌ம் என‌க்குள்ள‌து.

அதிர‌டியான‌ வித்தியாச‌மான‌ இந்த‌ பாட‌லின் க‌வ‌ன‌ ஈர்ப்பாக‌ இருப்ப‌வ‌ர் சுஜாதாவின் குர‌லில் அப்ப‌டியே பாடும் அவ‌ர‌து ம‌க‌ள் ஸ்வேதாவின் குர‌லில் ஏக‌த்துக்கும் இள‌மைத் துள்ள‌ல்.

“த‌வ‌மின்றி வ‌ர‌ங்க‌ள் த‌ருவ‌த‌னாலே மின்சார‌ க‌ண்ண‌ணோ?” என்ற வ‌ரியின் மூல‌ம் எந்திர‌னை க‌லியுக‌ க‌ண்ண‌னாக‌ உருவ‌க‌ப்ப‌டுத்தியிருக்கும் கார்க்கி க‌வ‌ன‌த்தை ஈர்த்தாலும் ஒட்டுமொத்த‌ பாட‌லின் ந‌டையில் த‌ந்தையை பின்ப‌ற்றுவ‌து அவ‌ர‌து வ‌ள‌ர்ச்சிக்கு ந‌ல்ல‌த‌ல்ல‌.

பாட‌ல்: இரும்பிலே ஒரு இருத‌ய‌ம்

பாடிய‌வ‌ர்க‌ள்:ஏ.ஆர்.ர‌குமான், கிரிஸி

பாட‌லாசிரியர்: கார்க்கி

பாட‌ல் வ‌ரிக‌ளை கேட்கும்போது எந்திர‌ன் விஞ்ஞானியின் வேட‌த்தில் சென்று காத‌லிக்க‌ முய‌ற்சி செய்யும் போட்டிப்பாட‌ல் போல‌த் தோன்றுகிறது. இந்த‌ வித்தியாச‌மான‌ சூழ‌லுக்கு அற்புத‌மாக‌ வந்திருக்க‌ வேண்டிய‌ பாட‌ல் இந்த‌ ஆல்ப‌த்தின் க‌டைசி இட‌த்தை பிடித்திருப்ப‌து ஷ‌ங்க‌ருக்கும் ர‌குமானுக்கும் ஓர் பின்ன‌டைவே.

க‌டைசிவ‌ரை இழுத்த‌டித்து க‌டைசியாக‌ ஒலிப்ப‌திவு செய்ய‌ப்ப‌ட்டு க‌டைசியாக‌ ப‌ட‌மாக்க‌ப்ப‌ட்ட‌ இந்த‌ பாட‌லுக்கு ர‌குமான் எந்த‌ சிர‌த்தையும் எடுக்காம‌ல் அஜித் ந‌டித்த‌ வ‌ர‌லாறு ப‌ட‌த்திற்கு ப‌ய‌ன்ப‌டுத்திய‌ ‌”இள‌மை” என்ற‌ பாட‌லை அப்ப‌டியே க‌ல‌ந்து க‌ட்டி கொடுத்துள்ளார். ஷ‌ங்க‌ர் இதை க‌வ‌னிக்காத‌து ஆச்ச‌ர்ய‌ம்.

கார்க்கி எழுதிய‌ இந்த‌ பாட‌லின் ந‌டையில் வைர‌முத்துவின் சாய‌ல் போன்ற‌ பிர‌மை ந‌ம‌க்கு ஏற்ப‌டுவ‌தை த‌விர்க்க‌ முடிய‌வில்லை “எச்சில் இல்லா எந்த‌ன் முத்த‌ம் ச‌ர்ச்சை இன்றிக் கொள்வாயா?”, ” உள‌விய‌ல் மொழிக‌ளில் இந்திர‌ன்” “பூஜ்ஜிய‌ம் ஒன்றோடு (1-0 லாஜிக் கேட்)” போன்ற‌ வ‌ரிக‌ள் ந‌ன்றாக‌ இருந்தும்.

“மின் மீன்க‌ள் விண்ணோடு” என்ற‌ வ‌ரியில் “விண் மீன்க‌ள்” என்று அல்ல‌வா வ‌ர‌வேண்டும் !

“நீ தூங்கும் நேர‌த்தில் நான் என்னை அணைப்பேன்” என்ற‌ வ‌ரியில் எந்திர‌ன் எப்ப‌டி த‌ன்னைத் தானே அணைத்துக்கொள்ளும்? உன்னை என்று அல்ல‌வா வ‌ர‌வேண்டும் !

மொத்த‌த்தில் கார்க்கி ந‌ல்ல‌ துவ‌க்க‌த்தை வீண‌டித்துள்ளார்.

ஆல்ப‌த்தில் இட‌ம் பெற்றுள்ள‌ ஒரு மியூசிக் ட்ராக் எவ்வித‌ தாக்க‌த்தையும் ஏற்ப‌டுத்தவில்லை.

மொத்த‌த்தில் பாட‌ல்க‌ளை கேட்ட‌வுட‌ன் ப‌ள்ளி ம‌ற்றும் க‌ல்லூரிக்கு சென்று அறிவிய‌ல் தொட‌ர்பான‌ எல்லா பாட‌ங்க‌ளையும் ஓரே நேர‌த்தில் ப‌டித்துவிட்டு வ‌ந்த‌து போல‌ ஒரு உண‌ர்வு ஏற்ப‌டுகிறது. சிறு சிறு குறைக‌ளும் ப‌ட‌ம் வ‌ருவ‌த‌ற்குள் காணாம‌ல் போய்விடும் என்றே தோன்றுகிற‌து.

ர‌சிக‌ர் பார்வை:

எங்க‌ள் கிராம‌த்தில் 1970க‌ளின் இறுதியில் ர‌சிக‌ர் ம‌ன்றத்தை துவ‌க்கி இப்போது 50வ‌ய‌தை தாண்டிய‌ மூத்த‌ ர‌சிக‌ரிட‌ம் பாட‌ல் வெளிவ‌ந்த‌ ச‌னிக்கிழ‌மை பேசினேன்.

நான்: என்ன‌ மாமா பாட்டு கேட்டீரா? எப்டி இருக்கு?

ர‌சிக‌ர்: மாப்ளே ஒன்னுமே புரிய‌ல‌… ஆனாலும் ந‌ல்லாயிருக்குடா. ப‌ட‌ம் பெரிய‌ ஹிட் ஆகும் பாத்துக்கிட்டேயிரு…..

ர‌ஜினிகாந்த்: குழந்தைக்கு விதம் விதமாக மேக்கப் போட்டு ஆடு, பாடு என்று பெரியவர்கள் சொல்வார்கள். அது தப்பு தப்பாக செய்தாலும் கைதட்டி பாராட்டுவார்கள். என் ரசிகர்களான நீங்கள் எல்லாம் என்னை அப்படி அழகு பார்க்கிறீர்கள்.

த‌லைவ‌ருக்கும் ர‌சிக‌ர்க‌ளுக்கும் உள்ள‌ இந்த‌ புரித‌லே இருவ‌ரையும் 35 வ‌ருட‌ங்க‌ளாக‌ உச்ச‌த்தில் வைத்திருக்கிற‌து!

-காத்த‌வ‌ராய‌ன்
55 thoughts on “‘இவன் பேரைச் சொன்னதும் பெருமை சொன்னதும் கடலும் கடலும் கைதட்டும்…’ – ஒரு ரசிகரின் விமர்சனம்

 1. mukesh

  //அற்புத‌மாக‌ வந்திருக்க‌ வேண்டிய‌ பாட‌ல் இந்த‌ ஆல்ப‌த்தின் க‌டைசி இட‌த்தை பிடித்திருப்ப‌து ஷ‌ங்க‌ருக்கும் ர‌குமானுக்கும் ஓர் பின்ன‌டைவே.//

  ஆச்சரியமாக இருக்கிறது காத்த‌வ‌ராய‌ன் ஒவ்வொருவருடைய ரசிகத்தன்மை. எனக்கு இந்த பாடல்தான் முதல் இட‌த்தை தருகிறது….

 2. Tom

  Hats of to you Kathavarayan. You accepted the truths.
  /**மொத்த‌த்தில் கார்க்கி ந‌ல்ல‌ துவ‌க்க‌த்தை வீண‌டித்துள்ளார்.**/Not only Kaarki, Rahman also. Your words (க‌டைசிவ‌ரை இழுத்த‌டித்து க‌டைசியாக‌ ஒலிப்ப‌திவு செய்ய‌ப்ப‌ட்டு க‌டைசியாக‌ ப‌ட‌மாக்க‌ப்ப‌ட்ட‌ இந்த‌ பாட‌லுக்கு ர‌குமான் எந்த‌ சிர‌த்தையும் எடுக்காம‌ல் அஜித் ந‌டித்த‌ வ‌ர‌லாறு ப‌ட‌த்திற்கு ப‌ய‌ன்ப‌டுத்திய‌ ‌”இள‌மை” என்ற‌ பாட‌லை அப்ப‌டியே க‌ல‌ந்து க‌ட்டி கொடுத்துள்ளார்.) are absolutely true, Rahman has spoiled the movie’s hype.

 3. Akilan

  நீ தூங்கும் நேர‌த்தில் நான் என்னை அணைப்பேன். it say… robo with switch (shutdown) after she sleep….

  all the songs are pattasuu… Never put review on Thalaivar song….

 4. Srini

  poor review இரும்பிலே ஒரு இருத‌ய‌ம் is best number… ethuku mela enna song compose panna mudiyum…
  kadhal anukal – What is wrong in using science in love song…it was good and different…
  speciality of the song is that only

  I seriously doubt if author is Rajini Fan

 5. SHERIF

  இவருடைய விமர்சனம் ஆச்சர்யத்தை விட அதிர்ச்சியை ஏற்ப்படுத்துகிறது அவ்வளவு அருமையான பாடல்கள் மெட்டுகள் வரிகள், இவர் ஏதோ தன்னை ஜீனியஸ் என்று காண்பிப்பதற்காகவே இதை எழுதியிருக்கிறார், குறை சொல்வது எளிது, அதை போல் உன்னால் கொடுக்க முடியுமா? யோசித்து பார், நிறை என்றால் வெளியில் கூறு, குறை என்றால் மறைத்து விடு, ” மல்லாக்க படுத்து கொண்டு எச்சில் துப்பாதே”

 6. endhiraa

  I think this is purely Mr. Kathavarayan’s View. But as few said above, my top pick of the album is “Irumbiley” – sung by ARR. And all songs are rocking, unlike the review reflects here (Except the intro where we miss the routine enthusiasm in thalaivar song, but in that song also, when spb sing endhiraa endhiraa..en endhiraa, I imagine a different get up of thalaivar will occupy the screen to create enough enthusiasm among all fans to greater extent)

  All in all, SONGS are ROCKING !!!!

 7. முத்து கிருஷ்ண‌ன்

  ந‌ல்ல‌ விம‌ர்ச‌ன‌ம் ந‌ன்றி காத்த‌வ‌ராய‌ன்.

  I agree Shankar’s Favorite Classical music touch is missing.

  Irumblea looks like Yuva’s Yakkai thiri.

 8. Ganesan

  எனது favorite
  1. கிளிமஞ்சாரோ
  2. காதல் அணுக்கள்
  3. அரிமா அரிமா, இரும்பிலே ஓர் இருதயம், புதிய மனிதா
  4. ரோபோடா

 9. Rajan

  இந்த விமர்சனம் எழுதியவர் ரஜினி ரசிகர் கண்டிப்பாக இல்லை . ஏதோ வயிதெரிச்சலில் எழுதியது போல் இருக்கிறது.

  இந்த விமர்சனம் எழுதியவரின் ரசனை இன்மையை காட்டுகிறது. புதிய மனிதா பாடலின் இவர் விமர்சனம் ஒன்று போதும் இவரை பற்றி அளந்து கொள்ள. என்ன ஒரு பாடல் இப்படி ஒரு பாடல் வந்ததே இல்லை என்னும் அளவிற்கு ஒரு freshness இருக்கிறது அதில். மேலும் spb அவர்களின் குரலில் உள்ள magic மயக்குகிறது. எத்தனை முறை கேட்டாலும் சலிக்க வில்லை .

  என்ன ஒரு அப்பட்டமான மனசாட்சியே இல்லாத விமர்சனம். வினோ உங்கள் தளத்தில் இதை எதிர்பார்கவில்லை.

  வினோ ,

  தயவு செய்து உங்கள் விமர்சனத்தை எழுதுங்கள்.

 10. Jey

  Dont post this kinda of review in ur site as this is truly superstar website…as u r letting down the fans…

 11. Arun

  வினோ சார், அந்த ***** காத்தவராயன் review எல்லாம் எதுக்கு போட்டு உங்க blog இமேஜ் ஏன் கெடுத்துகிறீங்க…. பெரிய bulb மாதரி காட்டிகிறான்..
  Pls publish my comments..

 12. Mahindan

  முகேஷ் நீங்கள் சொன்னதைத்தான் நானும் யோசிக்கிறேன் எனக்கும் அந்த பாடல் மிகவும் பிடித்துள்ளது… அது மட்டுமல்ல காத்தவராயன் என்ன சொல்ல வாறீங்க??????
  “நீ தூங்கும் நேர‌த்தில் நான் என்னை அணைப்பேன்” என்ற‌ வ‌ரியில் எந்திர‌ன் எப்ப‌டி த‌ன்னைத் தானே அணைத்துக்கொள்ளும்? உன்னை என்று அல்ல‌வா வ‌ர‌வேண்டும்”…….
  இது வரி விளங்காமல் சொன்னது போல் தெரிகிறது …. கார்க்கி மிகவும் அருமையாக எழுதியுள்ளார் அதை இப்படி வீணடிக்க கூடாது..
  அதோடு அந்த பாடலுக்குய் ரஹ்மான் இசையமைத்ததை பற்றி இந்திரன் இசை வெளியீட்டு விழாவில் ஷங்கரே சொல்லியுள்ளார்…. இதில் நீங்கள் இவ்வாறு சொல்வது நியாயமில்லை….
  கார்க்கி மிகவும் அருமையாக எழுதியுள்ளார் பூம் பூம் ரோபோடா பாடலில் ஆட்டோ ஆட்டோகாரா ஏ ஆட்டோமேட்டிக் காரா என்று ரோபோவை பற்றி சொல்வது போல பாட்ஷாவை பற்றியும் அழகாக கலந்து எழுதியுள்ளார் ….

  அறிவிய‌ல் வ‌ரிக‌ள் த‌மிழ் சினிமாவிற்கு புதிது என்றாலும் காத‌ல் பாட‌லுக்கு தேவையில்லாத‌து. விஞ்ஞானி என்றால் காத‌ல் செய்யும் போது கூட‌வா அறிவிய‌ல் த‌மிழில் பாட‌வேண்டும்……
  பத்து வருடமாக ரோபோவை செய்வதிலேயே குறியாக இருக்கும் விஞ்ஞானி அப்படி பாடுவதில் தவறில்லையே……

  எது எப்படியோ எந்திரனில் ஒவ்வொரு பாடலுக்கும் ரஹ்மானுக்கு ஒவ்வொரு ஆஸ்கார் தரலாம்

 13. r.v.saravanan

  வினோ எனக்கு அனைத்து பாடலும் ரொம்ப பிடிச்சிருக்கு அதுவும் அரிமா அரிமா, இரும்பிலே ஒரு இருதயம் ,புதிய மனிதா பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்திருக்கு

  உங்கள் கண்ணோட்டத்தில் பாடல்களை பற்றி ஒரு இடுகை தாருங்கள் ப்ளீஸ்

 14. kamesh

  வினோ,

  இது ரசிகரின் விமர்சனமா அல்லது வினோவின் சரக்கா, பாடல்கள் அனைத்தும் அற்புதமாக உள்ளது, திரு காத்தவராயன் அவர்கள் தலைவர் ரசிகரா ? நம்பமுடியவில்லை.

 15. prakash

  who is the hell this kaathavarayan? Endhiran songs rocking all over..and he comments like genious..I didnt expect this kind of post from envazhi..This is Ar+Sh+Rajinis best album and everyone is appreciating. Guys to be frank, Endhiran album is apart from reviews, just ignore and enjoy the magic

 16. M.S.Vasan

  //த‌லைவ‌ருக்கும் ர‌சிக‌ர்க‌ளுக்கும் உள்ள‌ இந்த‌ புரித‌லே இருவ‌ரையும் 35 வ‌ருட‌ங்க‌ளாக‌ உச்ச‌த்தில் வைத்திருக்கிற‌து!//
  அருமையான வ‌ரிக‌ள்.
  ‘யாரை’ உச்ச‌த்தில்?
  ர‌சிக‌னையா, த‌யாரிப்பாள‌ர்க‌ளையா, த‌ன்னையா,
  த‌மிழ் சினிமா உல‌கையா?

 17. பரிதி நிலவன்

  //விஞ்ஞானிக்கும் எந்திர‌னுக்கும் த‌னித்த‌னி குர‌ல்க‌ளை ப‌ய‌ன்ப‌டுத்தி வித்தியாச‌ப்ப‌டுத்தியிருக்க‌லாம். பாட்டுக்கு மெட்டு போட்ட‌து போல‌த் தெரியும் இந்த‌ பாட‌லின் வ‌ரிக‌ளும் மெட்டும் மொத்த‌ப்பாட‌ல் முழுவ‌தும் ஓன்றுட‌ன் ஒன்று ஒடாம‌ல் ப‌ய‌னிப்ப‌து ப‌ல‌வீன‌ம். ஓப்ப‌னிங் பாட‌லுக்குரிய‌ துள்ள‌ல் இல்லாத‌து ச‌ராச‌ரி ர‌சிக‌னுக்கு ஏமாற்ற‌த்தை அளிக்கும்.//

  குப்பையான விமர்சனம். ஏனோ தானோவென்று எழுதப்பட்டிருக்கிறது. இந்த பாடலுக்கே பெரிய பலம் பாலுவின் டைனமிக் வாய்ஸ்தான். பாடல் முழுதும் இழைந்தோடும் மின்சாரம் படம் பார்க்கையில் புரியும். மற்ற இணைய விமர்சனங்களையும் படிக்கவும்.

  மொத்தத்தில் இந்த ரசிகரின் விமர்சனத் திறமை கேள்விக்குரியது.

 18. M.Mariappan

  உலகம் முழுவதும் எந்திரன் பாடல்கள் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது , காத்தவராயன் அவர் கருத்தை எழுதி உள்ளார் இதை பெரிசாக எடுத்து கொள்ள வேண்டாம் பாடல்கள் அனைத்தும் சூப்பர் வாழ்க ரஜினி வெல்க எந்திரன் பாடலை பத்தி உங்கள் அருமையான பதிவை போடுங்கள் mr . வினோ

 19. Arun

  Evalo kevalamana paadagal vandu eruku plus kevalamana lyrics elam vandu eruku athu elam hit agi eruku athuku elam en avan vimasaranam pannave ela.. anga poi vimasaranam pannaradu…. vino ungala sollanum… yepadiyo avar k**** name popular pannitinga intha blog la

 20. Akilan

  திரு காத்த‌வ‌ராய‌ன்!! நீங்கள் என்ன ராஜ்குமார் ரசிகனா, இல்ல கோமாளி ரசிகனா..

  sir please delete the post. i am fan of your site.. . the guy who reviewed is not a thalivar fan.. and also dont know.. what Music look like.. hope he is from Kommali group..

  Irubille song is much better then “eminem and rihanna – i love the way you lie”,

  note:- “I love the way you lie” is one best song from Grammy award winners eminem and rihanna..

 21. alagan.rajkumar

  kathavaraya பாட்டுகளை ஒழுங்கா கேளுங்க .ஓவ்வோன்னும் superb .

 22. bharathapriyan

  kindly remove this review this guy is still expecting autokaran type of songs for a science
  fiction movie or what?i don’t say autokaran is a worst song , must match story line.pls remove this first.ALL songs rock

 23. Ganesh

  Dear Friends,

  I m really wondered….hw you accept these kind of poor and bias review…..is this “Thalaivar” fan site….

  Irumbile song is number one song in all music reviews…..but here last place…cant believe this…
  I m regular visitor of your site….but I m going to stop now on wards…..

  I think that you are using “Thalaivar” fans for your site publicity…….

  Why you hiding behind “Kathavarayan”……accept the truth that this is ur review…..

  Good bye…..

 24. Prasad-California

  Sorry to say this review has been written by somebody who totally lacks musical sense and has tried really hard to mention some negatives for each song…Well..Doesnt matter…Intha mathiri vayitherichal party ellam thandi than thalaivar ippo intha nilai-yil irukkar…But its really wrong to mention that this review is by a rajini fan…

 25. Vasanth S

  Please remove this……this is not reflecting the mass opinion……
  Note the music review from the experts in this field….

  All songs are superb hit…

 26. Vasanth S

  1.Irumbilae Oru Idhayam, Arima Arima, Kilimanjaro….
  2.Kaadhal Anukkal, Pudhiya Manidha, Boom Boom Roba da, Chitti dance…

 27. Vasanth S

  1.Irumbilae Oru Idhayam, Arima Arima, Kilimanjaro….
  2.Kaadhal Anukkal, Pudhiya Manidha, Boom Boom Roba da, Chitti dance…

  Each song compete with the other ones..

 28. bala

  //க‌டைசிவ‌ரை இழுத்த‌டித்து க‌டைசியாக‌ ஒலிப்ப‌திவு செய்ய‌ப்ப‌ட்டு க‌டைசியாக‌ ப‌ட‌மாக்க‌ப்ப‌ட்ட‌//

  சுல்தான் ப‌ட‌த்திற்கு த‌லைவ‌ரே நேரில் சென்று பாட‌ல் கேட்டும் த‌ராம‌ல் இழுத்த‌டித்து கொண்டிருக்கும் ர‌குமானை இனிவ‌ரும் ப‌ட‌ங்க‌ளில் ப‌ய‌ன்ப‌‌டுத்த‌கூடாது. ர‌சிக‌ர்க‌ளே ர‌குமானை புற‌க்க‌ணியுங்க‌ள்.

 29. Juu

  I never agree this review.
  Its very obvious that ‘irumbiley oru’ song sung by a robot,So Karki brilliantly replaced the word விண்மீன்கள் by மின்-மீன்கள்!!!
  When a Robot can think its own,love a girl (in the story) the why can`t it switch off by its own??
  (சொல்லவந்தத சொல்லியாச்சு!! Even its a broken English)

 30. VELMURUGAN

  கேவலமான விமர்சனம். s.p.b sir ஐ விமர்சனம் செய்ய வேண்டியதில்லை. தகுதியும் இல்லை. காது ஒழுங்கா இருந்தா s.p.b இன் voice modulation for scientist & robo can be identified.

 31. plague

  நண்பர்களே. இது ஒருவரின் ரசனை. இதில் குற்றம் காண்பது தவறு. உங்களது ரசனை வேறுபட்டு இருந்தால் அதை சொல்லுங்கள். மற்றபடி எல்லோர் ரசனையும் உங்களுடன் ஒத்து போக வேண்டும் என்று கட்டாயப் படுத்துவது தவறு.

  ரஜனி ரசிகன் என்றால் அவரது எல்லா பாடல்களும் பிடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பலருக்கு பிடித்த பாடல் சிலருக்கு பிடிக்காவிட்டால் அது தப்பு இல்லை. அதனால் இதை எழுதிய காத்த‌வ‌ராய‌ன் அவர்களை குறை கூறுவதும் ரசிகன் இல்லை என்று சொல்லுவதும் சரி இல்லை.

  இப்போது என்னுடைய கருத்து என்ன என்று சொல்ல போகிறேன். அதற்கு முன், நான் ஒரு ரஜினி ரசிகன் என்பது நினைவு இருக்கட்டும்.

  பாட‌ல்: புதிய‌ ம‌னிதா

  பாடல் வழக்கமான ரஜினி டைட்டில் பாடல்கள் மாதிரி இல்லை. பாடலின் tempo சீராக இல்லை. தொடக்கம் techno ஸ்டைலில் மெதுவாக இருந்தாலும் நடுவில் பாலா பாட தொடங்கியவுடன் tempo ஏறிடும். பிறகு “இதோ என் இந்திரன்” வரிகளில் திடீரென்று இறங்கும். இரண்டாவது சரணத்தில் பாலா tempoவை திரும்ப கூட்டி ரஹ்மான் கடைசியில் மெதுவாக முடிப்பார். என்னை பொறுத்தவரை பாலா பாடியது போதாது. சிவாஜி படத்தில் பாடிய மாதிரி இந்த படத்தில் பாடாதது எனக்கு ஏமாற்றம். அரிமா பாட்டு போல பாலா ஒரு பாட்டு பாடி இருந்தால் இன்னமும் நன்றாக இருக்கும்.

  பாட‌ல்: காத‌ல் அணுக்க‌ள்

  நல்ல காதல் பாடல். இடையிடையில் tempo கூடினாலும் பாட்டு சீராக போகிறது. பாடல் காட்சிகள் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நல்ல வரிகள். ஒரு விஞ்ஞானியின் கற்பனை எப்படி இருக்கும் என்றதிக்கு ஏற்றபடி எழுதி இருக்கிறார்.

  பாட‌ல்: அரிமா அரிமா

  தலைவருக்கு ஏற்ற பாடல். ஒரு ராஜ கம்பீரம் நிறைந்த வரிகள். காதல் பாடல் என்றாலும் அதில் ஒரு கர்வம் இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

  பாட‌ல்: கிளிமாஞ்சாரோ

  இந்த பாடல் எனக்கு ஒரு குழப்பம். வித்தியாசமான ப‌ழ‌ங்குடிப்பாட‌ல் ஒன்று இது. இந்திரன் படத்தில் இது எப்படி சேரும் என்பது படம் வந்த பிறகு தான் தெரியும். மற்ற பாடல்களுடன் பார்க்கும்போது வித்தியாசம் விளங்குகிறது. பல்லவி அவ்வளவு கவராவிட்டாலும் சரணமும் “அக்க‌க்கோ அடி கின்னிக்கோழி” வரிகள் மனதில் நிற்கிறது.

  பாட‌ல்: பூம் பூம் ரோபோடா…

  இந்த பாடல் எனக்கு அவ்வளவு பிடித்தம் இல்லை. எனக்கு Yogi B ரொம்ப பிடிக்கும். ஆனால் இந்த பாடலிலோ அவரது குரலும் வரிகளும் தேவை இல்லாதது போல இருக்கிறது. ஸ்வேதா அவர்களின் குரல் வசீகரம். ஆனால் Yogi B குரலுடன் ஒலிக்கும்போது அந்த இனிமை காணமல் போகிறது.

  பாட‌ல்: இரும்பிலே ஒரு இருத‌ய‌ம்

  என்னுடைய இன்னொரு இதயம் கவர்ந்த பாடல். அழகான ரஹ்மான் குரல் பாட்டுக்கு மெருகேற்றுகிறது. ஒரு ரோபோவிக்கும் காதல் வரும் என்று தோணுகிறது இந்த பாட்டில். Tempo இருந்தாலும் குரல் இனிமையாக இருக்கிறது. English rap கூட பாட்டுக்கு ஏற்றபடி இருக்கிறது. கவிதை நயம் அழகாக இருக்கிறது.

  இப்போது சர்ச்சைக்குரிய வரிகளில் ஒரு பார்வை.

  காத்த‌வ‌ராய‌ன்: “மின் மீன்க‌ள் விண்ணோடு” என்ற‌ வ‌ரியில் “விண் மீன்க‌ள்” என்று அல்ல‌வா வ‌ர‌வேண்டும் !

  நீங்கள் சொன்னது சரி. கார்க்கி அடுத்த வரிக்கு ஏற்றபடி எழுதி இருக்கிறார் (அடுத்த வரி “மின்னல்கள் கண்ணோடு”). ஆனால் இது ரோபோ பாடும் பாடல் என்பதால் அதற்கு மின் மீன்கள் (electronic fishes) என்று கற்பனை செய்தது என்று வைத்து கொள்ள முடியும்.

  காத்த‌வ‌ராய‌ன்: “நீ தூங்கும் நேர‌த்தில் நான் என்னை அணைப்பேன்” என்ற‌ வ‌ரியில் எந்திர‌ன் எப்ப‌டி த‌ன்னைத் தானே அணைத்துக்கொள்ளும்? உன்னை என்று அல்ல‌வா வ‌ர‌வேண்டும் !

  இது தவறு. நீங்கள் சொல்லுவது சாதாரண மனிதன் பாடுகையில் சரியாக இருக்கலாம். ஆனால் இது ரோபோ பாடும் பாடல். அந்த சரணம் முழுவதும் ரோபோ தான் என்ன செய்யும் காதலிக்கும் பெண்ணுக்காக என்று சொல்லுகிறது. பெண் தூங்கும் நேரத்தில் அவளை அணைப்பது சாத்தியம் இல்லை (அவர்கள் கணவன் மனைவியாய் இருந்தால் நமது சமுதாயத்தில் சாத்தியம். இல்லை அது சர்ச்சைக்குரிய விஷயமாக மாறி விடும்). அதனால் இது ரோபோ தன்னை switch-off செய்யும் என்று சொல்லுவதுதான் சரி.

  நீங்கள் சொன்னபடி அதில் முரண்பாடு பிறகு உள்ளது. “shutdown செய்யாம‌ல் இர‌வினில் துடித்தேன்” என்ற வரி முதலில் சொன்னதை மாற்றுகிறது. ஆனால் அது தொடர் வரி இல்லாததால், இரு கருத்துக்களும் ஏற்று கொள்ள முடியும். அதாவது, பெண் தூங்கும் நேரத்தில் முதலில் ரோபோ தன்னை அணைத்து கொள்ளும். பிறகு காதல் வளர, அணைக்க முடியாமல் (அணைத்து விட்டு அவளை மறந்து இருக்க முடியாமல்) இரவினில் துடிக்கும். இது இரண்டுக்கும் பொருந்தும்.

 32. DEEN_UK

  உண்மையில் மிகப் பெரிய காமெடி விமர்சனம் 2010 ..!
  யாருப்பா இந்த அறிவு ஜீவி? நிச்சயம் இவர் நமது தலைவன் ரசிகர் அல்ல.
  (“நீ தூங்கும் நேர‌த்தில் நான் என்னை அணைப்பேன்” என்ற‌ வ‌ரியில் எந்திர‌ன் எப்ப‌டி த‌ன்னைத் தானே அணைத்துக்கொள்ளும்? உன்னை என்று அல்ல‌வா வ‌ர‌வேண்டும் !)! ஆஹா..என்ன ஒரு ஆராய்ச்சி! என்ன ஒரு புரிதல்!
  ”நீ தூங்கும்போது நான் என்னை shutdown செய்து கொள்வேன் என்று அர்த்தம்..!..
  (“மின் மீன்க‌ள் விண்ணோடு” என்ற‌ வ‌ரியில் “விண் மீன்க‌ள்” என்று அல்ல‌வா வ‌ர‌வேண்டும்)
  அது மின் மீன்கள் தான்! விண்மீன்கள் அல்ல! ஒரு ரோபோட் முழுக்க முழுக்க எலெக்ட்ரிக்,கம்ப்யூட்டர் மொழியில் பாடுவதாக இந்த பாட எழுத பட்டுள்ளது! இதை தாங்கள் மின்மீன்கள் ( electric fish ) என்று தான் எடுத்து கொள்ள வேண்டும்..
  (அறிமுக‌ பாட‌கி க‌தீஜாவின் குர‌ல். ந‌ல்ல‌ ப‌யிற்சியோடு பிற‌ இசைய‌மைப்பாள‌ர்க‌ளிட‌மும் தொட‌ர்ந்து பாடினால் க‌தீஜாவிற்கு ந‌ல்ல‌ எதிர்கால‌ம் உண்டு.)
  அட பாவி! கதீஜா யார் தெரியுமா?! ar ரஹ்மானின் மகள்!! சிறுவயது சிறுமி! அந்த பிள்ளைக்கு பிற இசை அமைப்பாளர்களிடம் பாடி தான் எதிர்காலம் அமையவேண்டுமா?! அதற்கு தலைவிதியா என்ன? கடவுளே கடவுளே..review எழுதுவது பெரிது அல்ல..எல்லாம் தெரிந்து வைத்து கொண்டு எழுத வேண்டும்.
  (விஞ்ஞானிக்கும் எந்திர‌னுக்கும் த‌னித்த‌னி குர‌ல்க‌ளை ப‌ய‌ன்ப‌டுத்தி வித்தியாச‌ப்ப‌டுத்தியிருக்க‌லாம். பாட்டுக்கு மெட்டு போட்ட‌து போல‌த் தெரியும் இந்த‌ பாட‌லின் வ‌ரிக‌ளும் மெட்டும் மொத்த‌ப்பாட‌ல் முழுவ‌தும் ஓன்றுட‌ன் ஒன்று ஒடாம‌ல் ப‌ய‌னிப்ப‌து ப‌ல‌வீன‌ம்.)
  இதிலிருந்தே உங்கள் taste புரிகிறது.sp யை விட்டால் இந்த பாடல் பாட ஆள் இல்லை! அழகா 2 குரலில் பாடி வேறுபடுத்தி காட்டி இருப்பார்.இந்த பாடலின் பலமே sp யின் கம்பீர குரல் தான்.!
  (மொத்த‌த்தில் கார்க்கி ந‌ல்ல‌ துவ‌க்க‌த்தை வீண‌டித்துள்ளார்.
  ஆல்ப‌த்தில் இட‌ம் பெற்றுள்ள‌ ஒரு மியூசிக் ட்ராக் எவ்வித‌ தாக்க‌த்தையும் ஏற்ப‌டுத்தவில்லை)
  NICE JOKE !!
  தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன் முதலாக வித்யாசமான சிந்தனையில் பாடல் வரிகள் அமைந்து உள்ளன..இசை உலகையே இன்னும் மிரட்டிக்கொண்டு உள்ளது..உங்களை மாதிரி ஆட்கள் இப்படி குண்டு சட்டிக்குள் குதிரை ஒட்டி கொண்டே இருங்கள்.அது என் தலைவனை பாதிக்காது.இந்திரன் ஆல்பம் itunes உலகில் அதிக விற்பனை செய்யும்,செய்து கொண்டு இருக்கும் ஆல்பம்..us no .1 ,uk நோ.1 ,
  australia no .1 ..சந்தேகம் இருந்தால் itunes சைட் போய் தெரிந்து கொள்ளுங்கள்..பாடல்கள் சரி இல்லை என்றால் இந்த சாதனை செய்து இருக்காது…உங்களது ஒரு சில வரிகளிலேயே உங்களது ரசனை புரிகின்றது..விமர்சனம் செய்ய ஆசை என்றால்,விமர்சம் எழுதி அதை நீங்களே வீட்டில் உட்கார்ந்து தனியே படித்து அனுபவித்து கொள்ளுங்கள்..எங்கள் தளத்துக்கு அனுப்ப வேண்டாம்..இது தலைவன் ரசிகன் இடம்.உங்கள் ஒவ்வொரு குறைக்கும் பதில் சொல்ல தோன்றுகிறது..bu அதற்கு அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்.காரணம்,thootruvaar thootrinaalum எந்திரன் சாதனை செய்து கொண்டு தான் irukkiraan..தலைவன் சாதனை thodarum..

 33. tljana

  i think vino is just seeing the pulse of us, regarding enthiran audio by giving this article.

 34. ragavan

  ஐயா!!!!!!!!!!!

  மின் மீன்கள் என்றால் மின்னும் மீன்கள் வானத்தில் மின்னும் மீன்கள்
  அதாவது

  மின் மீன்கள் = மின்னும் மீன்கள் =விண் மீன்கள்

 35. Karthick

  I just happened to see all this comments and review. First of all, I dont understand why you people think differently. That Kathavarayan didnt even Pull down Rajni in anyway. He just comment on the Enthiran Movie songs. But I agree that all the above points with respective to meaning, might be wrong, but in overall, atleast he enable all you guys to speak out 🙂 Be happy and be patient. Note: I am not fan to anyone, but be Fan for that movie not on the heroes! I too like Rajni’s style, even after this old age, He is so young and dynamic!

 36. Ravanan

  எந்திரன் – இசை எனது பார்வையில்

  நீண்ட நாள் கிடந்த தவத்தின் பலன் இதோ ஓரளவு கிடைத்து விட்டது. ஆம் எந்திரன் பாடல்கள் வெளியாகி விட்டதை தான் சொல்கிறேன்.

  முதலில் இந்த album நாயகன் oscar winner நமது ரகுமான் இத்தகைய படத்திற்கு தான் ரொம்ப ஏங்கி கிடந்திருக்கிறார் போல. சும்மா புகுந்து விளையாடி இருக்கிறார். என்ன என்ன experimentation பண்ண முடியுமோ அனைத்தையும் perfection உடன் செய்திருக்கிறார். அதன் விளைவு அனைத்து பாடல்களையும் கேட்கும் போது நமக்கு கிடைக்கும் ஒரு புதுமையான அனுபவம் .

  சில பாடல்கள் ரகுமானின் வழக்கமான style பாடல்கள் தான். அவற்றை பற்றி முதலில் பேசுவோம்.

  காதல் அணுக்கள்

  காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை neutron electron உன் நீலக்கண்ணில் மொத்தம் எத்தனை என்று ஆரம்பிக்கும் ஒரு விஞ்ஞான எண்ணத்துடன் கூடிய duet பாடல். vintage rahman melody. கேட்பதற்கும் அதை விட பார்பதற்கும் மிகவும் இனிமையாக இருக்கிறது(உபயம் : trailor clipping).

  அரிமா அரிமா

  ஹரிஹரன் சாதனா சர்கம் பாடியிருக்கும் ஒரு perfect superstar பாடல்.

  “உன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும் உலகம் உலகம் கை தட்டும் நீ உலகம் தாண்டிய உயரம் கொண்டதில் நிலவு நிலவு தலை முட்டும் ” என்று உண்மையை கூறி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் இந்த வரிகள் தான் இந்த பாடலின் பெரும் பலம்.

  “நான் மனிதன் அல்ல அக்றினையின் அரசன் நான் காமுற்ற கணினி நான் சின்னஞ்சிறுசின் இதயம் தின்னும் சிலிகான் சிங்கம் நான் ”

  என்று வைரமுத்து அவர்கள் ரோபோ ரஜினியின் புகழ் பாடியிருக்கும் பாடல். சிலிகான் சிங்கம் போன்ற வரிகள் வரும் போது ஹரிஹரன் அவர்களின் modulation அருமை.

  Boom boom robo da zoom zoom robo da

  ஏ ஆர் ரகுமான் வழக்கமாக rap பாட வைக்கும் blaze இல்லாமல் முதல் முறையாக Yogi B உடன் இணைந்திருக்கும் ஒரு rap பாடல். ரோபோ ரஜினியின் BGM என்று நினைக்கிறேன்.

  வைரமுத்துவின் வாரிசு மதன் கார்க்கியின் (robotics professor என்று நினைக்கிறேன்) வரிகளில் அறிவியலும் தெரிகிறது தந்தை பாணியில் ஆய்வும் அறிவும் தெரிகிறது. எழுதுவது superstar ரஜினிக்கு என்பதால் இது போன்ற வரிகளை பாடலில் புகுத்தி இருப்பது அவர் புத்திசாலித்தனம்.

  ” ஆட்டோ ஆட்டோக்காரா ஏ ஆட்டோமேடிக் காரா கூட்டம் கூட்டம் பாரு உன் ஆட்டோகிராப்புக்கா ”

  Chitti Dance Showcase

  பூம் பூம் ரோபோ டா பாடலின் இன்னொரு version. trailor பார்த்ததில் இருந்து இந்த பாடலில் இதுவரை பார்த்திடாத நம் superstar dance movements பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

  கிளிமாஞ்சாரோ

  பா விஜய் எழுதியுள்ள ஒரே பாடல் . முழுக்க முழுக்க ஒரு african tribal song என்று ஷங்கர் சொல்லி இருக்கிறார். மேலும் மிச்சு பிச்சுவில் அருமையான இடங்களில் படமாக்கி இருக்கிறார்கள். கேட்பதற்கு புதுமையாக தான் இருக்கிறது. பார்ப்போம்.

  இரும்பிலே ஒரு இருதயம்

  முதலில் கேட்ட போது எது ஏதோ pop song போல இருக்கிறதே என்று நினைத்தேன். ஆனால் கேட்க கேட்க சும்மா பத்திக்கிர பாடல் இது. பாடியிருப்பவர் சாட்சாத் ஏ ஆர் ரகுமானே . தனது காந்தர்வ குரல் மூலம் magic செய்திருக்கிறார். அநேகமாக படம் பார்க்கும் போது இது தான் இன்னொரு அதிரடிக்காரன் போல இருக்கும். கார்க்கி அவர்கள் இந்த படத்தில் எழுதியிருக்கும் பாடல்களில் ” The best ”

  எச்சில் இல்லா எந்தன் முத்தம் சர்ச்சை இன்றி கொள்வாயா
  ரத்தம் இல்லா காதல் என்று ஒத்திப் போக சொல்வாயா

  உயிரியல் மொழிகளில் எந்திரன் நானடி
  உளவியல் மொழிகளில் இந்திரன் தானடி

  என்பது போன்ற அறிவியல் ஹை கூ கவிதைகள் நம் தமிழ் திரை உலகிற்கு புதிது தான்.

  இனி எந்திரனின் ஹைலைட்டிற்கு வருவோம் :

  புதிய மனிதா

  “Anything that starts well ends well ” என்பது போல இந்த album ஆரம்பமே இந்த அதிரடி பாடல் தான். இந்த படத்தின் பாடல்களின் உச்சம் இந்த பாடல் தான்

  இது வரை நாம் கேட்டிராத புதுமையான fresh ஆன இசை. ஏ ஆர் ரகுமானின் குரலில் எந்திரனின் உருவாக்கத்தை விளக்கும் பாடல் பின் அவர் மகள் கதிஜா குரலில் வந்து SPB அவர்களின் மயக்கும் குரலில் நுழையும் போதே நாம் இது வரை உணராத ஒரு உணர்வு வந்து விடுகிறது. மேலும் இந்த பாட்டிற்கு பக்க பலம் வைரமுத்து அவர்களின் வைர வரிகள் மற்றும் SPB . இவர்களை தவிர யாராலும் இது போன்ற ஒரு படைப்பை கொடுக்க முடியுமா என்பது சந்தேகமே !!!

  விஞ்ஞானி ரஜினிக்கும் தான் உருவாக்கிய எந்திரனுக்கும் இடையில் உள்ள உறவை வைரமுத்துவை விட எவராலும் இப்படி வர்ணிக்க முடியாது.

  ரோபோ ரோபோ பல மொழிகள் கற்றாலும் என் தந்தை மொழி தமிழ் அல்லவா
  ரோபோ ரோபோ பல கண்டம் வென்றாலும் என் கர்த்தாவுக்கு அடிமை அல்லவா ! !

  கருவில் பிறந்த எல்லாம் மரிக்கும் ; அறிவில் பிறந்தது மறிப்பதே இல்லை

  நான் இன்னொரு நாண்முகனே , நீ என்பவன் என் மகனே ; ஆண் பெற்றவன் ஆண் மகனே ஆம் உன் பெயர் எந்திரனே

  இந்த பாடலை கேட்கும் போது நமக்கே எந்திரனுடன் ஒரு பிணைப்பு ஏற்படுகிறது. ஷங்கர் கூறியதை போல ரகுமான் ஆஸ்காருக்கு 200 % தகுதியானவர் என்பதை இன்னொரு முறை உலகிற்கு நிருபித்திருக்கும் ஒரு பாடல்.

  இந்த படத்தின் தன்மையை முழுதும் உணர்ந்து எழுதியிருக்கும் அருமையான வரிகளில் வைரமுத்து அவர்களின் உழைப்பு நம்மை வியப்பூட்டுகிறது.

  இந்த படத்தின் பாடல்களை ஒவ்வொரு முறை கேட்கும் போது ஒவ்வொரு பாடல் முதல் இடத்தை பிடிக்கிறது. எந்த பாடல் மிகவும் பிடித்திருக்கிறது என்று அனைவரையும் கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாடலை கூறுவதே இதற்கு ஒரு உதாரணம்.

  மொத்தத்தில் ஒரு மிகவும் புதிய அனுபவத்தையும் சந்தோசத்தையும் கொடுத்த இந்த எந்திரன் குழுவிற்கு ஒரு royal salute. Superstar கூறியதை போல “Its going to be an experience” எந்திரன் படம் மட்டும் அல்ல பாடல்களும் ஒரு அனுபவம் தான். அதை வார்த்தைகளில் சொல்ல முடியாது நீங்களே உணருங்கள்.

  இந்த பாடல்களை பற்றி மாற்றுக் கருத்து கொண்டவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை உலகமே பதில் சொல்கிறது.

  apple itunes report மற்றும் UK , US நாடுகளில் இருந்து கூட வரும் வரவேற்பு.

  தமிழ் திரைபடத்தை உலக அளவிற்கு கொண்டு செல்லும் ஷங்கர் மற்றும் அவர் குழுவின் இந்த முயற்சியை இரு கரம் கூப்பி வரவேற்கலாம்.

  ஷங்கர், ரகுமான் , வைரமுத்து , ஐஸ் இவற்றை எல்லாம் தாண்டி புது அவதாரம் எடுக்கும் நம் superstar ரஜினிகாந்த். U cant anything bigger than this. Eagerly waiting for the awesome experience on screen.

  புதிய மனிதா சீக்கிரம் பூமிக்கு வா !!!!!!!!!!!!!!!!!!!

 37. peraveen

  இரும்பிலே ஒரு இருத‌ய‌ம் is the best song in ENTHIRAN

  POOR REVIEW

  kathavarayan sucks…

  envazhi is going in wrong way…

  what happens to envazhi…?

 38. Manoharan

  இந்த விமர்சனத்தை அரைவேக்காடு விமர்சனம் என்றுதான் சொல்லவேண்டும். முதலில் இது ஒரு Sci – Fi படம். இதுக்கு குறுக்கு சிறுத்தவளே என்று பட்டு எழுத முடியாது. அதேபோல் நான் ஆட்டோக்காரன்,ஆட்டோக்காரன் பாணியில் ரஜினியை அறிமுகப்படுத்த முடியாது. என்னை பொறுத்தவரை இதில் ரகுமான் பயன்படுத்தியிருக்கும் Techno மியூசிக் இந்திய சினிமா இதுவரை பார்த்திராதது. ஒரு Sci-Fi படத்துக்கு இந்த Techno இசைதான் அந்த உணர்வை கொடுக்கிறது.

  உள்ளதிலேயே மிகச்சிறந்த பாடல் இரும்பிலே ஒரு இருதயம் பாடல்தான் .இந்த காத்தவராயனுக்கு எந்த மடையன் சொன்னது இந்த பாடல் கடைசி இடத்தில் என்று. இதில் உள்ள ஆங்கில வரிகளும் சரி அந்த RAP Music க்கும் சரி, பின்னி எடுத்துவிட்டார் ரகுமான். படம் வெளிவந்தால் நிச்சயம் இந்த பாடல்தான் No.1 இடத்தை பிடிக்கும். அதேபோல் இந்த பாடல் தியேட்டரையே ஆடவைக்கும்.

  புதிய மனிதா பாடல் ரஜினியின் அறிமுகப் பாடல்களிலேயே முற்றிலும் வித்யாசமான் பாடல். ஒரு ரோபோ முழுமையாக உருவாகும் பாடல். ரகுமானின் தொடக்கமும், கதிஜா ரகுமானின் அசரடிக்கும் குரலும் பின் SPB takeover செய்வதும் அதன்பின் பாடல் வேகம் பெறுவதும் அற்புதம்.

  அரிமா அரிமா பாடலுக்கு நம் ரசிகர்களே விளக்கம் அழித்துவிட்டனர். இதில் எந்த இடத்திலும் குசேலன் பாடலின் சாயல் கிடையாது. ஒருவேளை தண்ணியடித்துவிட்டு கேட்டால் சாயல் தெரியுமோ என்னவோ.

  அதேபோல் கிளிமஞ்சாரோ .காதல் அணுக்கள் இரண்டுமே இனிமை.
  எந்திரன் பாடல்கள் இதுவரைக்கும் வந்த ரஜினியின் படப் பாடல்களிலேயே மிகவும் வித்யாசமானது. உலகில் உள்ள எந்த ஆல்பத்துடனும் ஒப்பிடும் அளவுக்கு உள்ளது. குண்டு சட்டியில் குதிரை ஓட்டுபவர்களுக்கு இது புரியாது. Hats Off Rahman.

 39. Manoharan

  எந்திரன் வரிசை :

  1 . இரும்பிலே ஒரு இருதயம்
  2 . புதிய மனிதா
  3 . அரிமா அரிமா
  4 . கிளிமஞ்சாரோ
  5 . காதல் அணுக்கள்.
  6 . ரோபோ

 40. ram

  ‘நீ தூங்கும் நேர‌த்தில் நான் என்னை அணைப்பேன்’ இது தவறு….paadalai nanraaga கேளுங்கள்…

  சரியான வரி…
  “நீ தூங்கும் நேர‌த்தில் அள்ளி அணைப்பேன்”

 41. endhiraa

  எந்திரன் வரிசை :

  1 . இரும்பிலே ஒரு இருதயம்
  1 . கிளிமஞ்சாரோ
  1 . புதிய மனிதா
  1 . ரோபோ
  1 . அரிமா அரிமா
  1 . காதல் அணுக்கள்.

  ஹி ஹி..எல்லா பாட்டுமே No 1 தான் !!!! சூப்பர் ஹிட் ! சூப்பர் ஹிட் !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *